முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 51

 மிதா தோளில் கை வைத்ததும் திரும்பினான் ஆரியன்.. கலங்கி நின்ற கண்களை அவசரமாய் அவளுக்கு மறைத்து துடைத்துக் கொள்ள தங்கைக்கு அவன் வலி புரியாமல் இல்லை.. ஆனால் சொல்ல வந்த விஷயம் முக்கியமாயிற்று..



அண்ணா.. இனிமேலும் நீ இங்கே இருக்க வேண்டாம் கிளம்பிடு.. அவள் கூறியதில் அதிர்ந்து பார்த்தான் ஆரியன்.



ஒருவேளை அவளும் ஜான்வியின் வாழ்க்கையில் இருந்து தன்னை வெளியேறக் கூற போகிறாளா.. ஜானு இன்றி தன்னால் இருக்க முடியுமா..  நின்ற இதயத்துடிப்போடு.. என்ன பேசுற மிதா.. உள்ள என் பொண்ணு வலியில துடிச்சுக்கிட்டு இருக்கா.. இந்த நேரத்துல என்ன இங்க இருந்து போக சொல்ற.. இந்த நேரத்துல அவளுக்கும் ஜானுக்கும் நான் ரொம்ப அவசியம்.. அவன் குரல் பரிதவித்தது.




அவசியம் தான்..  அது உனக்கும் எனக்கும் தெரியுது..  ஆனா ஜானுவுக்கு புரியலையே.. அவள் பேச்சில் நிதானமானான்..



என்ன சொல்ல வர்ற நீ..


எப்படியும் குழந்தைக்கு இப்போதைக்கு உன்னை பத்தின உண்மையை சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டா..  அவ சொல்றதும் ஒரு வகைல கரெக்டுதான்.. குழந்தை இப்போ இருக்கிற நிலைமைல சொல்றது அவ மனதை ரொம்பவே பாதிக்கும்.. என்றதும் அவன் பார்வையினில் அத்தனை வலி.. ஆனால் நா இங்க தானே இருக்க போறேன்.. நா கூட இருந்து அவளை பார்த்துக்கிறேன்.. நீ செய்ய வேண்டிய எல்லாத்தையும் நா செய்யுறேன்..  என்றிட அவன் விழிகள் இயலாமையோடு அவள் மீது படிந்தது. 





அதுக்கும் நான் இங்கிருந்து போறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு..



நீ இங்க இருந்தா ஜானு ஒவ்வொரு நிமிஷமும் உன்ன பார்ப்பா.. அவளே அறியாம டென்ஷன் வரத்தான் செய்யும்.. ஏற்கனவே நடந்த விஷயத்துல அவளும் பயங்கரமா அப்செட் ஆகி இருப்பா.. இந்த நேரத்துல அவளை இன்னும் ஸ்ட்ரகில் பண்ண வேண்டாமே.. அதான் சொல்ல வர்றேன்..  




அதுக்காக இங்கிருந்து போகணுமா.. அவன் குரல் இறங்கியது..



நீ பண்ண காரியத்துக்கு வேற வழி இல்லையே.. சட்டென சுருதி உயர்ந்தது மிதாவிடம்..



பாப்பா.. உண்மையாவே எனக்கு இதெல்லாம் தெரியாதுடா.. நீயும் என்ன இப்படி குற்றவாளி மாதிரி பேசாத..



நான் அன்னைக்கு நடந்ததை பத்தி சொல்ல வரல.. அவ சொல்ல வர்றதை கூட முழுசா கேட்காம நீ நடந்து கிட்டத சொல்றேன்.. அவள் பேச்சில் நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை..



அது சரி.. என்ன அவ வீட்ல விட்ட அப்போ நீ என்ன சொன்ன..



என்ன.. அவன் நெற்றி சுருங்கியது..



