முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 56

 அப்பா..  என கண் விழித்ததும் கேட்ட குழந்தையை சமாளிக்க முடியாமல் தடுமாறி போனாள் ஜானு.



அம்மா.. எப்பவும் அப்பாதானே முன்னாடி வருவாங்க... நான் அவங்களை தேடுவேன்னு தெரியாதா..எங்க போனாங்க.. கேட்கும் மழலை சிட்டிடம் பதில் கூற முடியாமல் தவித்தாள்.. கூறினாலும் புரியாத வயது அல்லவா..



அப்பா வருவான்.. நடக்கவே நடக்காது என தெரிந்தும் கூற வேண்டிய நிலை.. பெயருக்கென கூறி வைத்தாள்.. அப்போதைக்கு சமாதானம் ஆவது போல் தெரிந்தாலும் அடுத்தடுத்ததாய் கிருத்தி செய்த அழிசாட்டியங்களை அவளால் தாங்கவே முடியவில்லை..


முதல் வேலையாய் என்ன கொடுத்தாலும் சாப்பிடவே மாட்டேன் என அடம் பிடிக்கிறாள்.. கேட்டால் அப்பன் வேண்டுமாம்.. 



என்னம்மா இவ்வளவு நேரமா பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்காம வச்சிருக்கிறது.. டாக்டர் வந்தா எங்கள தான் திட்டுவாங்க.. நேரம் கழித்து வந்த படபடப்போடு இவளும் தாமதமாய் குழந்தைக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்ததை கண்டு சத்தமிட்டார் நர்ஸ்..



இதோ இப்போ கொடுத்துடறேன்.. என்றவள் தான் கையில் பக்கத்து கடையில் இருந்து வாங்கி வந்திருந்த சுடச்சுட இருந்த பருப்பு சாதத்தை நீட்டிக் கொண்டிருக்கிறாளே.. ஆனால் அவள் வாங்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும்..



ச்சே.. தவறோ சரியோ ஆரியன் சொன்னதுலையும் ஒரு விஷயம் இருக்கத்தான் செய்யுது.. நான் அவனை அப்பான்னு இவளுக்கு பழக்கப்படுத்தி இருக்கக் கூடாது.. அவன் துரோகத்தில் சுட்டு எண்ணி கொண்டாள்..



சாப்பிடலன்னா அதுக்காக அப்படியே உட்கார்ந்துடக்கூடாது.. வலுக்கட்டாயமா புடிச்சினாலும் ஊட்டி விட்டுடுங்க.. மருந்து குடுக்கணும்ல்ல.. இந்த காலத்து பேரன்ட்ஸ் எல்லாம் நல்லது கெட்டது இல்லாம குழந்தைக்கு செல்லம் கொடுத்து கெடுக்குறீங்க.. யோசனையில் வெறித்த கண்களோடு அமர்ந்திருந்தவளை கண்டு  கூறிவிட்டு நர்ஸ் வெளியேறிவிட.. சாப்பிடேன் டி.. இவள் குரலில் சுருதி கூடியது.



முடியாது.. அப்பாவை வர சொல்லு.. எப்பவும் அவர் தானே ஊட்டி விடுவாரு.. அவரை கூப்பிடு.. அவர் ஊட்டுனா தான் சாப்பிடுவேன்.. குழந்தையின் கண்கள் பெற்றவளை தாண்டி ஈசலாய் தகப்பனை தேடி  பறந்தன..




அவள் கண்களில் இருக்கும் ஏக்கம் நன்றாகவே புரிகிறது.. ஆனால் அதற்காக அவனை இனி ஏற்றுக் கொள்ள முடியாதே.. நண்பன் என நம்பி இத்தனை நாட்கள் அவனோடு பழகியதற்கு கடைசியில் காதலிக்கிறேன் என ஒரே வார்த்தையில் தன் நட்பையே கொச்சைப்படுத்தி விட்டானே.. 



இவனை ஒரு வார்த்தை கூறினான் என்பதால் ஆர்யனை எவ்வளவு தூரம் நிந்தித்தேன்.. கடைசியில் அவன் கூறியதையே இவன் உண்மை என ஆக்கிவிட்டானே.. அவள் கண்கள் படுக்கையில் இருந்த தலையணையை வெறிக்க.. அம்மா.. அவள் தாடை பற்றி நிமிர்த்திய குழந்தையின் பிஞ்சு கரத்தை அடுத்த கணம் தட்டி விட்டாள்..



