முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 52

 உங்க போன்.. செல்லப் போனவன் மிதாவின் குரலில் நின்றான்.. அவள் பார்வையோ அவனிடம் பேசிவிட்டு முகத்தில் அத்தனை மலர்ச்சியோடு சென்று கொண்டிருந்த டாக்டரிடம் பதிந்தது. அப்படி என்ன சொல்லி இருப்பான்.. இவ்வளவு மகிழ்ச்சியோடு செல்கிறாரே.. அப்படி இந்த மூட்டை தூக்குபவன் கூறி அவர் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம்  என்னவாக இருக்கும்..  யோசனையோடு பார்த்துக் கொண்டிருக்க.. ஒரு கணம் யோசனையில் அவன் புருவங்கள் இடுங்கினாலும் அடுத்த நிமிடமே தேங்க்ஸ் என்றதோடு போனை வாங்கி பாக்கெட்டுக்குள் சொருகி அங்கிருந்து கிளம்பி இருந்தான் அஷோக்..




விழிகள் செல்லும் அவனை துளைத்தன. இவன் என்ன இப்படி இருக்கிறான்.. எதற்குமே அழட்ட மாட்டேன்கிறான்..  டாக்டரிடம் ஏதோ சொல்லி இருக்கிறான்.. அது நிச்சயம் குழந்தையை பற்றி அல்ல என்பதும் புரிகிறது.. அப்போது டாக்டர் குழந்தையை கூறும் போதும் கூட மிஸ்டர் அசோக் என அவனிடம் தானே கூறினர்.. இப்போது பொரிதட்டியது.. 




அப்போது குழந்தையின் நிலையில் பெரிதாய் தெரியாதது இப்போது பூதாகரமாய் தெரிந்தது.. வெறும் மூட்டை தூக்குபவன் என ஜானு சொல்லி இருந்தாளே.. அப்படி இருந்தால் அவனை மிஸ்டர் என மரியாதையோடு அழைக்க வேண்டிய அவசியம் என்ன.. அதோடு டாக்டருக்கு அவன் பெயர் அவ்வளவு உறுத்தாய் எப்படி தெரியுமாம்.. கேள்வி மூளையை குடைந்தது.




அதிலும் எப்போதும் அமைதியாய் இருக்கும் அவன் குணமும், ஆனால் நேரத்திற்கு வேகம் விவேகத்துடனும் செயல்படும் அவன் பண்பும் ஒரு பெண்ணாய் இவளையும் கூட கவர தான் செய்தன..அனைத்தும் ஹை க்ளாஸ்.. அவள் இதழ்கள் முனுமுனுத்தன.



அப்போது குழந்தைக்கு ஒன்று என்றதும் ஜானு அவனை கட்டிக் கொண்டு கதறினாளே.. அப்படியானால் அவளுக்கும்?? ச்சே.. ச்சே.. உடனடியாய் மறுத்தாள.. அப்படி ஏதாவது இருந்தா அவ முதல்ல என்கிட்ட தான் சொல்லுவா.. யோசனையோடு அறைக்கு  வந்திருக்க.. உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை வெறித்த கண்களோடு பார்த்து அமர்ந்து இருந்தாள் ஜானு..



கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பியவள்.. இருந்தானா.. கொடுத்துட்டியா.. கேட்க.. ம்ம்ம்.. இந்த ஃப்ளோர்ல தான் போய்கிட்டு இருந்தாரு..  கொடுத்துட்டேன்..என்றவள் தன் குழப்பங்களை அவளிடம் கூறவில்லை..




ம்ம்ம்.. என்றதோடு மீண்டும் அவள் பார்வை குழந்தையிடம் பரிதவிப்போடு படிய அவள் கரத்தில் கரம் வைத்து அழுத்தினாள் மிதா..  கவலைப்படாத.. குழந்தை சீக்கிரமா சரியாயிடுவா.. பழையபடி ஓடி ஓடி விளையாட ஆரம்பிச்சிடுவா.. அவள் கூறும் போதே ஜானின் கண்கள் குளம் கட்டின..



