முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 60

 என்னடி ஆச்சு.. திடீர்னு வெளியே ஓடிவந்தியே.. ஒன்னும் பிரச்சனை இல்லல்ல.. கையில் குழந்தையோடு நின்று மிதா கேட்க.. அ.. அஷோக்.. அவள் பார்வை அவன் வண்டி சென்ற வழியை வெறித்தது..



என்ன அசோக்..  எனக்கு ஒன்னும் புரியல.. இdடு்கிய புருவங்களோடு  கேட்டவளைத் தொடர்ந்து.. அவன் பெயரை கேட்டதுமே அப்பா.. அப்பா.. என ஆரம்பித்த குழந்தையை கண்டு சட்டென பொங்கிய கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல்  அமைதியாய் உள்ளே சென்றாள் ஜானு.. 





இதுக்காக தான் உன் வீட்டுக்காரர் போயிருக்காருனு அப்போவே வாய் திறந்து சொல்லி இருந்தா தான் என்னவாம்.. நாங்க கூட உங்க ரெண்டு பேருக்கும் சண்டையோ நெனச்சு எவ்வளவு பதறிட்டோம் தெரியுமா..  என அவள் சாலையில் இருந்து வீட்டிற்கு வருவதற்குள் அப்போது சண்டையா எனக்கேட்ட அனைவரும் நலம் விசாரிப்பது போல் கூறிவிட்டு நகர... எப்படியோ இப்போதைக்கு அவர்கள் வாய்க்குள் தான் அவலாக வேண்டிய அவசியம் இல்லை.. நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது இவளிடமிருந்து.. ஆனாலும் தான் அவ்வளவு கூறியும் அவன் வந்திருக்கிறான்?? அதுவும் சரியான நேரத்தில்!! ஏன்?? எப்படி??





மெல்ல அடி எடுத்து  வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு ஏனோ அந்த வீடு வெறித்து கிடப்பதாய் தோன்றியது..  எதனால் அப்படி தெரிகிறது?? அவள் விழிகள் சுற்றி வந்து அவன் காலியான செல்ஃபில் நிலைத்து நிற்க.. இந்த நாள் வரையிலும் கூட அதில் எந்த பொருளையும் இவள் வைத்திருக்கவில்லை.. வைக்க வேண்டும் என தோன்றவில்லை..



ஆனால் அத்தனை அலமாரிகளையும் தாண்டி அந்த காலியான அலமாரியில் மட்டும் தன் விழிகள் ஏன் ஏக்கத்தோடு பதிய வேண்டும் என்பதை கவனிக்க மறந்தாள்.




ஜானு ஆர் யூ ஓகே.. இப்பதான் பூவி சொன்னா..  அசோக் வந்தாராமே.. விரிந்த விழிகளோடு மிதா கேட்க.. ம்ம்.. வந்துட்டு போய்ட்டான்.. என்றவளின் குரலில் எவ்வளவு முயன்றும் சற்று சோர்வு மண்டி தான் கிடந்தது..



என்னடி உடம்பு எதுவும் சரி இல்லையா.. அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தவளின் நெற்றிலும் கழுத்திலும் மாறி மாறி கை வைத்த படி கேட்டாள் திவி.


சோர்ந்த விழிகளோடு ஜானு நிமிர்ந்தவள்..  அப்படியெல்லாம் இல்லையே.. நல்லாதான் இருக்கேன்..  




அப்புறம் ஏன் உன் முகம் ஒரு மாதிரியாவே இருக்கு.. கேட்டபடி இந்தா தைலம்.. தலை வலிச்சதுனா தேய்ச்சுக்கோ என கையில் இருந்த இரண்டு ரூபாய் தைலத்தை அவள் கையில் திணித்து விட்டாள்..



தலைவலியை வேண்டுமானால் அது தீர்க்கலாம்..  ஆனால் மனதில் நீக்க மறு நிறைந்திருக்கும் அந்த குறுகுறுப்பை.. தயக்கத்தை.. வலியை.. எது தீர்க்குமாம்.. தைலம் அனாதையாய் பெஞ்சின் கீழ் உருண்டது..




இன்னைக்கு ரொம்ப வேலையா டி.. ஒரு மாதிரி களைப்பா தெரியலையே.. சரி சரி நானே பாப்பாவ ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்துட்டேன்.. பூவி கூட விளையாடுறேன்னு போயிருக்கா.. மிதா கூற.. சோர்வாய் பேக்கை பொத்தன போடுபவள் உடை கூட மாற்ற மறந்து அப்படியே கட்டிலில் சரிந்து விட்டாள்.. 




என்னடி ஒரு மாதிரியா தெரியுற உடம்பு முடியலையா.. இங்கும் அதே கேள்வி.. 



