அடர் ப்ரவுன் நிறமும் மஞ்சள் நிற பார்டருமாய் இருந்த அந்த லெஹங்காவை இடையோடு விட்டு முன்னிழுத்து பின் குத்தினாள் மிதா.. அவள் பால்வெள்ளை நிறத்திற்கு அந்த உடை அத்தனை எடுப்பாய்.. கண்ணாடி முன் நின்று ஒரு தரம் சரி பார்த்தபடி.. பின்னே இருந்து அத்தே.. அத்தே.. என குட்டி கைகளால் பாவாடையை இழுத்துக் கொண்டிருந்த குழந்தையிடம் மண்டியிட்டாள்.
அத்தை ரெடியாயிட்டேன்.. பாப்பாவ கிளப்பி விடவா.. கேட்டதும் குட்டியின் விழிகள் மலர்ந்து தலையாட்டின.. அவளுக்கென எடுத்து வைத்திருந்த வெண்மையும் பச்சையுமான பட்டுப்பாவாடையை தலைவழியாய் விட்டு இடுப்பில் கட்டி முடித்து .. குட்டி கைகளை சட்டைக்குள்ளாக விட்டு பின்னே பின் குத்தினாள்..
மென்மையாய் பவுடர் அடித்து பொட்டு வைத்து அலங்காரம் முடிக்க.. உண்மையாவே அழகி தான் நீ.. நெற்றி முடித்து கொண்டவளின் ன் பார்வை குழந்தையை விட்டு அவளைப் பெற்றவளிடம் தாவியது..
ஏண்டி குழந்தையே கிளம்பிட்டா.. நீ இப்படி குளிச்சிட்டு வந்து டிரஸ் மட்டும் போட்டதோட உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்.. சீக்கிரமா எழுந்து கிளம்பு.. என்றவளை சோர்வான விழிகளோடு நிமிர்ந்து பார்த்தாள் ஜானு... பார்வையே கூறியது விஷயத்தை..
ஆனால் அப்படியெல்லாம் விட முடியாது.. எப்போது அசோக்கை அவள் விரும்புவதாய் கூறினாளோ அப்போதே அவ்வப்போது இப்படி வாடிய கொடியாய் முகம் சோர்ந்து எங்கோ வெறித்துக்கொண்டு அமர்வதும்.. யாரும் அழைத்தால் கூட தெரியாமல் இருப்பதும் வழக்கமான நிகழ்வுகளாகி விட்டன. கோவில் குளத்திற்கு செல்வதில்லை.. குழந்தையை அழைத்துக் கொண்டு கடைக்கும் செல்வதில்லை.. மிதா இருப்பது பேர் உபகாரமாய் போகிறது.
நிறைய முறை நான் இங்க இருந்து போனாதான் நீ இதுல இருந்து வெளியே வருவேன்னு நினைக்கிறேன்.. அவள் கூறும் நொடி பதறுவாள் ஜானு.
நீயும் இப்படி சொல்றியே.. என்பது போல் சுருங்கும் அவள் பார்வை. அதற்கு மேல் தோழியை வற்புறுத்த விரும்பாமல் தானே குழந்தையை அழைத்து கடைக்கு சென்று தேவையானதை வாங்கி வருவாள்.. சமீப காலங்களாக இப்படியே தான் சென்று கொண்டிருக்கின்றன.. ஆனால் இன்று செல்லக்கூடிய இடம் மிக முக்கியமானது அல்லவா.
ஆம் இன்று ஆரியன் ரூபாவின் நிச்சயதார்த்தம்.. வீட்டிற்கு அருகிலேயே மஹால் என பத்திரிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.. ஆனால் அதை கண்ட நொடி ஜானுவின் விழிகள் விரிந்தன.. காரணம் இருக்கிறது..
நேற்று இரவு வரை அங்கு செல்லும் எண்ணம் மிதாவிற்கும் கூட கிடையாது.. அவர்கள் செய்த வேலையில் உள்ளம் உளை கலனாய் கொதித்துக் கொண்டிருந்தது.. அதிலும் எவ்வளவு தைரியம் இருந்தால் இவள் வீட்டிலேயே வந்து அமர்ந்து கொண்டு தாய் இப்படி அழைப்பார்.. என நெஞ்சம் கணக்க.. அவள் இருக்க..
நேற்று எதிர்பாராமல் வந்த ஆரியனின் காலை கண்டு முதலில் எடுக்காமல் விட்டவள் அடுத்த நிமிடமே அவனை நன்றாக நான்கு கேள்வி கேட்டு விட வேண்டும் எனவே உடனடியாய் எடுத்து காதில் வைத்தாள.. அ.. என ஆரம்பிப்பதற்கு உள்ளாகவே மிதா.. பாப்பா நீ என் மேல கோபமா இருப்பேன்னு தெரியும்.. தயவு செஞ்சு நான் சொல்றது ஒரு நிமிஷம் கேளு.. நாளைக்கு என்ன ஆனாலும் ஜானுவ தயவு செஞ்சு என்னை கூட்டிட்டு வா.. அவன் குரல் கெஞ்சியது.