ஆற்றாமை கோபமாக பிஞ்சிடம் முளைவிட்டது..  என்னடி.. சும்மா அப்பா அப்பான்னு உயிரை வாங்குற.. அவன் இனிமேல் வரமாட்டான்... புரியுதா...  கொடுக்கிறது அமைதியா சாப்பிடறதுன்னா சாப்பிடு.. இல்லன்னா பேசாம ரெண்டு பேரும் சேர்ந்து பட்டினி கிடக்கலாம்.. வெடித்தவளை கண்டு குழந்தையின் உதடுகள் பிதுங்க ஆரம்பிக்க..



இதுதான் உனக்கெல்லாம் சரிப்பட்டு வரும்.. அழுகையுடனே குழந்தையின் வாய்க்குள் உணவை திணித்து விட்டாள்.. எதனால் இந்த கோபம்.. குழந்தை தகப்பனை கேட்டதால் மட்டுமா? அல்லது.. அவள் மனதில் ஆற்ற முடியாத தவித்துக் கொண்டிருக்கும் வேதனையை எப்படியாவது காட்டிவிட முயற்சியா??



  கோபப்படக்கூடாது என புரிகிறது.. ஆனால் அவள் பேசுவதற்கு வேறு எப்படி அவளை பேசி உண்ண வைப்பது என புரியவில்லையே.. வரும் நர்ஸ் என்னவோ தான்தான் பிள்ளைக்கு ஊட்டி விடவில்லை என்பது போல் அல்லவா கூறி செல்கிறார்.. இதோ கடைசியில் இந்த வழி தான் கை கொடுத்து  சாப்பிட்டு முடித்து குழந்தையும் உறங்கி விட்டிருந்தாள்.




அவசர அவசரமாய் மூச்சிரைக்க உள்ளே ஓடி வந்தான் ஆரியன்.. கடந்த நான்கு நாட்களாக இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது.. அறையில் குறுக்க நெடுக்க நடந்து கொண்டு இருந்தாள் ஜானு.. இதோ நாட்கள் மின்னலாய் மினுக்க ஓடி இருக்க.. அசோக்கை கண்டு இதோடு ஒரு வாரம் ஆகிறது.. அன்று அலுவலகத்தில் அவனைப் பார்த்து வந்ததோடு சரி.. அவளும் அவனைத் தேடவில்லை.. அவனும் அவளைப் பார்க்க வரவில்லை.. இதோ இப்போது தான் குழந்தைக்கு காயம் 90% சரியாகி விட்டதாய் கூறி டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என சென்று இருக்கிறாள் அந்த நர்ஸ்..



தான் பேசவில்லை எனினும் என் குழந்தை.. என் ரத்தம்.. என உரிமை கொண்டாடிக் கொண்டு நேராக மருத்துவரிடமே குழந்தையின் உடல் நலனை பற்றி விசாரித்து வருகிறான் அவன்..  இதெல்லாம் செய்யும் போது குழந்தைக்கு உடல் நலம் விரைவாய் குணமாகிவிடும் என அவர் கூறும் அனைத்தையும் வாங்கி வந்து குவிக்கிறான்.. அன்று கூட நெக்பில்லோவில் குழந்தை சாய்ந்து கொள்வதன் மூலம் அவள் கழுத்து வலி குறையும் என டாக்டர் கூறிய அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தையின் கழுத்தில் நெக் பில்லோவ் குடியேறியது.




முதலில் அவனைக் கண்டு.. இவன் தானே அன்று தாயை அடிக்கப் போனவன் என அரண்டு போன குழந்தை.. விடாமுயற்சியாக தொடர்ந்து அவன் வாங்கி தந்த பொருள்களில் கொஞ்சம் கொஞ்சமாய் மகிழ்ந்து இப்போது சற்று சாதாரணமாகவே அவனோடு பேச ஆரம்பித்து இருந்தாள்.



இதெல்லாம் எதுக்கு வாங்கிட்டு வரீங்க.. எங்க லைப்ல குறுகிடாதீங்கன்னு நா சொன்னது புரியலையா..  ஆவேசத்தில் வெடித்தவளை கீழ்கண்ணால் துளைத்தான்.