என்னுடைய தப்பு தான் டி.. என்னுடைய கவனக்குறைவால தான் பிள்ளையே தனியா அனுப்பிட்டேன்.. இல்லன்னா அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்து இருக்காதுல்ல.. ஆரியன் சாற்றிய குற்றச்சாட்டு அப்படியே.. ஆனால் இது ஒன்றும் வேண்டுமென நடந்தது இல்லையே.. தற்செயலாய் நடந்த ஒன்று.. தவறு இருக்கலாம்.. அதற்கு தன்னை தானே இப்படி கூறி வருத்திக்கொள்ள வேண்டாம் என்பது மிதாவின் கருத்து.




ப்ச்... விடு.. நம்ம யாரும் இதை வேணும்னு செய்யல.. ஏதோ நடந்திருச்சு இப்போ நம்ம தைரியமா இருக்க வேண்டிய நிலை.. பாப்பாவ நல்லபடியா தேற்றி கொண்டு வந்துடுவோம்... என்றவள் 



ஆமா ஜானு கேக்கணும்னு நினைச்சேன்.. இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்ல பாப்பாவசேர்த்திருக்கோமே..  ஃபீஸ் எவ்வளவு வந்துருக்கும்.. பெற்றோரை விட்டு தனியே இருந்த இந்த சில காலங்களில் பணத்தின் மதிப்பு வெகுவாகவே அறிந்திருந்தவளிடம் இருந்து கேள்வி பிறந்தது..



ஹ்ம்ம்.. எனக்கும் தெரியாது..  சொல்லப்போனால் பாப்பா பிறந்ததே இந்த ஹாஸ்பிடல்தான்... அதுக்கும் எவ்வளவு வந்துச்சுன்னு எனக்கு தெரியாது.. 


என்ன..??



ஆமா அசோக் தான் அதெல்லாம் பாத்துக்கிட்டான்.. நான் எவ்வளவு வந்துச்சுன்னு கேட்டதுக்கு ஏதோ திட்டமாமே.. அதுல அவனுக்கு டோக்கன் இருக்கிறதா சொன்னான்..



எனக்கு தெரிஞ்சு இப்பவும் அந்த டோக்கன்லையே பாப்பாக்கு பாக்குறதுக்காக தான் இங்க கூட்டிட்டு வந்திருப்பான்.. அவள் முடிக்க அவள் கூறிய விஷயங்களை மிதாவினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..




இதைப்போல் திட்டத்தை வைத்து செயல்படும் மருத்துவமனை போல் தெரியவில்லையே இது.. பக்கா ஹை கிளாஸ் பிரைவேட் ஹாஸ்பிடல்.. அவள் விழிகள் பார்த்த மட்டும் உணர்ந்திருந்தன.. 



ஜானு கூறுவது போல் உண்மையாகவே அவனுக்கு திட்டமிருக்கிறதா அதுவும் இங்கே..? அல்லது பொய் சொல்கிறானா?? அவள் யோசனையைக் கூட கண்டுகொள்ளாதவளாய் குழந்தை பக்கம் திரும்பிக் கொண்டாள் ஜான்வி..



இவளும் அண்ணன் மாதிரிதான்.. முடிஞ்சதையே நினைச்சுகிட்டு அதுக்கு தான் தான் காரணம் என்று தன்மேல பழி போட்டுக்கிட்டு கூட்டுக்குள்ள அடைகிறா.. என மனதில் எனனவோ எண்ணங்கள் ஓட இருவரும் அமர்ந்திருந்த நிலையில் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு கதவு தட்டலில் திரும்பினர்..



அஷோக் தான் உள்ளே வந்தான்.. வா அஷோக்.. தானே பேசியபோதும் மாறாத அவள் முகங்களில் சிறு சோர்வு மங்கியதாய் தோன்றியது மிதாவிற்கு.. 



எல்லா சாப்பாடு எடுத்து வச்சுட்டியா..




ம்ம்ம் எல்லாம் இருக்கும் பாரு.. என்றதற்குள் தரையில் அமர்ந்து டிபன் பாக்ஸ் அனைத்தையும் திறந்து வைத்திருந்தாள்.. நீயும் உட்காரு அசோக் சேர்ந்தே சாப்பிட்டிடலாம்.. அழைக்க அவன் நின்றவனின் விழிகளோ கண்மூடி கிடந்த குழந்தையின் மீது.



உட்காருன்னு சொன்னேன்.. அவள் அதட்டலில் தானாக அவன் கால்கள் அமர்ந்தன.. நீயும் வா மிதா.. அழைத்தவளிடம் இப்போதுதானே சாப்பிட்டேன் என அங்கேயே அமர்ந்து கொண்டாள் மீரா. இருவருக்கும் ஆளுக்கு ஒரு தட்டில் பரிமாறி உண்ண ஆரம்பிக்க.. ஜானுவிற்கு பயங்கர பசி போலும்..   தட்டில் இருந்த பருக்கைகள் வேகமாய் உள்ளே சென்று கொண்டிருக்க.. இவனிடமோ இப்போதும் அதே அமர்தலான நடவடிக்கைகள்.. எப்படி இவனால எல்லாத்துலயும் இவ்வளவு பாலிஷா இருக்க முடியுது.. மிதாவின் கூர்ந்த கண்கள் அவனை விட்டு இம்மியும் அசையவில்லை..




வேல்விழிகள் தன்னை துளைப்பதை உணர்ந்தானோ சட்டென நிமிர்ந்த அவன் பார்வையில்.. கள்ளத்தனத்தை கண்களை படபடவென கொட்டி மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.. கூர் விழிகளோடு ஒரு கணம் பார்வையால் அவளை துளைத்தவன் அடுத்த நிமிடமே மீண்டும் உணவிற்குள் ஐக்கியமாகி இருந்தான்..



எதுவும் அறியாமல் உண்டு கொண்டிருந்தாள் ஜான்வி.. சாப்பாடெல்லாம் எடுத்துட்டு வந்துட்ட..  நாளைக்கு போய் இந்த நான்வெஜ் பாத்திரம் விளக்கணும்னு நினைச்சாலே..  என்றவளின் முகம் ஒரு மாதிரி அஷ்ட கோணலாய் போக.. எல்லாம் எடுத்து வச்சதோட கழுவி வச்சுட்டு தான் வந்தேன்..  நீ நிம்மதியா சாப்பிடு இப்போதும் எண்ணி இரண்டே வார்த்தைகள் தான்.. ஆனால் அவளின் சின்ன வருத்தங்களையும் துணி வைத்து துடைத்தேறிவதாய்..



தன் தோழியை சிறு வருத்தம் கூட கொள்ளாமல் பார்த்துக் கொள்பவனை விட்டு இம்மி அசையவில்லை மீதாவின் கண்கள்.. 



அசோக்கின் பார்வை அவ்வப்போது குழந்தையின் மீது படிவதையும் திரும்புவதையும் ஜானு கண்டாள்.. அவளின் இந்த நிலைக்குத் தான் காரணம் என்பது புழுவாய் மனதை குடைந்து கொண்டிருக்க.. எல்லாம் என்னால தானே அசோக்..  நான் மட்டும் பாப்பா கூப்பிட்ட போவே போயிருந்தேன்னா அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காதுல்ல..  சாப்பாட்டோடு வந்த குரல் கரகரத்து நின்றது..




ஜானு முதல்ல சாப்பிடு..  சாப்பிடும் போது பேசாதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் அவன் அதட்டலில்.. அடுத்த நிமிடம் அவள் கப் சுப்.. 



ஆனால் முகத்தில் இருந்த கவலை மட்டும் மறையவே இல்லையே.. இடியட் அவளை பிள்ளைக்கு ஆயிருச்சுன்னு சோகமா இருக்கா அவள போய் திட்டுறானே.. மத்ததுல எல்லாத்துலயும் சரியா இருந்து என்ன பண்றது..  என் தோழி விஷயத்துல வர்றப்போதான் எல்லாவனும் கோட்டை விடுறாங்க..  இந்த எல்லாவனும் என்பதில் அவள் அண்ணனும் அடக்கம்தான் போலும்..




அரை மனதோடு தட்டில் இருந்ததை உண்டு முடித்திருந்தனர்.. அனைத்தும் காலியான நிலையில் பாத்திரத்திற்குள் பாத்திரம் போட்டு அசோக்கே எடுத்து வைத்திருந்தான்..  தன் தட்டோடு உண்டு முடித்திருந்த அவள் தட்டையும் வாங்க போக நானே கழுவிக்கிறேன்... தன் பக்கமாய் அவள் எழுத்துக் கொண்டதில் ஒரு கணம் நின்று ஆழ்ந்து அவளைப் பார்த்தவன் அடுத்த கனமே மறுபேச்சு இன்றி அங்கிருந்து சென்றிருந்தான்..



அவன் கை கழுவி விட்டு வந்ததும் தானும் கை கழுவி விட்டு தட்டையும் சேர்த்து கழுவி அவன் எடுத்து வைத்திருந்த பாத்திரங்களோடு வைத்து விட்டு வந்து அமர்ந்தாள் ஜானு..




பார்வை கவலையோடு குழந்தையிடம் பதிந்தது..  தன்னால்தான் குழந்தைக்கு இப்படி ஒரு நிலை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..  தனக்குத்தானே வருந்திக்கொண்டு அவள் அமர்ந்திருந்த நேரம் முரட்டு கரம் ஒன்று மென்மையாய் படிய அவள் விழிகள் சிமிட்டி நிமிர்ந்தன..



பக்கத்திலிருந்த சேர் இழுத்து போட்டு அருகில் அமர்ந்தான் அசோக்.. மிதா அதே சோபாவில் படுத்து உறங்கிப் போயிருந்தாள்..



இப்போ எதுக்கு தேவையில்லாம உன் மேல நீயே இப்படி தேவையில்லாம பழி போட்டுகிட்டு ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்க.. அவன் குரல் மென்மையாய் ஒலித்தது.



பழி என்ன.. உண்மை அதுதானே.. பாப்பா கூப்பிட்டப்போ நான் வந்திருக்கணும்.. பாரு இப்போ எப்படி தலையில் கட்டு போட்டு படுத்து இருக்கான்னு.. எப்பவும் ஓடி ஆடி துருதுருன்னு இருக்குற பிள்ளை இப்போ இப்படி படுத்து இருக்கிறதா பார்த்தா எவ்வளவு கஷ்டமா இருக்கு?? அவள் குரல் தழுதழுத்தது..



ஆழ்ந்த கண்களோடு துளைத்தான் அவளை.. அதுக்குன்னு என்ன செய்ய முடியும்.. அப்படின்னா நானும் சொல்லலாம்.. நீயாவது உன் பிரண்டுக்கு பரிமாறிட்டு பேசிகிட்டு இருந்த.. நான் ரூம்ல தனியா.. சும்மா தான் இருந்தேன்.. அதுக்காக நானும் என்னால தான் பாப்பா இப்படி விழுந்து கிடக்கிறான்னு சொல்லிக்கொள்ள முடியுமா..



ஆனா பாப்பா என்கிட்ட தானே கைய கழுவி விட சொன்னா..  நான்..  என அழுகையில் பிதுங்க ஆரம்பித்த அவள் உதடுகளை கரம் கொண்டு மறைத்து நிறுத்தினான்.. அழாதே என்பது அவன் பரிதவித்த அவன் விழிகளின் விழிவழி செய்தியாய்..



இங்க பாரு ஜானு.. எது நடந்தாலும் அது ஏதாவது ஒரு காரணத்துக்காக தான் இருக்கும்.. பாப்பாவுக்கு இப்படி அடிபட்டு இருக்கிறது எனக்கும் கஷ்டம் தான்..  அதுக்காக இன்னும் இன்னும் தேவையில்லாத விஷயத்தை யோசிச்சு நமக்கு நாமே பழி போட்டுக்கிட்டு இருக்க கூடாது..  அடுத்த விஷயத்தை நோக்கி முன்னேறனும்.. இனிமேல் பாப்பாவை இன்னும் கேர் எடுத்து பார்த்துக்கணும்.. அவளுக்கு வேணும்கிறதெல்லாம் செய்யணும்.. அவ எப்படி இருந்தாலும் அதைவிட பல மடங்கு அவளை தேற்றி விடனும்.. நமக்கு இப்போதான் நிறைய பொறுப்பு இருக்கு.. பாப்பாவ குணப்படுத்துவதே பெரிய பொறுப்பில்லையா.. அவன் கேட்டு முடிக்க பொய்யாய் கண்மூடி உறங்குவது போல் படுத்திருந்த மிதாவிற்கு இப்போதே எழுந்து கைதட்டி விசில் அடித்து டப்பாங்குத்து ஆடலாம் என்பது போல் கை கால்கள் பரபரத்தன..



ஐயோ..  இவன் என்ன இப்படி இருக்கான்.. பூரித்தவளின் கேள்வியில் சற்று நேரத்திற்கு முன்..  எல்லாம் அவளால தான்..  அப்படி என்ன வெட்டி முடிச்சுட்டு இருந்தா..  என ஆரியன் மன கண்ணின் தோன்றுவதை தடுக்க முடியவில்லை..




ஒரு கண் மட்டும் மூடிய நிலையில் ஓட்டை போட்டு பார்க்க.. அவன் தோளில் அவளை சாத்த படி.. தலைக்கோதிக் கொண்டிருந்தான் அசோக்..  அதில் விரசத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.. வெதும்பும் மகளை தோளில் தாங்கும் தந்தையின் ஸ்பரிசம்.. இதழ்கள் தானாக புன்னகைக்க கண் அயர்ந்தாள்..



அந்த பெரிய சோபாவில் மிதா ஒரு பக்கமும் ஜான்வி ஒரு பக்கமாய் படுத்து உறங்கி கொண்டிருக்க குழந்தையின் அருகிலேயே சேர் போட்டு கவிழ்ந்து விட்டான் அஷோக்.. 



திடீரென அஹ்ஹ்.. மாஹ்ஹ்.. முனகல்.. சத்தத்தில் பதறி ஜான்வி கண்விழிக்க.. அவளோடு சேர்ந்து விழித்தவளாய் மிதா புரியாமல் பார்க்க.. அதற்குள் லைட்டை போட்டு குழந்தையை நெருங்கி இருந்தான் அசோக்..




பாப்பா.. பாப்பா.. என்னடா.. அவள் தோளை பற்றிய நேரம்..  அடுத்த நிமிடம் மிரண்டான்.. என்னாச்சு பாப்பா..  என ஓடி வந்த ஜான்வியிடம் பாப்பாவுக்கு காய்ச்சல்..   என்றவன் அடுத்த நிமிடம் எழுந்து வெளியே ஓடி இருந்தான்.. உள்ளே வரும்போது மூன்று நர்சுகளும் அவனோடு.. குழந்தையை பரிசோதித்தவர்கள்.. அடுத்தடுத்ததாய்.. கையில் மாட்ட ப்பட்டிருந்த ட்ரிப்ஸ்சோடு எதையோ போட்டுவிட்டனர்.. ஏன் காய்ச்சல் வந்துச்சு.. எதனால காய்ச்சல்.. என்ன பிரச்சனை பாப்பாவுக்கு.. இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா.. அந்த இடத்தை ரணகளம் ஆக்கிவிட்டவனிடம் குழந்தைக்கு வலியில் தான் காய்ச்சல் வந்திருக்கும் என எத்தனையோ முறை நர்சுகள் கூற..  காதில் கூட கேட்காமல் மீண்டும் மீண்டும் அதே கேள்வி கேட்டு சந்தைக்கு எகிரியவனின் தோளில்  ஜானு கை வைத்ததும் சட்டென அமைதியானான் அஷோக்..



அசோக் டென்ஷன் ஆகாத.. வலியில இப்படி எல்லாம் காய்ச்சல் வரது சாதாரணம்தான்... சின்ன வலிக்கே நமக்கெல்லாம் காய்ச்சல் வந்துரும்..  பாப்பா இவ்வளவு பெருசா அடிப்பட்டு கிடக்கிறா.. அதனாலதான் காய்ச்சல் வந்திருக்கும் என ஜானு சொன்னதும் அமைதியாய் குழந்தையிடம் சென்று அமர்ந்து கொண்டவனை வித்தியாசமாய் பார்த்தனர்..



இது தெரிந்திருந்தால் அப்போதே இவளை விட்டு கூற வைத்திருக்கலாமே..  இவ்வளவு நேரம் நாங்கள் தொண்ட தண்ணி வற்றக் கூறியதெல்லாம் வீணா..?? விரிந்த விழிகள் பாவமாய் சுற்றி வந்து ஓரமாய் வாய் மூடி சிரித்த மிதாவிடம் படிந்து மீண்டது..




குழந்தைக்கு மருந்து கொடுத்து இருக்கோம்.. இன்னும் பத்து நிமிஷத்துல காய்ச்சல் குறைந்துவிடும் அதுக்கு மேலயும் இருந்தா வந்து கூப்பிடுங்க என்றதோடு நர்ச்கள் கிளம்பி விட.. ஆஅஹ்ஹ்ஹ.. கொட்டாவி விட்டபடி குழந்தையின் மறுபக்கம் அமர்ந்தாள்ஜானு.. 




நடந்த கலாட்டாவில் எழுந்திருந்த மிதாவிடம்.. நீ போய் படுடி..  நான் பார்த்துக்கிறேன்..  ஜானு படுக்கையில் தலை சாய்த்தபடி கூறிட உனக்கும் தூக்கம் வருதுல்ல.. நீ போய் தூங்கு.. நான் பாப்பாவ பாத்துக்குறேன்..



ஆனா உனக்கும்.. உன் கண்ணை எல்லாம் பாரு கண்ணுக்கு கீழே எவ்வளவு கருவளையம் இருக்குன்னு..



அது ஒன்னும் பிரச்சனை இல்ல.. நீ போய் தூங்கு நாளைக்கு காலைல ஆபீஸ் போகணும் இல்ல..



அவன் கூற விழித்தாள்.. குழந்தை இந்த நிலைமையில கிடக்குறா.. ஆபீஸ் போய் நான் என்ன பண்ணுவேன்.. நான் நாளைக்கு லீவு தான்..  என்றவளை ஆழ்ந்து பார்த்தபடி.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல.. நான் பாத்துக்கறேன்.. ரெண்டு பேரும் லீவு போட்டா.. அடுத்த மாச செலவை எப்படி ஓட்டுவதாம்.. நீ போ.. பாப்பா என்ன விட்டுட்டு இருக்க மாட்டா.. அதனால என்னால போக முடியாது.. நான் அவளை நல்லபடியா பார்த்துக்கிறேன்.. அவன் கூறியதும் மறுத்து கூற முடியவில்லை..



கூறுவது உண்மைதானே... வீட்டு செலவிற்கு நானும் ஒரு கை கொடுக்கிறேன் எனக்கூறி தானே தான் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததோடு அவனையும் வேலை மாறி செல்ல கூறினாள்..



ம்ம்ம்.. என்றவள் எப்போது கண் அயர்ந்தாளோ.. காலையில் குயில்களின் சத்தத்தில் தான் கண் திறந்தாள்.. பாப்பாவ கவனிக்காம தூங்கிட்டேனே..  பக் என எழுந்தவள் பார்க்க அங்கு அசோக்கை காணவில்லை.. 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...