நான் வர வரைக்கும் வெயிட் பண்றேன்னு தானே சொன்ன.. நானும் உள்ள இருந்தவ நீ வெளிய தான் இருக்கேன்னு நினைச்சேன்..  குழந்தைக்கு அடிபட்டதும் அண்ணன் இருப்பான் கூட்டிட்டு போயிடலாம்னு சொன்னேன்..  ஆனா வெளியே வந்து பாக்கும்போது தான் தெரியுது..  உன்ன ஆள காணோம் என்னவோ.. ஜான்வி வீட்டுக்காரர் என எதிர்பாராமல் வந்திருந்த வார்த்தையில் அவன் முகம் கடுத்து போக 




சாரி.. ஏதோ டங்க் ஸ்லிப் ஆகி வந்துடுச்சு.. அவரு.. அவரு தான்.. ஏதோ தெரிஞ்சவங்க காரை எடுத்துட்டு வந்தாரு.. இல்லன்னா அந்த நேரத்துல எவ்வளவு கஷ்டமாகி இருக்கும்.. என கேக்க தனக்கு என்ன நேரம் நடக்கிறதோ தெரியவில்லை.. உலக்கை இரண்டு பக்கங்களிலிருந்தும் இடி வாங்குவதை போல்.. அனைத்து பக்கங்களிலிருந்தும் சொல் அம்புகள் தன்னை நோக்கி தான் பாய்ந்து வருகிறது..  



ஆனால் இப்போது அவள் கேட்டதற்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியத்தில்.. பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவனாய்.. மிதா நான் ஒன்னும் காரணம் இல்லாம போகல.. சொன்னபடி உனக்காக அங்க தான் நின்னுகிட்டு இருந்தேன்.. திடீர்னு ரூபா கிட்ட இருந்து மெசேஜ் வந்துச்சு.. என்றதும் அவள் புருவங்கள் இடுங்கின..



வீட்ல ஃபயர் பரவிடுச்சு.. என்ன பண்றதுன்னு தெரியலன்னு எனக்கு மெசேஜ் போட்டு இருந்தா.. அதான் வேகமா கிளம்பி போனேன்..




அய்யோ.. மீதாவின் முகம் பதற்றம் ஆனது.. என்னதான் முட்டிக் கொள்ளும் பேர்வழிகள் என்றாலும்  சொந்த மாமன் மகள் தானே.. அங்க அங்க துளி அளவு பாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது போலும்..  ஒன்றும் பிரச்சனை இல்லையே??




ம்ம்ஹும்.. டென்ஷனோட நெற்றியை தேய்த்தான் ஆரியன்.. பொய் சொல்லிருக்கா.. நானும் உன்னை மாதிரி டென்ஷன் ஆகி தான் வீட்டுக்கு ஓடுனேன்.. ஆனா அங்க அப்படி எல்லாம் எதுவுமே இல்லை.. பின்ன ஏன் அப்படி மெசேஜ் அனுப்புனேன்னு கேட்டா என்ன பாக்கணும் போல இருந்துச்சுன்னு சொல்றா.. என்றவன் அடுத்து செயலில் அவள் காட்டிய விஷயங்களை வாய்க்குள் அமுக்கினான்..



ஹ்ம்ம்.. ப்ராடு.. மிதாவின் முகம் கடுத்தது.. அவளுக்கு உன்ன பாக்கணும்னு இருந்துச்சோ என்னவோ என் கூட நீ வந்துட்டல்ல.. அதுல வந்த கோபம்.




ஏதோ ஒன்னு!!



சரி விடு.. இப்போ நீ கெளம்பு.. இல்லனா அதுக்கும் சேர்த்து அடுத்ததா உன் அப்பார்ட்மெண்ட்டே தீப்பிடித்து எரிஞ்சிடுச்சுன்னு அவ கதையை கட்டி விட போறா.. 



ஆனா பாப்பா..




இத்தனை வருடம் வளத்தவன் மாதிரி பீல் பண்ணாத.. உனக்கு பதில் நான் தான் இங்கே இருக்கேன்னு சொல்லிட்டேனே.. அவள் பேச்சில் தொங்கி போனது..  ஆனால் அவன் செய்ததற்கெல்லாம் இப்படி பேசினால் தான் வேலைக்காகும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள் மிதா.




பிடரியிலிருந்து நெற்றி சுற்றி வெள்ளை துணியில் பெரிய கட்டாயப் போட்டு.. மூக்கில் சுவாசிக்க ஆக்ஸிஜன் மாஸ்க் வைத்த நிலையில் குழந்தையை கண்டதும் மூச்சைடைத்து போயினர் அஷோக் ஜான்வி.. 



அதிலும் அஷோக் அறைக்குள் நுழைந்தது தான் தாமதம்..  அப்பாஆஆஆஆ.. ஓலத்தோடு கதறி அழுக ஆரம்பித்து விட்டாள் கிருத்தி.