குறுக்கிடாம இருக்கறதுக்கு நான் அவன மாதிரி யாரோ எவரோ கிடையாது..  அவ என் புள்ள.. நீ என் ஜானு.. உங்களுக்கு பார்த்து பார்த்து எல்லாத்தையும் செய்ய வேண்டியது என்னுடைய கடமை.. அதை நீ ஏத்துக்கிட்டாலும் சரி இல்லை என்றாலும் சரி.. உனக்கு செய்றத மறுக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. ஆனா அவ என் புள்ள..செய்ய உரிமையும் கடமையும் எல்லாம் எனக்கு இருக்கு.. எனக்கு மட்டும் தான் இருக்கு.. இது தான் ரத்த பந்தம்..  என்றவனின் மறு அர்த்தம் அசோக்கைதான் குறிப்பது என்பது அவளுக்கு புரியாமல் இல்லை.



உனக்கும் கூட ஏதாவது வேணும்னா சொல்லு.. செய்ய காத்திருக்கேன்.. ஆழ்ந்த குரலோடு கூறியவன்.. தேங்க்ஸ் அங்கிள்.. என குழந்தை கூறிய வார்த்தையில் ஒரு கணம் முகம் சுருக்கி.. வாய்வரை வந்த வார்த்தையை இதழ் கடித்து உள்ளேயே அடக்கி ஆழ் பார்வையால்.. தயவுசெய்து இதை சீக்கிரமாய் மாற்றி விடு.. என்பது போல் துளைத்து விட்டு வெளியேறினான்.. 




மிதா வருகிறேன் வருகிறேன் எனக் கூறினாலும் அவள் விடுமுறை எடுத்திருந்த வேலையை ஒர்க் ப்ரம் ஹோமில் முடிக்க வேண்டிய கட்டாயம்..  20 நாட்கள் ஸ்காலர்ஷிப்பை முடித்து விட்டால் அது தான் முடித்த படிப்புக்கு பெரிய உத்வேகமாய் அமையும் என்பதால் பகல் நேரம் முழுவதும் வேலையை பார்த்து கொண்டு.. இரவில் அவள் தூங்கவும் தாமதமாகி தான் போகிறது..




தாய் தன் வீட்டில் தான் இருக்கிறார் என  தனித்திருக்கும் அவளை ஆரியன் வீட்டிற்கு அழைத்தாலும் ஜானு உடனேயே தான் இருந்து விடுவதாய் நாசுக்காய் மறுத்து விட்டாள் மிதா.. அங்கு சென்று ரூபாவின் முகத்தை காண சிறு துளியும் இஷ்டம் இல்லை.. கூடவே தாயையும் தான்..




  இடையில் அசோக் உடன் நடந்த கலவரங்கள் எதுவும் அவளுக்கு தெரியாது.. ஜானு கூறவில்லை..



என்னடி அவர ஆளையே காணோம்.. அங்கேயே செட்டில் ஆகிட்டாரா.. ஒருமுறை கேட்டதற்கு.. அ.. ஹான்.. அவ்வளவே இவளிடமிருந்து வந்த பதில்..


ஏண்டி குரல் ஒரு மாதிரியாவே இருக்கு.. அவள் கேட்டபோது.. தொடையை செருமிக் கொண்டு முட்டை கண்களை இடம் வலமுமாய் உருட்டினாளே..



பாப்பா இப்படி இருக்குறத பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.. என முடித்துக் கொண்டாள்.



அது சரி இப்பதான் வேலைக்கு போயிட்டு வர்றியா.. மணி எட்டை தொட்டிருக்க கேட்டவளிடம்.. ம்ம்ம்.. தலையை ஒரு மாதிரியாய் உருட்டியது அவளுக்கு தெரியாதே.. 


சரிடி.. கிடைக்கிற டைம்ல ரெஸ்ட் எடு..  நான் கொஞ்சம் டைம் கிடைச்சாலும் பாப்பாவ பார்க்க வரேன்..  அவள் கூறிய அடுத்த நிமிடம் சே சேச்ச வேண்டாம் உடனடியாய் மறுத்திருந்தாள் ஜானு.



ஏன்??



எதுக்கு உனக்கு தேவையில்லாத அலைச்சல்..  இன்னும் இரண்டு நாள்ல நாங்களே அங்கு வந்துட போறோம்.. சொல்லியும் இதோ இரண்டு நாட்கள் முடிந்து விட்டது.. வீட்டிற்கு சென்றால் அசோக்கை பற்றி கேட்பாளோ..  மேடம் டிஸ்சார்ஜ் ஃபார்ம்.. என உள்ளே வந்த நர்ஸ் கையிலிருந்து முந்திக்கொண்டு தான் வாங்கினான் ஆரியன்.. 




  இதுல டிஸ்சார்ஜ் ஃபார்ம் எல்லாம் இருக்கு.. சைன் பண்ணிடுங்க..  என்றதோடு வெளியே செல்ல போன வளிடம்.. இதுல பில் இல்லையே?? நெற்றியில் முடிச்சிட்ட புருவங்களோடு கேட்டான்.




