முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 59

 நாட்கள் அதன் போக்கில் கடக்க இதோ ஒரு மாதம் முடிந்திருந்த நிலையில் பிள்ளையும் நன்றாகவே தேறி இருந்தாள்.. கட்டையும் பிரித்தாயிற்று..  அப்பா எங்கே அவனைப் பார்க்க வேண்டும் என ஆரம்ப காலகட்டங்களில் அடாவடியாய் அடம்பிடித்தவளை ஒருநாள் சமாதானப்படுத்துகிறேன் என மிதா தனியே அழைத்துச் சென்று என்ன கூறினாளோ அதிலிருந்து அசோக்கை பற்றி கேட்பதையே மொத்தமாய் நிறுத்தி விட்டிருந்தாள் கிருத்தி. அதேசமயம் மிதாவுடனும் நன்றாய் ஒட்டிப் போனாள்.




அப்படி என்ன கூறினாள் என கேள்வி எழுந்தாலும் எப்படியோ அவனைப் பற்றி கேட்காது குழந்தை உண்பதிலும்.. அடம் பிடிக்காமல் பள்ளிக்கு கிளம்புவதிலும் ஜான்விக்கு பெருத்த நிம்மதி..



மிதாவும் கூட அன்றைய நாளுக்கு பின் அவனைப் பற்றி எதுவுமே பேசி இருக்கவில்லை.. அவனைப் பற்றி அத்தனை உண்மைகளை தேடி கண்டுபிடித்து கூறியவள் அதற்குப்பின் ஒரு வார்த்தை கூட அவனைப் பற்றி யோசி என கூட கூறாமல் இருக்கிறாளே.. அப்போது ஜான்வியின் விழிகள் தான் மிதாவின் மீது பட்டு மீளும்..



அவ அப்படி கேக்கணும்னு விரும்புறேன்னா.. எழும் கேள்வியில் நிச்சயமாக இல்லை.. ஆணித்தனமாய் பதில் கூறி உள்ளேயே அடக்கிக் கொள்வாள்..



இப்போதெல்லாம் அலுவலகத்திலும் கூட ஆரியனின் பிரச்சனை எதுவும் இல்லை..  சொல்லப்போனால் அவன் தன்னைப் பார்த்தால் பத்தடி தூரம் தள்ளி செல்கிறான்.. எப்படி இத்தனை பெரிய மாற்றம்.. வா.. அவனை விட்டு என்னோடு வந்துவிடு.. வா.. என ஓயாமல் தொல்லை செய்து கொண்டிருந்தவன் சமீப காலங்களாக அவள் பக்கத்தில் கூட வராமல் தள்ளி செல்வதில் திவி தான் ஆச்சரியமாய் பார்த்தாள்.




என்னடி உன் பிரண்டோட அண்ணன் எப்பவும் வலிய வந்து வள்ளுன்னு விழுறவரு இப்போ அநியாயத்துக்கு இப்படி ஒதுங்கி போறாரு??



பதில் இவளுக்கு மட்டும் தெரியுமா என்ன.. ஒரு தோள் குலுக்கலோடு லேப்டாப்பில் தலையை விட்டுக் கொண்டாலும்.. மாமா.. உரிமையோடு அழைத்தபடி ஹீல்ஸ் போட்ட காலை ஒரு வழியாய் சமாளித்தபடி பின்னயே ஓடும் ரூபாவின் குரலில் ஒரு கணம்மாவது அவள் தலை நிமிரத்தான் செய்யும்..



ஓடி செல்பவள் அவன் கரத்தோடு கரமாய் கோர்த்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்தபடி தலையை மட்டும் பின்னே திருப்பி ஜானு முகத்தை கண்டு ஒரு கர்வ பார்வையோடு அவனோடு அறைக்குள் சென்று விடுவாள்..




ஹ்ம்ம்.. ஒரு பெருமூச்சோடு வேலைக்குள் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவாள் ஜானு.. இதையெல்லாம் பெரிதாய் எடுத்து அழுத்திக் கொள்ளும் நிலையில் இல்லை அவள்..




சொல்லப்போனால் அவள் நினைத்தது போல அனைத்து பக்கத்தில் இருந்தும் நிம்மதியாக தான் இருந்தாள்.. இவ்வளவு நாளாய் என்னுடன் வந்திடு..வந்துவிடு..  என உரிமையாளன் போல் கேட்டுக் கொண்டிருந்தவன் ஏதோ காரணத்திற்காக விலகி செல்கிறான்.. குழந்தை அவனைக் கேட்டு அடம் பிடிப்பதில்லை.. நண்பன் என நம்பி காதலிப்பதாய் மோசம் செய்த அவனும் தன்னுடன் இல்லை.. அதோடு துணைக்கும் மிதா இருக்கிறாள்.. 




ஸ்காலர்ஷிப் முடிந்து இருந்தாலும்.. அங்கு ஊருக்கு போகவே பிடிக்கல உன் கூடவே இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போறேன் என தோழிக்கு ஒத்தாசையாக கூடவே தான் இருக்கிறாள் மிதா.




அவள் இருப்பதே பெருந்துணை என்பது போல் இது எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என தெரியா விடினும் இப்போதைக்கு சற்று நிம்மதியாக தான் இருந்தாள் ஜானு..



ஆக மொத்தம்.. அவள் நினைத்தது போல் அவள் மகளுக்காக மட்டுமே அவள் வாழ்க்கை!!




மாலை அலுவலகம் முடித்து செருப்பை கழட்டி விட்டபடி வீட்டிற்குள் நுழைந்தவளிடம்.. அடியே.. ஹாலிலேயே நிறுத்தினாள் மிதா.



இன்னைக்கு சிலர் வந்திருந்தாங்க..யாரோ அசோக்கிற்கு தெரிஞ்சவங்கலாம்... அவன் பொருள் எல்லாம் எடுத்துட்டு போறேன்னு சொன்னாங்க.. 



நானும் கை காட்டினேன்..  எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டாங்க.. அவள் கூறிய அடுத்த நொடி பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி சென்று அவன் காலியான செல்ஃபின் முன் நின்ற அவளின் கண்கள் எதிர் சுவற்றை வெறித்தது..


ஜா.. ஜானு என்னாச்சு.. பதறி அடித்து பின்னையே ஓடிவந்து அவள் கேட்க.. ம்ம்ஹும் ஒண்ணுமில்ல.. அடுத்த நொடி தலையை தொங்க போட்டு திரும்பினாள்..





அன்று வார இறுதி விடுமுறை.. 




அரக்கப் பரக்க எப்போதும் 5:00 மணிக்கு எல்லாம் எழுந்து சமையல்களை முடித்து வேலைக்கு கிளம்பி ஓடுபவள் என்று அக்கடா.. என கண்விழித்ததே எட்டு மணிக்கு மேல்தான்..




எப்போதும் இதேபோல் மாத முதல் வார விடுமுறை என்றால் அவனோடு கடைக்கு செல்வது விழித்ததும் கண் முன் தோன்ற.. ப்ச்.. பழக்கவழக்கத்தில் அவன் ஞாபகம் வருது போல தலையை உலுக்கி விட்டபடி எழுந்து முகம் கழுவி வெளிவந்தாள்.. அடுத்தடுத்ததாய் குழந்தை மிதா என ஒவ்வொருவராய் எழுந்து வர அனைவருக்கும் மொத்தமாய் காபி போட்டு குடித்தனர்.





அக்கா.. வெளியில் இருந்து கேட்ட சத்தத்தில் முன்னே அமர்ந்திருந்த மிதா தலையை மட்டும் எட்டிப் பார்த்தாள்.. வாய் எல்லாம் பல்லாக நின்றவள் பூவிதா.



பூவி.. வா.. வா..  உரிமைப்பட்டவள் போல் கை மடக்கி அவள் அழைத்ததில் வேகமாய் துள்ளி உள்ளே ஓடி வந்தாள் பூவிதா.



ஆச்சரியமாய் பார்த்தாள் ஜானு.. உனக்கு பூவிய தெரியுமா.. ரொம்ப பழக்கமான மாதிரி பேசுறியே.. கேட்க ஜானுமின் அருகில் இடம் இருந்தாலும் மிதாவை இடித்துக் கொண்டு அமர்ந்தாள் பூவி.



ஆமாக்கா.. அவங்களுக்கும் என்ன தெரியும்

. எனக்கும் அவங்களை தெரியும்.. பூவி தலையாட்டி கூறியதில் ஒன்றும் புரியாமல் ஜானு பார்க்க.. ஏண்டி.. என்ன அப்படி பாக்குற.. ஒரு வாரம் வீட்டில் தனியா விட்டுட்டு நீ தான் ஹாஸ்பிடல் போயிட்டியே.. அப்ப வீட்டில காய்கறி தீர்ந்து போயிடுச்சு.. ஆன்லைன்ல போடலாம்னு பார்த்தா அது எதுவும் சரியா தெரியல.. அதான் இவ அம்மாகிட்ட பக்கத்துல கடை எங்க இருக்குன்னு கேட்கலாம்னு போனேன்.. பார்த்தா இந்த வாலு என் கூட ஒட்டிக்கிட்டா.. அவளே என்கூட கடைக்கு வந்தா..  அவ நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போய் தான் எல்லா பொருளும் வாங்கிட்டு வந்தோம்..  கூறியதில் ஓஹோ.. ஜான்வியின் இதழ்களும் சிறிதாய் மலர்ந்தன..





அப்புறம் வாலு என்ன காலையிலேயே இந்த பக்கம் தரிசனம் கொடுத்திருக்க..  உன் வினோத் எப்படி விட்டாராம்..  அவள் கேலி கேள்வியில் போக்கா.. தன் பெயர் போலவே பூவாய் சிவந்து அவள் தோளில் தட்டினாள் பூவி.




சரி சரி வெட்கப்படாம விஷயத்தை சொல்லு.. அவளையா ஆர்வமாய் பார்த்தபடி இருவரும் கேட்க..



அது.. என்ன இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க..  அவர் வீட்டில் இருந்து!!



பார்ரா.. இவ்வளவு நாள் அவனா இருந்தவர் இப்போ அவர் ஆகிட்டாரா..



அக்கா.. சினுங்கினாள்..



சரி சரி.  எத்தனை மணிக்கு வர்றாங்க..



ஈவினிங் 3:30-க்கு.. நீங்க ரெண்டு பேரும் பாப்பாவ கூட்டிட்டு கண்டிப்பா வந்துடனும்.. என் எல்லா ஃபங்ஷன்லயும் நீங்க எல்லாரும் இருக்கணும்.. ஆமா ஜானுக்கா கேக்கணும்னு நினைச்சேன்.. இந்த சில நாளா உன் வீட்டுக்காரர் என் கண்ணிலையே படலையே.. மனுஷன் இருக்காரா..இல்ல ஊருக்கு எங்கேயும் போயிட்டாரா.. அவள் கேட்டதில்.




ஹக் என விரிந்த விழிகளோடு நிமிர்ந்து பார்த்தாள்..  அவன் சென்று விட்டது இது வரை வெளியே யாருக்கும் தெரியாது.. சொல்லவும் இல்லையே..



அவள் அதிர்ச்சியை கண்டு கொள்ளாதவளாய் சரிக்கா..  ஆனா இன்னைக்கு ஈவினிங் அவர் எங்கேயும் போகக்கூடாதுன்னு சொல்லிடு.. இன்னைக்கு இந்த பங்க்ஷன் எல்லாம் நடக்குதுன்னா அதுக்கு முழு காரணமும் அவர்தான்.. என்னதான் சிடு மூஞ்சிய இருந்தாலும் அந்த நேரத்துக்கு அவர் கொடுத்த அட்வைஸ்சால என் லைஃபே மாறப்போகுது..  அதுக்காகனாலும் கண்டிப்பா அவர் வரணும்.. நான் சொன்னேன்னு சொல்லிடு.. இல்லன்னா போன் நம்பர் குடு..  நானே பேசிக்கிறேன்.. அவள் பேசப்பேச என்ன அசோக் காரணமா.. என்பது போல் மிதா ஜான்வியை பார்த்த பார்வையில் சொல்றேன் என்பது போல் கண்களை மூடி திறந்தவள்




கடைசியாய் அவளே அவனுக்கு அழைத்துக் கூறுவதாய் கூறியதில் இல்ல வேண்டாம் உடனடியாய் மறுத்தாள்..



நானே சொல்லி கூட்டிட்டு வரேன்.. தலையை ஒரு மாதிரியாய் உருட்டினாள்.. அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் எங்கே இருந்தாள் பூவி..



ஓகேக்கா.. இன்னும் பக்கத்துல எல்லாருக்கும் சொல்லணும் நான் போயிட்டு வரேன்..  துள்ளி குதித்து ஓடி விட்டாள்.




அப்பா.. அஞ்சு நிமிஷத்துல மழை பெஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு.. காதை குடைந்த படி மிதா கூற.. ஜான்வின் முகமோ பழுதடைந்து தெரிந்தது.



என்னாச்சுடி.. திடீர்னு ஏன் உன் முகம் ஒரு மாதிரி ஆகிடுச்சு.




அவ சொன்னத தான் கேட்டல்ல.. அவன் தான் இங்க இல்லையே.. நான் எப்படி அவனை கூட்டிட்டு வர முடியும்.. கேட்கும்போதே அவள் குரல் கீழ் இறங்கியது.




அதனால என்ன.. சமாளிச்சுக்கலாம் விடு.. பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் கூறினாள் மிதா.