பாப்பா.. அவனும் பாய்ந்து குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்..




பாப்பா.. என்னடா..கவனமா வேலை செய்யறது இல்லையா.. பாரு இப்ப எப்படி கிடக்கிறேன்னு..  அவன் கண்களும் கலங்கி போயின.. 




வலிக்குது பா..  கிருத்தியின் உதடுகள் பிதுங்கின.. அடடே என் செல்லம்ல அழுகாத.. உனக்கு சீக்கிரமா சரியாயிடும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. நல்லா ரெஸ்ட் எடு.. என்றபடி அவன் நெஞ்சில் குழந்தை கிடந்ததால் நெருங்க முடியாமல் விலகி நின்ற ஜான்வி வரும் பொருட்டு அவன் விலகப்போக அப்பா அவன் மார்பு சட்டையை இழுத்து தன் முகத்தோடு உரசி கொண்டாள் கிருத்தி..



எப்பவும் என் கூடவே இருப்பா.. பயங்கரமா வலிக்குது..  குழந்தை பின்னந்தலையை தேய்த்தது..  சரிடா நீ அழுகாத அழுகாத.. குழந்தையை நெஞ்சோடு சாய்த்து கொண்டான்.




கடைசியாய் ஒரு முறை பார்த்து செல்கிறேன் என ஆரியன் கதவிடுடிக்கின் வழியாய் எட்டி பார்க்க.. அங்கு ஜானுவே தள்ளி நின்றிருக்க.. அசோக் நெஞ்சில் சாய்ந்து மகள் பேசிக்கொண்டிருந்ததில் தன் உரிமை மொத்தத்தையும் அவனே எடுத்துக்கொண்டதாய் இவன் ரத்தம் கொதித்தது..




யார் ரத்தத்திற்கு யார் உரிமை கொண்டாடுவது?? கோபம்..  உச்சகட்டத்திற்கு ஏற இப்போதே அவனை விடுத்து தன் மனைவி இல்லை மனம் கவர்ந்தவளையும் தன் மகளையும் இராவணனாய் தூக்கி சென்று விட எண்ணம்..



ராவணன் தூக்கியது இன்னொருவன் மனைவியை அல்லவா..   ஆனால் நான் என் மனைவியை இவனிடமிருந்து கவர்ந்து சென்றால்தான் வாழ முடியும் போலும்.. எரிச்சலோடு எண்ணிக் கொண்டிருக்க.. ஜான்வி சம்மதிச்சான்னா தாராளமா கூட்டிட்டு போங்க..அவன் வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாய் இப்போது தோன்றியது..



ராஸ்கல்.. அவ வரமாட்டான்னு தெரிஞ்சுக்கிட்டே தான் சொல்லி இருக்கான்.. ஆனா இவளும் ஏன் தான் இப்படி இருக்காளோ.. என் பீலிங்ஸ் எதுவுமே அவளுக்கு புரியலையா.. அசோகையும் ஜான்வியையும் பார்த்தவனின் பார்வை கடைசியில் தன் குழந்தையிடம் வந்து நிலைக்க.. காலையில் சிரித்த முகமாய் பேசி சென்ற பாலகிக்கும் இப்போது தோய்ந்த தளிராய் கிடப்பவளுக்கும் தான் எத்தனை மாற்றம்..



குழந்தையை ஒழுங்கா கவனிக்காம அப்படி என்ன வெட்டி முறிச்சுகிட்டு இருந்தா.. கோபம் ஜான்வியிடம் திரும்பியது.




அண்ணா..  அழைத்த மீதாவிடம் சிவந்த கண்களோடு அவன் திரும்ப அவளும் உள்ளே எட்டிப் பார்த்ததில் அவன் கோபத்தை ஓரளவு யூகித்தாள்.



விடு அண்ணா   எல்லாம் கொஞ்ச நாள்.. சரியாகிவிடும்.. 



ம்ம்..  அது கூட சரியாகிவிடும்னு வச்சுக்கலாம்.. ஆனா இன்னைக்கு இவளுக்கு லீவு தானே.. குழந்தையை கூட கவனிக்காமல் அப்படி என்ன வெட்டி முறிச்சிக்கிட்டு இருந்தா.. மனதின் கேள்வியை வெளிப்படையாக கேட்டதும் பமிதாவின் விழிகள் கூர்ந்தன..




ஏன் என்கிட்ட தான் பேசிக்கிட்டு இருந்தா.. அதுக்கு என்ன.. என்கிட்ட பேசிட்டு இருந்தனால தான் இப்படி ஆயிடுச்சுன்னு சொல்ல வரியா.??


ச்சே.. ச்சே..  அப்படி இல்ல.. ஆனா குழந்தைக்கு செய்ய வேண்டியது செஞ்சிட்டு வந்து பேசினா என்ன.. தவறு முழுதும் ஜானுமீது என்பது போல் அவன் பேசிய விஷயத்தில்.. மீதாவின் முகம் கருத்து போக சரி நான் கிளம்புறேன்.. எதுனாலும் போன் பண்ணு..   என்றதோடு ஒன்றாய் இருக்கும் அவர்களை பார்க்கவும் விருப்பமின்றி வேகமாய் அவன் சென்று விட..அவன் உருவம் மறையும் வரை பார்த்து நின்றாள் மிதா..



உள்ளே நுழைய.. இப்போது சற்று சமாதானம் ஆகி இருந்தாள் கிருத்தி..  ஆனால் அசோக்கை விட்டு இம்மியளவும் நகராமல் குழந்தை படுத்து இருக்க.. அவளை நெஞ்சோடு அணைத்தபடி அதே மெத்தையில் அசோக்கும் அமர்ந்திருந்தான்.. ஜான்வி மறுபக்கம் நின்றபடி கலங்கிய கண்களோடு குழந்தையிடம் ஏதோ கூறிக் கொண்டிருக்க கதவை திறந்து உள்ளே வந்த மிதாவிடம் கிருத்தியின் பார்வை நின்றது..



என்னடா பாப்பா.. கவனமாய் இருக்கிறது இல்லையா.. பாரு எவ்வளவு ஆழமா அடிபட்டுருச்சுன்னு அவள் நெற்றிக்காயத்தை வருடியபடி கூறினாள் மிதா..


ரொம்ப வலிக்குதாடா..


ம்ம்ம்.. என்றதோடு அசோகின் நெஞ்சிருக்குள் ஒளிந்து கொள்ள.. ரொம்ப பயந்துட்டா மீதா.. ஜான்வின் கண்கள் அவள் மீது அகலமாய் பதிந்தன..


சார்.. உங்களை டாக்டர் வர சொன்னாங்க.. சிஸ்டரின் குரலில் திரும்பினான் அசோக்..


பைவ் மினிட்ஸ்ல வரேன்னு சொல்லுங்க.. அவன் குரலில் இருந்து அழுத்தம் வீட்டில் பேசிப் பழகியவனுக்கும் இப்போதைக்கும் வெகுவாகவே மாறுபட்டதாய் தோன்றியது மிதாவிற்கு.. ஏன் அப்படி?? புரியவில்லை..



ஜான்வி பாப்பாவை கொஞ்ச நேரம் பாத்துக்கோ பாத்துட்டு வந்துடறேன்.. என கூறி அவன் எழுந்து செல்ல போக அப்பா அப்பா பதறி அவன் நெஞ்சோடு இழுத்து பொதிந்து கொண்டாள் மகள் அவள்.



பாப்பா என்னன்னு கேட்டு வந்துடறேன் டா.. ரெண்டு நிமிஷம் அம்மாகிட்ட இரு..



ம்ம்ஹும்.. என் கூடவே இரு.. நடுங்கிய குரலோடு அவள் கூறி அவன் சட்டையை இருக்க..  பெற்றவள் இல்லாமல் கூட இவள் இருந்து விடுவாள் போலும்..  ஆனால் அவனை விட்டு இம்மி அளவும் நகரமாட்டேன் என்கிறாளே.. யோசனையோடு பார்த்தாள் மிதா..  அடுத்த முறை வந்த நர்ஸிடம் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்னு சொல்லுங்க.. என முடித்து விட்டான்.




ஆனால் சாப்பாடு வாங்கவாவது எழுந்து வந்துதானே ஆக வேண்டும்.. 



குழந்தையின் தலையை தடவி தடவி கொடுக்க.. மாத்திரையின் வீரியமோ அல்லது தந்தை அவன் அருகில் இருக்கிறான் என்ற பாதுகாப்பு உணர்வோ.. வலியில் தூங்க முடியாமல் அவதி பட்டவள் மெல்ல மெல்ல கண் சொருக ஆரம்பித்தாள்..



சீரான மூச்சுக்காற்றில் அவள் நன்றாக உறங்கி விட்டாள் என்பதை அறிந்து அவளை மெத்தையில் படுக்க வைத்து சற்று அவன் விலக அவள் முகம் போன போக்கில் மீண்டும் நெருங்கி தகப்பனாய் அரவணைப்பு கொடுத்து அவளை நன்றாக தூங்க வைத்துவிட்டு தான் எழுந்தான்.



நான் வீட்டில போயி சாப்பாடு எடுத்துட்டு வந்துடறேன்.. எனக்கூறி அவன் செல்ல போக.. ஆனா உன் பைக் எதுவும் எடுத்துட்டு வரலையே.. எப்படி பஸ்ல போவியா.. கேட்டாள் ஜானு.



அதான் கார் கொண்டு வந்திருக்கோமே.. 



அது நம்ம இதுக்கு முன்னாடி இருந்த பாண்டியன் சாருடையதுல்ல..  உன்கிட்ட இருக்கிற மாதிரி அவர்கிட்டயும் சாவி இருக்கும்.. கார் விலை உயர்ந்ததுனால  தான் இப்போ போன புது வீட்டுக்கு முன்னாடி நிறுத்த வசதி இல்லன்னு  இங்க நிறுத்தி இருக்கார்.. ஆனா கார் மூவானதுமே மெசேஜ் வந்திருக்கும்..  அதோட அவரும் வந்து கார் எடுத்துட்டு போயிருப்பார் தானே...  நீண்ட விளக்கத்தோடு ஜான்வி கேட்டதில் அப்படியே எடுத்துட்டு போயிருந்தாலும் பஸ்ல போயிட்டு வந்துடறேன் என்றதோடு சுருக்கமாய் முடித்துக் கொண்டவன் செல்ல..   அந்த ஃப்ளோரை தாண்டும் போதே எதிர்பட்ட டாக்டர் நின்று அவனிடம் ஏதோ விளாவரியாய் கூறிக் கொண்டிருந்தார்..



சுருங்கிய அவன் புருவங்களும் இடுங்கிய கண்களும் ஏதோ முக்கியமான விஷயம் என காட்டியது..  கடைசியில் அவன் என்ன கூறினானோ அந்த டாக்டரின் முகம் மலர்ந்தது.. 




அவன் போன வச்சிட்டு போயிட்டான்.. நான் போய் கொடுத்துட்டு வரேன்.. என ஜான்வி எடுத்துக்கொண்டு வர இருக்கட்டும்.. பாப்பா எழுந்தான்னா அவர் இல்லைனா குறைந்த பட்சம் நீயாவது இருக்கணும்.. நான் போய் கொடுத்துட்டு வர்றேன்... என வந்த மிதாவின் கண்களில் இக்காட்சி பட்டது..  அப்படி என்னதான் அவர்கள் பேசி இருப்பார்கள் அவள் காதுகள் கூர்மையாகின..




சத்ரியா.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போற.. உனக்குன்னு இங்க பெரிய சாம்ராஜ்யம் இருக்கு.. இத்தனை பெரிய சொத்தோட ஒரே வாரிசு நீ.. எல்லாத்தையும் கட்டி காக்க வேண்டிய பொறுப்பும் உன் தாத்தா உனக்கு கொடுத்துட்டு போயிருக்காரு.. நம்ம மில்ஸ்.. டிரான்ஸ்போர்ட் எல்லாத்துக்கும் முழு உரிமை பட்டவன் நீ.. ஆனால் அதையெல்லாம் கொஞ்சமும் கண்டுக்காம இப்படி ஊர் பேர் தெரியாத இடத்துல போய் தங்கி இருக்கியே.. இங்க நடக்குற கொடுமைகள் எதையுமே என்னால கண் கொண்டு பாக்க முடியல.. என பாலச்சந்திரன் போனில் கதறி கொண்டு இருக்க.. நான் சொன்னா சொன்னது தான் அங்கிள்.. திரும்ப அங்க வர எண்ணம் எதுவும் எனக்கு இல்ல.. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க..  என்றதோடு போனை துண்டித்து இருந்தான் சத்ரியன்.



சத்ரியா..  சத்ரியா... அவர் குரல் காற்றோடு கரைந்து போனது.. 


யார் இந்த சத்ரியன்?? 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...