ம்ம்ஹும்.. கொஞ்சம் ஆபீஸ் டென்ஷன்?? ஆனால் பதில் மாறியது.. 



அண்ணா எதுவும்..??



ம்ம்ஹும் இல்ல.. மறுத்தவள் பட்டென விழித்திறந்தாள்..




இது கொஞ்ச நாளா அவர் ஒதுங்கி போறாரு..  அதுக்கு என்ன காரணம்னு எதுவும் உனக்கு தெரியுமா.. என்றவளை தலை முதல் பாதம் வரை ஆராய்ந்து ஏன் இன்னும் அவனை விரும்புறியா.. அவன் விலகி போறது உனக்கு கஷ்டமா இருக்கா.. அவள் கேட்டதும் உடனடியாக மறுத்தாள்..



விடவே மாட்டேன்னு சொன்னவரு திடீர்னு ஒதுங்கி போறாரே.. அதனால வந்த சந்தேகம்தான்..  நீ பாட்டுக்கு எதுவும் நினைக்காத..  என்றபடி மீண்டும் கண்மூடி கொண்டவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மௌனமாய் அங்கிருந்து வெளியேறினாள் மீதா..



இது தானே ஆசைப்பட்ட வாழ்க்கை தானே.. ஆரியன் என் வாழ்வை விட்டு விலக வேண்டும் என எண்ணினேன்.. ரூபாவோடு அவன் கைகோர்த்து நகர்ந்து விட்டான்.. துணைக்கும் மிதா இருக்கிறாள்.. ஆனாலும் என் மனம் விளக்கை சுற்றும் வீட்டில் பூச்சியாய் அவனையே சுற்றிவர காரணம் என்ன.



அவன் ஏமாற்றுக்காரன் அல்லவா?? இத்தனை நாட்கள் நண்பன் எனக்கூறி அருகிலேயே இருந்து காதலித்திருக்கிறான்.. 



ஆரியன் மட்டும் அன்று அப்படி கேட்காமல் இருந்திருந்தால்  இன்னும் கூட பொய் சொல்லிக்கொண்டு தன்னுடையையே தான் இருந்திருப்பான்..  துரோகி.. என எத்தனை முறை அவனுக்கு துரோகி பட்டம் கட்டினாலும் இந்த மனம் மீண்டும் அவனை சுற்றி வருவது ஏனோ.. 




தனக்கே தன் மனம் புரியாத நிலையில் அவள் தவித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த நிகழ்வு நடந்தது.. 




அன்று ஆரியன் அலுவலகத்திற்கு வரவில்லை..  எப்போதும் யார்யவர் இருக்கிறார்கள் என பார்க்காமல் மாமா மாமா என சதா நேரமும் அவனையே சுற்றி வரும் ரூபாவும் இன்று வந்திடாததில்.. என்ன.. உன் பிரண்டோட அண்ணன் இன்னைக்கு ஆள காணோம்.. என திவிகேட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே ஹாய் கைஸ்..  என்றபடி பளிச்சென புன்னகையோடு உள்ளே நுழைந்தவன் மானஸ்.



இவரா.. இவர் வெளிநாட்டிற்கு தானே சென்று இருப்பதாக அல்லவா கேள்வி??  இப்போது திடீரென எப்படி இங்கு இருக்கிறார்... என்று யோசனையோடு அனைவரும் பார்க்க அதற்குள் மேனேஜர் சுதாரித்தவராய் வாங்க..  வாங்க சார்.. வெல்கம்.. ஒரு வார்த்தை சொல்லலையே.. சொல்லியிருந்தா ஏதாவது அரேஞ்ச் பண்ணிருப்போம்... என சங்கடத்தோடு கூறியபடி கை பிசைந்து நிற்க..  அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..  அதான் சொல்லாமல் வந்தேன்.. என்றபடி முகம் மலர சிரித்தான்.




அவன் முகத்திலிருந்து பயங்கர மகிழ்ச்சியில் இருக்கிறான் என்பதை சொல்லாமல் காட்ட.. பத்து நிமிஷத்துல எல்லாரும் மீட்டிங் ஹாலில் அசெம்பிள் ஆயிடுங்க என்றவன் இவ்வளவு நாளாய் ஆரியன் இருந்த அறைக்குள் சென்று விட்டான்.




என்னடி இவர் திடீர்னு வந்துட்டாரு..  அப்படின்னா இனி இவர் தான் பாத்துக்க போறாரா..  ஆரியன் சார் வரமாட்டாரா.. தொடர்ந்து திவி கேட்டு எந்த கேள்விக்கும் அவளிடமும் பதில் இல்லை.



பத்து நிமிடங்களில் மீட்டிங் தொடங்க.. முதல்ல நான் உங்க எல்லாருக்கும் பெரிய நன்றிய தெரிவிச்சிக்கிறேன்..  காரணம் நான் இங்க இருந்து போறப்போ நம்ம கம்பெனி பயங்கர லாஸ்ல போயிட்டு இருந்துச்சு..  ஆனால் இந்த ரெண்டு மாசத்துல உங்களுடைய அயராத உழைப்புனாலயும் திறமையானவளையும் நம்ம கம்பெனி கிட்டத்தட்ட 10% வளர்ச்சி அடைந்திருக்கு.. அதுக்கெல்லாம் உங்களுக்கு பெரிய நன்றி.. மானஸ் கூற கைதட்டல் சத்தம் அந்த இடத்தை அடைத்தது.




அதேபோல என் நண்பன் ஆரியனுக்கும் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கிறேன்.. இதுக்கெல்லாம் காரணம் அவனும் கூட தான்..  ஆனால் எதிர்பாராத நிகழ்வா அவனால இனி நம்ம ஆபீஸ்க்கு வர முடியாது.. எஸ்.. அவன் இங்க இருந்து போகப் போறான்.. இங்க இருந்துனா ஆபீஸ்ல இருந்து மட்டுமில்ல..  இந்த ஊரைவிட்டே போகப் போறான்.. எங்க இருந்தாலும் அவனோட ஜர்னி சக்ஸஸ்புல்லா இருக்கணும்னு நான் பிரேயர் பண்ணிக்கிறேன்.. மான்ஸ் கூறிக்கொண்டே செல்ல ஜான்விக்கு எதுவுமே புரியவில்லை..



கடந்த சில நாட்களை அவன் ஒதுங்கி செல்வதும் இவன் நேற்று வரை வந்தவன் திடீரென இன்றிலிருந்து வரமாட்டான் என மானஸ் கூறுவதும் ஏனோ கண்மூடி திறக்கும் சம்பவமாய் நடக்க.. என்னடி இது.. இத பத்தி உனக்கு எதுவும் தெரியுமா தோளை இடித்தாள் திவி.



தெரியாது..  இவள் தலை மட்டும் உருண்டது..  மனதில் ஆயிரம் கேள்விகள் கூடியிருக்கின்றன..  ஆனால் எதற்குமே பதில் தேட இதுவரை அவள் எண்ணியிருக்கவில்லை.. ஆனால் இப்போது அவன் ஏன் திடீரென செல்ல வேண்டும் என்பது பூதாகரமான கேள்வியாய் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.





எப்படியோ அன்றைய நாளை முடித்துவிட்டு.. வீட்டிற்கு வந்தாள்.. வாசலிலேயே இரண்டு மூன்று ஜோடி செருப்புகள் அதிகமாய் தென்பட.. அப்படி யாரு வந்திருக்கிறது.. யோசனையில் இடுங்கிய புருவங்களோடு அவள் உள்ளே நுழைய.. அண்ணன் கல்யாணத்துக்கு கூட வராம அப்படி என்னடி உனக்கு உன் பிரண்டு ஓவியமா போயிட்டா.. என கேட்ட குரல் வாசற்படியில் கால் வைத்தவளின் காதுகளில் தெளிவாக விழுந்தது.




மறக்க கூடிய குரலா அது.. மணிமேகலை!!


விழிகள் தன்னிச்சையை நிமிர்ந்து பார்க்க உள்ளே மிதா கையில் தன்மகள் அமர்ந்திருக்க.. அவளையை ஏக்கம் தழுவிய பார்வையோடு கண்டபடி எதிரில் ஆரியன்.. அவன் அருகில் ரூபா.. மணிமேகலை மீதா அருகில் அமர்ந்திருந்தார்.



திருமணமா??  ஆரியனுக்கா?? விரிந்த விழிகளோடு அவள் உள்ளே நுழைய அவளை கண்டதும் சட்டென முகம் மலர சிரித்தார் மணிமேகலை.




எப்போதும் தன்னை கண்டதும் கடுக்காய் போல கடுத்துப் போகும் அவள் முகம் முதன்முதலை வெல்லப்பாகாய் உருகுவதை கண்டு புரியாமல் ஜான்வி நிற்க.. வேகமாய் பை திறந்து எதையோ உருட்டியவள் தாம்பூல தட்டில் அந்த மஞ்சள் நிற பத்திரிக்கையை வைத்தாள்.. மேலே வெத்தலை பாக்கு மஞ்சள் குங்குமம் என.. அடுக்கியவள்.. என் மகனுக்கு வரை 23ஆம் தேதி கல்யாணம்.. அதுவும் என் அண்ணன் பொண்ணு கூட.. கண்டிப்பா நீ வரணும்.. உரிமையான அழைப்பு போல் தெரிந்தாலும் அதில் இருந்தது முற்றும் முதலான கேலி என்பது புரியாமல் இல்லை. எப்படி உனக்கு உள்ளதை பறித்து என் விருப்பப்படி நடத்தி காட்டுகிறேன் பார்த்தாயா.. என்பது போன்ற பார்வை அவரிடம். 



அம்மா.. வாய் எடுத்த ஆரியனை.. சட்டென திரும்பி மணிமேகலை பார்த்த பார்வையில் வேறு வழியில்லாமல் இதழ் கடித்து அமைதியானான்.. ஆனால் பார்வை மட்டும் ஜான்வியை தவிப்பாய் முட்டி நின்றது.. 




என்ன  முழிச்சுக்கிட்டு நிக்கிற..  கொடுத்தா வாங்கணும்.. அவள் இரு கைகளையும் பற்றிய படி தானே தட்டை அவள் கைகளில் திணித்து விட.. இதுக்குதான் நீ வந்தியா.. நீ நல்லவ மாதிரி பேசுறப்போவே தெரியும்.  இந்த மாதிரி ஏதாவது ஏடாகூடம் பண்ணுவேன்னு முதல்ல இங்க இருந்து கிளம்புமா.. முகத்தில் அறைந்தார் போல் கூறிய மகளை.. சும்மா அடுத்தவளுக்கு ஏண்டுக்கிட்டே போகாதடி.. முதல்ல அண்ணன் கல்யாணத்துக்கு வீட்டுக்கு வர்ற வழிய பாரு.. நாளைக்கு நாங்க மூணு பேரும் ஊருக்கு போயிடுவோம்.. ஒரு வாரத்துக்கு முன்னாடியாவது கல்யாணத்துக்கு வந்துரு.. ஹ்ம்ம்.. தராதரம் தெரியாம பழகுற.. எப்போ பால குடிச்ச பாம்பு விஷத்தை கக்கபோகுதோ என ஜான்வியை ஒரு மாதிரியாய் பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து செல்ல.. வாங்க மாமா.. வழக்கம்போல் அவன் இறுகிய புஜத்தை இறுக்கிக் கொண்டு நடந்த ரூபாவின் பின்னே நடந்தவனின் பார்வை கடைசி ஒரு முறை ஏக்கத்துடனும் தடுமாற்றத்துடனும் ஜான்வியிடமும்.. பின்னே மிதாவின் கையில் இருந்த தன் வாரிசை இயலாமையோடு படிந்து அடுத்த நிமிடம் திரும்பிக் கொண்டது.




கையில் இருந்த தட்டை டீபாயில் வைத்த அடுத்த நிமிடம் பொத்தென சோபாவில் சரிந்தாள் ஜானு..ஜானு.. என்ன ஆச்சு டி.. பதறி வந்த மிதாவே திறந்த விழி பார்வையோடு நிறுத்தியவள்..  தலையை உலுக்கி கொண்டாள்.




சாரிடி என் அம்மா பேசினதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டு தரேன்.. அம்மா அப்படி பேசி இருக்கக் கூடாது.. இறங்கிய குரலோடு பேசியவளே கரம் பிடித்தவள்.. அதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல என்றதோடு எழுந்து அடுத்தடுத்த வேலைகளை பார்க்க சென்றாலும் அவள் சோர்ந்த நடை அவள் நிலையை தெளிவாக காட்டுவதாய்..




அடுத்தடுத்ததாய் வீட்டு வேலையில் இருந்து சமையல் வேலை வரை அனைத்தையும் முடிக்க இரவு மணி ஒன்பதை தாண்டி விட்டது.. 




சாப்பாட்டை முடித்துவிட்டுலைட் அனைத்தும் அணைக்கப்பட்ட நிலையில்.. உறங்கிய குழந்தையை நடுவில் படுக்க போட்டு ஜானு ஒரு பக்கமும் மிதா ஒரு பக்கமும் தூங்க ஆரம்பிக்க.. இடையில் தொண்டை வறண்டதாய் தோன்றியதில் எழுந்து நீர் அருந்திவிட்டு மிதா திரும்பியவள் பார்க்க..  அங்கு ஜானுவை காணவில்லையே..



இந்த நேரத்துல இவ எங்க போனா.. மெல்லிய அடிகளை எட்டு எட்டாய் வைத்து ஹாலுக்கு வர.. ஓரமாய் குலுங்கி கொண்டிருந்த தேகம்.. அது ஜானு தானே.. அதிர்ச்சியோடு உடனே லைட்டை போட்டிருந்தாள் மிதா..




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 38

 ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்..  ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.   தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்..  அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்.. என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..  அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் ம...

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...