மிதா காட்டிய படத்தில் இருந்த அசோக்கை அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு பார்த்து நின்றாள் ஜான்வி..
உனக்கு தெரியுமா அவன் எவ்வளவு பெரிய பணக்காரன்னு.. நினைச்சு பாக்க கூட முடியாத அளவுக்கு பெரிய பிசினஸ் மேன்.. அவன் தாத்தா வெற்றி தேவன்.. பிறக்கும் போது ஒன்னும் அவ்வளவு பெரிய பணக்காரன் எல்லாம் கிடையாது.. ஆனா கொஞ்சம் கொஞ்சமா தன் உழைப்பால முன்னேறியவரு..பாட்டி யமுனேஸ்வரி.. அடுத்தது அது அவர் பையன் தேவராஜ்.. இரண்டாவது மகன் மூணாவது மகள்னு பெரிய குடும்பம் தான்.. சித்தப்பா.. அத்தை எல்லாரும் வீட்டோட தான் இருப்பாங்க.. சித்தப்பாவுக்கு இவன் அப்பா அளவுக்கு பொறுப்பும் கிடையாது.. சுறுசுறுப்பும் கிடையாது.. பணம் கிடைக்கும் மட்டும் போதும்னு நினைக்கிறவரு.. கல்யாணம் பண்ணாலும் புருஷனையும் பிள்ளைகளையும் கூட்டிட்டு வந்து அப்பா வீட்டுல தங்குற அவன் அத்தைக்கும் அதை எண்ணம் தான்...
கையில அதாவது அசோக்கோட அப்பா கைகளை வந்ததும் தொழில் ஓரளவு நல்லா வளர்ந்துச்சு.. அவருடைய ஈடுபாட்டையும் உந்து திறனையும் ஒன்றா பயன்படுத்தி தொழில ஓரளவுக்கு முன்னுக்கு கொண்டு வந்தாரு.. ஓரளவுல இருந்த தொழில நாடளவுல ஆங்காங்கே கிளை பரப்பினார்.. ஆனா சில நாளிலேயே அவனுடைய அம்மா அப்பா ரெண்டு பேருமே கார் விபத்துல தவறிட்டாங்க.. எதிர்பாராத இந்த இழப்பு அந்த எட்டு வயசு பையனுக்கு மனசுல ஆறாத வடுவா விழுந்துடுச்சு.. அதுக்கு அடுத்து அசோக் முழுக்க முழுக்க அவன் தாத்தா பொறுப்பானான்..
வீட்டுல அத்தா சித்தப்பான்னு குடும்பம் மொத்தமும் இருந்தாலும் யாருமே கண்ண கசக்கிட்டு அப்பா அம்மா பாசத்துக்கு ஏங்கி நின்ன இவனை பெருசா கண்டுக்கவே இல்ல.. அவனுக்கு இருக்கிற ஒரே ஆறுதல் அவன் தாத்தா பாட்டி மட்டும் தான்..
இன்னும் ஒரே ஒரு வாய் கண்ணா.. நீ இந்த வாய் சாப்பிட்டால் தான் எனக்கு அடுத்து தூக்கமே வரும்.. குலைந்த குரலோடு இழையும் குரலில் கண்கள் மின்ன தன்னை தானோ என தாய் தந்தை நினைவில் சுருண்டு கிடப்பவன் வேகமாய் தலையை நிமிர்த்தி பார்ப்பான் அந்த வயதில் குட்டி பாலகனாய் இருக்கும் அசோக்..
ஆனால் சித்தப்பா மனைவி அவள்.. கிட்டத்தட்ட அசோக்கின் வயது இருக்கும் தன் மூத்த மகனை மடியில் தூக்கிக் கொள்ளாத குறையாய் சீராட்டி தாலாட்டிக் கொண்டிருப்பாள்.. தனக்கு இப்படி அன்பு கிடைக்காதா.. கண்கள் கரிக்க அதே இடத்தில் மீண்டும் கவிழ்ந்தடித்து படுத்து விடுவான் அஷோக்..
நான் இன்னைக்கு ஷாப்பிங் போனேன்.. இந்தா உனக்கு பிடிக்கும் என்று ரிமோட் கார் வாங்கிட்டு வந்தேன்.. சத்தத்தில் அறைக்குள் இருப்பவன் வேகமாய் துள்ளி வெளியே வருவான்.. அங்கு தன்மகன் துஷ்யன்த் கையில் அடுக்கடுக்கான விளையாட்டு பொருட்களை திணித்துக் கொண்டிருப்பாள் அவன் தாய்.. இவன் அத்தை காரி.. லீலா..
கண்கள் மின்ன வந்து ஏக்கத்தோடு பார்த்துவிட்டு ஏமாந்து திரும்பி உள்ளே செல்பவனை கண்டு யமுனேஸ்வரி தான் மகளையும் மருமகலையும் கடிந்து கொள்வார்..
ஏண்டி உங்க பிள்ளைகளுக்கு தான் வாங்குறீங்க இல்ல.. கூட அவனுக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்தா என்ன.. பாவம் பிள்ளை பொக்குன்னு போயிடுச்சு.. எனக் கேட்டு விட்டால் போதும்..
ஹ்ம்ம்.. நாங்க என்ன யாருக்கோ வாங்கி தர மாதிரி சொல்றீங்க.. நான் என் பிள்ளைக்கு வாங்கிட்டு வந்தேன்.. அண்ணி அவங்க பிள்ளைக்கு வாங்கிட்டு வந்தாங்க.. ஒன்னா போனாலும் நாங்க தனித்தனியா தானே வாங்கிட்டு வர்றோம்.. ஹ்ம்ம்.. உதட்டை இழுத்து சுழித்து கொள்வாள் மருமகள்.
அவளுக்குத்தான் எந்த விதத்திலும் குறைவில்லை என்பதை நிரூபிப்பதற்காகவே தானும் தாயை ஒரு டோஸ் போட்டுவிட்டு தன் மகனை அள்ளிக் கொண்டு செல்வாள் மகள்..
இருவரையும் சோர்ந்து பார்ப்பார் யமுனேஸ்வரி.. இவர்கள் எல்லாம் உண்மையிலேயே பெண்தானா.. ஒரு பச்சிளம் பாலகனை இந்த அளவில் வதைக்கின்றனரே..
சோர்ந்த நடையோடு உள்ளே சென்று பார்த்தல் மேத்தையில் கவிழ்தடித்தபடி கிடப்பான் அசோக்.. சத்ரியா.. பாட்டியின் குரல் கேட்டும் அவசர அவசரமாய் கண்களைத் துடைத்து எழுந்து அமருபவனை விடுய்யா.. நா அடுத்த முறை கடைக்கு போறப்ப உனக்கு இன்னும் பெரிய பெரிய பொம்மையா வாங்கிட்டு வரேன்.. அவர் தலை தடவி கூறுவதில் சரியான அவன் தலை ஆடும்.. ஆனால் அவன் முகத்தில் நீங்காத அந்த வலி?? அது வெறும் பொம்மைக்காக மட்டும் தானா?? கிடைக்காத அன்பிற்காக.. பாசத்திற்காகவும் சேர்த்து அல்லவா..
பால்வெண்மையில் கொழுகொழுவென அழகு குட்டியாய் இருக்கும் இந்த சிறு குழந்தையை விட்டு செல்ல உங்க ரெண்டு பேருக்கும் எப்படி மனம் வந்தது.. மனதோடு புலம்பிக்கொண்டு அமரும் யமுனேஸ்வரியை தேற்றுவது வெற்றி தேவனுக்கு பெரும் பாடாகி போகும்.
அவஅவளுங்க பிள்ளையை மட்டும் ஊட்டி வளக்குறாளுங்க.. ஏன் இவளுக்கு அவன் மச்சினன் மகன்தானே.. இவளுக்கு கூட பிறந்த அண்ணனோட மகன்.. அவன் சம்பாதிச்சா காசு மட்டும் வேணும்னு முதல் ஆளா வந்து நின்னுராளுக.. ஆனால் அவன் பையன் மட்டும் வேண்டாமாம்.. ஏதோ எதிரிய பாக்குற மாதிரியே ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி பாக்குறாளுங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.. எனக் கண்ணீர் விடும் மனைவியை தன் தோளில் சாய்த்து கொள்வார் வெற்றி தேவன்.
அவனுக்கு நீ இருக்க.. நான் இருக்கேன்.. நல்லபடியா அவன கொண்டுவருவது நம்ம பொறுப்பு.. இந்த வார்த்தையில் சற்று தெளிந்து தன்னை மீட்டுக் கொள்வார் யமுனா.
நாட்கள் இப்படியே பறக்க.. தாய் தந்தையின் அன்பை மறக்க முடியவில்லை எனினும் அதற்கும் சேர்த்து தாத்தா பாட்டியின் பாசத்தில் அதிகமாகவே லைத்தான் அசோக்..
எப்போ பார்த்தாலும் பாட்டியும் தாத்தாவும் அவன்கூடயே இருக்காங்க எங்க கூட பேசக்கூட மாட்டேங்கிறாங்க.. நாங்க பேசினாலும் முறைக்கிறாங்க.. புகார் பத்திரம் வாசிக்கும் மகன்களை இழுத்துக் கொண்டு நிற்பர் மகனும் மருமகளும்.
என்னடா.. அசோக் என்ற பள்ளியில் நடந்த கதையை கூற சுவாரசியமாய் கேட்டுக் அவனை மடியில் அமர்த்தி கிச்சு மூச்சு காட்டி ரசித்துக் கொண்டிருக்கும் தாத்தாவும் பாட்டியும் தலையை மட்டும் நிமிர்த்தினர்..
அதானே சொல்றத கூட காது கொடுத்து கேட்க முடியாம உங்க பேரன் கிட்ட அப்படி விளையாடனுமா.. இங்க பாருங்க.. என் மகன் வந்து பேசி இருக்கான்.. நீங்க ஒரு வார்த்தை கூட அவன் கிட்ட சரியா பேசல.. அது சரி உங்களுக்கு தான் உங்க மூத்த மகனோட பெயர் என்ன பார்த்துக்கிறதுக்கே நேரம் போதலையே.. நாங்கெல்லாம் உங்களுக்கு முக்கியமா என்ன.. முந்தனையை இழுத்து இடுப்பில் சொருக்கிக்கொண்டனர்...
நீங்க ஏண்டி இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க.. ஸ்கூலுக்கு போயிட்டு வந்தவன் ஸ்கூல்ல நடந்த விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்கான்.. உன் மகனுங்க வந்து என்ன கேட்டான்னு கேளுங்க..
என்னடா கேட்ட..??
நானும் ஸ்கூல்ல சொன்னது தான் மா சொன்னேன்..
என்ன சொன்னான்னு கேளு.. வெற்றிவேலின் பார்வை இருவரையும் உறுத்து விழிக்க..
அப்படி என்னடா கேட்டு தொலைஞ்சீங்க.. பிள்ளைகளிடம் சிடுசிடுத்தனர்..
அதுவா.. வயசான மண்டைய போடுவாங்க ன்னு சொன்னாங்க.. தாத்தாவும் பாட்டிற்கும் வயசு தான் ஆகிடுச்சே.. அதான் எப்போ மண்டைய போடுவீங்கன்னு சும்மா காமெடிக்கு கேட்டோம்.. தாத்தாவும் பாட்டியும் முறைக்க ஆரம்பிச்சிட்டாங்க..
இதை எதிர்பார்க்காமல் அதிர்ந்து இருவரும் ஹிஹிஹி.. என 32 பற்களையும் காட்டியபடி அங்கிருந்து நேகாய் நகர்ந்தனர்..
பிள்ளைகளை கொஞ்சமும் கண்டிக்காம வளக்குறாளுக.. நம்ம கண்டிச்சாலும் அதை ஏத்துக்க மாட்டேங்கிறாங்க.. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ.. செல்லும் பிள்ளைகளே பார்த்தபடி கூறுவார் யமுனா..
நம்ம சொன்னாலும் கோவிச்சுப்பாங்க.. நீ விடு.. பிள்ளையை கண்டிக்காம வளக்குறாங்களாம்.. என்பதோடு நிறுத்திக் கொள்வார் வெற்றிவேல்..
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமமாய் பறக்க.. அசோக் பள்ளி பருவத்தை முடித்து கல்லூரியிலும் சேர்க்கப்பட்டான்..
அவனைத் தொடர்ந்து அடுத்தடுத்ததாய் பள்ளி முடித்த இருவரையும் கல்லூரி செல்ல கூறி தாயவர் இருவரும் கூற.. போம்மா.. எங்களுக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல.. நாங்க இன்ஃப்ளூயன்சர்ஸ் ஆக போறோம்.. என விடாப்படியாய் நின்ற மகன்களை என்ன செய்வது என புரியாமல் பார்த்தனர் பெற்றோர்கள்.
அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. அவன பாரு ஸ்கூல் முடிச்சான். இப்போ காலேஜுக்கும் போய்கிட்டு இருக்கான்.. வருஷ வருஷம் கிட்டத்தட்ட 1.5 லட்சம் அவன் படிப்புக்காகவே உங்க தாத்தாவும் பாட்டியும் செலவு பண்றாங்க.. நீங்க என்னனாலும் வாங்கிட்டு போங்க எதுனாலும் காலேஜ் முடிச்சுட்டு பண்ணுங்க.. அவனுக்கு தங்கள் மகன் எந்த விதத்திலும் ஜோடை போய்விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர் தாய் இருவரும்.
அய்யோ அம்மா.. அதெல்லாம் சுத்த வேஸ்ட்.. நாங்க சொல்ற மாதிரி நாங்க மட்டும் இன்புளுயன்சர்ஸ் ஆகிட்டோம்னா அந்த ஒரு லட்சத்தை நாங்க எங்க கையில வாங்கிருப்போம்.. என கூற அவர்கள் விழிகள் ஆச்சரியமாய் விரிந்தன.
உண்மையாவா டா..
சத்தியமா.. தாயின் தலையில் அடித்தான் துஷ்யந்த்.
தயவு செஞ்சு இதெல்லாம் தூக்கிட்டு எங்க கிட்ட வராதீங்க.. எங்க லைஃப் போக்கே தனி.. என்ற மகன்கள் இருவரையும் கண்ணுக்கு குளிர்ச்சியாக நெற்றி முறித்துக் கொண்டவர்கள் நீ சொல்றதெல்லாம் சரிதான் கண்ணா.. தம் தம் புதல்வர்களின் அருகில் அமர்ந்தனர்..
நீ சொல்ற மாதிரி நிறைய பணம் நீ சம்பாதித்தாலும் யோசிச்சு பாருடா.. உன் தாத்தா அவனுக்கு மட்டும் வருஷத்துக்கு லட்சத்துக்கு மேல செலவு பண்றாரு.. நீங்க மட்டும் என்ன குறைச்சலா.. இல்லன்னு நிரூபிப்பதற்காகனாலும் நீங்க காலேஜ் போகணும்.. படிச்சாலும் சரி.. இல்லனாலும் சரி.. பேருக்காவது போயிட்டு வாங்க.. இந்த தாயன்பை கண்டு புல்லரிக்க தான் வேண்டும்.
புதல்வர்களுக்கும் அதுவே சரியான பட்டது. சிறுவயதிலிருந்து எந்த விஷயத்திற்கு என்றாலும் தாத்தாவும் பாட்டியும் அவனோடு தானே போட்டியிட்டு பேசுகின்றனர்.. அசோக் அதை செய்கிறான் நீங்கள் செய்யவில்லை.. அசோக் அதை பேசுகிறான் நீங்கள் பேசவில்லை.. அப்பப்பா எல்லாத்துக்கும் அவனே உதாரணங்கள்..
அதற்காகவே கல்லூரி செல்ல சம்மதம் தெரிவித்தனர்.. அசோக் அவனுக்கு பிடித்ததாய் தேர்ந்தெடுத்த படிப்பையே அவனுக்கு எந்த விதத்திலும் ஜோடை போய்விடக்கூடாது என்பதற்காகவே எடுத்தனர்.. படிக்கவும் ஆரம்பித்தனர்.. அதாவது அப்படி காட்டிக் கொண்டனர்..
கல்லூரிக்கு வருவதே ராகிங் செய்யத்தான் என்பதைப் போல.. அண்ணன் சீனியர் என்பதால் அசோக் நண்பர்களோடு சேர்ந்து இவர்கள் தம் தோழர்களை ரேக்கிங் செய்வர்.. இதெல்லாம் தப்பு டா.. அவங்களும் நம்மள மாதிரி படிக்க தானே வராங்க.. நீங்களும் படிங்க.. அவங்களையும் படிக்க விடுங்க.. என அவ்வப்போது கண்டிக்கும் அசோக்கை ஏதோ கிள்ளு கீரை போல் பார்த்து விட்டு செல்வர்...
செல்லம்போக்கில் பூமர் டா.. என அவர்கள் கூறுவது அசோக்கிற்கும் நன்றாகவே கேட்கும்..
ஒரே பெருமூச்சோடு அவர்களை கடந்து விடுவான்.. இப்படியே நாட்கள் கடக்க தனக்கு பிடித்த படிப்பை முடித்துவிட்டு தாத்தாவிடம் வந்து நின்றான் அசோக்.
நானும் உங்க கூட கம்பெனிக்கு வரேன் தாத்தா.. என்ற பேரனை புதிதாக பார்த்தவர் இன்னும் கூட இன்னொரு டிகிரி பண்ணலாமேடா.. வயோதிகத்தில் தழும்பிய குரலோடு கேட்டார்.
கண்டிப்பா பண்ண தான் போறேன்.. ஆனா இவ்வளவு நாள் என்ன கண்ணும் கருத்துமா பார்த்து வளர்த்த உங்களுக்கு துணையா கம்பெனில வேலை பார்த்துக்கிட்டே பண்ண போறேன்.. அவன் கூறியதை பெரியவர்கள் இருவரின் மனமும் நிறைந்து போனது.
அவன் ஆசைப்படியே அலுவலகத்திற்குள்ளும் நுழைந்தான் அசோக்.. பெரியவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை..மூத்த மகன் இறந்த காலத்தில் பொறுப்பை சுமக்க முடியாது.. தூக்கியே கொடுத்தாலும் வாங்காத மகனும் மருமகனும் இருக்க.. பேரன் தானே இந்த வயதில் முன் வந்து கேட்டு எடுத்து நடத்துவதில் அலாதி மகிழ்ச்சி அவருக்கு..
பகல் நேரத்தில் அலுவலகத்திலும் அதே போல் சொன்னபடி எம்பிஏவும் படித்தான் அஷோக்.. எழுத்து வழியாய் கற்கும் பாடங்களை அனுபவமாய் தான் செய்து கொண்டிருக்கும் வேலைக்குள் நுழைத்தான்... புதிய புதிய யோசனைகளை செயல்படுத்தினான்.. மகன் நாடு முழுவதும் ஏற்படுத்திய கிளைகளை பார்க்க முடியாது ஆங்காங்கு மேனேஜர் போட்டு ஒரே இடத்தில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த வெற்றிவேலை தாண்டி தானே அனைத்து இடங்களுக்கும் பயணித்தான்.. அங்கிருக்கும் தவறு சரிகளை ஆராய்ந்தான்.. தவறை திருத்தினான்.. சரியை மேம்படுத்தினான்...
சில காலங்களிலேயே கொஞ்சம் கொஞ்சம் நஷ்டத்தில் சரிந்து கொண்டு இருந்த கம்பெனியை தூக்கி நிறுத்தி இருந்தான்.. வீட்டில் பெரியவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.
அதற்குள் படித்து முடித்து இன்சுலூயன்சர்ஸ்சாகப் போகிறேன் என சுற்றிய பேரன்களை பார்த்து.. இப்படி சும்மா எந்த கருத்தும் இல்லாம ஆடி பாடி வீடியோ போடுறதுக்கு நீங்களும் அசோக் மாதிரி போய் நம்ம கம்பெனியை பார்த்துக்கலாமே.. பாவம் எல்லாம் எடுத்துக்கும் அவனை தனியா போய்கிட்டு இருக்கான்.. பெரியவர்கள் இருவரும் கேட்டது பெரும் குற்றமாகி போனது.
உங்களுக்கு எங்க பிள்ளைகள் வளர்றது புடிக்கல.. அதனாலதான் இப்படி எல்லாம் பேசுறீங்க.. என்ன இருந்தாலும் உங்களுக்கு உங்க மூத்த மகனோட பையன் தானே முக்கியம்.. தாய் இருவரும் கண்ணீர் சிந்த கண்டு ஏற்கனவே இருந்த வெறுப்பு பேரன்களுக்கு இன்னும் அதிகமாய் மூண்டது.
எங்களுக்கு இதுதான் பிடிச்சிருக்கு.. நாங்க இது தான் பண்ண போறோம்.. உங்களுக்கு பிடிச்சிருந்தா பாருங்க.. புடிக்கலைன்னா கண்ண மூடி கோங்க.. எடுத்தறிந்து பேசிவிட்டு செல்லும் பேரன்களை என்ன செய்வது என தெரியாமல் பார்த்து அமர்ந்திருந்தனர் இருவரும்..
ஒரு பக்கம் ரீல் செய்கிறேன் நடனம் ஆடுகிறேன் பாட்டு பாடுகிறேன் பேர்வழி.. என ஒரு பக்கம் அவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருக்க.. மறுப்பக்கமோ தங்கள் தொழிலை இன்னும் என்னெல்லாம் செய்து மேம்படுத்துவது.. இன்னும் என்ன கம்பெனிகளை ஆரம்பிக்கலாம்.. என தீவிரமாய் ஆய்ந்து கொண்டு இருந்தான் அஷோக்..
காரின் பயன்பாட்டு பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் அவர்களது!! உள்நாடுகளுக்குள் தங்கள் பொருள்கள் எவ்வளவு பிரசித்தமோ.. அதேபோல் இங்கிருந்து இன்னும் நிறைய நாடுகளுக்கு ஏற்றுமதியும் இறக்குமதியும் நடக்கிறது..
நிறைய நாடுகளுக்கும் பறந்தான் அசோக்.. அங்கும் தங்கள் கிளை நிறுவனங்களை நிறுவினான்.. நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை முக்கிய பொறுப்பில் அமர்த்தினான்.. வேலையின் ஓட்டம் சூடு பிடித்தது..
அப்போதுதான் ஒன்றை கவனித்தான்.. இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு நிறைய செலவாகிறது.. அதுவும் அதிகமாக போக்குவரத்திற்கு தான்.. இதற்கு என்ன செய்வது என தீவிரமாய் யோசித்து கடைசியில் தாத்தாவின் முன் வந்து நின்றான்.
மனைவி கொடுத்த டீயை குடித்த படி வயோதிகத்தின் காரணமாய் அணிந்திருந்த மூக்கு கண்ணாடியை தூக்கிவிட்ட படி செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தவர் அவன் குரலில் நிமிர்ந்தார்.
தாத்தா.. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..
அவனை கண்டதும் மலர்ந்து விழிகளோடு நிமிர்ந்தவர் சொல்லுப்பா.. என்றதும் அவர் எதிராய் அமர்ந்தான்..
நம்மை ஏன் ஒரு விமானம் கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது?? அவன் கேள்வியில் ஆச்சரியமாய் பார்த்தார்.
என்ன திடீர்னு??
ஆமா தாத்தா.. நம்ம கம்பெனியில் இருந்து நிறைய பொருட்கள் உலகம் பூரா டிராவல் ஆகுது.. அதுக்காக டிராவல் சார்ஜை வருஷத்துக்கு பலகோடி தாண்டுது.. இதே இது நம்மளே ஒரு பிளைட் கம்பெனி ஆரம்பிச்சிட்டா.. அதே அளவு பணத்துக்கு நிறைய சரக்குகளை பரிமாறவும் செய்யலாம்.. மக்களுக்கும் பயன்படுகிற மாதிரி கொண்டு போகலாம்.. என்றவனை இடுங்கி ponaபுருவங்களோடு பார்த்தார்.
ஆனா அது ஒன்னும் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லையே சத்ரியா.. அரசாங்க அனுமதியோட எல்லாத்தையும் செய்ய ரொம்ப கால அவகாசம் எடுக்குமே..
அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. நீங்க சம்மதம் மட்டும் சொல்லுங்க.. என்றவனிடம் இதை எப்படியாவது முடித்திடுவேன் என்ற நம்பிக்கை உறுதியை கண்டவர் தலையசைத்தார்..
என் செல்ல தாத்தா.. அமர்ந்த நிலையில் அவரை அப்படியே கட்டி அணைத்து விட்டு ஓடியவன் இன்னும் சிறு குழந்தையாகவே தெரிந்தான் அவர் கண்களுக்கு.
தாத்தாவிடம் சொன்னது போலவே பெரிய விமானம் கம்பெனியை ஆரம்பித்தான்.. அதற்கு யார் யாரிடம் என்னென்ன எப்படி பேச வேண்டும் என்பதிலிருந்து எவ்வளவு பணம் செலவாகும் என்பது வரை தத்ரூபமாய் வியூகம் அமைத்து ஒவ்வொன்றையும் சிறப்பாக செயலாற்றினான்.. வேலையில் இன்னிளவும் எங்கும் நகர முடியவில்லை.. தாத்தா பாட்டியை பார்க்க வேண்டும் என்பதை விட விமான கம்பெனியை தாத்தாவிடம் கூறியது போல் முடித்து விட வேண்டும் என்ற உத்வேகம் அதிகம் இருந்தது அவனிடம்.. சொன்னது போல் அடுத்த ஒன்றரை வருடத்தில் தங்கள் கம்பெனி.. அவன் உயிர்.. சக்ரினா.. அவன் விமானம்.. அதை வானம் ஏற்றினான்.
அந்த நொடி அவன் வாழ்வில் பொக்கிஷமானது.. டிவியில் எந்த நியூஸ் சேனலை திறந்தாலும் அவன் சாதனையே அன்று முழுவதும் பிரபலமாய் பேசப்பட்டது... அவன் வாழ்க்கை வரலாறுகள் ஓர் இரு வரிகளாய் பகிர்ந்து கொள்ள பட்டன.. கடைசியாய் அவன் சாதனை.. ஆனால் அதோடு சரி.. அவனைப் பற்றிய எந்த செய்திகளும் வெளிவரவில்லை.. ஏதோ காரணமாய் அவன் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாய் google மட்டும் காட்டியது.. ஆனால் அவன் ஆரம்பித்து வைத்த சக்ரினா இன்றைய நாள் அளவும் பிரபலமாய் இயங்கிக் கொண்டிருக்கிறது..
மிதா முடித்த வார்த்தைகளில் கண்கள் குளம் கட்ட அப்படியே நின்று இருந்தாள் ஜான்வி.. எப்பேர்பட்ட பெரிய வசதி படைத்தவன்.. இவ்வளவு கஷ்டம் பட்டியிருந்தாலும்.. எவ்வளவு பெரிய சாதனைகளை இந்த சிறு வயதில் செய்திருக்கிறான்.?? விழப்போன கம்பெனியை தூக்கி பிடித்து நிறுத்தி அதை வெற்றிகரமாக நடத்தி புதிதாக ஒரு கம்பெனியை தொடங்கி அதை இன்றைய நாள் வளமும் பராமரிக்கிறான் என்றால்?? அவன் அறிவு... கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டது அல்லவா..
அறிவு மட்டும் தானா?? அவன் குணம்?? கேள்வி எழுப்பியது மனது..
இன்றைய நாள் வரையிலும் கூட ஒரு வார்த்தை தவறாக பேசியது கிடையாதே.. நடந்து கொண்டது கிடையாதே.. இத்தனை நாள் வரையிலும் ஒரே வீட்டில் ஒன்றாக சேர்ந்து இருந்த பொழுதுகளிலும் ஒரு நாள் தவறான பார்வையோடு தன்னை தீண்டி இருப்பானா?? அவனுக்கு பரிந்து கொண்டு கேள்வி கேட்ட மனசாட்சிகளை அடுத்த நிமிடம் உள்ளே அமுக்கினாள்..
உனக்கு எப்படி அவனை பத்தி இத்தனை விஷயம் தெரிஞ்சுது.. கேட்கும் போதே இதப்பிதனை நாள் உடன் இருந்தும் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டதே என்ற எண்ணத்தில் ஸ்ருதி இறங்கியது..
இங்க வந்ததுல இருந்தே அவர் நடந்து கொள்வதெல்லாம் பார்த்து எனக்கு கொஞ்சம் சந்தேகமா தான் இருந்தது.. எதுக்கும் அட்ஜஸ்ட் பண்ணி போற அவர் குணம்.. உன்னையும் பாப்பாவையும் பார்த்துகிட்ட விதம்.. எல்லாமே ஜென்யூனா இருந்தது.. அதுலயும் அன்னைக்கு அவர் கிட்ட போன் கொடுத்துட்டுவான்னு சொன்னப்போ டாக்டர் கிட்ட ஏதோ சீரியஸா பேசிக்கிட்டு நின்னாரு.. என்ன பேசுறாங்கன்னு பக்கத்துல போறதுக்குள்ள டாக்டர் போயிட்டாங்க.. ஆனா என்ன அங்க எதிர்பார்க்காம ஒரு செகண்ட் அவர் அதிர்ச்சியாகி நின்னாரு.. அப்போதான் என் சந்தேகம் உறுதியானது..
பாப்பாவுக்கு அடிபட்டதுல அடுத்த நாள் நீங்க ஹாஸ்பிடல்ல இருந்தப்போ.. வீட்டில ஏதாவது துப்பு கிடைக்குதான்னு தேடிப்பார்த்தே.. ன் அப்போதான் இந்த லேப்டாப் துணிகளுக்கு அடியில தெரிஞ்சது..
எடுத்து ஓபன் பண்ணா ஆன் ஆகல.. பாஸ்வோர்ட் நோட்ல மை லைப்னு வந்தது..
இப்போ அவர் லைப் ஆயிருக்கிறது நீயும் பாப்பாவும் தானே.. பாப்பா பெயரை போட்டு பார்த்தேன்.. எடுக்கல.
அடுத்து உன் பேரு.. அப்பவும் எடுக்கல.. அவள் கூறும்போது ஜான்வியின் கண்கள் அவளை முறைத்தன.
கடைசியா உன் பேரோட கீழ இருந்த மை லைப்பயும் சேர்த்து ட்ரை பண்ணேன்.. ஓப்பன் ஆகிடுச்சு..
ஆனா ஒரு விஷயம்.. இவ்வளவு பெரிய பணக்காரர் எதுக்காக தன்னை தானே மறைச்சுகிட்டு.. உன் கூட எத்தனை நாள் சேர்ந்து இருக்கணும்.. யோசிச்சு பாத்தியா..
அவர் இத்தனை சீக்ரெட்ஸ் வச்சிருக்கிற இந்த லேப்டாப்புக்கு உன் பேரோட இந்த வார்த்தைகளோ சேர்த்து பாஸ்வேர்டாக வைத்திருக்கும் போதே தெரியலையா அவரு உன் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கார்ன்னு?? இதுக்கு பேரும் லஸ்ட்னு தான் சொல்ல போறியா.. தீர்க்கமான அவள் கேள்வியில்..
ம்ம்ம்ஹ்ம்ம்.. நீ இப்படி சொல்ற... ஆனா எனக்கு என்ன தோணுது தெரியுமா.. வந்த ஒரு வாரத்துல நீ அவன பத்தி இவ்வளவு தூரம் தெரிஞ்சுகிட்ட. ஆனா நான்.. என்ன பாரு... கிட்டத்தட்ட நாலு வருஷம் அவன் என் கூடவே இருந்தும் எனக்கு அவன பத்தி எதுவுமே தெரியல.. அம்மா அப்பா இல்ல.. சின்ன வயசிலேயே தவறிட்டாங்க நண்பர்கள் கூட தான் இருந்தேன்னு அவன் சொன்னத அவ்வளவு ஆணித்தரமா நம்பி முட்டாளா இவ்வளவு நாள் இருந்திருக்கேன்.. என்னை இந்த விஷயத்திலையும் கூட ஏமாத்தி இருக்கான் அவன்.. சாரி அவர்!! அவள் பேச்சில் கோபம்தான் வந்ததும் மிதாவிற்கு.
இதுல என்னடி முட்டாள் தனம்.. அவர் என்ன உன்னை ஏமாற்றி இருக்கார்.. அவர் மேல வச்ச நம்பிக்கையில எல்லாத்தையும் நம்பினே.. அது முட்டாள்தனமும் கிடையாது.. அது மாதிரி அவர் உன்னை ஏமாத்தவும் கிடையாது.. யோசிச்சு பாரு அவர் சொன்னது போலவே அவருக்கு அம்மா அப்பா கிடையாது தானே.. தாத்தா பாட்டி கூட வளந்ததை மாத்தி நண்பர்கள் கூடன்னு சொல்லி இருக்காரு.. அவ்வளவு தான்.. எல்லா பழியும் அவர் மேலயே மாதிரி சொல்லாத..
பழி.. ஹ்ம்ம்.. என் இடத்துல இருந்தா என் உணர்வுகள் உனக்கு புரிய கொஞ்சமாவது வாய்ப்பிருக்கு.. விடு.. வறண்ட குரலோடு கூறி வந்து சோபாவில் தலை சாய்த்து அமர்ந்து விட்டாள் ஜானு.
கருத்துகள்
கருத்துரையிடுக