நான் உன்மேல கோபமா இருப்பேன்னு தெரிஞ்சும் உன்னால எப்படி இப்படி பேச முடியுது.. உன்னால தான் இங்க ஒருத்தியோட வாழ்க்கை சீர் கெட்டு போய் இருக்கு.. நீ பேச ஒவ்வொரு வார்த்தையும் ஏதோ வேதவாக்கு மாதிரி நம்பிகிட்டு அந்த முட்டாள் அவ வாழ்க்கையே தொலைச்சுக்கிட்டு இருக்கா..
எனக்கு தெரியும் அதுக்காக தான் அவளை கூட்டிட்டு வர சொல்றேன்..
நீங்க எதுவும் நீ நினைச்ச மாதிரி இல்ல ஆர்யா.. இப்போ ஜானு மனசுல நீ கிடையாது.. அதனால அந்த மாதிரி எதுவும் முடிவு வச்சுருந்தான்னா அது அப்படியே காத்தோட பறக்க விட்ரு.. ஜானு கேட்டு விடாமல் மாடி பக்கம் வந்து நின்றபடி பேசினாள்.
அது எனக்கே தெரியும்.. அதோட அவ அசோக்கை விரும்புறதும் எனக்கு தெரியும்.. அவன் கூறியதும் மிதாவின் விழிகள் விரிந்தன.. உனக்கெப்படி.. அதிர்ச்சியாய் கேட்டாள்.
ம்ம்.. நிறைய தடவை அவ கண்ணிலேயே பாத்துட்டேன்.. வறண்ட குரலில் கூறியவன் ஆனாலும் சில விஷயங்கள் இன்னும் ஜானுக்கு தெரியப்படுத்தப்படாமல் இருக்கு.. நாளைக்கு தயவு செஞ்சு அவளை நிச்சயத்துக்கு கூட்டிட்டு வா.. ஹான்..என்றதோடு பக்கத்தில் யாரோ பேசும் சத்தத்துடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது..
இன்னும் பேச என்ன இருக்கிறதாம்.. என்ன பேச வேண்டும்.. என்று இவன் இப்படி துடிக்கிறான் என புரியாமல் ஒரு கணம் கையில் இருந்த போனை உருத்து விழித்துக் கொண்டாலும்.. எப்படியோ அவன் கூறப்போகும் விஷயத்தை தன் தோழியின் வாழ்க்கை செப்பனிட போகிறது என்றால் அழைத்து செல்வதில் ஒன்றும் தவறில்லையே.. எண்ணியவள் அதற்கடுத்து தான் ஜானுவிடம் பேசி ஒரு வழியாய் சம்மதமும் வாங்கி இருந்தாள்.
ஆனால் இப்போது குளித்து வந்து புடவை மாற்றி இருந்தாலும் கிளம்ப மறுத்து அப்படியே அமர்ந்திருப்பவளை பார்த்தபடி வேகமாக கிளம்பு ஜானு.. என காதருகில் வந்து கத்திக் கொண்டிருக்க.. நா வரல.. அவள் சொன்னதில் தூக்கிப் போட்டது இவளுக்கு.
காரியமே கெட்டது.. அவன் அங்கே என்ன விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறானோ.. அவள் வந்தால் தானே சொல்வேன் என கூறுகிறான்.. தலையில் கைவைத்தவளாய் இப்ப நீ போகலன்னா நானும் போகல.. மறுபக்கமாக இருந்த சோபாவில் கைகட்டிக்கொண்டு அமர்ந்தவளை தவிப்பாய் பார்த்தாள்
என்னால நீ ஏண்டி உன் கூட பிறந்தவர் கல்யாணத்துக்கு போகாம இருக்கணும்..
அதான் துணைக்கு வர யாரும் இல்லையே..
கோயம்புத்தூரில் இருந்து தனியா வந்தவ தானே நீ.. இங்க இருந்து தனியா போக முடியலையா.. அவள் கேட்டதில் இப்படி கேள்வியை எதிர்பாராமல் திணறினாள்.
ஹ்ம்ம்.. வந்தேன் தான்.. அது மார்னிங் டிராவல்.. ஆனா இது நான் போறதுக்குள்ள இருட்டிடும்.. என்ன பிரச்சனை ஜானு உனக்கு? தயவு செஞ்சு சீக்கிரமா கிளம்பு.. என்றவளை எல்லாம் தெரிந்தும் இப்படி கூறுகிறாயே என்பது போல் அடிபட்ட பார்வை பார்த்தவள்..