பாப்பாவுக்கு சர்ஜரி பண்றதுக்கு முன்னாடியே பில் எல்லாம் செட்டில் பண்ணியாச்சு சார்.. ப்ரொசீஜர் அதுதானே.. என்றதோடு செல்ல போக..  அப்படின்னா அவன் என் மகளுக்கு செலவு செய்திருக்கிறானா.. என் பிள்ளைக்கு செய்ய அவன் யாரு.. பல்லை கடித்ததோடு அவன் எவ்வளவு பணம் கட்டினானோ..  அவனை தேடி கண்டுபிடித்து அவன் முகத்தில் எரிந்து விட வேண்டும் என.. ஆர்ப்பரித்துக் கொண்டு வந்த வெறியோடு.. எனக்கு பேர் காபி கிடைக்குமா?? கேட்டான்.




சாரி சார்.. ஆல்ரெடி சார் காப்பி அசோக் சார் பணம் கட்டுனப்வே கொடுத்துட்டோம்.. 



இல்ல இன்னோன்னு??



நோ..  உங்களுக்கு அப்படி வேணும்னா நீங்க டீன் பார்த்து தான் பேசணும்.. கூறிவிட்ட சென்றதும் வேறு வழியில்லாமல் பல்லை கடித்தான்.




பெரிய ஹாஸ்பிடல் தான்.. நிறைய பணமும் செலவாகி இருக்கும் என்பது நிச்சயம்.. அவன் செலவு செய்த பணத்தோடு ஜானு ஆரம்பத்தில் வாங்கிய 15 லட்சத்தையும் 20 லட்சமாகவே சேர்த்து அவன் முகத்திலேயே தூக்கி எரிந்து விட்டு.. உனக்கும் இதுவரை நீ செலவு செய்த பணத்திற்கும் குட் பாய் சொல்லிவிட்டு வர முடியவில்லையே.. அங்கலாய்த்தான்..




இதை விடுத்து அந்த 20 லட்சத்தை மட்டும் கொடுத்து அரை கடன்காரனாக இருக்க விரும்பவில்லை.. நேரிலேயே கொடுத்துவிட்டு  எவ்வளவு பணம் வந்தது என் அவனிடமே கேட்டு அந்த பணத்தையும் கொடுத்துவிட்டு வரவேண்டும் என முடிவு கட்டிக் கொண்டவனாய்.. தன் கையில் இருந்த பார்மையும் தன்னையே அனல்வழிகளோடு பார்த்துக் கொண்டு நின்றவளின் பார்வையை ஓரம் கட்டிவிட்டு.. என்ன ஜானு பாத்துக்கிட்டே நிக்கிற.. சீக்கிரமா கிளம்புடி.. என்றபடி குழந்தையை நெருங்கப் போக.. சட்டென குழந்தையை மறைத்து முன்னே வந்து நின்றாள்.



இவ்வளவு நாள் ஹாஸ்பிடல்ல இருக்கிறதால  அமைதியா இருந்தேன்.. இனி என் பொண்ண நான் பார்த்துப்பேன்...என்றவள்.. விழித்து இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை ஒரு கையிலும் மறு கையில் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை எடுத்து வைத்திருந்த பையையும் தூக்கிக்கொண்டு நடக்க.. அவள் பேச்சில் முகம் கருத்து போனவன்.. சிரமப்பட்டு அவள் தூக்கிச் செல்வதில் பாய்ந்து அவள் கையில் இருந்த பையை வாங்கினான்.




குழந்தையை தான் தர மாட்டேன்னு சொல்லிட்ட.. அட்லீஸ்ட் பையை தூக்கவாவது வாய்ப்பு கொடு..   கேட்டபடி விடாப்பிடியாய் அவள் கையில் இருந்த வாங்கிக் கொண்டு கூடவே நடக்க.. எதிலேயும் என் விருப்பத்துக்கு நீங்க மதிப்பை கொடுக்க மாட்டீங்கல்ல.. அவளின் இறங்கிய குரலில் அவன் நடை நின்றது.






உங்களையும் தான் என் முகத்தில் முழிக்க வேண்டாம்னு சொன்னேன்.. ஆனா உரிமை அது இதுன்னு என் குழந்தை நிலைமையை உங்களுக்கு சாதகமா பயன்படுத்தி எங்களை நெருங்க பாக்கறீங்க.. இல்ல.. அவள் கேட்ட நொடி.. சட்டென பாய்ந்து அவள் பிடரி பற்றினான்..  சாலை வரை வந்ததும் மறந்து போனதோ.. ஆனால் அவள் கையில் இருந்துகுழந்தையின் கண்களில் திடீரென மிரட்சி பயமாய் விஸ்வரூபம் எடுக்க கண்டு .. ம்ம்ம்..  இறுக்க எத்தணித்த கரத்தை விலக்கிய படி தலையை அழுந்த கோதி கொண்டவனாய்.. ஏண்டி இப்படி பேச்சிலேயே என்ன உடைக்கிற.. எத்தன தடவ தான் நானும் மன்னிப்பு கேட்கிறது.. செயலால் முடியாததை வார்த்தையால் உணர்த்தி விட தவித்தான்.




நீங்க எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னா தயவு செஞ்சு எங்க வாழ்க்கையில இனிமேலாவது வராம இருங்க.. கையெடுத்து கும்பிட்டவள் அவன் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு விருவிருவென வெளியேற..  சரியாய் வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி கிளம்பி இருந்தாள்.



நீ என்ன புரிஞ்சிக்கவே மாட்டியா ஜானு.. உடைந்த மனதோடு கரித்த கண்களை ஆழ்ந்த மூச்சு இழுத்து விட்டுக்கொண்டு நின்றவனை.. மாமா.. பக்கத்தில் குரல் கேட்க திரும்பினான்..




மணிமேகலையோடு கையில் பைகள் அடுக்க நின்றிருந்தாள் ரூபா.. அவர்களை இங்கு எதிர்பாராதவனாய்.. எங்கே தான் அவளோடு இருந்ததை பார்த்து விட்டார்களோ என பரிதவிப்போடு அவள் சென்று கொண்டிருந்தார் ஆட்டோவை ஒரு கணம் பார்த்து பார்வையை மீட்ட.. இங்க ஹாஸ்பிடல் வாசல்ல என்ன மாமா பண்றீங்க.. ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு சீக்கிரமா போகணும்னு சொல்லி கிளம்பி வந்தீங்களே..  சுற்றிய இடத்தை பார்வையால் அளந்தபடி கேட்டாள் ரூபா.




மற்ற நேரங்களில் இருந்தால் கண்டு கொள்வானோ என்னவோ.. ஆனால் இப்போது தாய் அருகில் இருக்க அவள் கேட்பதற்கு பதில் சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தில்.. ஹான்.. ஒரு பிரண்ட பாக்க வந்தேன்.. எவ்வளவுதான் முயன்றும் எரிச்சலை குரலில் அடக்க முடியவில்லை.



பாத்துட்டீங்களா.. 



ம்ம்ம்..



அப்போ வாங்க மூணு பேரும் சேர்ந்தே போகலாம்.. அவள் கூற என்னது.. அதிர்ந்தான்.. அவர்களை ஒரு வழியாய் பேக் செய்துவிட்டு கையோடு ஜான்வின் வீட்டிற்கு சென்று விடலாம் என அல்லவா எண்ணினான்..



என்னதான் அவள் என்னை விட்டுவிட்டு என கூறினாலும் அவளை அப்படியே விட முடியவில்லை.. அதற்காக பெற்றவளையும் எதிர்த்து பேச முடியவில்லையே.. 



சிறு வயதில் இருந்து தாய் மீது கொண்டிருந்த பாசமும் நம்பிக்கையும் வார்த்தையை தடுக்கின்றது.. வாங்க மாமா.. அவன் கையை உரிமையோடு பிடித்துக் கொண்டு மறு கையால் அத்தையை இழுத்தபடி நடந்தாள்..



பின்னாடி தான் எனக்கு வசதியா இருக்கும் என பைகளோடு மணிமேகலை பின்னே ஏறிக்கொள்ள.. அவன் அருகே சகல உரிமையானவளாய் ஏறிக்கொண்ட ரூபாவை கண்டு பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது அவனால்.. 




நேரமோ என்னவோ.. போடப்பட்டிருந்த சிக்னலில் நின்றிருந்த காரோடு உள்ளே அவன் காதுக்குள் ஏதோ கிசுகிசுத்தபடி அமர்ந்திருந்த ரூபாவை கண்டதும்.. வெம்பிய நெஞ்சோடு அமர்ந்திருந்த ஜான்வியின் கண்கள் அவன் தோளில் சாய்ந்திருந்த ரூபாவிடம் நிலை குத்தின.. 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...