திடீரென லைட் ஆன் செய்யப்பட்டதில் அதிர்ந்து கண்களில் வழிந்து நின்ற அழுகை துளிகளை அவசரமாய் துடைத்துக் கொண்டாள் ஜானு..
ஜானு.. தோழியை அறிந்தவளாய் அவள் தோளில் கை வைத்த படி.. என்னடி ஆச்சு.. இங்க வந்து ஏன் அழுதுகிட்டு இருக்க.. அவள் கேட்டதும் பாய்ந்து அவளை கட்டிக்கொண்டவளின் கண்ணீர் துளிகள் இன்னொருவளின் தோளை நனைத்தன..
ஜானு.. விடாப்பிடியாய் அவளை இழுத்து விலக்கி நிறுத்தினாள் மிதா.
என்னடி ஆச்சு.. ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க.. அவள் கேள்விகளுக்கு இவளிடம் பதில் இல்லை..
தேம்பி கொண்டிருந்தவளை விடாப்பிடியாய் முறைத்தபடி.. ஒருவேளை அம்மா அப்படி பேசினதுக்காக அழுகிறியா.. அதுக்கு தான் நான் அப்பவே சாரின்னு சொல்லிட்டேனே.. என்றவள் திடீரென விழி விரித்தாள்..
ஒருவேளை அண்ணன்.. கல்யாணம் பண்ணிக்க போறது?? என ஆரம்பித்த வேளையிலேயே.. ச்சே ச்சே.. அப்படியெல்லாம் எதுவும் இல்லைன்னு நான் அன்னைக்கே சொன்னேனே, வார்த்தையை முடிக்க விடாமல் கூறியிருந்தாள் ஜானு.
பின்ன என்னதான் டி பிரச்சனை.. ஏன் இந்த நைட் நேரம் இங்க வந்து உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்க.. பதில் சொல்ல முடியாமல் அவள் தோள்கள் மீண்டும் குலுங்க ஆரம்பிக்க.. போதும்டி அழுதது.. ஒழுங்கா விஷயத்தை சொல்லு.. அவள் உருட்டி மிரட்டியதில் அடுத்த நிமிடம்..
மிதா.. அவள் குரல் தேம்பியது.
நான் சொல்ல போறத நீ எப்படி எடுத்துக்க போறேன்னு தெரியல.. ஆனா ஆனா.. நா.. எனக்கு அசோக் இல்லாம எதுவுமே முடியலடி.. எங்க பாத்தாலும் அவன் இருக்கிற மாதிரியே இருக்குது.. கண் திறக்கும் போது... எழும்போது.. நடக்கும் போது.. எந்த வேலை செஞ்சுகிட்டு இருந்தாலும் சரி.. எங்கேயும் அவன் ஞாபகமாவே இருக்கு.. கண்ண மூடினாலும கூட அப்பவும் அவன் முகம் தான்.. நா.. நா.. அவனை காதலிக்கிறேன்.. தன் நிலையை எடுத்துக் கூறி.. அவள் கூறிய கடைசி வார்த்தைதனில் என்ன.. பெரிதாய் அதிர்ந்தாள் மிதா..
அவன் சென்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாய் கடந்திருந்தாலும் இவ்வளவு நாட்களாய் தேடாதவள் திடீரென இந்த நடு இரவில் அமர்ந்து கொண்டு இப்படி கூறுகிறாளே நம்ப மாட்டாமல் அவளை பார்க்க.. எப்போ இருந்து எப்படின்னு எதுவுமே எனக்கு தெரியல.. ஆனா எனக்கு அவன் வேணும் டி.. நண்பனாவோ.. இல்ல.. கணவனாவோ.. கூறும்போது அவள் குரல் நடுங்கியது..
ஆனால் அதையும் தாண்டி.. எனக்கு அவன் வேண்டும்.. என உறுதியாய் வார்த்தைகளை முடித்தவளின் உதடு நடுங்கியது..
அவள் தோளை ஆசுவாசமாய் பற்றிக் கொண்டாள் மிதா.. எப்படின்னு நான் கேட்கல.. ஆனா இப்போ என்ன திடீர்னு?? அவள் கேள்வியில் ஜான்வின் விழிகள் மேலே எழுந்து மிதாவின் முகத்தை மொய்த்தன..
ஒருவனுக்கு ஒருத்திங்கிற கூட்டுக்குள்ள வாழ்றவ நான்.. உன் அண்ணன் என்ன விட்டுப்போன இத்தனை நாளும் கூட என்னைக்காவது வருவான்.. உண்மையை கூறி திரும்ப அவனோடு சேர்ந்து விடுவேன்னு தான் என் உயிரையும்.. பாப்பாவையும்.. என் நம்பிக்கையும்.. கையில புடிச்சிட்டு இருந்தேன்.. ஆனா அவன் எப்போ நான் சொல்ல வர்றதை காது கொடுத்தும் கூட கேட்காம உதாசீனப்படுத்தினாரோ அப்பவே என் மனசு விம்மி செத்துடுச்சு.. உனக்கு தெரியுமா.. ஒரு தடவை அவர் பேசினதை தாங்க முடியாம கடல்ல விழுகிற அளவுக்கெல்லாம் போயிட்டேன்.. அவள் அடுத்தடுத்து கூடும் அதிர்ச்சிகரமான சம்பவத்தோடு இதுவும் சேர என்னடி சொல்ற.. பொங்கி ஒரு அறை விட்டிருந்தாள் மிதா.. தோழியின் அந்த முடிவு அவளை அவ்வளவு அவளை அதிர வைத்தது..
வலித்த கன்னத்தை ஒரு கையால் பற்றி கொண்டாள்... எவ்வளவுனாலும் என்ன அடிச்சுக்கோ.. நான் எடுத்தது தவறான முடிவு தான்.. அந்த சரியான நேரத்துக்கு மட்டும் அசோக் வரலைனா இந்நேரம் நான் உயிரோடு இருந்திருக்கவே மாட்டேன்.. என் பிள்ளையும் அனாதையாகிருப்பால்ல..
ஆனா.. இல்ல.. இல்ல.. அப்ப கூட என் பிள்ளையே அனாதையாக அவன் விட்டிருக்க மாட்டான்.. அவள் இதழ்கள் வறண்டு புன்னகைத்தன.
ஆரம்பத்தில் அவனை பார்த்த நாளுல இருந்து இந்த நாள் வரைக்கும் அவன் எல்லாமும் எனக்காகவும் பாப்பாவுக்காகவும் தான் எல்லாமே செஞ்சிருக்கான்.. உனக்கு தெரியுமா நண்பன்னு தானே அவன் என் கூட இருந்தான்.. ஆனால் அப்பவும் கூட பாப்பாவும் நானும் சாப்பிட்டோம்னா தான் அவன் சாப்பிடுவான்.. இல்ல நான் சாப்பிடலைன்னா என்ன இழுத்து பிடிச்சு உட்கார்ந்து அவனோட சாப்பிட வைப்பான்.. அன்றைய நாட்களின் நினைவில் தானாக அவள் இதழ்கள் புன்னகைத்தன..
டாபிக் வேற பக்கம் திரும்பி செல்வதில் ஆழ்ந்த மூச்சு எடுத்து நிறுத்தினாள்..
அன்னைக்கு முட்டாள் தனமா நான் கடலில் விழுந்தப்ப அவன் தான் என்ன காப்பாத்துனான்.. நான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்னு சொன்னதுக்கு நீ ஓங்கி அறைஞ்சியே.. ஆனா அவன் என்ன காப்பாற்றியே இருந்தாலும் விலகி என்னுடைய பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டான்..
இல்ல டி நான்.. கோபத்தில் அறைந்திருந்ததில் மிதா தவிப்பாய் கூற வர.. உன்னிடத்தில் நான் இருந்தாலும் இப்படி தான் நடந்திருப்பேன்.. ஆனா நான் சொல்ல வர்றது அவன் என் மேல வச்ச பாசத்தை பத்தி..
அதுக்கு மாற்றா எனக்கு நம்பிக்கை கொடுத்தான்.. வாழ திறன் கொடுத்தான்.. என்ன ஆனாலும் கூடவே இருப்பேன்னு சொன்னான்.. என்றவளின் தோள்கள் மீண்டும் குலுங்கின..
இவ்வளவு நேரம் அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தவளின் விழிகள் திடீரென அவள் முகத்தில் நிலை குத்தின.. இவ்வளவு தூரம் அவர பத்தி தெரிஞ்சு வச்சிருக்க.. அப்புறம் எதுக்காக முகத்திலேயே முழிக்காதீங்கன்னு விரட்டி விட்டியாம்?? எதிர்பார்த்த கேள்விதான்.
பின்ன அந்த நேரத்துல என்ன என்ன பண்ண சொல்ற?? வெடித்தாள்.. ஏற்கனவே ஒரு தடவை ஆரியன் அசோக்கையும் என்னையும் சம்பந்தப்படுத்தி தப்பா பேசியிருக்கிறார். அப்ப எல்லாம் என் மனசுல அவன் நண்பன் தானே.. ஹ்ம்ம்.. ஆனா அதுதான் காதல்னு புரியாமல் இருந்திருக்கேன் முட்டாlaa!!
ஆரியன் அப்படி பேசினப்ப எனக்கு பயங்கரமா கோபம் வந்துச்சு.. இப்படி எல்லாம் பேசாதீங்கன்னு முகத்தில் அறைஞ்ச மாதிரி சொல்லிட்டு வந்துட்டேன்.. ஆனா அதே கேள்வியை அவன் முன்னாடி வச்சு கேட்டப்போ இல்லன்னு மறுக்காமல் திடீர்னு ஆமாம்னு ஒத்துக்கிட்டானே.. அப்போ ஆரியன் பார்த்த பார்வை இத தானே நான் அன்னைக்கே சொன்னேன்.. இவ்வளவு நாளா முட்டாளா இருந்திருக்கிறங்கிற மாதிரி??
என்னால அதை ஏத்துக்கவே முடியல.. நண்பன்னு சொல்லிட்டு எப்படி இவனால காதலிக்க முடிஞ்சதுன்னு.. அவ்வளவு கோபம்.. அந்த கோபத்துல தான் அப்படி சொல்லிட்டேன்.. ஆ.. ஆனா நான் சொன்னதைக் கேட்டு அவன் போய்ட்ட ஒவ்வொரு நொடிகளையும் இருந்து என் மனசு அவன தானே தேடுது..
யார் என் பக்கத்துல இருந்தாலும்.. பேசினாலும் எங்க திரும்பினாலும் அவன் ஞாபகம் தான்.. இதெல்லாம் தப்பு அவன் துரோகி துரோகி என்று 1008 தடவை எனக்குள்ள நானே சொல்லிக்கிட்டாலும்.. என்னால முடியல.. இறக்கம் நோக்கி ஓடுகிற ஆறா என் மனசு திரும்ப திரும்ப அவன்கிட்டே தான் ஓடுது..
நான் நினைச்ச மாதிரி கொஞ்ச நாளா ஆரியன் என் வாழ்க்கையை விட்டு விலகிட்டாரு.. பாப்பாவும் சொன்ன பேச்சு கேட்டு நல்லா இருக்கா.. கூட சப்போர்ட்டுக்கு நீயும் இருக்க.. ஆனாலும் என்னால அவன் ஞாபகத்தில் இருந்து வெளியே வர முடியலையே.. எங்க பார்த்தாலும் வெறும.. கோபமா வருது.. பாப்பாவுக்காக மட்டுமே என் வாழ்க்கை அமையனும்னு நினைச்சேன்.. ஆனா இப்ப பாப்பா கூட இருந்தாலுமே என்னால என்ன சமாளிக்க முடியல.. அவன் ஞாபகங்கள் என்ன கொலையா கொல்லுது.. மி.. மிதா.. அவன் இல்லாமல் எதையுமே என்னால யோசிச்சு பார்க்க முடியலடி.. அவன்.. அவன் எனக்கு.. என பேச்சை நிறுத்தி தேம்பியவள் கடைசி வார்த்தையாய்.. வேண்டாம் என முடித்திருந்தாள்..
என்ன?? இவள் என்ன கூறுகிறாள்.. இவ்வளவு நேரம் அவனை காதலிப்பதாய் உருகி உருகி கூறிவிட்டு கடைசியில் வேண்டாம் எனவா..??
என்னாச்சுடி உனக்கு.. இவ்வளவு நேரம் இப்படி சொல்லிட்டு கடைசில இப்பவும் கூட அவன் வேண்டாம்னு சொல்றியே?? மிதா கேட்டதும் அவள் இதழ்கள் வறண்டு புன்னகைத்தன..
இவ்வளவு நாளா கூட இருக்கும்போது அவன் அருமை எனக்கு தெரியல.. உதாசீனப்படுத்தி என் முகத்தில் முழிக்காதன்னு விரட்டிட்டேன்.. ஆனா அப்பவும் கூட மத்தவங்க வாய்க்கு நான் அவலாகிட கூடாதுன்னு.. பூவிதா ஃபங்ஷன்ல எனக்காக வந்து நின்னான் அவன்.. அவ்வளவு பாசம் அவனுக்கு என் மேல..
ஆனா இப்போ நான் அதுக்கு தகுதி இல்லாம போயிட்டேன்.. அவன் எவ்வளவு பெரிய கோடீஸ்வரன்னு எனக்கு சொன்னவளே நீதான்.. நல்லபடியா வேலைக்கு போய் மாசம் கை நிறைய சம்பாதிக்கிற உன் அண்ணனே பணத்துக்காக இவ்வளவு கேவலமான பொய் சொல்லுவியான்னு என் முகத்துக்கு நேரா நின்னு கேட்டவரு.. இப்போ அவன் முன்னாடி போய் நின்னா.. அப்போ என்ன புரிஞ்சுக்காதவ இப்போ பணக்காரன்னு தேடி வந்திருக்கியான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டா போதும்.. அந்த இடத்திலேயே நா செத்துடுவேன்.. இந்த நிமிடங்களில் அவள் விழிகளில் இருந்து அழுகை உறைந்து இருந்தது.. விழிகள் தீர்க்கமாக தரையை வெறித்தன.
லூசு.. அவர் அப்படியெல்லாம்.. என மிக ஆரம்பிக்கும்போதே.. இல்ல மிதா.. ஏற்கனவே அடிபட்டவ நான்.. சூடு கண்ட பூனை.. உன் அண்ணன் மேல இருந்தது உண்மையான காதல்ன்னு நெனச்சேன்.. அவர் கேட்டப்போ கோபம் வந்துச்சு..
என்ன இப்படி பேசுறாருன்னு வெறுப்பு வந்துச்சு.. ஆனா இப்படி ஒரு உணர்வை நான் அஞ்சு நிமிஷம் உணரவில்லை..
ஆனா இப்போ.. சத்தியமா சொல்றேன்.. அசோக் மட்டும் அதே கேள்வியை கேட்டுட்டா அந்த நிமிஷமே என் உயிர் என்னை விட்டுப் போயிடும்.. அதான் சொல்றேன்.. அதுக்கு நான் இப்படி தனியாவே இருந்துட்டு போறேன்..
ஏய் லூசு மாதிரி பேசாதடி.. இவன் ஏதோ சொன்னான்னு இவனை ஏன் அவர் கூட கம்பேர் பண்ற.. அவர பத்தி உனக்கே நல்லா தெரியும் அப்படி எல்லாம் பேசக்கூடியவரா அவரு..
மாட்டான் தான்.. ஆனா இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது அவர் அப்படி ஒரு வார்த்தை கேட்டுட்டா.. என்னால முடியாது மிதா.. அவள் குரல் நடுங்கியது..
ஏற்கனவே காதலிப்பதாய் நம்பியவன் கூறிய வார்த்தைகளில் எவ்வளவு தூரம் அடைந்திருக்கிறாள் என்பது அவள் நடுங்கிய குரலினில் புரிய.. ஜானு அவள் தோளில் அதூரமாய் கை வைத்து அழுத்தினாள் மீதா...
கொஞ்சம் பிராக்டிக்கலா பேசுடி லைஃப்ல இப்படியே தனியா இருந்திட முடியாது உனக்கும் யாருடைய சப்போர்ட் ஆவது வேணும்ல..
அவரை நீ உணர்ந்துருக்க.. அவர் காதல உணர்ந்துட்ட.. இப்போ நீயும் அவரை காதலிக்கிறத உணர்ந்துட்ட.. இந்த நேரம் வந்து இப்படி பைத்தியம் மாதிரி பேசிக்கிட்டு இருக்காத.. ஆனா இன்னும் எனக்கு ஒரே ஒரு கேள்விதான்.. இவ்வளவு நாள் சொல்லாதவ.. இப்ப எப்படி திடீர்னு சொல்ற..
ஏன்னா ஆரியனால.. உடனடியாக அவளிடம் இருந்து பதில் வந்தது.
என்ன??
என்னால தான் அவர் வாழ்க்கை வீணா போயிடுச்சுன்னு நிறையமுறை சொல்லி இருக்காரு.. அசோக் போன நிமிஷத்துல இருந்து அவனை என் மனசு தேடுனாலும்.. இவர் வாழ்க்கையை கெடுத்துட்டு.. என் மனசு தேடுறது சரிதாணான்னு எனக்குள்ள பெரிய கேள்வி இருந்துச்சு..
அவன் வாழ்க்கை ஒன்றும் நீ வீணாக்கல.. உன் வாழ்க்கையை தான் அவன் வீணாக்கி இருக்கான் கண்களில் துளிர்த்த வெறுப்போடு மிதா கூறிட.. அவர் சொன்ன வார்த்தை ஒவ்வொன்னும் என் மனசுல ஆணித்தரமா படிஞ்சிடுச்சு.. அசோக்கை என் மனசு தேடுதுன்னு எனக்கு புரிஞ்சாலும் அது ஏத்துக்க விடாம உன் அண்ணன் சொன்னது தடுத்தது..
ஆனா எப்போ வீடு தேடி வந்து உன் அம்மா அவருக்கும் ரூபாவுக்கும் கல்யாணம்கிற அளவுக்கு சொல்லிட்டாங்களோ, அப்பவே என் மனசுல இருந்து குற்ற உணர்ச்சி விலகிடுச்சு.. இன்னும் அதிகமா என் மனசு அசோக்கை தேட ஆரம்பிச்சிடுச்சு.. நான் யார் வாழ்க்கையும் வீணாக்கல.. உறுதியாய் முடித்தாள்.
பொய்.. இன்னும் நீ உன் முடிவால உன் வாழ்க்கையையும் அசோக் வாழ்க்கையையும் வீணாக்கிட்டு தான் இருக்க.. தோழியை எப்படியாவது அசோக்குடன் சேர்த்து வைத்து விட வேண்டும்.. என கண் முன்னேயே அவன் தன் தோழியை எப்படி எல்லாம் தாங்கினான்.. என பார்த்துவளாய் மிதா உந்த.. ம்ம்ம்.. விரக்தி சிரிப்பு படர்ந்தது இவள் இதழினில்.
நான் விரும்புனது காசு பணம் எதுவும் இல்லைனாலும் எனக்காகவும் என் குழந்தைக்காகவும் வாழ்ந்த அந்த அசோக்கைதான்.. ஆனா எப்போ அவன பத்தின முழு உண்மையா நீ சொன்னியோ அப்பவே என் மனசுல இருந்தா விருப்பத்தை குழி தோண்டி புதைத்து விட்டேன்... இனி அது சரி வராது.. ஆனா என்னைக்கும் என் மனசுல காதலோட அசோக் இருப்பான்.. வலியை தாங்க முடியாமல் அவள் தேகம் குலுங்கியது.
தோழியும் அவனை காதலிப்பதில் பெருத்த சந்தோஷம்.. தானும் இதற்கு தானே இவ்வளவு நாளாய் ஆசைப்பட்டோம்.. அவன் தன் தோழியை தாங்குவதும் பிள்ளைக்கு ஒன்று என்றால் பெற்றவனை போல் பதறி ஓடுவதும் இருவர் மீதான அன்பைச் செப்பனிட்டு காட்டிய போதே தன் தோழியின் வாழ்வு இவனோடு இருந்தாலே நன்றாக இருக்கும் என தோன்றிய எண்ணத்தோடு இன்று அது நடந்தேறினாலும் அவனை ஏற்றுக்கொள்ள முடியாமல் இவள் மருகி தவிப்பது.. எல்லாம் உன்னால வந்த வினைடா ஆர்யா.. பல்லை கடித்தவளின் பார்வை அழுகையில் சுருளும் ஜான்வியை தவிப்பாய் மொய்த்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக