முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 55

 கண்மூடி கிடந்த  குழந்தையின் அருகில் தவிப்போடு அமர்ந்திருந்த ஜானுவின் கண்கள் எதிர்சுவரை வெறித்து கொண்டு இருந்தன..




அப்போது..




அஷோக்கின் உண்மை முகம் தெரிந்ததில் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அவன் சட்டையை இறுக பற்றி இருந்தாள் ஜானு. கோவை பழமாய் சிவந்த அவள் விழிகள் எனக்கு ஏன் இப்படி ஒரு துரோகம் செய்தாய் என கேட்பதாய்.. சந்தர்ப்ப வசமாக அவன் வாயை திறக்கவில்லை.. ஆனால் அவன் விழிகளில் மண்டி கிடைந்த சோக குமிழ் அவளை உறுத்தவில்லையோ..




ஆர்யன் தன் வேலை முடிந்ததாய் அமைதியாய் நின்று கொண்டான்.. இனி எப்படியும் அவள் அவனை ஏற்கப் போவதில்லை என்பது நூறு சதவீத நிச்சயம்.. தன் ஜானுவை பற்றி தனக்கு தெரியாதா?? அப்படி இருக்க அவன் முகத்தில் கரியை பூசி விட்டு தன்னுடன் தான் வர போகிறாள்.... அவனிடம் தான் எத்தனை மகிழ்ச்சி.. அதிர்ஷ்டவசமாக அசோக் அமைதியாய் நிற்பது வேறு அவனுக்கு கூடுதல் போனஸ்சாய் போனது..





ஏண்டா.. ஏன் உன்ன எவ்வளவு நம்புனேன்... வார்த்தைக்கு வார்த்தை உன்ன நண்பன் நண்பன்னு சொன்னேனே.. ஆனா எனக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு.. வார்த்தைக்கு வார்த்தை முன்னும் பின்னுமாய் இழுத்தாட்டிய அவன் சட்டையோடு  உயிர் பிரிந்த உடலாய் அவனும் ஆடியதில்.. அவள் விடமாட்டேன்.. என சொன்னதோடு தந்தையிடம் தாய் இவ்வளவு கோபத்தோடு நடந்து கொள்வதில் அழ ஆரம்பித்தாள்.



அஷோக் அதுவரை அமைதியாய் நின்றவன்.. ஜானு.. உனக்கு கோபம்னா என்ன அடி திட்டு. .. ஆனா தயவு செஞ்சு பாப்பாவை என் கிட்ட கொடு.. அவ எப்படி அழுகுறா பாரு.. தவிப்போடு வாங்க வர குழந்தையை இன்னும் தன்னோடு இறுக்கி கொண்டாள் அவள்.



நடிக்காத.. அந்த இடமே அடைக்கும் அளவிற்கு சிவந்த விழிகளோடு கத்திருந்தாள்.. இதுவரைக்கும் இப்படி நடிச்சு நடிச்சு தானே ஏமாத்துன.. குழந்தைக்காக குழந்தைக்காகன்னு சொல்லி.. கடைசில.. ச்சி.. அவள் முகம் அருவருப்பில் சுழிந்தது..




போதும் பா.. இது வர நீ எங்களுக்கு செஞ்சதுக்கே பெரிய பெரிய நன்றி.. உனக்கு நானும் என் பிள்ளையும் நிறைய நன்றி கடன் பட்டுருக்கோம்.. அத முடிஞ்ச அளவு பணமா திருப்பி தந்துடறேன்.. ஆனா இனிமே தயவு செஞ்சு இனிமே எங்க முகத்துல முழிக்காத.. என்றவள் வேகமாய் அறை விட்டு வெளியேற போக.. ஜானு.. மலர்ச்சி குரலோடு நிறுத்தினான் ஆர்யன்.




எங்கம்மா போற.. நான்தான் செஞ்ச தவறுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுட்டேனே.. தயவு செஞ்சு என் கூட வந்துரு.. நீ நான் நம்ம பாப்பான்னு சந்தோஷமா வாழலாம்..  கொஞ்ச நாள் களை முளைச்ச மாதிரி எங்க இருந்தோ இவன் முளைச்சு நம்ம வாழ்க்கையவே குலைச்சிட்டான்..  இப்போ நானும் மாறிட்டேன்.. உன்னையும் நம்ம பாப்பாவையும் நான் நல்லா பாத்துப்பேன்.. வாம்மா.. அழைத்த படி ஆதூரமாய் அவள் கரம் பற்ற.. அடுத்த நிமிடம் விருட்டென்று உதறி நின்றாள்..




அவனுக்கு சொன்னது தான் உங்களுக்கும்.. உங்களால முடிஞ்ச அளவுக்கு காயப்படுத்திட்டீங்க.. இனி என் பிள்ளையை நானே வளர்த்துக்கிறேன்.. என் பிள்ளைக்கு நான் இருக்கேன்.. என்ன சொன்னிஙக.. இவன் நமக்கு நடுவுல வந்துட்டானா.. விட்டுட்டு போனதே நீங்கதானே.. வலியோடு நின்றவள்.. 




அன்னைக்கு அப்படி ஒரு விஷயத்தை நீங்க பண்ணலேன்னா இன்னைக்கு எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது.. லீவ் இட்.. தயவு செஞ்சு இனி நீங்க ரெண்டு பேருமே எங்க வாழ்க்கைக்குள்ள வராதீங்க..  அப்படி வந்தீங்கன்னா அதுதான் நான் மூச்சு விடற கடைசி நிமிஷமாயிருக்கும்..  கண்கள் செவ்வானமாய் சிவக்கக் கூறிய அவளின் உறுதியான வார்த்தைகளில்..  ஜானு.. இதை எதிர்பார்க்கவில்லை என்பது போல் ஆரியனின் மலர்ந்த வழிகள் அதிர்ந்து போக.. அஷோக்கின் விழிகள் அதே ஆழ்ந்த பார்வையோடு அவளிடம் நிலைகுத்தின.




அப்.. அப்பா.. அவனிடம் இரு கைகளையும் நீட்டி தாவ முற்பட்டு கொண்டிருந்த குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு வேகமாய் அவள் கதவை நெருங்கிய சமயம்.. எதிர்பாராத நேரத்தில் கதவு திறந்ததில்..  அது வந்த வேகத்தில் குழந்தையின் அடிபட்ட தலையில் பட்டு விட.. அய்யோ.. அவள் சுதாரிக்கவும்.. அம்மாஹ்.. அழுது கொண்டிருந்த குழந்தை மூச்சைடைத்து போகவும் சரியானது..




நொடியில் நடந்திருந்த சம்பவங்களை யாருமே எதிர்பார்த்து இருக்கவில்லை.. பாப்பா.. அவள்  மூர்ச்சையில் அதிர்ந்து இதயத்துடிப்பு நின்று போன கணம்..  ஆர்யன் ஓடி வந்து..  பிள்ளையை தாங்கினான்.. ஹேய் இடியட்.. இப்படி தான் கதவு கிட்ட நிப்பாங்களா.. என்றபடியே உள்ளே நுழைந்த ரூபாவை வீச்சு பார்வையால் பொசுக்கி..வாயில் வந்த தகாத வார்த்தைகளை இப்போது விட்டு பயனில்லை என அடுத்த கணம் குழந்தையை வாங்க போக.. சட்டென குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே ஓடி போனாள் ஜான்வி.




பித்து பிடித்தவள் போல்.. ஆட்டோ ஏரியதும் குழந்தையின் மருத்துவமனை பெயரை கூறியதும் எதுவும் நினைவில் இல்லை.. 



தலையில் சிறிதாய் துளிர்த்த ரத்தத்தில் பதறி குழந்தையை நெஞ்சோடு அணைத்து ஐந்து நிமிடத்தில் மருத்துவமனைக்கு வந்திருக்க.. சற்று நேரத்திற்கு முன் நல்லபடியாய் சென்ற குழந்தை மீண்டும் ரத்தத்தோடு திரும்பி வந்ததில்.. ஐயோ மேடம் பாப்பாவுக்கு என்ன ஆச்சு.. ஓடி வந்தாள் குழந்தையை பராமரித்த நர்ஸ்..



பாப்பா..  பாப்பா.. என்றவளுக்கு அடுத்த வார்த்தை எழாததில் அசோக் சார் வரலையா..  என்றதோடு குழந்தையை வாங்கிக் கொண்டு ஓடினாள் அவள்..


அடுத்த அரை மணி நேரத்தில் கதவை திறந்து கொண்டு வெளி வந்தார் டாக்டர்..



குழந்தையை தூக்கிட்டு போகும்போதே இந்த நேரத்துல கூட்டிட்டு போறது சேஃப் கிடையாதுன்னு சொன்னேனே.. நல்லபடியா பாத்துக்குவேன்னு சொல்லி அசோக் சார் அவ்வளவு தூரம் சொன்னதுனால தான் சரின்னு ஒத்துக்கிட்டேன்.. கதவு இடிச்ச வேகத்துக்கு கொஞ்சம் வேகமா இடிச்சிருந்தா பிள்ளை மூளை வரைக்கும் பாதிச்சிருக்கும்.. அவர் கூறிய செய்தியில் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்தாள்.



பட் இப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல.. இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தை கண்ணு வெளிச்சிடுவா.. கவனமா பாத்துக்கோங்க.. கூறியவர் எதையோ இழந்தது போல் முகம் நொந்து கிடக்கும் அவளை ஒரு கணம் ஆள பார்த்துவிட்டு சென்றுவிட குழந்தையின் அருகிலேயே பொத்தன அமர்ந்தவளின் விழிகள் அவள் முகத்திலேயே நிலை குத்தி நின்றது.




மருத்துவர் வேண்டாம் எனக் கூறியும் குழந்தையை ஏன் அழைத்துக் கொண்டு வரவேண்டும்.. அது சரி.. அவன் என்ன குழந்தைக்காகவா இத்தனை காலம் தன்னோடு இருந்திருக்கிறான்.. குழந்தையை காரணம் காட்டி தனக்காக.. எண்ணும் போதே உடலின் ஒவ்வொரு அணுக்களும் சிதைந்து போனதாய் வலி கண்டன..




இதற்கு மேல் தன் வாழ்க்கை எப்படி போகும்என்பது தெரியவில்லை.. ஆனால் இதே போல் ஒரு சூழ்நிலையில் தானே தன் தாய் தன்னையும் வளர்த்தாள்.. எத்தனையோ முறை நான்தான் படிக்கல அதனால இவ்வளவு கஷ்டப்படுறேன்..  நீ நல்லா படி.. என்னைக்கும் நல்லா இருக்கணும்.. என அவ்வப்போது தாய் கூறிய வார்த்தைகள் தானே அவளின் படிப்புச் செல்வத்திற்கே மூலதனம்.. அது இப்போதும் அமுத சுரபியாய் காதுக்குள் ரீங்காரம் இட்டது.





என்னாலயும் கண்டிப்பா முடியும்.. என் குழந்தையை நல்லபடியா நானே வளர்ப்பேன்.. என் கையில படிப்பிருக்கு.. வேலை பார்க்க திறமை இருக்கு.. அவளை நல்லபடியா வளர்க்க உடம்புல திடம் இருக்கு.. உனக்கு நான் மட்டுமே போதும் பாப்பா.. அவள் கண்கள் எதிர் சுவற்றை விரித்தன..




ஆரியன் கேட்டதும்.. அசோக் கூறியதும்..  மாறி மாறி நினைவடுக்குகளில் வந்து சித்திரவதை செய்ய.. துரோகி.. அப்படின்னா இத்தனை வருஷமா இப்படி ஒரு எண்ணத்தில் தான் என் கூட பழகிட்டு இருந்தானா.. அவனை நினைக்க நினைக்கவே அருவருப்பாய் ஆனது.. அவனை அவ்வளவு உத்தமனாய் நண்பனாய் நம்பினேனே.. என் நம்பிக்கைக்கு இப்படி துரோகம் செய்ய எப்படி மனது வந்தது அவனுக்கு.. அவளும் அடுத்தடுத்து எத்தனை கஷ்டங்களை தான் தாங்குவாள்.. கண்களை இறுக மூடி அப்படியே பின் இருந்த தீபாயில் தலை சாய.. ஜானு.. தோளில் படர்ந்த கரத்தில் அவள் விழிகள் சிரமப்பட்டு திறந்தன..



முன்னே ஆர்யன் நின்றான்.. ஆனால் அவள் விழிகள் அவனையும் தாண்டி ஒரு கணம்  எட்டி பார்த்தது ஏனோ??



ஏமாற்றத்தோடு மீண்ட விழிகள்  அடுத்த கணமே பொங்கிய சீற்றத்தோடு அவள் எழ.. ஜானு ப்ளீஸ் கோபப்படாத.. பாப்பாவை இப்படி ஒரு நிலைமையில பார்த்துகிட்டு என்னால எப்படி சும்மா இருக்க முடியும்.. பாப்பாவுக்காக தான் வந்தேன்.. டாக்டர் என்ன சொன்னாங்க.. அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.. அவன் விழிகள் பரிதவிப்போடு குழந்தையிடம் பதிந்தது..



இவளின் அனல் பார்வை அவனை சுட்டது.. ப்ளீஸ் சொல்லு.. கேட்டுக் கொண்டிருந்தபோதே ட்ரிப்ஸ் மாற்ற உள்ளே வந்த நர்ஸ்.. பிரச்சனை ஒன்னும் இல்ல சார்.. பட்ட இடத்தில் படும் என்கிற மாதிரி ஏற்கனவே காயம்பட்ட இடத்தில அடிபட்டதால தான் இரத்தம் வந்திருக்கு.. ஆனா குழந்தையை கேர்புல்லா பார்த்துக்க வேண்டியது ரொம்ப முக்கியம்..  என்றபடி வந்த வேலையை முடித்து சென்றுவிட.. ஜானு.. மண்டியிட்டு அவள் காலடியில் சரிந்தான் ஆரியன்.



உடம்பு தொங்கிய நிலை அவன் வேதனையை காட்டியது.



தெரியாம தான் டி தப்பு பண்ணிட்டேன்.. அதுக்காக இப்படி முகத்தில் முழிக்காதீங்கன்னா சொல்லிட்டு வருவ.. எப்படி துடிச்சு போனேன் தெரியுமா..  அதுலயும் நீயும் பாப்பாவும் எப்படி தவிக்கும் போது.. 



தயவு செஞ்சு என்னை ஏத்துக்கோ.. பார்த்தேல்ல இப்ப கூட நம்ம பாப்பாவுக்கு ஒன்னு நின்னதும் ஓடி வந்தது நான் தான்.. ஏன்னா எப்பவும் ரத்த உறவு தான் துணை நிற்கும்.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ஜானு.. அவள் அமைதியில் ஆரியன் பேசிக்கொண்டே சென்றவன் ஒரு கட்டத்தில் நிதானித்து எழுந்தான்.




நீ என் மேல பயங்கர கோபமா இருக்கேன்னு தெரியும்.. ஆனா உன் கோபம் குறையுற வரைக்கும் நான் காத்திருக்கிறேன் ஜானு.. என்னைக்கும் நீயும் பாப்பாவும் தான் என் வாழ்க்கை.. கூற கூறவே திடீரென வந்த போன் காலை அட்டென்ட் செய்து மறுபக்கம் நடந்தான்..



அம்மா.. என அவன் மெல்லிய குரல் நன்றாகவே கேட்டது.. இவள் உதடுகள் ஏளனத்தில் சுழிந்தன.. அடுத்து இரண்டு நிமிடத்தில் திரும்பி வந்தான் ஆர்யன்.




ஜானு.. ஒரு முக்கியமான வேல..  என தயங்கியபடி ஆரம்பித்து அம்மா ஊருக்கு வந்துருக்காங்க..போய் கூட்டிட்டு வீட்ல விட்டுட்டு வேகமா வந்துடறேன்.. பாப்பாவ பத்திரமா பாத்துக்கோ.. என கூறி அவன் செல்ல போக.. மேனேஜர் சார் .. அவள் அழுத்த குரல் அவனை நிறுத்தியது.



உங்களை யாரும் வந்தே ஆகணும்னு சொல்லல..அதோட வேலை பாக்குறவங்க குழந்தைக்கு அடிபட்டதுன்னு மேனேஜர் சாரை இப்படி இறங்கி வர வேண்டிய அவசியமும் இல்லை.. நீங்க தாராளமா உங்க வேலைய பாக்க போகலாம்.. அதுக்கு சொல்லிட்டு போகணும்னு எல்லாம் அவசியம் இல்ல..  முடிஞ்சா தயவு செஞ்சு இனிமேல் இந்த பக்கம் வராதீங்க..



ஜானு.. ஏன் டி.. இருக்கரம் நீட்டி அவளை சமாதானப்படுத்த நெருங்கியவன்..  அவள் அனல் பார்வையில் அப்படியே நின்றான்.. என்ன சொல்லி எப்படி அவளை சமாதானப்படுத்துவது என தெரியவில்லை.. 



ஆனால் எப்படியும் அந்த அசோக்கை இனி ஜானு ஏற்றுக்கொள்ள போவதில்லை.. ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் அவளுக்கு துணை தேவைப்படும்.. அப்போது பார்த்து கொள்ளலாம்..  விட்டு தான் பிடிக்க வேண்டும் என்ற மனநிலையோடு அமைதியாய் அங்கிருந்து மௌனமாய் கிளம்பி இருந்தான்.




தொய்ந்து மகள் அருகில் அமர்ந்தாள் ஜானு.. சிறிது நேரத்தில் குழந்தை கண்விழிக்க.. பாப்பா.. பாப்பா.. கரித்த கண்களோடு பாய்ந்து வந்த தாயை பார்த்து அந்த குட்டி கேட்டது..  அப்பா.. என..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...