பெரும்புள்ளிகளில் யாருக்கும் ஆரியனை தெரிந்திருக்கவில்லை.. மானஸ் வந்திருந்தாலும் அவனை கூட தெரிந்திருக்குமோ என்னவோ..
ஆனால் இவன் அவன் நண்பன்.. அதுவும் அவன் வேலை பார்த்த முதலாளிக்கே அவனை தெரியாதபோது மற்றவர்களை கூறி என்ன செய்வது.. வெகு நேரம் தனித்திருக்க முடியாமல் கிளம்பி இருந்தான் ஆரியன்..
சாப்பாடு எல்லாம் பயங்கர ஃபிளேவர் ஃபுல்லா இருந்துச்சு.. இல்ல மாமா.. அவன் அருகில் அமர்ந்தபடி சிலாகித்துக் கொண்டிருந்தாள்ரூபா..
ம்ம்ம்.. என்றதோடு அமைதியாகி விட்டான்.. ஆனால் மனதிற்குள் சத்ரியனை பற்றி அறிந்து கொள்ள சிறு துடிப்பு.. அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்ட விஷயம் அப்படியாயிற்றே..
சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்தனுக்கு துணை அவன் தாத்தாவாம்.. சித்தப்பா அத்தை என பெரிய குடும்பம் அவர்களதாம்..
அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர்.. குடும்பத்தில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையினால் அவன் வீட்டை விட்டு சென்று விட்டதாக கேள்வி.. இதனை வருடங்கள் அவன் எங்கிருக்கிறான் என்பது கூட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை..
ஏன் அவர்களின் சித்தப்பா மகன்கள்.. வாசனுக்கும் கிஷோருக்கும் கூட தெரிந்திருக்கவில்லையே..
ஆனால் இப்போது திடீரென உள்ளே வந்ததோடு.. கொஞ்சம் கொஞ்சமாய் படுத்துக் கொண்டிருந்த பிசினஸை ஒரே போக்கில் எற்றி விட்டானே.. அதுவும் அனைவரின் முகமும் மலரும் படி..
அவனை நல்ல குணத்தை பற்றி அறிந்தது தான்.. ஆனால் இப்படி நேருக்கு நேராய் காணும் போது கேட்கும்போது அவன் மீதான மதிப்பு உயர்கிறது.. ஆளாளுக்கு தங்களுக்குள்ளாக பேசிக்கொண்டிருந்த வார்த்தைகளிலிருந்து விஷயத்தை ஓரளவு யூகித்திருந்தான் ஆரியன்.
அதை வைத்து பார்க்கும் போது சத்ரியனுக்கு கிட்டத்தட்ட 30 வயதிற்குள்ளாக தான் இருக்க வேண்டும் என்பது அவன் கணிப்பு.
என்ன மாமா.. நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே வரேன் நீங்க அமைதியா இருக்கீங்கள.. அவன் இருகிய புஜத்தை ஆசையாய் பற்றி கொண்டு கேட்டாள் ரூபா..
டச் பண்ணாம பேசு.. சிடுசிடுத்து திரும்பிக் கொண்டான்..
ஹ்ம்ம்.. எவ்வளவு நாள் இப்படியே இருக்கீங்கன்னு.. நானும் பாத்துடறேன்.. உதட்டை சுழித்து மறுபக்கம் திரும்பி கொண்டாள்..
அலுவலக வாசலில் கார் கீரிச்சிட்டு நின்றது..
ரூபாவோடு உள்ளே நுழைய.. திடீரென அவன் விழிகள் நேராய் வலப்புறத்தில் நிலை குத்த.. கால்களும் அங்கேயே ஸ்தம்பித்து நின்று விட்டன..
இவள் என்ன செய்கிறாள் இங்கே.. இன்று இவள் வரமாட்டாள் என அல்லவா நினைத்திருந்தேன்.. அவன் விழிகள் கூர்ந்தன..
அனைவரையும் போல் ஜானுவும் தன் வேலையில் மும்முரமாக மூழ்கி இருந்தாள்.
நேத்து குழந்தை அவ்வளவு பெருசா அடிபட்டு ஹாஸ்பிடல் கிடக்கா.. இவ என்ன இங்க வந்து உட்கார்ந்துருக்கா.. அவன் புருவங்கள் யோசனையோடு இடுங்கிக் கொண்டிருக்க.. மாமா.. அங்க சாப்பிட்டதுல்ல வயிறு ஒரு மாதிரி பொறட்டுது.. நிறைய சாப்பிட்டேன் போல.. அசட்டையாய் ரூபா சிரித்தவள்.. நான் கொஞ்ச நேரம் ரிலாக்சிங் ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கிறேன்.. அவள் பேச்சையெல்லாம் அவன் எங்கு கவனித்தான்.
கூறியதோடு சென்று விட்டாள் அவள்.. அருகில் இருந்தவள் திடீரென செல்லக்கண்டு எங்கே செல்கிறாளோ.. எரிச்சலோடு அவன் பார்வை தொடர்ந்தாலும் இந்த நேரத்திற்கு அவள் இங்கு இல்லாததே நலம்.. என அடுத்த நிமிடம்.. பட்டென ஜான்வியை முன்னிருந்த மேஜையை தட்ட.. எதிர்பாராத சத்தத்தில்.. ஹக்கென துள்ளி அவள் விழிகள் நிமிர்ந்தன.. எதிரே உஷ்ண பார்வையோடு நின்ற ஆரியனை கண்டதும் அவள் புருவங்கள் சூழிந்தன.
உள்ள வாங்க.. இறுகிய குரலோடு கூறியவன் வேக நடையோடு உள்ளே சென்று விட்டான்.
ஏதோ பெரிய மீட்டிங்.. இன்னைக்கு முழுக்க வரமாட்டார்ன்னு ஆபீஸ்ல சொன்னாங்களே.. ஆனா வந்ததோட இப்படி வந்ததும் வராதும்மா இவ்வளவு டெரர் காட்டிட்டு போறாரே மனுஷன்.. திவி விழிkk.. நீ ஒர்க்க பாரு.. நான் பார்த்துக்கிறேன்.. அவன் அறைக்குள் நுழைந்தாள் ஜானு.
உள்ளே வந்தவளை சட்டென கரம் பற்றி சுவற்றோடு ஒடுக்கி நிறுத்தினான் ஆரியன்..
அவன் செயலில் அதிர்ந்து அவள் விழிகள் விரிய.. இங்க என்னடி பண்ற.. அங்க புள்ள உடம்பு முடியாமல் அடிபட்டு கிடக்கிறா.. நீ என்னன்னா இங்க வந்து உட்கார்ந்து சொகுசா வேலை பார்த்துகிட்டு இருக்க.. அவன் பேச்சில் இவள் புருவங்கள் இடுங்கின..
ஹலோ சார்,. மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.. அவள் நிமிர்ந்த பேச்சில் ஒரு கணம் அதிர்ந்ந்து இந்த நிலையில் குழந்தையை தணித்து விடுத்து வந்திருக்கிறாளே கோபம் சூழ.. என்னடி மைண்ட் பண்ணனும்.. நீ பெத்தவ தானே.. குழந்தை அப்படி கிடக்கும்போது எப்படி இவ்வளவு சாதாரணமா இங்க வந்து உன்னால வேலை பார்க்க முடியுது.. கூடவே இருந்து அவளுக்கு வேணும்கிறத செய்யணும்னு தோணல.. தப்பு.. நான் பண்ணது தான் தப்பு.. உன்ன நம்பி பாப்பாவ விட்டுருக்கவே கூடாது.. எவ்வளவு பொறுப்பில்லாமல் இங்க வந்து உட்கார்ந்து இருக்க.. ஒஹ்ஹஹ் ஷிட்.. என்னால அக்சப்ட் பண்ணிக்கவே முடியல.. முதல்ல நீ கிளம்பு.. இனி இருக்கிற ஹாப்ப டே உனக்கு லீவு.. பாப்பாவுக்கு எப்ப உடம்பு முடியுதோ அப்போ நீ வந்தா போதும்.. அதுவரைக்கும் லீவு எடுத்துக்கோ.. ஒருவேளை சேலரிக்காக தான் வேலைக்கு வர்றேன்னா.. உனக்கு ஃபுல் செலரி ஏற்பாடு படவேண்டியது என்னுடைய பொறுப்பு.. இப்ப முதல்ல கிளம்பு போய் பாப்பா கூட இரு.. படபடவென பொரிந்து அவள் கைப்பற்றி வெளியேற்ற போனவனை சட்டென உதறி நின்றால்.. கண்களில் அனல் கொழுந்து விட்டு எறிந்தது.
ஜானு.. கிளம்பு.. என்றவனை சுட்டெரிக்கும் பார்வையோடு விழித்தவள்.. போதும் சார்.. எதுக்கு இப்போ இவ்வளவு நடிப்பு போட்டுக்கிட்டு இருக்கீங்க.. ஆவேசித்தாள்..
என்னமோ பாப்பா மேல உங்களுக்கு தான் எல்லா அக்கறையும் இருக்கிற மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க.. ஞாபகம் இருக்கட்டும் அவளை பத்து மாசம் சுமந்து பெத்தது நானு..
இருந்து என்ன பிரயோஜனம்.. பாப்பா அங்க முடியாமல் கிடக்கிறப்போ நீ எனக்கு என்னன்னு இங்க வந்து உட்கார்ந்துருக்கியே..
எனக்கு என்னன்னு வந்து உட்கார நான் கல்லோ மெஷினோ கிடையாது.. என் பிள்ளைக்கு வேண்டியதை என் கடமையை செஞ்சிட்டு தான் நான் வந்துருக்கேன்.. பாப்பா கூட அசோக் இருக்கான்.. கூறியதுதான் தாமதம்.. அடுத்த நிமிடம் அவள் கைப்பற்றி தன்னோடு இழுத்து நிறுத்தினான் ஆர்யன்.. கண்களில் தீஜூவாலை கொழுந்து விட்டு எரிந்தது..
அவனா.. ஏய்ய்ய்.. அவனுக்கும் நம்ம குழந்தைக்கும் என்னடி சம்பந்தம்.. எதுக்கு எல்லாத்துக்கும் அவனையே பாப்பா கூட சேர்த்து விடுற.. ஞாபகம் இருக்கட்டும் அவ என் பொண்ணு.. என்றவனை கரம் உதறி விலகி கைகட்டி நின்று தீர்க்கமாய் அவள் பார்த்த பார்வையில் இவனால் அவன் விழிகளை நேராய் பார்க்க முடியாமல் .. தடுமாறினான்..
உங்க பொண்ணா.. எத வச்சு சொல்றீங்க அவ உங்க பொண்ணுன்னு.. அவ என் பொண்ணு.. அவள் குரலில் ஆணித்தரமான உறுதி..
நா இல்லாம வந்துட்டாளா.. இவனிடம் கேலி.. நேற்று நடந்திருந்த விஷயத்தில் அவள் மீது அவ்வளவு கோபமாய் இருந்தான்.. எத்தனை மனதை மாற்ற முயன்றாலும் அவளால் தான் தன் குழந்தைக்கு இப்படி ஒரு நிலை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..
இருக்கலாம்.. பணத்துக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்னு சொன்னவர் தானே.. அப்படி இருக்கும் போது.. அவள் வார்த்தையை முடிப்பதற்குள் கரத்தால் அவள் வாயை பொத்திக் கொண்டான்.. விழிகளில் அளவுகடந்த தவிப்பு.
ஜானு போதும் ப்ளீஸ்.. ஏதோ தெரியாம சொல்லிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்னு உன்கிட்ட எத்தனை தடவ நான் மன்னிப்பு கேட்கிறது.. இன்னும் அதையே பிடிச்சுகிட்டு பேசாத.. உன் கேரக்டரை நீயே அசாசனை பண்ணிக்காத.. கெஞ்சலோடு ஆரம்பித்து முடியாமல் கோபத்தோடு முடிந்தன வார்த்தைகள்..
அதேதான் சார் நானும் சொல்றேன்.. நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் என் மனசுல ஆறாத வடுவா பதிஞ்சுடுச்சு.. அதை இனிமேல் தொடச்சு தூக்கி போடுறது நடக்காத விஷயம்.. தயவு செஞ்சு எங்களை விட்டுடுங்க.. என் பிள்ளையை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்.. ஹ்ம்ம்.. செலரிக்காக தானே வர்ற.. காசு கொடுக்கிறேன்னு சொல்றீங்க?? இதுக்கும் அன்னைக்கு காசு தரேன்.. ப*** வரியானு கேட்டதுக்கு அதிக வித்தியாசம் இல்லை..
ஜானுஹ்ஹ்..
நிறுத்துங்க.. உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. எங்களுக்காக நீங்க எப்படி மெனக்கெட்டு நடந்துக்கணும்ன்னும் அவசியம் கிடையாது.. இத்தனை நாள் நாங்க உயிரோட இருக்கோமா செத்தமான்னு கூட கவலை இல்லாதவரு இப்போ மட்டும் எதுக்கு பாசமா நடிக்கணும்..
போதும் வார்த்தையால கொல்லாத.. உன்ன விட்டுட்டு நான் மட்டும் ஒன்னும் சந்தோஷமா இல்லடி.. ஒவ்வொரு நாளும் என்னையே அறியாம எழுற உன் ஞாபகங்கள் என்னை எப்படி போட்டு வதைக்கும் தெரியுமா.. ஆனா அப்போவெல்லாம் உன்மேல கோபம்..!!
என்ன?? பணத்தை தூக்க இப்படி ஒரு பொய் சொன்னேன்னா..?? ஹ்ம்ம்.. அவள் இதழ்கள் விரத்தியில் சுழிந்தன..
நீங்க எப்படியோ நெனச்சிட்டு போங்க.. அதை நம்பிட்டும் போங்க.. ஆனா இனிமேல் உங்க கிட்ட போராட எனக்கு தெம்பு இல்ல.. தயவு செஞ்சு என்னையும் என் பிள்ளையையும் விட்டுடுங்க.. கையெடுத்து கும்பிடு போட்டவள் அடுத்த நிமிடம் அறையை விட்டு வெளியேற போக..
ஜானு.. அவளை கரம் பிடித்து நிறுத்தினான் ஆர்யன்..
நான் பண்ணதுக்கு எல்லாம் தண்டனையா நீ எனக்கு என்ன வேணாலும் கொடுக்கலாம்.. ஆனா என் மகளை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்காதே.. அவன் குரல் கோபத்தில் கர்ஜித்தது.
நான் பிரிக்கிறேனா.. நீங்களே என்னைக்கோ பிரிஞ்சிட்டீங்க..
அது நான் தெரியாம செஞ்ச தப்பு!!
ஆனா அதனால நாங்க இத்தனை வருஷம் அவதிப்பட்டது உண்மை தானே.. அத மாத்திடவோ மறந்துடவோ முடியாதே..
ஜானு.. வேணும்னே என்னை நீ கொல்ற..
இல்ல.. நல்லா இருக்க சொல்றேன்.. எங்களையும் இருக்க விடுங்கன்னு சொல்றேன்.. என்றவள் திரும்பி செல்ல.. போக ஜானு.. அவள் கரம் இரண்டையும் ஒன்றாய் எழுத்து தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் ஆரியன்.
அவன் அணைப்பில் எதிர்பாராத கணம் அதிர்ந்து அடுத்த கணமே அவன் விடுபட முயல.. உன்ன விட மாட்டேன்.. விடவே மாட்டேன்.. எனக்கு நீயும் வேணும்.. நம்ம பிள்ளையும் வேணும்.. நீ கோபத்துல வரமாட்டேன்னு சொன்னாலும் நம்ம பிள்ளையை கண்டிப்பா நான் கூட்டிட்டு போயிடுவேன்.. அவன் கூறிய அடுத்த நொடி அவனை விலக்கி தள்ளி கன்னத்தில் பளார் என அறை விட்டிருந்தாள்..
கண்கள் சிவக்க பத்ரகாளியாய் நின்றிருந்த ஜானுவின் செயலில் கன்னத்தில் அதிர்ந்து கை வைத்தான்.. என் பிள்ளை பக்கத்துல வரணும்னு கனவுல கூட நினைக்காத.. லாபமோ நஷ்டமோ.. என்னோட உன் கதை முடிஞ்சிருச்சு.. இன்னொரு தடவை என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிப்பேன்னு சொன்ன.. உறுத்த விழிகளோடு உருண்டு நின்ற அவள் விரல் மீதி கதையை பேசியது..
தான் செய்தது தவறுதான்.. அதற்கு இத்தனை முறை தான் மன்னிப்பு கேட்டும் காதிலும் வாங்கிக் கொள்ளாது.. இப்போது ஓங்கி அறைந்திருந்தவளை ஏய்ய்ய்.. அடுத்த நிமிடம் பல்லை கடித்து கை ஓங்கினான் ஆர்யன்..
குழந்தையை நெஞ்சில் சாய்த்து தட்டி கொடுத்து கொண்டிருந்தான் அசோக்.. இப்போதுதான் மருத்துவரின் அறிவுரைப்படி இரண்டு இட்லிகளை சாம்பாரில் நன்றாய் தோய்த்து குழந்தைக்கு ஊட்டி விட்டிருந்தான்..
அப்பா.. என படுக்கையை விட்டு இறங்கிய மகளுக்கு அலைச்சலை கொடுக்காமல் அவள் படுக்கையிலேயே வந்து அமர்ந்து விட அவன் மடியில் ஓர்ந்து நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள் அவள்..
தலையை அதுரமாய் கோதிக் கொண்டிருந்த அவன் கரம் பிடரியில் அணைவாய் நின்றது..
ம்ம்ம்.. மெலிதாய் முக சுணக்கம் குழந்தையின் முகத்தில்.. வலிக்குதாடா.. கேட்டவனின் குரல் கரகரத்தது..
ம்ம்.. ஆமா பா.. குட்டிகரம் தலையை பற்ற.. வலிக்காது.. வலிக்காது..வலிக்காம அப்பா பாத்துக்குறேன்.. குழந்தையை நெஞ்சோடு இன்னும் அழுத்திக்கொண்டான்..
நீ ஏன்பா நடுங்குற.. நிமிர்ந்து கேட்ட குழந்தைக்கு தந்தையவனின் பரிதவிப்பு புரியவில்லை போலும்..
ஆமா அம்மா ஏன் விட்டுட்டு போயிட்டாங்க.. எனக்கு அம்மாவை பாக்கணும் போல இருக்கு.. அவள் உதடு பிதுங்கியது..
அம்மா இருக்கிறேன் தாண்டா சொன்னாங்க.. அப்பா தான் அம்மாவுக்கு ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கும்.. போங்கன்னு சொன்னேன்..
ஆனா எனக்கு இப்ப அம்மாவை பாக்கணும் போல இருக்குதே.. குழந்தையின் கண்கள் சுருங்கின.. விட்டால் அழுது விடுவேன் போல் உதடுகள் பிதுங்க..
பீல் பண்ணாதீங்க பாப்பா.. சரி.. இரு அம்மாவுக்கு போன் பண்றேன்.. என்றவன் போனை எடுத்து அழைக்க கடைசி ரிங் வரை சென்று அழைப்பு கட்டானது தான் மிச்சம்.
அம்மா வேலையா இருக்காங்க போலவே.. போன் எடுக்கல..
அம்மா.. அம்மா.. வலியோடு சேர்ந்து தாய்மைக்கும் ஏங்கி குழந்தையின் கண்கள் கலங்கியது.
சரி.. சரி.. அழுகாத.. நம்ம வேணும்னா அம்மாவ பாக்க போலாமா..
ம்ம்ம்.. அடுத்த நிமிடம் கண்கள் மின்ன குழந்தையின் தலை வேகமாய் உருண்டது..
அஞ்சு நிமிஷம் இங்கேயே உட்கார்ந்திரு.. அப்பா டாக்டர் கிட்ட பேசிட்டு வந்துடறேன்..
அவங்க வேண்டாம்.. ஊசி போடுவாங்க..
இல்ல.. பாப்பாவுக்கு இப்போ சரியாயிட்டனால போட மாட்டாங்க.. ஆனா அதுவும் உன் நல்லதுக்கு தானடா பாப்பா.. என்றவன் அவள் நெற்றி முட்டி விலகினான்..
நான் போய் சொல்லிட்டு வந்துடறேன்.. அவன் கூறும்போதே கதவை திறந்து உள்ளே நுழைந்தார் மருத்துவர்..
ஹலோ அசோக் சார்.. பாப்பா.. இப்ப வலி எப்படிமா இருக்கு.. பொதுப்படையான கேள்விகளோடு குழந்தையை பரிசோதித்து பார்த்தவர்.. காயம் கொஞ்சம் கொஞ்சமா ஆற ஆரம்பிச்சிருக்கு.. இதே போல கேர் எடுத்து பாத்துக்கோங்க.. என்றபடி செல்லப் போக..
பாப்பாவை வெளிய கூட்டிட்டு போகலாமா.. அம்மாவ தேடி அழுகுறா.. கொஞ்ச நேரத்துல கூட்டிட்டு வந்துடறேன்.. என்றதும் குழந்தையின் முகத்தை பார்த்தவராய்..
இப்போ இருக்கிற ஹெல்த்துக்கு ட்ராவல் பண்ண வேண்டாம்னு தான் சொல்லுவேன் அசோக் சார்.. ஆனா குழந்தைய இப்போ அழுகவும் விடக்கூடாது.. தலைவலி அதிகமாகும்.. வேணும்னா அவங்க அம்மாவ வர சொல்லுங்களேன்..
ட்ரை பண்ணேன்.. பட் வேலையா இருக்காங்க போல.. போனை எடுக்கல..
அப்படின்னா கேர்புல்லா கூட்டிட்டு போயிட்டு வரணும்.. நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல.. அவர் கூறியதும் ஆமோதிப்பாய் ஆடியது அசோக்கின் தலை.
உடன் வந்த நர்ஸிடம் இருந்து பார்மை வாங்கி ஏதோ எழுதி கையெழுத்திட்டு கொடுத்து.. இதை ரிசப்ஷன்ல கொடுத்துட்டு பாப்பாவ கூட்டிட்டு போங்க என்றதோடு கிளம்பி விட்டார் மருத்துவர்.
ஹையா.. அப்பாஆஆ.. தாயை பார்க்க போகும் துள்ளலோடு அவன் கழுத்தை கட்டிக் கொண்டவளை தூக்கிக் கொண்டு வெளியேறினான் அஷோக்..
எதிர்பாராத நேரத்தில் ஆரியன் கை ஓங்கியதில்.. ஹக்கென துள்ளி.. அதிர்ந்து அவள் கண்மூடிய சமயம்.. இன்னும் அவன் கரம் தன்மீது படியாததில்.. கண்கள் விழித்தவள் நிமிர.. அவளுக்கு முன்னே ஓங்கிய மலையாய் மறைத்து நின்றபடி குழந்தையை ஒரு கையிலும்.. மறுக்கையில் காற்றில் பறந்து வந்திருந்த ஆரியனின் கரத்தையும் பற்றிய படி நின்றிருந்தவன் அசோக்..
அஷோக்.. இந்த நேரத்தில் அவனை இங்கு எதிர் பாராமல் அதிர்ந்து விழித்தாள் ஜானு.
அம்மாஹ்ஹ்.. ஒருவன் தன் தாயை அடிக்க போனதில்.. அழுகையில் உதடு பிதுக்கி.. அடுத்த நிமிடம் பெற்றவளிடம் தாவிக் கொண்டாள் கிருத்தி.
பாப்பா.. நீ.. நீ எப்படா வந்த.. கேள்வி குழந்தையிடம் நின்றாலும் பார்வை அஷோக்கிடம் அல்லவா நிலைக்கின்றது..
அஹ்ஹ்.. அதற்கு மேல் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை ஆரியனால்... நேரத்திற்கு வந்து குழந்தையிடம் தான் ஜான்வியை அடிப்பதை காட்டி தன்னை வில்லனாக்கி விட்டு அவன் ஹீரோவாக பார்க்கிறானா..
பற்றிய அவன் கரத்தை சத்தென விட்டான் அஷோக்.. கரம் உதறி நின்றான் ஆரியன்.. இருவரின் பார்வையும் நேர்கோட்டாய் ஒருவரை ஒருவர் துளைத்தது..
யாருடா நீ.. எதுக்கு என் வாழ்க்கையில இவ்வளவு தூரம் இடைஞ்சல் கொடுத்துட்டு இருக்க.. என் ஜானுவ என்கிட்ட இருந்து பறிக்க பாக்குற.. என் குழந்தைகிட்ட இப்போ என்ன கெட்டவன் போல காட்டுற.. யாரு டா நீ.. என்ன தான் வேணும் உனக்கு.. ஆத்திரத்தில் பொங்கி வெடித்தவனை எந்த அலட்டலும் இல்லாத பார்த்து நின்றான் அசோக்..
ஆரியன்.. இதுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவன் மேல எதுக்கு பாயுற.. ஜானு பரிதவித்தாள்.. எங்கே சொல்லக் கூடாத வார்த்தைகளை விட்டு அவனைத் தாக்கி விடுவானோ என்ற பயம்.
இத.. இதை தான் சொல்றேன்.. அப்படி என்னடி உனக்கு இவன் மேல பாசம்.. சரி நான் இல்லாத காலங்களில் இவன்தான் உன்ன பார்த்துக்கிட்டான்...அதுக்காக காதலிச்சவனை விட இன்னொருத்தன் முக்கியமா.. செஞ்ச உதவிக்கு காசோ பணமோ கொடுத்து முடிக்க வேண்டியது தானே.. ஆனா அவன் முன்னாடியே என்ன விட்டுட்டு அவனுக்கு எண்டுக்கிட்டு வர..
பாரு.. என் புள்ள.. என் ரத்தம்.. என்னையே பயத்தோட பார்த்துகிட்டு இருக்கா.. எல்லாம் இவனால தான்.. தன் ஆற்றாமை அவன் மீது எரிமலையாய் வெடித்தது ..
ஆரியன் போதும்.. ரொம்ப பேசிக்கிட்டு இருக்க.. எல்லாத்துக்கும் பணம் தானா.. ச்சி.. அவள் முகம் அருவருப்பாய் சுழிந்தது.
என்ன ச்சி.. உண்மைய தானே பேசுகிறேன்.. இவன் மேல இருக்கிற அளவு பாசம் என் மேல உனக்கு இல்லையா..
அவனையும் உன்னையும் கம்பேர் பண்ணாத.. பொறுப்ப தட்டி கழிச்சிட்டு பொய்ன்னு போர்வை போத்திக்கிட்டவன் நீ.. ஆபத்துல இருந்தப்ப கரம் கொடுத்து காப்பாத்தினவன் அவன்..
ஹப்பா..வேகமாய் இரு கரங்களையும் இழுத்து தட்டினான்.. வெறுப்போடு பார்வை அமைதியாய் நின்ற அசோக்கிடம் படிந்தது.. ஏதாவதுன்னா இப்படி ஒன்ன சொல்லிடு.. உனக்கு புரியுதா இல்லையா.. இப்போ இந்த நிமிஷம் நம்ம லைஃப்க்கு பெரிய இடைஞ்சலா இருக்கிறது இவன் தான்.. இவனால தான் நீ என்கிட்ட இப்படி எல்லாம் பேசுற.. கூற கூறவே அசோக்கின் முகம் சிறுத்து போனதில்.. வாய மூடு ஆரி.. இன்னொரு வார்த்தை அவன பத்தி பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன்.. அவன் என் நண்பன்.. பொங்கினாள் ஜானு.
தாய் ஆவேசமாய் ஏதோ பேசுவது மிரண்டு.. அவள் தோளோடு ஒன்றிக் கொண்டாள் கிருத்தி.
சபாஷ்.. இதுதானே டா நீ எதிர்பார்த்து வந்தது.. உனக்காக என் ஜானு என்னையே எதிர்த்து பேசிட்டா.. ஆனா ஜானு.. நீ வேணும்னா இவன நண்பனா நினைக்கலாம்.. ஆனா இவன்.. இவன் உன்ன அப்படி நெனைக்கிறானா.. இவள் புரியாமல் பார்க்க.. இவன் உன்ன காதலிக்கிறான்.. ஆர்யன் கூறியிருந்தான்..
இது என்ன முட்டாள்தனம்.. அசோக்கை பத்தி எனக்கு தெரியாதா.. எப்படிப்பட்ட சூழலில் இருந்து அவன் என்கூட நிற்கிறான் என்று தெரியுமா.. எந்த ஒரு காலத்திலையும் நீ சொல்ற மாதிரி கேவலமா அவனால நடந்துக்கவே முடியாது..
ஹ்ம்ம்.. அப்படியா.. அப்படின்னா நான் பார்த்த விஷயம் தப்புன்னு சொல்றியா.. அவன் உன்னை காதலிக்கிறான்.. ஒரு பொண்ணா உன்னால் வேணும்னா அத புரிஞ்சுக்க முடியாம இருக்கலாம்.. ஆனா அவன் உன்ன பாக்குற பார்வையிலேயே என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது.. அப்பட்டமா அவன் உன்னை காதலிக்கிறான் என்று தெரியுது.. கூறும்போதே ஆரியனின் கழுத்து நரம்புகள் ஆத்திரத்தில் வெடித்து நின்றன..
தன் பொருளை இன்னொருவன் உரிமை கொண்டாட முயற்சிப்பதில் எழும் உரிமை போராட்டம்..
வாய்ப்பே இல்ல.. ஜானுவின் கண்கள் சுருங்கின.. என்னென்னவோ சொல்லி அடிபணிய வைக்க நெனச்ச.. கடைசில எதுவும் வேலைக்காகதால இப்படி சொல்லி உன் வழிக்கு இழுக்க பாக்குறியா..
ஆஹான்.. அப்போ கடைசி வரைக்கும் நீ என்னை நம்பவே மாட்டல்ல.. அப்போ அவன் கிட்டயே கேளு.. அவன் உன்னை காதலிக்கிறானா இல்லையான்னு.. ஆரியன் கூறியதும் விழிகளில் பூத்த முழு முற்றான நம்பிக்கையோடு அசோக்கிடம் திரும்பினாள்.
இதை கேக்குறது தப்புன்னு எனக்கே தெரியும் அஷோக்.. நீ என்னையும் பாப்பாவையும் எப்படி பாத்துக்குறேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. அதுல தப்பான எந்த கண்ணோட்டமும் இல்லைங்கிறதும் எனக்கு நல்லா தெரியும்.. சொல்லிடு அசோக்.. எத்தனையோ முறை உன்னையும் என்னையும் கூட சேர்த்து வச்சு பேசிட்டான் இவன்.. இன்னையோட இதுக்கெல்லாம் முடிவு கட்டிடலாம்.. என்னால இதுக்கு மேல போராட முடியல.. சொல்லிடு.. நான் உனக்கு வெறும் பிரண்டு தான் என்கிறத சொல்லிடு அசோக்.. உணர்ச்சிகளைக் கொட்டி அவள் நிற்க.. பேச வார்த்தைகள் இன்றி அவளையே ஆழ பார்த்தபடி அவன் இன்னும் அமைதியாய் இருந்ததில்.. ஹ்ம்ம்.. அவன் சொல்ல மாட்டான்.. ஏன்னா நான் சொன்னது தான் உண்மை..
அஷோக்.. ஒரு காலத்துல நான் இவனை காதலிச்சது உண்மைதான்.. ஆனா இப்போ சுத்தமா இல்ல.. ஆனாலும் விடாம இப்படி டார்ச்சர் பண்றான்.. உனக்கு அந்த மாதிரி என் மேல எந்த ஃபீலிங்கும் இல்ல நம்ம வெறும் நண்பர்கள் தான் என்பதை சொல்லிடு.. இதை இன்னையோட தலைமுழுகிட்டு அடுத்த வேலையை பார்த்துட்டு போகலாம்..
...
அஷோக்??
அஷோக்.. குழந்தையை ஒரு கையில் பற்றிய படி அவனை உலுக்க.. வலியான பார்வையோடு அவன் புருவங்கள் இடுங்கி ன.. அதில் தான் எத்தனை வலி..
அஷோக் சொல்லுஉஉஉ..
என்னால முடியாது ஜானு.. வெடித்திருந்தான் அடுத்த கணம்..
அஷோக்.. நம்ப மாட்டாமல் அவள் விழிகள் விரிய..
என்னால சொல்ல முடியாது ஜானு.. பி காஸ் ஐ லவ் யூ.. ஐ லவ் யூ சோ மச்.. இந்த உலகத்துல என்ன விடவும் எனக்கு முக்கியமான ஒரே ஆள் நீ தான்.. நீ மட்டும் தான்.. உங்ககிட்ட என்னால பொய் சொல்ல முடியாது.. அவன் விழிகள் தவிப்போடு அவளிடம் நிலைத்தது.
அவனிடமிருந்து இப்படி ஒரு வார்த்தையினை எதிர்பார்த்து இருக்கவில்லை என்பது அதிர்ந்த முகத்தில் தெரிந்தது..
தயவு செஞ்சு என்ன தப்பா நினைக்காத.. ஆனா எனக்கு இந்த உலகத்துலயே இருக்கிற நெருக்கமான உறவு.. நீயும்.. நம்ம பாப்பாவும் தான்.. ஆழ்ந்த குரலில் கூறியவனிடம்..
அப்பா.. அடுத்த நிமிடம் தவிப்போடு அவனிடம் தாவிய குழந்தையை அவன் கையில் ஏந்தும் முன்.. இழுத்து நிறுத்தி இருந்தாள் ஜான்வி. விழிகள் ரெண்டும் அவனையே வெறித்தது..
உன்னிடம் இருந்து இப்படி ஒரு துரோகத்தை எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதாய் சிவந்து போயின விழிகள்..
இது எப்போ இருந்து?? என்ன ஏதுன்னு எதுவுமே கேட்காத.. சொல்ற சூழல்ல நான் இல்ல.. பட் நான் உன்னை உண்மையா நேசிக்கிறேன்.. இது மட்டும் தான் உண்மை.. கண் மூடியவனின் மூடிய கருமணிகள் உருண்டு எதையோ மறைக்க முயல்கிறான் என தெளிவாக காட்டி கொடுத்தது..
நா சொல்லல.. இவ்வளவு நாள் நான் உன்னை ஏமாத்தல.. நீ சொல்றது பொய்யின்னு மத்தவங்க ட்ரிகர் பண்ணதால நம்பாம விட்டுட்டேன்.. அவ்வளவு தான்.. அதுக்கே எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கிறேன்னா நண்பனு சொல்லி உன் கூடவே இருந்து இப்படி ஒரு காரியத்தை பண்ணிருக்கான்.. இதுக்கு என்ன பதில் சொல்லப் போற..
ப்ளீஸ் ஜானு.. இப்பவாவது என்ன புரிஞ்சுக்கோ.. நான் பண்ணது தப்புதான்.. மன்னிச்சிடு உன் காலுலனாலும் விழுறேன்.. ஆனா தயவு செஞ்சு பாப்பாவ கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடு.. உன்ன நான் பாத்துக்குறேன்.. தங்க தட்டுல வச்சு தாங்குவேன்.. நம்ம பொண்ண நம்ம நல்லபடியா வளர்க்கலாம்.. தயவு செஞ்சு எனக்கு ஒரு வாய்ப்பு கொடு.. அவள் அழுத்தமான விழிகள் அசோக்கை விட்டு இம்மியும் நகரவில்லை..
வேண்டாம்ம்ம்ம்... கலங்கிய விழிகளோடு தவித்து நின்றான் அசோக்..
ஜானு இப்ப என்ன செய்யப் போறா?? உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.
கருத்துகள்
கருத்துரையிடுக