அப்படியெல்லாம் விட முடியாதுடி.. அவ அசோக்க ரொம்பவே எதிர்பார்ப்பா..  என்றவள் அவள் திருமண விஷயத்தில் அன்று அவள் பேசியதோடு அசோக் கூறிய விஷயத்தை தொடர்ந்து நடந்தவைகளையும் கூறி முடிக்க பரவாயில்லையே..  மெச்சுதலாய் மிதாவின் புருவங்கள் சுழிந்தன..  அடுத்த நிமிடமே முகத்தை மாற்றிக் கொண்டாள்.



யார் யாருக்கு என்னென்ன அமையனும்னு கடவுள் விட்ட வழி.. நம்ம சொல்றதுக்கு என்ன இருக்கு.. 




என்ன சொல்லலையே நீ.. கூர் பார்வையோடு கேட்ட தோழியிடம்.. கண்டிப்பா இல்ல.. தலையை அழுத்தமாய் அசைத்து எழுந்து சென்று விட்டாள்.




பூவியை எப்படி சமாளிப்பது என யோசித்தபடியே ஃபங்ஷனுக்கும் கிளம்பி இருந்தனர் கிருத்தியோடு சேர்த்து மூவருமாய்..




அழகு குட்டி பொம்மையாய் பட்டு பாவாடை சட்டையில் வலம் வந்த மருமகளை நெஞ்சோடு அனைத்து நெற்றியில் முத்தமிட்டாள் மிதா.. ரொம்ப க்யூட்டா இருக்க.. அப்படியே என்ன மாதிரி.. கூறியவளை ஜானு புரியாமல் பார்க்க.. அடுத்த நிமிடம் அவள் கூறியதன் அர்த்தம் புரிந்தது.



ஆனால் உன் தகப்பனை போல் என கூறாமல் என்னை போல் என ஏன் கூற வேண்டும்?? யோசனையும் சேர்ந்தே எழ.. அதோடு பக்கத்து வீட்டிற்குள் சென்றனர்..



உள்ளே அடர் சிவப்பு நிற புடவை கட்டி அதற்கு பொருத்தமாய் காதுகளிலும் கழுத்திலும் மெல்லிய அணிகலன்கள் முத்தமிட  இரு கைகளையும் இறுக்கமாய் பிசைந்து கொண்டு அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்தபடி நின்றாள் பூவி.




குழந்தையை தரையிறங்கவே விடமாட்டேன் என இடுப்பில் ஏற்றி வந்த மிதா அவளையும் தாண்டி உள்ளே எங்கோ போக.. எதுவும் பேசாமல் உள்ளே செல்கிறாளே என்பது போல் விழித்த பூவி அக்கா என நிறுத்த..  சத்தம் மட்டும் வருது ஆள காணும்.. என சுற்றி பார்த்தவளை முதுகில் அடி போட்டாள் ஜானு..



ஏண்டி..



இல்ல.. நம்ம பூவிக்கு தான இன்னைக்கு பொண்ணு பாக்க வர்றாங்க.. ஆனால் அந்த வாலு பூவிய காணோமே இங்க..



அக்கா.. சிணுங்கியவளின் குரலில் அவள் முகத்தருகே கூர்ந்து தலை தாழ்த்தி மேல் ஏற்றி பக்கம் இருந்து என நாலு பக்கங்களிலும் சுற்றி பார்த்தபடி..  நீ தான் பூவியா.. என முட்டையாய் கண் விழிக்க.. ஏன்க்கா.. நான் இருக்கிற படபடப்பு புரியாமல் நீ வேற.. அவள் குரலிலும் கூட பதட்டம்.



இல்ல.. எப்பவும் சட்டையும் பேண்டுமா தானே சுத்திக்கிட்டு இருப்ப.. இப்போ திடீர்னு புடவை கட்டி இவ்வளவு அடக்கமா பூவு பொட்டு எல்லாம் வச்சிருக்கியா..  அதான் அடையாளம் தெரியல..  என்றபடி கண்களை தேய்த்து விட்டுக் கொண்டவள் ஆமாம்மா உண்மையாவே நீ பூவிதான் என்றால் தலையே ஒரு மார்க்கமாய் உருட்டி..



யக்காவ்.. போக்கா.. 



சரி டி.. சரி.. சரி கோவிச்சுக்காத.. இந்த புடவையில் நீ ரொம்ப அழகா இருக்க.. இன்னைக்கு மட்டும் உன் வினோத் உன்ன பார்த்தாரு அப்படியே மயங்கி விழ போறாரு... அவள் கூறும்போது வெட்கத்தில் அவள் கண்களில் மின்னல் வெட்டியது.



இவ்வளவு நேரம் அக்கா அக்கானு கூப்பாடு போட்டவ இப்ப வாயை திறக்கறாளா பாரு.. கண்களை ஏற்றி இறக்கி அவள் தோளைஇடித்தவள்.. ஆமா நீ ஏன் இப்படி பதட்டமா இருக்க.. சேலையை சுற்றிக் கொண்டிருந்த அவள் கரத்தை விலக்கியபடி கேட்டாள் மிதா..




அதானே.. இந்த நேரத்துல எவ்வளவு சந்தோஷமா இருக்கணும்.. நீ என்னன்னா இவ்வளவு பதட்டமா இருக்கியே.. இதனைக்கும் இவ்வளவு நாளா காலேஜ்ல பார்த்து விரும்புனவர் தானே.. ஜானுவும் கேட்டு வைக்க..



அதான்க்கா எனக்கே ஒன்னும் புரிய மாட்டேன்குது..  என்னவோ ஒரு மாதிரி படபடப்பா பதட்டமா இருக்கு.. கைகள் நடுங்கியவளை ஆளுக்கு ஒரு பக்கமாய் பிடித்துக்கொண்டனர்.




இதெல்லாம் சாதாரணம் தான்.. இந்த மொமன்கிட்ட மிஸ் பண்ணிடாத.. ஹாப்பியா என்ஜாய் பண்ணு.. அவள் தோள் தட்டி மீதா கூறியதை கேட்டு தலையை ஒரு மார்க்கமாய் ஆட்டி வைத்தாள் பூவி..




ஆமா.. என்ன நீங்க மட்டும் வந்து இருக்கீங்க..  உன் வீட்டுக்காரர் வரலையா அக்கா..  ஜான்வி பக்கம் திரும்பி அவள் கேட்ட கேள்வியில்... என்ன பதில் சொல்வது எனக்கு புரியாமல் ஜானு விழித்த வேளையில்.. ம்ம்ம்.. ம்ம்.. வருவாரு..  வருவாரு..  இழுத்தாள் மிதா.



சரி..  என்றதோடு அடுத்து வினோத் வீட்டு ஆட்கள் வந்துவிட.. அவர்களோடு அக்கம் பக்கத்து வீட்டினர் தெரிந்தவர்கள் என சிலரும் வந்திருக்க.. அனைவருக்கும் டீ கொடுத்து அதிலும் ஸ்பெஷலா அவனுக்கு ஒரு டம்பலரை எடுத்துக் கொடுக்கும் போது மனதில் எழுந்த சொல்ல முடியாத உணர்வு அவளை ஏனோ சிக்கி சிலிர்க்க வைத்தது..



இவ்வளவு நாளா நேருக்கு நேர் கண்டும் பேசியும் பழகியும் இருந்தாலும் இந்த நிமிடம் உண்மையாகவே மனம் பெட்டகத்தில் பொக்கிஷமான குவியியலாக சேரத்தான் செய்தது..



நா வினோ அக்கா.. என்றபடி இரு குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்த பெண்ணை கண்டதும் அவன் கூறிய விஷயங்கள் எல்லாம் நினைவு வர சட்டென அவள் இதழ்கள் பிரிந்து புன்னகை சிந்தியதும்  எதிரில் இருந்த பெண்ணும் மலர்ந்து சிரித்தாள்.




உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. அவன் அக்காவின் பேச்சை எதிர்பார்க்கவில்லை என்பது போல் அங்கிருந்து அனைவரும் புரியாமல் விழிக்க..



எப்பவும் மாப்பிள்ளை பொண்ணு தானே தனியா பேசணும்னு சொல்லுவாங்க..  இங்க நாத்தனார் ரெண்டு பேரும் என்ன பேச போறீங்க.. வந்திருந்த பெரியவர்கள் சிலர் குரல் கொடுக்க.. பேசணும்னு ஆசைப்பட்டால் பேசிட வேண்டியதுதானே.. என்ன பூவி அம்மா.. நான் சொல்றது சரிதானே.. அருகில் நின்றவரிடம் மிதா  கேட்டு வைத்தவள் இருவரையும் அறைக்குள் அனுப்பினாள்.




நேரா நான் விஷயத்தை வரேன்.. ஆரம்பித்தாள் அவன் அக்கா ரமணி.



சொல்லுங்க.. கொஞ்சமும் புன்னகை மாறாமல் கேட்டாள் பூவி.




என் தம்பி என்ன பத்தி சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன்.. நான்.. என அவள் ஆரம்பித்த வேளையிலேயே இதுவரை அவன் அக்காளை பற்றி கூறிய விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி வைத்தவள் கவலைப்படாதீங்க அக்கா.. வாழ்க்கையில ஏற்றமும் தாழ்வும் எல்லாருக்கும் இருக்கும் தானே.. யாருக்கும் வேணும்னே எதுவும் நடக்கிறது இல்ல.. நடக்கிறது நமக்கு ஏத்தபடி மாத்திப்போம்.. இதுவரைக்கும் உங்களையும் பாப்பாக்களையும் பார்த்துக்க வினோத் மட்டும் இருந்தான்... இனிமேல் அவன் கூட உங்களுக்கு கை கொடுக்க ஒரு தங்கச்சியா எப்பவும் நானும் உங்க கூட இருப்பேன்.. பூவிதாவின் அழுத்தமான வார்த்தைகளில் ரமணியின் முகம் மின்னலாய் பளிச்சிட்டது..



காதல் திருமணம்..  வீட்டுக்கு ஒத்துப் போக மாட்டன்னு..  நிறைய பேர் சொன்னதைக் கேட்டு எங்கே என் தம்பியை என்கிட்ட இருந்து பிரிச்சிடுவியோனு எனக்கு பயம் இருந்துச்சு.. ஆனா இப்போ சொல்றேன்.. என் தம்பிக்கு மனைவின்னா அதை நீ தான்.. இது நீ அவன் கூட கை கொடுப்பேன்னு சொன்னதுக்காக இல்ல..  எப்பவும் எனக்கு தங்கச்சியா இருப்பேன்னு சொன்னதுக்காக.. நெகிழ்ச்சியை கூறிக் கொண்டே வந்தவள் சட்டென முகம் மாறி..



ஆனா நான் உன்னை தங்கச்சியா ஏத்துக்க மாட்டேன்.. என குரல் இறுக கூடியதில் ஒரு கணம் ஒன்றும் புரியாமல் பூவி விழிக்க.. எப்படி முடியும்..  நீ தான் என் தம்பி பொண்டாட்டியாக போறியே.. அப்புறம் எப்படி எனக்கு தங்கச்சியா இருப்ப.. கேட்டது தான் தாமதம்.. அண்ணிஈஈ.. பாய்ந்து அவளைக் கட்டிக் கொண்டாள் பூவி..






தனித்தனியாய் உள்ளே சென்ற நாத்தனார் இருவரும் கைபிடித்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி வெளிவந்ததிலேயே அனைவரின் மனதும் குளிர்ந்து போனது.. எப்படியோ தங்கள் வீட்டில் இருந்தது போல செல்லும் வீட்டிலும் தன் மகள் சகல மரியாதையுடனும் உரிமையுடனும் வாழ்வாள் என்பதே அவளை பெற்றவர்களுக்கு போதுமானதாக இருந்தது.. இரு வீட்டாரின் சம்மதத்தோடு நிச்சய தேதியும்அதற்கு அடுத்ததாய் முகூர்த்த தேதியும் அங்கேயே குறிக்கப்பட்டது.. 




உள்ளே சென்று பேசியதையெல்லாம் அக்கா சொல்ல கேட்டு தெரிந்து கொண்ட வினோத்தின் பார்வை தன்னவளை விட்டு இம்மியும் நகரவில்லை.. குறும்பு பெண் மீது பூத்த காதல் மலர் இப்போது ஆலமர விருட்சமாய் வேரூன்றியது நெஞ்சிற்குள்..






பின் குடும்பங்கள் இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றாய் கலந்து பேச ஆரம்பித்து விட வந்திருந்த அக்கம் பக்கத்து வீட்டினர் சிலர் வெளியேறவும் சிலர் அவர்களோடு அமர்ந்த படி கதை பேசவும் ஆரம்பித்தனர்..




ஜான்வி.. இது உன் தோழியா.. பாக்க பெரிய இடத்து பிள்ளை மாதிரி தெரியுதே.. இரண்டு வீடு தள்ளி இருந்த பாட்டி கேட்க.. ஆமா பாட்டி.. ஊர்ல இருந்து வந்திருக்கா.. என்றதோடு தன் வீட்டிற்கு செல்லப் போனவளை அட இருமா.. நிறுத்தினார் இன்னொருவர்..



என்ன விசேஷத்துக்கு நீ மட்டும் தனியா வந்திருக்க..  உன் வீட்டுக்காரர் வரலையா.. கேள்விக்கணை ஆரம்பித்தது.



இல்ல அவருக்கு வேலை..அதான்.. 



என்ன வேலை..  அக்கம் பக்கத்தில இப்படி நல்லது பொள்ளதுக்கு குடும்பமா சேர்ந்து வந்தா தானே நல்லா இருக்கும். கழுத்து நொடித்துக் கொண்டு ஒருவர் கூற.. ஆமா ஆமா மற்றவர்களும் தலையாட்டினர்.




இப்படி தனியா வந்தா உனக்கும் உன் புருஷனுக்கும் ஏதோ தகராறுன்னுல்ல எங்களுக்கு தோணும்.. அவர்கள் கூறியதை ஜான்வின் முகம் சுருங்கி போக பேச வாய் எடுத்த மிதாவை.. கண்களால் அமைதி படுத்தினாள்.




நியாயமாக எல்லா விசேஷத்திலும் இது போன்ற கேள்விகள் எழத்தான் செய்யும்.. அதை சமாளித்து வருவதே பெரும்பாடு.. அதில் தாங்கள் சொல்ல வருவதை அவர்கள் நம்ப போவதுமில்லை..  அதற்காக அதை அப்படியே விடப்போவதுமில்லை..  தங்களுக்கு ஏற்றபடி கண்காது மூக்கு வைத்து பேசி திரித்து மாப்பிள்ளை செம்பில் தண்ணீர் கேட்டால் கடைசியில் செம்பிருந்தால் தான் மாப்பிள்ளை தாலி கட்டுவார் கதை தான்.. கேட்க வேண்டுமானால் காமெடியாக இருக்கலாம்.. ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும் அதன் வலி.. என்ன உறவினர் வீட்டில் நடப்பது இப்போது உறவு போல் பழகும் அக்கம் பக்கத்திலும் ஆரம்பித்து விட்டது..




ஜானு தடுத்ததில் பேச முடியாமல் மிதா நிற்க.. ஆமா.. ஆமா.. இந்த கொஞ்ச நாளா நானும் இவ வீட்டுக்காரரை பாக்கவே இல்லையே.. இல்லைனா பிள்ளையை தூக்கிட்டு அந்த பக்கம் போறதும் இந்த பக்கமும் வரதுமா இருப்பாரு.. இந்த சில நாளா ஆளையே காணோம்... ஏன்டியம்மா உண்மையிலேயே உனக்கும் உன் வீட்டுக்காரனுக்கும் பிரச்சனை தானா..  நான்கு வீடு தள்ளி எதிரில் இருக்கும் மாமி கேட்டார்.. 




இல்ல..  வேற எதுவும் பொண்ணு சகவாசம்.. அவர்கள் எடுப்பதற்கு அங்கிருந்து வேகமாய் பிள்ளையை தூக்கிக் கொண்டு வந்திருந்தாள் ஜானு.




சிவந்த முகம் அவள் கோபத்தையும் சுய பச்சாதாபத்தையும் காட்டியது.. என்ன எல்லாம் பேச்சு பேசுகிறார்கள்..  ஏன் இந்த உலகில் ஆணி இல்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியாதா..  எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறும் போதே இத்தனை கேள்வி கேட்பவர்கள் ஒருவேளை நடந்ததை மட்டும் தெரியாமல் வாய்விட்டு உளறி விட்டாலும் கடித்து குதறி விடுவார்கள் போலவே.. வேகமாய் வாங்கிய மூச்சோடு நிற்க.. ஜானு.. அவள் பிணையே ஓடிவந்தவளாய் தோளில் கை வைத்தாள் மிதா..




தோழியின் நிலை அவளையும் வருத்தியது.. எல்லாம் சரியாயிடும் டி... கவலைப்படாத.. அவள் வார்த்தைகளில் சற்று ஆசுவாசம் அடைந்து அமர்ந்துவிட்டாள்.




இனி இது போன்ற பேச்சுகளையும் ஏச்சுகளையும் கேட்டு தான் வந்தாக வேண்டும்.. அதற்கு நிறைய உந்து சக்தியும் வேண்டும்.. என மனதிற்குள் உரு போட்டபடியே அமர்ந்திருக்க.. விளையாடிய குழந்தையை தன்னோடு தூக்கிச் சென்று விட்டாள் மிதா.. எவ்வளவு நேரம் அப்படியே கண் மூடி அமர்ந்து இருந்தாளோ.. 




அக்கா.. அக்கா..  வெளியிலிருந்து கேட்ட துள்ளல் குரலில் அவள் இமை பிரிந்தன.. வாயெல்லாம் பல்லாக வினோதின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் பூவி..



அனைவரும் அங்கிருக்க இவள் என்ன செய்கிறாள் இங்கே.. வேகமாய் வந்தாள் ஜானு..



வா பூவி.. உள்ள வா.. அவள் அழைக்கும் போதே பாய்ந்து அவளை இறுக கட்டிக் கொண்டாள் பூவி..



தேங்க்ஸ் தேங்க்ஸ் அக்கா..  நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.. இத்தனைக்கும் நீ என்னோட சொந்த அக்கா கூட கிடையாது..  ஆனால் என்னுடைய இந்த ஃபங்ஷனை நீ ரொம்ப ஸ்பெஷலா ஆக்கிட்ட..  அவள் கட்டிக் கொண்டு துள்ளியதில்.. ஒன்றும் புரியாமல் ஜானு விழிக்க.. வாகாய் விலகியவள் அவள் எதிராய் நின்றாள்.



சூப்பரா இருக்கு.. என்ற படி வலது கரத்தில் அணிந்திருந்த மோதிரத்தை கை நீட்டியபடி காட்ட.. அதில் அவளுக்கு ஒன்றும் வினோத்திற்கு  ஒன்றுமாய் இருவரும் அணிந்து நின்ற ஜோடி புறாக்களின் மோதிரத்தை வித்தியாசமாய் அவள் பார்க்க.. தேங்க்ஸ் அக்கா..  இந்த மாதிரி ஒரு கிப்ட் நான் எதிர்பார்க்கவே இல்ல.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. எனக்கு அவ்வளவு பிடிச்சுருக்கு...  என மீண்டும் அவளை கட்டிக் கொண்டாள் பூவி..




அதுலயும் உன் வீட்டுக்காரர் பண்ண வேல..  மோதிரத்தை நீ கொடுக்க சொன்னேன்னு கொண்டு வந்து கொடுத்ததோட எங்க ரெண்டு பேரையும் மாத்திக்க சொன்னாரே..  எல்லாருமே வாயடைச்சு போயிட்டாங்க இவர் வீட்டிலயும் தான்...




யாருனு கேட்டதுக்கு.. அம்மா தான் பக்கத்து வீட்டில இருக்கிறவங்க.. தாயும் பிள்ளையுமா ஒண்ணா பழகுனதால அண்ணன் முறையில மோதிரம் போடுறாருன்னு சொன்னாங்க..  அவங்களால நம்பவே முடியல..  பக்கத்து வீட்டுக்காரங்களா இருந்தாலும் இவ்வளவு தூரம் செய்றாங்களானு ஆச்சரியமா பார்த்தாங்க.. அதான் சாட்சிக்கு இவரையே இழுத்துட்டு வந்துட்டேன்.. கூறியவள் ரொம்ப தேங்க்ஸ் கா.. என மீண்டும் ஒரு தரம் அவளை கட்டி அணைத்து விலகப் போக... பூ.. பூவி ஒரு நிமிஷம் குரல் தடுமாறினாள் ஜானு..



சொல்லுக்கா..



அசோ... அஷோக்... வந்தான்னா சொன்ன.. என தடுமாறியபடி கேட்டவளை இவ்வளவு நேரம் அதை தானே கூறினேன் என்ற ரீதியில் புரியாமல் பார்த்தவள் விழிக்க.. அவள் பார்வையே சொன்ன பதிலை கேட்டு அடுத்த நிமிடம் வேகமாய் வெளியே வந்து எட்டிப் பார்க்க.. அதற்குள் அவன் பைக்  அங்கிருந்து சென்று இருந்தது..



என்னடியம்மா உன் புருஷன் சொல்லாம கிளம்பிட்டானா.. ஏதோ முக்கியமான வேலையாம் வந்து உன்கிட்ட பேசிக்கிறதா சொல்லிட்டு தான் போனான்.. சிறிது நேரத்திற்கு முன் குடைந்தேடுத்த மாமியே கூறினாள்.




என்னனாலும் பொண்ணு பாக்குற வரைக்கும் இப்படி தங்க மோதிரம் போடுறதெல்லாம் ரொம்ப பெருசு தான்.. நான் கூட நீங்க ரெண்டு வீட்டுக்காரங்களும் ஒன்னா பழகுவதை பார்த்துருக்கேன்.. ஆனா முறை செய்ற அளவுக்கு நீங்க நெருக்கமானவங்கன்னு இப்பதான் தெரியுது..  என மலர்ந்து புன்னகைத்தபடி என்னைக்கும் குடும்பம் குட்டியுமா சந்தோஷமா இருக்கணும்..  தலையில் கை வைத்து ஆசீர்வதித்து சென்ற பெண்மணியை தாண்டி அவள் வெறித்த விழிகளோ வெறும் சாலையை தழுவி நின்றது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 38

 ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்..  ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.   தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்..  அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்.. என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..  அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் ம...

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...