கண்விழித்ததும் அவள் விழிகள் முதலில் தேடியது எதிரே உறங்கிக் கொண்டிருந்த அசோக்கைதான்., அங்கு அவனை காணாததில் பக் என தூக்கிப்போட்ட நெஞ்சத்தோடு எழுந்தாள்..
எங்க போனான் இவன்.. விழிகளை சுற்றி அலைய விட எங்கும் தென்பட வில்லையே அவன்.. சகல வசதிகளோடு இருந்த அந்த அறையின் ஓரமாய் இருந்த வாஸ்பேஷனில் முகம் கழுவி விட்டு வெளியே வந்தாள்..
அறைக்கு வெளியே சற்று தள்ளி நின்றபடி போனில் ஏதோ பேசிக் கொண்டிருந்தவனை கண்டதும் எகிறிய இதயத்துடிப்பு சற்று குறைந்த உணர்வு.. எதனால் அப்படி என யோசிக்க மறந்தாள்..
இந்த நேரத்திலே யார் கிட்ட பேசுறான்.. யோசித்தபடி நெருங்கியவள் அசோக்.. அழைத்து அவன் தோளில் கை வைக்க சட்டென அவன் பேச்சை தடைபட்டது.. ஜானு.. அவன் விழிகள் உருண்டன..
அந்த நேரத்தில் அந்த அழைப்பை இருவருமே கவனித்திருக்கவில்லை.. அதிர்ச்சி அவனுக்கு.. யோசனை அவளுக்கு..
என்ன ஆச்சு?? காலையிலேயே ஏதோ சீரியஸா பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.. குறுகுறுவென தலை தாழ்ந்து அவள் பார்த்ததில் அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. ஆபீஸ்க்கு வர முடியாதுன்னு பிரண்டு கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்.. என்றிட ஓஹ்ஹ்.. அவள் தலை ஆடியது.
சரி எழுந்துட்டியா.. வீட்டுக்கு போய் கிளம்பிட்டு ஆபீஸ்க்கு போ.. எதாவதுன்னா கால் பண்ணு..
இன்னைக்கு ஒரு நாளாவது லீவு போடறேன்னே அசோக்.. நீ மட்டும் தனியா பாப்பாவை எப்படி சமாளிப்ப.. அவள் கண்கள் சுருங்கின.
அப்ப அடுத்த மாசம் செலவை எப்படி சமாளிக்கிறதாமா.. இடுப்பொடித்து அவன் கேட்டதில்.. ஹான்.. சரி.. வேலைக்கே போறேன்.. அரை மனதாய் ஒத்துக் கொண்டாள்..
சரி சரி நேரம் கடத்தாம கிளம்பு.. பாப்பாவ பத்தி யோசிச்சிட்டு இருக்காம வேலையில கான்சென்ட்ரேட் பண்ணு.. என்றபடி அறைக்குள் நுழைந்தான்.. அவன் வார்த்தைகளில் அப்போதுதான் விழிப்பு தட்டிய மிதாவின் புருவங்கள் சுழிந்தன.. எதுக்காக இவ வேலைக்கு போறதில இவ்வளவு ஆர்வம் காட்டுறான் இவன்.. யோசித்தபடி கொட்டாவி விட.. அவள் எழுந்ததைக் கண்டவளாய் சரி.. மிதா.. நான் வீட்டுக்கு போய் கிளம்பிட்டு ஆபீஸ் போறேன்.. பாப்பாவ அசோக் பாத்துக்குறதா சொல்லிட்டான்..கூறியதும்..
சரி டி.. கவலைப்படாமல் போ.. நானும் சப்போர்ட்டுக்கு இருக்கேன்.. அவள் கூறிய அடுத்த நொடி இல்ல இல்ல வேண்டாம்.. அவசரமாய் மறுத்திருந்தான் அசோக்..
என்ன.. இருவரும் புரியாமல் பார்க்க பாப்பாவ நான் பார்த்துக்கிறேன் ஜானு.. நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க.. பாவம் உன் பிரண்டுக்கு எதுக்கு கஷ்டம்.. அவன் விழிகள் அழுத்தமாய் மீராவை துளைத்தது..
இதுல எனக்கு என்ன கஷ்டம் இருக்கு.. உடம்பு முடியாத பிள்ளையை எப்படி நீங்க மட்டும் தனியா பார்த்துப்பீங்க.. பரவாயில்ல எனக்கு இங்க இருக்கிறதுல ஒன்னும் கஷ்டம் இல்ல..
ஆனா எனக்கு இருக்கே.. என்ற ரீதியில் பிடரி கோதியவன்.. இருக்கட்டும்ங்க.
என்ன இருந்தாலும் நீங்க எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட்.. உங்களை சிரமப்படுத்த விருப்பம் இல்ல.. அதோட பாப்பாவ நானே பார்த்துப்பேன்.. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க.. நல்லா ரெஸ்ட் எடுங்க.. என முடித்து கொண்டான்..
இல்ல அஷோக்.. அவ..
ப்ளீஸ்.. கண் சுருக்கி கேட்ட பின்னும் மறுக்க முடியாமல் இருவருமே கிளம்பினர்.. அப்படி ரெண்டு பேரையும் அனுப்பிவிட்டு இவர் என்னதான் பண்ண போறாராம்.. கேள்வி எழுந்தாலும் ஜான்வியோடு கிளம்பி இருந்தாள் மீதா.
சரி அஷோக்.. நான் போயிட்டு கூப்பிடறேன்.. இருவரும் கிளம்பி விட்டனர்.
அவர்கள் சென்றதும் கண்மூடி தொய்ந்து அந்த சோபாவில் சாய்ந்தான் அசோக்.. இடுங்கியவன் புருவங்கள் யோசனையை காட்டியது.. இதை என்ன செய்வது என கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாய் அதே நிலையில் யோசித்தவன்.. ஏற்கனவே எடுத்த முடிவையே செயல்படுத்த விழிகளை திறந்தான்.. போனை எடுத்து யாருக்கோ அழைத்தான்..
வீட்டிற்கு வந்ததும் ஜான்வி குளித்து கிளம்ப ஆரம்பித்து விட்டாள்.. ஆனால் மிதா தான் அழகு நகத்தை கடித்து குதறி கொண்டிருந்தாள்..
அவன் ஏன் அப்படி கூறினான் என்பது புரியவில்லை.. ஏதோ மர்மம் இருப்பதாய் தோன்றியது.. வந்த ஒரு நாளில் தனக்கு தோன்றியது ஜானுவிற்கு எத்தனை காலங்கள் ஆகி தோன்றவே இல்லையா.. அவள் விழிகள் குளித்து முடித்து வந்தவளிடம் படிந்தன..
அவசர அவசரமாய் தலையை பின்னல் இட்டு முகத்தில் பவுடர் போட்டுக் கொண்டிருந்தவளின் மறுபக்கம் வந்து நின்றாள் மிதா..
என்ன டி..
பாப்பாவ அங்க அவர்கிட்ட தனியா விட்டுட்டு வந்துட்டியே.. பாப்பா திடீர்னு கேட்டா என்ன பண்ணுவ.. அவள் கேள்வியில் இவள் பருவங்கள் முடிச்சிட்டன.. அடுத்த நிமிடமே இதழ்கள் மலர சிரித்தவளாய்..
அப்படியே கேட்டாலும் அவன் சமாளிச்சுப்பான்டி.. நேத்தே பார்த்தேல்ல பாப்பா என்ன விட அவனதான் அதிகமா தேடுவா.. அதோட இப்போ நான் லீவு போட்டுருந்தாலும் அடுத்த மாசம் செலவு ஓட்றதுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுமில்லயா.
இதுக்கு முன்னாடி எல்லாத்தையும் அவரே பாத்துக்கிட்டதா சொன்ன.. இப்போ உன் சம்பளத்தில் தான் குடும்பமே ஓடுற மாதிரி சொல்றியே.. மிதாவிற்கு அவ்வளவு சந்தேகம்..
ம்ம்.. அவன் தான் பாத்துகிட்டு இருந்தான்.. சொன்னேனே மூட்டை தூக்கினான்னு.. அதுல உனக்கு ஜவ்வு நகன்றுச்சு.. அப்பவும் கூட என் காசு எதையும் வாங்கிக்காம அவன் சேர்த்து வச்ச காசில தான் பாத்துகிட்டான்.. அதுக்கடுத்து நான் தான் படிச்ச படிப்புக்கு வேலைக்கு போ.. எதுக்கு மூட்டை தூக்கி இப்படி எல்லாம் கஷ்டப்படுறேன்னு சொல்லி.
இப்பதான் ஒரு கம்பெனியில வேலைக்கு சேர்ந்து இருக்கான்.. அவள் கூறும் நம் கதைகளை மிதாவினால் நம்பவே முடியவில்லை..
சிகிச்சைகளையே பார்த்துக் கொள்ளும் அளவிற்கு அப்படி எவ்வளவுதான் சேர்த்து வைத்திருக்கிறானாம்.. மூட்டை தூக்குபவனின் கையில் குடும்பம் போல் இவளையும் மகளையும் வைத்துக் கொண்டு சேர்க்க பணம் ஏது..
மிதா யோசித்து நின்ற நேரத்தில் கிளம்பி விட்டிருந்தாள் ஜானு.. சரிடி.. நான் கிளம்புறேன்.. டிவி போட்டு பாரு.. ஏதாவதுன்னா எனக்கு கூப்பிடு.. என கூற சரியென தலையைசைத்தாள்..
எப்படி இவள் இவ்வளவு வெள்ளந்தியாய் இருக்கிறாள் கேள்விதான் எழுந்தது. அவன் நிச்சயம் ஏதோ ஒன்று செய்கிறான் என்பது புரிகிறது.. ஆனால் அது என்ன கண்டுபிடிக்க வேண்டும்... அவன் நடத்தைகளும் செயல்களும்.. ஹப்ப்பா.. தலையைப் பிடித்து உலுக்கி கொண்டாள்.
தன் தோழிதான் வெள்ளந்தியே தவிர்த்து தான் ஒன்றும் இல்லை.. இங்கிருந்து செல்வதற்குள் அவன் வண்டவாளம் தண்டவாளங்களை அறிந்து அவளிடம் கூறியே ஆக வேண்டும்.. ஒருவேளை அவன் தவறானவானாய் இருந்தால் இதையே காரணம் காட்டி இவனிடம் இருந்து பிரித்து தன் அண்ணனிடம் சேர்த்து விட வேண்டும்.. உறுதியா எண்ணிக்கொண்டவளின் விழிகள் அந்த இடத்தை சுழன்றடித்தன.
இந்த சில வருடங்களாக அவனும் இங்குதானே தங்கி இருக்கிறான்.
அவனைப் பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா.. ஜான்வி சென்றதோடு கதவை பூட்டிவிட்டு உள்ளே தேட ஆரம்பித்து இருந்தாள் மிதா..
தன்னிடத்தில் அமர்ந்தபடி சிஸ்டமை ஆன் செய்தாள் ஜானு.. ஜானு.. இப்போதான் வரியா.. என்றபடி திதி திரும்பியவள்.. இன்னைக்கு உனக்கு லீவு.. திவி கூறியதும் புரியாமல் பார்த்தாள்..
குழந்தை அடிபட்டது அவளுக்கு தெரியாதே?? பின் விடுமுறை என்றால்..
அவள் உருண்டை முட்டை விழிகளில் என்ன கண்டாளோ.. என்ன சொல்ல வர என்ன புரியலையா.. இன்னைக்கு நம்ம மேனேஜர் அதான் ஆரியன் சார்.. ஏதோ முக்கியமான மீட்டிங் விஷயமா போயிருக்காராம்.. மதியம் கூட வந்தாலும் தான் வருவாராம்.. அவர் திட்டு வாங்காம இருக்கிறதே உனக்கு லீவு தானே.. அதான் சொன்னேன்.. அவள் கூறியதில் ஜான்வின் தலை ஒரு மார்க்கமாய் ஆடியது.
அது சரி.. உன் முகம் ஏன் டி ஒரு மாதிரியா இருக்கு.. என்றவளிடம் குழந்தைக்கு அடிபட்டதை சுருக்கமாய் கூற.. அய்யோ.. இப்போ எப்படி இருக்கா.. பதறினாள் திவி..
பரவாயில்ல..அசோக் பாத்துக்குறேன்னு சொல்லி இருக்கான்.. அதான் நான் வந்தேன்..
இருந்தாலும் நீ இன்னைக்கு லீவு போட்டு இருக்கலாம் ஜானு.. இவ்வளவு சின்சியாரிட்டி ஆகாது..
அவன் தாண்டி போக சொன்னான்.. அவன் இல்லாம பாப்பா இருக்க மாட்டா.. அதனால அவமே.. பாத்துக்குறேன்னு சொல்லிட்டான் அடுத்த மாசத்துக்கு கையில் வேண்டுமே..
அத சொல்லு.. ஆனாலும் உன் ஹஸ்பண்ட் உண்மையாவே செம்ம.. கண்கள் மின்ன திவியின் தலை உருண்டது..
சரி.. சரி.. நீ கவலைப்படாம வேலை பாரு.. பாப்பாவுக்கு சீக்கிரமா சரியாகிவிடும்.. அவள் கூறகண் மூடி திறந்த அமைதியாய் புன்னகைத்தபடி தன் வேலைக்குள் ஆழ்ந்தாள்.
இப்போது குழந்தை எப்படி இருக்கிறாளோ.. என்னை நேற்று வீட்டிற்கு வந்ததிலிருந்து இப்போதும் தவித்துக் கொண்டிருக்கும் மனதை கட்டுப்படுத்த முடியாது அலுவலகத்திற்கு கிளம்பி முடித்திருந்த நிலையில் மிதாவிற்கு போன் செய்தான் ஆரியன்....
இப்ப பரவாயில்ல அண்ணா.. மிதா குரலை தொடர்ந்து மாமா.. பின்னிருந்து கீச்சு குரல்..
இரு கூப்பிடறேன்.. என போனை துண்டித்து அவள் செய்தியில் சற்று நிம்மதி கொண்டு திரும்பினான்.. மாமா இந்த டிரஸ்ல நான் எப்படி இருக்கேன்.. உடலை ஒட்டி இம்மியாய் செதுக்கப்பட்டிருந்த உடை.. உடல் பாகங்கள் ஒவ்வொன்றையும் வெளிச்சம் போட்டு காட்டியது..
உண்மையான காதல் கொண்டிருந்தவனாய் இருந்தால் உண்மையாகவே இந்த அழகில் மயங்கி விழுந்து இருக்க வேண்டும்.. ஆனால் ஆரியனின் முகமோ கடுகடுத்து போனது.. இடியட்.. இது என்ன டிரஸ்.. எடுத்த எடுப்பிலேயே அவன் கத்தியதில் அவள் முகம் அரண்டு விழித்தது..
உங்களுக்கு பிடிக்கும் தான்..??
எனக்கு பிடிக்கும்னு நான் சொன்னேனா.. தயவு செய்து போய் முதல்ல இதை மாத்து.. இதோட என்கூட ஆஃபீஸ்க்கு வேற வர்றேன்னு கிளம்பிட்டேன் சிடுசிடுத்தான்..
எதுக்கு மாமா.. எப்ப பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்கீங்க.. கண்களில் பொங்கிய நீரோடு வேகமாய் உள்ளே ஓடிவிட்டாள் ரூபா..
அதன் பின் வழக்கம்போல் டாப் ஸ்கர்ட்டையெ போட்டு வர அந்த உடைக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று ரீதியில் பெருமூச்சு விட்டு கிளம்பினான் ஆரியன்..
திடீரென போனில் டொய்ங் டொய்ங் என வந்த மெசேஜை தொடர்ந்து போன் அடிக்க எடுத்தால் மானஸ் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.
சொல்லு மானஸ்.. தாமதியாமல் அழைப்பை ஏற்று காதில் வைத்திருந்தான் ஆரியன்..
என்னடா.. எந்த நேரத்துக்கு கூப்பிடுற எதுவும் முக்கியமான விஷயமா..
ஆமாம் மச்சான்.. முக்கியம் தான்.. அதன் காலையிலேயே கூப்பிட்டேன்.. என்றவன் தொடர்ந்து விஷயத்தைக் கூற.. என்னடா இப்போ சொல்ற.. நான் ஆபீஸ்க்கு பாதி தூரம் போயிட்டேனே.. ஆரியனின் புருவங்கள் சுருங்கின.
மச்சான் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.. இது ரொம்ப பெரிய பிசினஸ் மீட்டிங்.. இருக்கிற எல்லா பிசினஸ் மேக்னெட்ஸும் இன்னைக்கு வருவாங்க.. நம்மளும் இதுல ஒரு பார்ட்டா இருக்கிறதால நமக்கும் ஏதாவது குட்நெஸ் கிடைக்கும்.. இன்விடேஷன் வந்திருக்கு.. உனக்கு நான் அனுப்பி விடுறேன்.. ஆனா நான் தான் இப்போ நாட்டிலேயே இல்லையே.. இதுல கலந்துக்க முடியாதது எனக்கு கஷ்டம் தான்.. அதனால என்ன.. எனக்கு பதில் நீ போய்ட்டுவா மச்சான்..
ஆனா மானஸ்..
ப்ளீஸ் டா..
சரி.. கண்களை அழுந்த மூடி திறந்தவன் காரை யூ டர்ன் எடுத்து மறுபக்கத்திற்கு திருப்பி இருந்தான்..
அந்த பெரிய ஹால் பார்ப்பவர்களின் கண்ணை கவரும் அளவிற்கு அத்தனை அழகான வடிவமைப்போடு அமைக்கப்பட்டு இருந்தது.. வட்ட வடிவிலான டேபிள் போடப்பட்டிருந்த அதை சுற்றி வெள்ளை திரையோடு அழகான சிவப்பு நிற ரிப்பன் ஒன்று எட்டிப் பார்த்து தன் பங்குக்கு தானும் வசீகரித்துக் கொண்டிருந்தது..
அங்கே அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் இன்றைய நாளின் பெரும் பிசினஸ் புள்ளிகள்.. மானஸ் சொன்ன மாதிரி பெரிய பெரிய ஆளுங்க எல்லாரும் வந்திருக்காங்களே.. என்றவனின் விழிகளில்.. டெல்லியில் அவன் வேலை செய்த கம்பெனி சேர்மேன் ராமகிருஷ்ணன் தெரிய.. இவரும் வந்திருக்கிறாரா.. அவ்வளவு பெரிய மீட்டிங்கா .. அவன் விழிகள் ஆச்சரியமாய் விரிந்தன..
மாமா.. ஏன் மாமா இப்படி பண்ணீங்க இவ்வளவு பெரிய பார்ட்டி வரோம்னு சொல்லி இருந்தா.. நான் அந்த ட்ரசை போட்டுட்டு வந்து இருப்பேனே.. நீங்க சொன்னதை கேட்டு இதை வேற மாத்திட்டேன்.. ரூபாவிற்கு அவள் பிரச்சனை.
அமைதியா இரு.. பற்களுக்கு இடையில் வார்த்தைகளை சிந்த விட்டு நேரமே என அவளோடு ஒரு சேரில் அமர்ந்து கொண்டான் அவன்..
ராமச்சந்திரன் தன்னை நோக்கி வந்ததும் புன்னகை முகமாய் ஆரியன் எழுந்து நிற்க..
அவரோ கடந்து சென்று விட்டிருந்தார்.. அத்தனை பெரிய கம்பெனியை சக்சஸ்ஃபுல்லாக நடத்தி வருபவருக்கு ஆயிரம் எம்ப்ளாய்களின் மத்தியில் அவன் ஒருவனை தனித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
என்னாச்சு மாமா.. எழுந்து நின்றவனை கண்டு ரூபா கேட்க ஒன்றும் இல்லை தலையை ஆட்டியபடி அமர்ந்து கொண்டான்..
அந்த கம்பெனியில் வேலை பார்த்த வரை அவரை காண்பதெல்லாம் அவ்வளவு சாதாரணம் கிடையாது.. வேலை பார்த்த இந்த ஐந்து வருடத்தில் ஒரே ஒரு முறை ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே அவரை பார்த்து இருக்கிறான்.. இந்த நாட்டிலேயே இருக்க மாட்டார்.. எனவும் கூட கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இவ்வளவு பெரிய மனிதரை இன்று இதற்காக வந்திருக்கிறார் என்றால்.. அப்படி யார் இந்த அழைப்பை போட்டிருப்பது..?? அவன் விழிகள் சுற்றியிருந்த இடத்தின் மீது படிந்தன.
பயங்கரமா டெக்கரேட் பண்ணி இருக்காங்கல்ல மாமா.. பாக்கவே சூப்பரா இருக்கு.. நமக்கும் நம்ம கல்யாணத்தை இதே போல இடத்தில வைக்கணும்.. ரூபா கூற.. நிமிடத்திற்கு மேலாய் அவளிடம் நிலைத்த பார்வையை மறுபக்கம் திருப்பிக் கொண்டான் ஆரியன்..
அதன் பெரிய மஹாலின் ஒரு நாள் வாடகை மட்டுமே குறைந்த பட்சம் ஒரு கோடியாவது இருக்குமே.. அதிலும் அங்கிருந்த அலங்காரங்களும்.. நேர்த்தியும்.. அதற்காக மட்டுமே இரண்டு கோடி செலவழித்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. மகாலுக்கு மட்டுமே மூன்று கோடியா.. அனைத்தும் அவன் மைண்ட் வாய்ஸ் தான்.. வெளியே எதுவும் கூறிக் கொள்ளவில்லை.. கூறினாலும் அவள் கேட்கப் போவதில்லை என்பதை எண்ணிக் கொண்டானோ..
திடீரென வெளியிலிருந்து கார் சத்தம் கேட்க அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்றனர்.. சிலர் முன்னே ஓட அதில் ராமகிருஷ்ணனும் ஒருவர்..
பெரும்புள்ளிகளுக்கு வழிவிட்டு அமர்ந்த இடத்திலேயே ஆரியன் எழுந்து நின்று கொள்ள.. சார்.. சார்.. என குவிந்த மேக்னெட்டுகளின் மத்தியில் கம்பீரமாய் உள்ளே வந்தவரை கண்டதும் அவன் விழிகள் விரிந்தன..
மண்டபத்திற்கு இணையான வெள்ளிக் கம்பிகள் தலையில் நட்டு கொண்டு நிற்க.. சற்று தொய்வான முதுமை தோற்றத்தோடு உள்ளே வந்தவரிடம் அவன் விழிகள் பெருமிதமாய் விழுந்தன.. இவர்தான் எத்தனை பெரும் புள்ளிகளுக்கும் தலையோ??
பாலச்சந்திரன் சார் இத நீங்க வாங்கிக்கணும்.. ராமகிருஷ்ணன் பிஏ ஓடிவந்து நீட்டிய பொக்கே வாங்கி பாலகிருஷ்ணனிடம் கொடுக்க.. பணிந்து நின்றதில்..இவன் விழிகள் ஆச்சரியமாய் விரிந்தன..
அப்பாடா இவ்வளவு பெரிய மனுஷனே இவ்வளவு பணிவா பேசுறாருன்னா அப்படி இந்தப் பெரியவர் யாரு.. அவரைப் பற்றிய அறிந்து கொள்ள ஆர்வம் கிளம்பியது..
சார்..சார்..இன்னும் சிலரும் கூட தங்கள் கொண்டு வந்திருந்த வாழ்த்து மலர்களை அவர் கையில் திணித்தபடி நகர.. அந்த வயதிற்கும் வேகம் நடையோடு அனைவரையும் கடந்து முன்னேறினார் அவர்... ஆரியனால் அவரை நெருங்க கூட முடியவில்லை.. மேடையில் ஏறி நின்றார் பாலச்சந்திரன்..
சார் உங்கள பாத்ததுல ரொம்பவே சந்தோஷம்.. கீழே கரகோஷம் பறக்க.. அனைத்தையும் கரம் கூப்பி ஏற்றுக் கொண்டார்..
சார்.. திடீர்னு எதுக்காக இந்த மீட்டிங்.. எல்லாரும் வர சொல்லி இருக்கீங்களே. கீழே இருந்து ஒருவர் கேட்க பதறி அவர் கையைப் பிடித்தார் அருகில் இருந்தவர்..
அவரை சொல்லுவாரு என்பது போல் கண்காட்ட எஸ் எஸ்.. முதல்ல வந்திருந்த எல்லாருக்கும் என்னுடைய முதற்கண் வணக்கம்... தன் பேச்சை ஆங்கிலத்தில் தொடங்கினார் பாலச்சந்திரன்.. ( அவர் ஆங்கிலத்தில் பேசுவதை நாம் இங்கு தமிழில் காண்போம்)
முதல்ல என் அழைப்பை ஏற்று வந்திருக்க எல்லாருக்கும் மிகப்பெரிய நன்றிகள்.. என்றதும் கீழே இருக்கும் கரகோஷம் பிறந்தது..
ஒரு முக்கியமான விஷயம்.. அத சொல்றதுக்காக தான் இந்த மீட்டிங்.. ஆனா அத நான் சொன்னா சரி வராது.. நம்ம டீன் சத்ரியன் சார் சொல்லுவாரு.. என்றதும் தட்டிக் கொண்டிருந்த கரகோஷம் இன்னும் வானளவு உயர்ந்தது..
சத்ரியனா?? இவரே சார் என அழைக்கிறார் என்றால் அவர் உயரம்?? யார் அவர்..
ஆனால் அண்ஃபார்ச்சூனர் இன்னைக்கு அவரால நம்ம கூட கலந்துக்க முடியாம போச்சு.. பட் டோன்ட் ஓரி.. அவர் கூட வாய்ஸ் கால் கனெக்ட் பண்றேன்.. என்றபடி அவரோடு வந்து கீழ் நின்றவனை பார்க்க எஸ் சார் என அடுத்த நிமிடம் ப்ரொஜெக்டரை ஆன் செய்து சத்ரியனை அழைப்போடு இணைத்தான்..
ஹலோ சார்..
எஸ்.. எதிர்முனையில் சத்ரியன் குரல்..
ஆல் பிக்ஸ்டு சார்..
ஹ்ம்ம்.. என்றதோடு எங்கள் அழைப்பை ஏற்று இந்த இடத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.. சத்ரியனின் குரல் அந்த இடத்தை அடைத்தது.
ஒரு முக்கியமான விஷயத்துக்காக தான் உங்கள வர சொல்லி இருப்பேன்னு அங்கிள் ஏற்கனவே சொல்லி இருப்பாரு.. விஷயத்தை ஷார்ட் ஆன் ஸ்வீட்டா நான் சொல்லிடறேன்.. ஷேர்ஸ்லயே நம்பர் ஒன் கம்பெனி நம்மளுடையதுதான்.. அவன் கூற கீழே கைத்தட்டல் சத்தம்..
ஆனா அது இன்னும் மேம்படுத்தனும்னு நினைக்கிறோம்.. சமீப காலமா நான் பார்த்துகிட்டு இருக்கிற விஷயங்கள்ல ஏழை எளிய மக்கள் நிறைய பேர் வேலை இல்லாமல் நிறைய கஷ்டப்படுறாங்க..
அதனால இதுவரைக்கும் இருக்கிறவர்களை விடுத்து இனிமேல் எடுக்க போற ஸ்டாப்ஸ் எல்லாரையும் அடிமட்ட மக்கள்.. ஒருவேளை சோற்றுக்கு கூட கஷ்டப்படுறவங்கல்ல இருந்து எடுக்கலாம்னு நினைச்சுருக்கேன்.. அதனால நம்ம சாட் வேல்யூ மேபி குறையலாம்.. இறங்கலாம்.. அவன் கூற கூறவே கீழே கூட்டத்திற்குள் சிறு சலசலப்பு..
அதனால டிரான்ஸ்போர்ட்ல இனி ஃபுல் கான்சென்ரேட் நம்ம பண்ண போறோம்.. இதுவரைக்கும் நீங்க உங்களுடைய ப்ராஜெக்ட் நம்ம ட்ரான்ஸ்போர்ட்ல தான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க..
அப்படி என்ன டிரான்ஸ்போர்ட் வச்சிருக்காங்க.. ஆரியன் தனக்கு தெரிந்த அனைத்தையும் யோசித்துக் கொண்டிருந்த நேரம்...
சக்ரனா.. வாய்மொழி பதிலாய் சத்திரியனே கூறியதும் ஆரியனின் விழிகள் அதிர்ச்சியாய் விரிந்தன.
யோசிப்பதற்கும் அதிகமான வர்த்தகம் ஒரு வருடத்தில் நடக்கும் கம்பெனி அல்லவா.. இதன் ஓனர் தானா இவர்கள்.. அதிர்ச்சியில் விரிந்த வழிகள் இமைக்கவும் மறந்தன..
உங்களுக்கே தெரியும் நமக்கு நிறைய பிசினஸும் ஸ்டாக்ஸ் இருக்கு.. பட் நம்ம இப்படி நம்ம ஸ்டேடர்ஜியை கொஞ்சம் மாத்துறதால.. முதல்ல கொஞ்சம் அடி வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கு.. அதனாலதான் இந்த முன்னேற்பாடு.. நீங்க எல்லாரும் நம்மளுடைய எல்லா கம்பெனிக்கும் ஆதரவு கொடுக்கணும்.. டிரான்ஸ்போர்ட்டுக்கு இன்னும் அதிகமா சப்போர்ட் தரணும்னு கேட்டுக்குறேன்.. அவன் கூறும்போது கண்டிப்பாக.. கீழிருந்த அனைவரின் குரலும்..
அப்படி யாராம் இவர்.. குரலை வைத்து பார்க்கும்போது கிட்டத்தட்ட தன் வயதாக தான் இருக்கும் என தோன்றியது ஆர்யனுக்கு..
ஆனால் அவர்களின் அழைப்பை ஏற்று இத்தனை பெரும்புள்ளிகள் வந்திருக்கும் போதும் முகத்தை கூட காட்டாமல் பேசுவது உசிதம் தானா.. யோசித்துக் கொண்டிருக்கும் போதே..
ஐ அம் சாரி.. இதெல்லாம் உங்களை நேரில் பார்த்து தான் சொல்லி இருக்கணும்.. பட் நான் இப்போ இருக்கிற சிச்சுவேஷனுக்கு அண்ஃபார்ச்னைட்லி என்னால உங்களை மீட் பண்ண முடியல.. ஆனா என்னைக்கும் நீங்க கொடுக்கிற சப்போட்ட இப்பவும் கொடுப்பீங்கன்னு நாங்க நம்புறோம்.. அந்த பிரண்ட்ஷிப்ன்னால தான் இந்த வாய்ஸ் கால ஏற்பாடு செஞ்சோம்.. எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் கம்பீரமாய் ஒலித்த அவன் குரலிலேயே ஒரு வித வசீகர தன்மை இருந்ததை உணர முடிந்தது ஆரியனால்..
வந்த எல்லாருக்கும் மிகப்பெரிய நன்றி.. சீக்கிரமா உங்க எல்லாரையும் நேரில் சந்திக்கிறேன்.. என்றதோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது..
பாலச்சந்திரன் பங்குக்கு இரண்டு வார்த்தை பேசி விட்டு முடிக்க.. அடுத்தடுத்து கம்பெனி பெயர்கள் ஒவ்வொன்றாய் அறிவிக்கப்பட்டது.. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மேனேஜ்மென்ட்கள்.. அப்பாஆஹ்ஹ்.. வாயைப் பிளந்த நிலையில் ஆச்சரியமாய் பார்த்தான் ஆரியன்..
பணக்கார குடும்பம் தான்.. தாத்தா ஆரம்பித்த கம்பெனிகள் என்றாலும் பேரன் கைக்கு வந்து பன்மடங்காய் பெருகி போயிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாய் தெரிந்தது..
இந்த வயசுலயே இத்தனை சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறாரா.. உண்மையாவே நிறைய திறமைக்காரன் தான்.. ஆரியன் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே.. பஃபே ஃபுட் இருக்கு.. கண்டிப்பா எல்லாரும் சாப்பிட்டு தான் கிளம்பனும்.. என்றதோடு தன் உரையை முடித்துக் கொண்டு கிளம்பி இருந்தார் பாலச்சந்திரன்..
இதுவரை கண்டிராத அந்த சத்ரியனின் ஆளுமையான குரலும் ஆர்ப்பாட்டம் இல்லாத பேச்சும்.. கூறும் விஷயத்தை மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும் வண்ணம் பேசிய தொணியும்.. ஆரியணை வெகுவாக கவர்ந்தது.. போதும் மாமா.. வாங்க பசிக்குது.. என இழுத்துக் கொண்டு ஓடிய ரூபாவோடு பின்னையே நடந்தான் ஆரியன்..
நான் இதை எதிர்பார்க்கவே இல்ல சத்ரியா.. இதுக்கு தான் உன்ன கூப்பிட்டேன்.. உன் சித்தப்பா பசங்க செஞ்ச வேலைனால இறங்கின மார்க்கெட்ட ஒரே பேச்சில் தூக்கி விட்டுட்டே.. கண்டிப்பா நீ சொன்ன படி டிரான்ஸ்போர்ட் மூலமாகவே இனிமேல் நமக்கு நிறைய லாபம் குவிய போகுது.. காரில் அமர்ந்தபடி மகிழ்ச்சியோடு பாலச்சந்திரன் கூறிக் கொண்டிருக்க..
அப்படி சாதாரணமா சொல்லிட முடியாது அங்கிள்.. நடந்த தப்ப சீக்கிரமா நம்ம சரி பண்ணி ஆகணும்.. அதேபோல நான் சொன்னபடி இனிமேல் கீழ் தட்டு மக்கள தான் வேலைக்கு எடுக்கணும்.
என்ன சொல்ற.. ஆனா.. திறமை இருக்கிறவங்களுக்கு வேலை கொடுத்தா தான் நமக்கு வளர்ச்சி இருக்கும்..
அவங்களுக்கும் நிறைய பேருக்கு திறமை இருக்கு அங்கிள்.. எடுத்துக்கொண்டு வர ஆளுதான் இல்ல.. இனி நம்ம இருக்கோம்.. இந்த நியூ சொல்யூஷன்ன இம்ப்ளிமென்ட் பண்ணுங்க.. அடுத்தடுத்த உத்தரவுகளை எதிர்முனையில் அவன் பிறப்பிக்க.. அனைத்தையும் சரியாய் கேட்டு குறித்து கொண்டவருக்கு இத்தனை வேலையை செய்ய வேண்டுமா.. நெற்றியில் வியர்வைத் துளி முத்தமிட்டு நின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக