முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 57

 வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டதும் வாசலை திறந்தாள் மிதா.. ஒரு கையில் குழந்தையையும் மறு கையில் பையையும் தூக்கிக்கொண்டு இறங்கினாள் ஜானு..   


தலையில் கட்டு போட்டு தாயின் தோளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையிடம் தவிப்பாய் படிந்த விழிகளோடு.. அடுத்த நிமிடமே தூக்க மாட்டாமல் இறங்கிய தோழியை கண்டு.. வேகமாய் கீழ இறங்கி வந்தாள் மிதா.




ஏண்டி.. எத்தனை தடவை கேட்டேன்.. வரவான்னு.. பாத்துக்கிறோம் பாத்துக்கிறோம்னு சொல்லிட்டு இப்படி பிள்ளையையும் தூக்க முடியாம..  பையையும் தூக்க முடியாம இப்படியா தூக்கிட்டு வருவ.. உரிமையோடு கடிந்து கொண்டவளாய்.. பையில் இருந்து பர்சை எடுக்கப் போனவளின் கரத்தை தட்டி விட்டு கையோடு எடுத்து வந்திருந்த போனின் பின்பக்கம்  அவசர தேவைக்கு என வைத்து இருந்த 500 ரூபாய் நோட்டை நீட்டி திரும்பினாள்..




இன்னும் அங்கேயே பேகை வாங்க கைநீட்டி நின்று இருந்தவளை பார்வையால் துளைத்து விட்டு.. நான் கொண்டு வரேன்..  நீ பாப்பாவ உள்ள போய் படுக்க வை.. என்றதும் மறு பேச்சின்றி சோர்ந்த நடையோடு வீட்டிற்குள் குழந்தையை உள்ளே தூக்கி சென்று படுக்கையில் படுக்க வைத்தாள் ஜான்வி.




இங்கிருந்து சென்றபோதிலிருந்து மீண்டும் திரும்பி வரும்வரை தான் எத்தனை மாற்றங்கள்..  அனைத்தும் தன் வாழ்வின் அடிவாரத்தை அசைக்க கூடிய விஷயங்கள்..  அறையின் ஒரு பக்கமாய் அடுக்கடுக்காய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவன் பொருட்களில் இருந்து அவன் வாசம்..  நண்பன் என உன்னை ஆழமாய் நம்பினேனே..  எனக்கு துரோகம் செய்ய உனக்கு எப்படி மனது வந்தது..  விழிகள் அவன் பொருட்களையே வெறித்து நிற்க.. அடியே.. தோளில் கைவைத்து மிதா உலுக்கியதில்.. அ.. ஹான்.. தன்னிலை கொண்டு திரும்பினாள் ஜானு..



என்ன அப்படியே நிக்கிற.. கவனமாய் இருக்கிறது இல்லையா..  பாரு இப்ப இன்னொரு தடவை அடிபட்டதால மூணு நாள்ல வீட்டுக்கு வர வேண்டியது ஒரு வாரம் கழிச்சு வந்திருக்க என்றபடி.. வேகமாய் கிச்சனுக்குள் நுழைந்தாள்..





மேலும் கீழுமாய் வாங்கிய மூச்சோடு சோபாவில் பொத்தன விழுந்தாள் ஜானு..  புருவங்கள் சுருங்கி யோசனையோடு அமர்ந்ததவளை.. ஜானுஹ்ஹ்..  மிதாவின் ஓங்கிய குரலில் கண் விழித்தாள்.




எத்தன தடவ கூப்பிட்டுக்கிட்டே நிக்கிறேன்..  அப்படி என்ன டி யோசன.. ஒரு மாதிரியா தான் இருக்க.. சரி..இந்தா இதை குடி.. மோரை நீட்டினாள்.. இருக்கும் உடல் சோர்வுக்கும் மனசோர்வுக்கும் குடித்தால் தேவலை என வாங்கி மிடரு வைக்க அந்த குளிர்ச்சியில் தானாக அவள் கண்கள் மூடின.



ஆமா.. என்ன நீ மட்டும் வந்திருக்க.. எங்கே அவர்.. அதான் அஷோக்.. கேட்கும்போது அவள் விழிகளில் அவளை தாண்டி நீண்டது..



வீட்ல தயிர் எதுவும் இல்லையே..  இதை எப்படி போட்ட.. மாற்று கேள்வியோடு பேச்சை மாற்றினாள் ஜானு...



ஹ்ம்ம்.. மேடம் வீட்டு பக்கமே ஒரு வாரம் வரல.. இருக்குற காய்கறி எல்லாம் ரெண்டு நாள்ல சரியாயிடுச்சு.. அதுக்காக சாப்பிடாமலா இருக்க முடியும்??  அதான் நானே பக்கத்துல ஸ்டோருக்கு போய் வேணுங்கிறதெல்லாம் வாங்கிட்டு வந்தேன்..  அப்படியே தயிரும் வாங்கிட்டு வந்திருந்தேன்.. இப்ப பாக்க டயர்டா தெரிஞ்சியா..  அதான் உனக்காக ஜில்லுனு ஒரு மசாலா மோர் போட்டு கொண்டு வந்தேன்.. எப்படி இருக்கு.. புருவம் உயர்த்தியவளிடம்.. இப்பதான் உயிரை வந்துச்சு.. இன்னும் கொஞ்சம் மிச்சம் இருந்தால் குடு.. மூச்சு வாங்கியபடி நெஞ்சில் கை வைத்தாள்.. 




அதிகமாய் எடுத்து வைத்ததை கொண்டு வந்து கொடுத்தாள்..இருக்காதா பின்னே..  அங்கே இருந்து குழந்தையை தனியா கூட்டிட்டு வந்திருக்க..  கூடவே இந்த பேகையும்..



ஏன் வச்சுட்டு வந்தா அவர் எடுத்துட்டு வர மாட்டாராமா? அது சரி எங்கே அவர்.. குழந்தை டிஸ்சார்ஜ் பண்ற நேரம் அவர் கூட வர வேண்டாமா? கேட்டவள் அவளாகவே அப்படியெல்லாம் அவர் விட்டுருக்க மாட்டாரே.. அப்புறம் ஏன் இப்படி உன்னை தனியா அனுப்பிருக்காரு.. அவனை பற்றி பேசும் போது அவள் முகம் போன போக்கிலோ.. மனதில் தோன்றிய கேள்விகளிலோ  புருவ முடிச்சுகளோடு கேட்க இவள் இதழ்கள் விரக்தியில் விரிந்தன..



அவன் இனி வரமாட்டான்.. அவள் கூறியதில் புரியாமல் மிதாவின் புருவங்கள் சுருங்கின..




என்ன சொல்ற நீ.. வரமாட்டார்னா என்ன அர்த்தம்.. என்றவள் அவள் முகம் போன போக்கில் இப்ப சொல்லப்போறியா இல்லையா..  அவளைப் பற்றி உலுக்க..  எல்லாமே முடிஞ்சிடுச்சு மிதா.. அவன் ஒரு ஏமாற்றுக்காரன்.. அதற்கு மேல் மன பாரத்தை தாங்க முடியாமல் வெடித்து கூறி இருந்தாள் ஜானு.



ஜா.. ஜானு.. தோழியின் ஆவேச பேச்சை கண்டு அவள் விழிகள் விரிந்து போயின..  ஜானு நீ என்ன சொல்ல வர்ற எனக்கு ஒண்ணுமே புரியல.. போகும்போது அவர்தானே குழந்தையை தூக்கிட்டு போனாரு.. குழந்தை மேல அவ்வளவு உயிரையே வச்சிருக்கவரு இப்போ திடீர்னு வரமாட்டார்ன்னு சொல்ற.. எனக்கு ஒன்னுமே புரியல??



எனக்கும் தாண்டி எதுவுமே புரியல.. இரு கரங்களால் பற்றிய படி தலை குனிந்தாள்..



யாரை நம்பறது..  யாரு என்னை ஏமாத்துறாங்க.. எதுவுமே புரியல.. நடுங்கியவளை கண்டு சட்டென இடமாறி அவள் அருகில் அமர்ந்தபடி அவள் தோளை தன்னோடு அனைத்து கொண்டாள் மிதா.



என்னடி ஆச்சு..  ஏன் இப்படி எல்லாம் பேசுற..  எதுக்காக அழுகுற..  ஜானு முதல்ல அழுகுறத நிறுத்து.. அவள் குலுங்கிய தோள்களை ஆசுவாசமாய் தட்டிக் கொடுத்தபடி குரலில் பரிதவித்தாள் மிதா.



எல்லாமே பொய் மிதா.. அவன் என்னை இத்தனை காலமா ஏமாத்திட்டான்..


அவனை சந்திச்ச இந்த நாலு வருஷத்துல அவனை என் நண்பனா எனக்கு எப்பவும் சப்போட்டா இருக்கிறவனா தான் நினைச்சேன்.. ஆனா கடைசில அவன்.. அவன் என்னை ஏமாத்திட்டான்.. துரோகம் பண்ணிட்டான்... அவள் கூற மிதாவின் முகத்தில் அதிர்ச்சி.



அ.. அப்படினா..??



அவன் என்ன காதலிக்கிறானாம் மிதா.. அவள் கதறலோடு கூறி விட்டாள்...  நம்ப மாட்டாமல் மீதாவின் விழிகள் விரிந்து போயின..  ஜானு நீ என்ன சொல்ற.. நீதானே அவர் உனக்கு நல்ல பிரண்ட்ன்னு அன்னைக்கு சொன்ன.. 




ம்ம்ம்.. நா தான் சொன்னேன்.. நான் அவன அப்படித்தானே நினைச்சேன்.. ஆனா அவன்.. ச்சி... முகத்தை சுழித்து கழுத்தை வெட்டி திரும்பிக் கொண்டாள்.. கண்களிலிருந்து மட்டும் அழுகை ஊற்று நிற்கவே இல்லை.



ஜானு முதல்ல அழுகாத.. எனக்கு என்னமோ நீ சொல்றதுல ஏதோ குழப்பம் இருக்குன்னு தோணுது.. நீ எதுவும் தப்பா புரிஞ்சுகிட்டு...?? அவள் கேட்டு முடிப்பதற்குள்..





குழப்பமும் இல்ல.. நான் தப்பாவும் நினைக்கல.. இந்த வார்த்தையை அவனே அவன் வாயால சொல்லிட்டான்.. என்றவள் அன்று அலுவலகத்தில் நடந்த அனைத்து விஷயங்களை கூற.. தொடர்ந்து அதிர்ச்சி.. கோபம்..  கடைசியாய் தோழியின் நிலைக்கண்டு தவிப்பு.. என பார்த்தவளை கண்டு.. உன்னால கூட நம்ப முடியலல்ல.. நீ சொன்ன மாதிரி நானும் இத்தனை நாளா குழந்தை மேல தான் அவ்வளவு பாசமாய் இருக்கான்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.. ஆனா கடைசில எல்லாமே பொய்.. அவனுக்கு என் மேல இருந்தா சபலத்துனால தான் குழந்தை மேல பாசமா இருக்கிற மாதிரி நடிச்சு இருக்கான்.. எல்லாம் நடிப்பு.. பொய்.. திருகுதானம்.. குரலில் வெறுப்பு மட்ட அவள் கூறிக் கொண்டே சென்ற வார்த்தைகளில்.. அதற்கு மேல் பொறுக்க முடியாமல் போதும் நிறுத்து ஜானு..  ஓங்கிய குரலில் அவளை நிறுத்தி இருந்தாள் மீதா.




மிதா?? அவள் புரியாமல் பார்க்க.. முகத்தில் இருந்த கடுமையை சற்று குறைத்துக் கொண்டவளாய்.. ப்ச்.. நீ அன்னைக்கு கஷ்டத்துல இருந்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும் உங்கள நல்லபடியா அவர்தானே பாத்துக்கிட்டார்.. இப்படி திடீர்னு இப்படி ஒரு விஷயத்துக்காக அவரை இப்படி எல்லாம் நீ பேசுவது சரியில்லை.. என்றவளை கத்தி கண்களால் பார்த்தாள்.




என்ன பேசுற நீ?? அவன் எனக்கு எப்படிப்பட்ட துரோகம் செஞ்சிருக்கான்?? அவன் எனக்கு செஞ்ச எந்த உதவியும் நான் மறக்கல.. மறுக்கவும் இல்ல.. ஆனா நன்றி உணர்சியையும் நட்பையும் தாண்டி என் மேல இருக்கிற சபலத்தில் தானே இதெல்லாம் செஞ்சிருக்கான்.. நண்பனா நான் அவன பார்த்தேன்.. நம்புனேன்.. ஆனா அவன் என்ன..?? அவள் முகம் அருவருப்பில் சுழிய கண்டு.. இன்னொரு தடவை இப்படி பேசினா நானே உன்ன அறைஞ்சிடுவேன் ஜானு..  அதற்கு மேல் அவனைப் பற்றிய அவதூறு வார்த்தைகளை கேட்க முடியாது வெடித்திருந்தாள் மிதா.



மிதா?? புரியாமல் ஜானு பார்க்க உனக்கு என்னடி தெரியும் அவரை பத்தி.. உனக்காகவும் உன் பிள்ளைக்காகவும் வாழ்ந்துக்கிட்டுருக்குற மனுஷனை நீ என்னல்லாம் பேசுற..?? என்றவள் எதையோ அடக்க முயன்று வாயை மூடி  உள்ளங்கைகளை இறுக்கி கொண்டாள்.. 



புரியாமல் பார்த்தாள் ஜானு.. அவன் எவ்வளவு கேவலமான ஒரு வேலையை செய்திருக்கிறான்.. நட்பு என நம்பிக் கொண்டிருக்கிறவளை காதலித்திருக்கிறான்.. ஏமாற்றி இருக்கிறான்.. விஷயத்தை கூறினாலும் புரிந்து கொள்ளாமல் தன்மீதே கோபப்படுகிறாளே இவள்.. என பார்த்தவளை கண்டு.. 



என்னடி அப்படி பாக்குற.. எப்படி இருந்த மனுஷன்.. எப்படி இருக்க வேண்டியவரு தெரியுமா அவர்.. இங்க வந்து எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இந்த சின்ன இடுகல் வீட்டுல இத்தனை நாள் இருந்திருக்காருன்னா அதற்கு முழு மொத்த காரணமும் அவர் உன் மேலையும் உன் குழந்தை மேலையும் வச்சிருந்த பாசம் தான்..  அதை கொஞ்சமும் புரிஞ்சுக்காம அவன் கேட்டதும் மறுக்க முடியாம அவர் காதலை சொல்லிவிட்டாராம்.. உடனே இந்த அம்மணி என் மூஞ்சில முழிக்காதீங்கன்னு விரட்டி விட்டாளாம்.   ஏண்டி தெரியாம கேட்கிறேன் காதலிக்கிறது என்ன அவ்வளவு பெரிய தப்பா??




அந்தர் பல்டி அடித்து பேசுபவளை இவளுக்கு என்னவாயிற்று என்ற ரீதியில் பார்த்தாள் ஜானு..  அவளை பொறுத்தவரை தான் செய்தது முழு முற்றிலும் சரியே..  



காதலிக்கிறது தப்பில்ல..  ஆனால் என்ன போல இன்னொருத்தர மனசார காதலிச்சு குழந்தையை வயித்துல சுமந்துகிட்டு இருக்கிறவளை பார்த்துக்கொள்கிறேன்.. என்கிற பெயரில் கூட்டிட்டு வந்து காதலிச்சது தான் தப்பு.. சொல்லப்போனால் இதுக்கு பேரே வேற...



வாய மூடு டி.. அடிச்சேன்னா பாரு.. அவள் ஓங்கிய குரலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை சினங்கியபடி அழ ஆரம்பிக்க.. அவள் கோபத்தில் அதிர்ந்து போனாலும் அடுத்த கணமே தாய்மை உயிர்த்தெழ ஓடிப்போனவள் குழந்தையை முதுகில் தட்டிக் கொடுத்தாள்.  தாயின் அரவணைப்பு கிடைத்ததில் முகத்தை ஒரு மாதிரியாய் சுருக்கி கொண்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தாள் கிருத்தி..




உள்ளே சத்தம் கேட்காத அளவிற்கு அறை கதவை மெல்ல சாத்திவிட்டு வெளியே வந்தாள் ஜானு..  உனக்கு என்னடி ஆச்சு... வந்த நாளிலிருந்து உன் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி பேசிகிட்டு இருந்த..  சொல்லப்போனா அவனை பத்தி நீயே நெகட்டிவா தானே சொல்லிக்கிட்டு இருந்த.. இப்போ அவன் எனக்கு இவ்வளவு பெரிய துரோகம் பண்ணிட்டான்னு சொல்லியும் அவனுக்கு போய் சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்க..



ஏன்னா அவர பத்தி நிறைய விஷயங்கள்ல நான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அவர் உனக்காகவும் உன் குழந்தைக்காகவும் என்னென்ன செஞ்சிருக்காரு தெரியுமா..  சொன்னியே மூட்டை தூக்குறவர்னு.. அத கூட அவர் செஞ்சிருக்காருனா உனக்காகவும் உன் பிள்ளைக்காகவும் தான்.. மிதா குரலில் சுருதி இறங்கியது..




ஹ்ம்ம்ம்.. அது என்னவோ உண்மைதான்.. ஆனா பிள்ளைக்காக இல்ல.. எனக்காக மட்டும் தான் அவன் என் மேல வச்சிருக்கற லஸ்ட்டுகாக..  அவள் கூறி முடிப்பதற்குள் பளார் என அவளை அறைந்திருந்தள் மிதா..



குளமாய் விரிந்து செவ்வானமாய் அவள் விழிகள் அவள் கோபத்தைச் செப்பனிட்டு காட்ட.. மிதா என அதிர்ச்சியோடு கன்னத்தை பிடித்தவளை.. அப்போதுல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன் அப்படி சொல்லாதேன்னு.. லஸ்ட்?? லஸ்ட்டா.. அவர் உன் மேல வச்சிருந்ததே லாஸ்ட்னா அப்போ லவ்னா என்னடி அர்த்தம்.. மிதாவிடம் இருந்து இப்படி ஒரு ஆவேசமான கோபத்தை எதிர்பார்க்கவில்லை..




காதல கூட சொல்லாம உன்னை கர்பமாக்கிட்டு நடுரோட்டில் விட்டுட்டு போனானே என் கூட பிறந்தவன்.. அதுதான் லவ்வா.. அப்படிதான் நீ நினைக்கிறியா..??


மூஞ்சில முழிச்சா செத்துருவேன்னு நீ சொன்ன வார்த்தையை கொஞ்சமும் கண்டுக்காம.. இவ்வளவு நாளா தனக்கு பிள்ளைன்னு ஒருத்தி இருக்கான்னு கூட தெரியாம இவ்வளவு நாள் இருந்தவன்..  திடீர்னு ரத்த உறவுன்னு நீ சொன்னத துச்சமா விட்டு உங்கள தேடி வந்தா அது உனக்கு லவ்..



அப்படின்னா எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உன்னையும் பாப்பாவையும் இத்தனை காலம் பிரசவத்தில் இருந்து இதனால் வரைக்கும் வளர்த்து வந்தாரே..  அதுக்கு பேர் என்ன?? ஹ்ம்ம்.. நீ சொன்ன லெஸ்ட் அப்படித்தானே??



இத்தனை வருஷமா கண்ணுக்கு கண்ணா உயிருக்கு உயிரா பார்த்து பார்த்து வளர்த்த குழந்தையையும் உன் ஒரு சொல்லுக்காக.. உன் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து விலகிப் போனான்னா அவனுக்கு உன் மேல லஸ்ட்.. அப்படி தான..



என் அண்ணன பத்தி இப்படி பேச எனக்கே ஒரு மாதிரியா தான் இருக்கு.. ஆனா எனக்கு அவன விட நீ ரொம்ப ரொம்ப முக்கியம்.. உன் சந்தோஷம் முக்கியம்.. 



என் சந்தோஷம் னு சொல்ற.. ஆனா  நீயே என்ன கார்னர் பண்ற..??



கண்டிப்பா இல்ல.. உனக்கு உண்மைய புரிஞ்சுக்க வைக்க முயற்சி பண்றேன்.. நேருக்கு நேராய் கூறினாள்..




என்ன உண்மை..?? அவன் என்னை ஏமாற்றி இருக்கான்.. அது மட்டும் தான் உண்மை.



வாய மூடுடி.. இன்னொரு தடவை அறைய தயங்க மாட்டேன்.. இன்னொரு தடவை அவர் உன்னை ஏமாத்திட்டாருன்னு சொன்ன.. என்ன பல்லை கடித்தவள் பேச்சில் அமைதியாக.. வா என் கூட.. அவளை இழுத்துக் கொண்டு குழந்தை உறங்கிக் கொண்டிருந்த அறையின் ஓரமாய் இழுத்து கொண்டு நடந்தாள்.




முழுதும் அவன் பொருட்கள்.. இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து இந்த ஒரு செல்ப் முழுக்க தன் பொருட்கள் தான் என நிறைத்து விட்டிருந்தான் அசோக்.. இன்னும் இரண்டு மூன்று செல்ப்புகள் இருப்பதால் தனக்கும்  தன் குழந்தைக்கும் தேவைப்படுவதை அதில் வைத்துக்கொள்வாள் ஜான்வி.. ஒரே வீட்டில் இருந்தாலும் இதுவரை அவன் பொருட்களின் பக்கம் வந்ததில்லை..  ஆனால் இப்போது மிதா இழுத்து சென்றதில் அவனுக்கே உரிய வாசனை முகத்தில் மோத.. தான் கவலை கொள்ளும் ஒவ்வொரு முறையும் அருகில் அமர்ந்த சமாதானம் செய்யும் அவனின் மலர்ந்த முகம் மனதிற்குள் எழ.. வலியோடு கண்களை இறுக மூடிக் கொண்டாள்.



இப்போ என்ன பண்ண போற.. உறங்கிக் கொண்டிருந்த கிருத்திக்கு கேட்டு விடாமல் மெலிதாய் கேட்டவளை கண்டுகொள்ளாது ஓரமாய் இருந்த புத்தகங்களை தூசி தட்டி தள்ளி வைத்தவள் அதற்கு கீழாய்  வைத்திருந்த லேப்டாப்பினை எடுத்தாள்..



லேப்டாப்பா இங்கேயா.. ஆச்சரியமாய் விரிந்தன ஜான்வியின் விழிகள்.. அவன் இங்கு இருந்த வரையில் இங்கோ அவன் கைகளிலோ இதை பார்த்ததில்லையே.. 



மாமா.. மாமா இங்க வாங்க.. டிவியில் ஏதோ சீரியல் ஓட தீவிரமாய் பார்த்து கொண்டிருந்தார் மணி.. அவரருகில் அமர்ந்த படி  போனை நோண்டி கொண்டிருந்த ரூபா திடீரென அழைக்க.. இவர்களால் அவளை வீட்டில் விட முடியவில்லையே.. என அறைக்குள் டென்சனோடு குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த ஆர்யன் வெளி வந்தான்.



என்ன..??



உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் கிப்ட்.. நம்ம அன்னைக்கு அந்த பெரிய மீட்டிங் போனப்போ யாரோ சத்ரியன்ன்னு பேசுனாரே.. ஞாபகம் இருக்கா..


ம்ம்ம்??


அது யாரு தெரியுமா??


தேடி பாத்தேன்.. விவரம் தான் தெரிஞ்சதே தவிர்த்து போட்டோ எதுவும் கிடைக்கல.. அவர் இண்டைரக்டா நடந்துறவரு போல.. அதன் போட்டோ எதுவும் போடாம மறைமுகமாகவே வச்சிருக்காங்க..



எக்சாட்லி.. ஆனா நா அவர் யாருனு கண்டு பிடிச்சுட்டேனே.. நீங்க பாக்கணுமா.. அவள் கேட்பதற்குள்ளாக அவளருகில் வந்து அமந்திருந்தான் ஆர்யன்.. அவனுக்கும் அந்த சத்ரியன் அன்று பேசியதை கேட்டதிலிருந்து அவனை பார்க்க ஆவல் தான்..  




யாரு.. எங்க காட்டு.. எப்படி கண்டுபிடிச்ச.. நா தேடி பாத்தேன்.. ஒன்னும் கிடைக்கலயே.. ஆவலாய் கேட்டான்.. 




நா போன ரூட்டே தனி.. என்றவள் அவன் காதருகே நெருங்கிய படி.. சொல்றேன்.. என அவன் போட்டோவை திறக்க.. 






இங்கு.. ஜானு யோசனையோடு நின்று கொண்டிருக்கும் போதே.. அதை திறந்து உள் நுழைந்தாள் மிதா.... பாஸ்வேர்ட் என்ற இடத்தில் ஜானு மை ஏஞ்சல்.. டைப் பண்ணதும் அவள் கருவிழிகள் வெறுப்போடு இடுங்கின.. 



அடுத்த நிமிடமே டெஸ்க் டாப் வர.. அதில் தன் உயர் ரக கோட்டை இழுத்து விட்டப்படி கண்களில் கூலிங் கிளாஸ்சோடு நின்றவன் உண்மையிலேயே அஷோக் தான்.. 



அதே போட்டோவை இங்கு தன் போனில் காட்டி இருந்தாள் ரூபா.. கண்ட ஆரியனின் விழிகள் விரிந்து போயின.



இவன்.. இவன்?? வார்த்தைகள் வர தடுமாற.. அன்னைக்கு மால்ல அந்த ஜானு கூட இருந்தவனை எங்கேயோ பார்த்த ஞாபகம்.. ஆனா எங்கேன்னு தான் ஞாபகம் வரல..  ஒருவேளை ஆஸ்திரேலியாவில் பார்த்திருப்பேன்னொன்னு டவுட்..  தான் என் ஃப்ரெண்டுக்கு அவனை போட்டோ எடுத்து அனுப்பி விட்டேன்.. 




இவ்வளவு நாளா பாக்காதவ இப்போதான் சொன்னா..  யங்கஸ்ட் பிசினஸ்மேன் ஆப் தி இயர்ன்னு ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி சீப் கெஸ்டா எங்க காலேஜ்க்கு வந்தவருன்னு.. அப்போதான் எனக்கும் இவரை எங்க பார்த்தோம்னு ஞாபகம் வந்துச்சு.. ஆனா உங்க கிட்ட சொல்ல ஏதாவது போட்டோ வேணும்ன்னு கேட்டேன்.. அப்போ தான் இந்த போட்டோவோட அவர் கூட நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து நின்னு எடுத்த போட்டோவையும் சேர்த்து அனுப்பி விட்டா.. என்ற படி அடுத்தடுத்ததாய் அவனோடு தாங்கள் நின்ற போட்டோவினை ரூபா காட்ட.. அவன் இவ்வளவு பெரிய ஆளா.. இதைத்தான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையே.. என்பது போல மூச்சைடைக்க பார்க்க.. அவனின் தொடர்சாதனைகளாய் அன்று அந்த பெரியவர் காட்டியது நினைவு வந்து அவனை உடல் உதற வைத்தது.. 



ஜானுவுக்கும் கிட்டதட்ட இங்கு அதே நிலை தான்.. அவன் சற்று பணக்காரன் என தெரியும்.. இந்த காலத்தில் சொந்த வீடு வைத்திருப்பவனே பணக்காரன் தானே..  ஆனால் தான் பார்த்தவனுக்கும் இதில் இருப்பவனுக்கும் தான் எத்தனை வேறுபாடு.. என திக்கித்து பார்த்து நின்றாள்.. 


இன்னும் இருக்கிறது என்பதை போல.. வரிசையாய் அடுக்கப்பட்டு நின்ற கோப்புகளில்.. ஒன்றாய்.. 


அஷோக் சத்ரியன்.. அவன் பெயர் முழுதாக.. 

தொடர்ந்து மை ட்ரீம் சக்ரினா.. என.. இருந்த கோப்பை திறந்தாள் மிதா.. 



அதில்.. அடுத்தடுத்தாய்.. அவன் போட்டோவை காட்டிய படி மிதா கூறிய விஷயங்களில் வேக மூச்சு வாங்க நிற்கவும் சக்தியின்றி கால்கள் பின்னி போனது ஜான்விக்கு.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...