வேறு வழியில்லாமல் கிளம்ப தொடங்கி இருந்தாள். அடுத்து ஐந்து நிமிடத்தில் அவள் மனம் மாறுவதற்குள்ளாக இழுத்து பிடித்து வெளித்தள்ளி கதவை பூட்டிவிட்டு நடந்து வந்தவர்கள் பஸ்ஸும் ஏறி இருந்தனர்.
இதோ அடுத்த இரண்டு மணி நேரத்தில் சொந்த ஊரின் வாசனை நாசியை தொட்டு செல்கிறது.. குழந்தையை தூக்கி இடுப்பில் ஏற்றிக் கொண்டாள்மீதா.. ஜான்வியின் விழிகள் தான் சென்றதிலிருந்து வெகுவாய் மாறி இருந்த சுற்றிய தெருக்களை ஆச்சரியமாய் பார்த்தன.. கடைசியாய் தாய் இறந்த போது வந்தது.. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின் இப்போதுதான் வருகிறாள்..
என்னடி அப்படி பாக்குற.. நிறைய இடம் மாறி போச்சுல்ல.. எனக்கும் கோயம்புத்தூரில் இருந்து வரப்போ எல்லாம் அப்படி தான் தோணும்.. ஆனாலும் மாற்றம் ஒன்றுதானே மாறாதது.. ஜான்வியை பார்த்து அழுத்தமாய் அவள் கேட்ட கேள்வியில் எதை கூறுகிறான் என புரிந்து மௌனமாய் திரும்பிக்கொண்டாள் ஜானு..
அந்தப் பெரிய நீள் ரோடின் வழியாய் நடந்து ஓரமாய் நின்ற ஆட்டோவினை பிடித்து மகாலின் வாசலில் வந்து இறங்கி இருந்தனர்.. ஆறு வருடங்களுக்கு முன் அவள் வாழ்வை புரட்டி போட்ட அதே மஹால்!!
கண் முன் அடுத்தடுத்த நிகழ்வுகள் வேண்டாத விருந்தாளியாய் வந்து செல்ல முகம் சுருங்கி நின்றவளை வா.. என இழுத்து கொண்டு முன் நடந்தாள் மிதா.. நேருக்கு நேரான வாசலில் மகள் ஆட்டோவில் இருந்து இறங்குவதை கண்டதும் உள்ளே மணமேடையில் நின்று பேசிக்கொண்டே இருந்த மணிமேகலையின் விழிகள் விரிந்தன..
வரமாட்டாள்.. எவளோ ஒருவளுக்காக உடன் பிறந்தவனையே தூக்கி எறிகிறாள்.. என இவ்வளவு நேரம் தவிப்பு கொண்டதில்.. அதிலும் வந்திருந்த ஒவ்வொருவரும் அவள் எங்கே எங்கே என கேட்கும் போதெல்லாம் இப்ப வந்துருவா.. இப்ப வந்துருவா.. சொல்லி நிச்சயமும் முடிந்து விட்டிருந்தது... எப்படியோ இப்பவாவது வந்தாளே.. என்ற ரீதியில் வேகமாய் பின்னங்கால் பிறரியில் அடிக்க இறங்கி ஓடி வந்தவளின் கரம் ஆதுரமாய் மகளை அணைத்துக் கொண்டது..
நல்லவேளை டி.. இப்பவாவது வந்தியே
. நிச்சயமே முடிஞ்சிருச்சு.. பெரிதாய் நெற்றி முறித்து கொண்டவளின் பேச்சு அவள் பின்னையே இறங்கிய ஜான்வியையும் கையில் இருந்த குழந்தையையும் பார்த்து கேலியாய் மாறியது.
ஒஹ்ஹஹ்.. இவளும் வந்திருக்காளா.. என்பது போல் உதட்டை எழுத்து சுழித்தவள் நீ வா மிதா கண்ணு.. என அவளை இருகரம் பற்றி உள்ளே அழைத்துப் போக கரம் உதறி நின்றாள் மிதா.
இவ்வளவு தூரம் வர தெரிஞ்சவளுக்கு உள்ளேயும் வர தெரியும்..நீ முன்னாடி போ.. நான் வரேன்.. என்றபடி பின்னே திரும்பியவள் ஜானுவின் கையில் இருந்த குழந்தையை தான் வாங்கிக் கொண்டாள்.. ஜானுவின் விழிகள் மணமேடையில் மாப்பிள்ளை கோலத்தில் சர்வாணி அணிந்து நேற்று நடந்த ஆரியனின் மீது படிந்தது.. ஆனால் அதில் துளியும் வருத்தமில்லை மாறாக நிம்மதியோ.. திருப்தியோ..
நிச்சயம் முடிய.. வாழ்த்து கூற வந்தவர்களிடம் பேசியபடியே இருந்தாலும் ரூபாவின் கைகள் கையில் அவன் அணிவித்திருந்த மோதிரத்தை நிமிடத்திற்கு ஒரு முறை தழுவி ஆசையாய் பார்த்துக் கொண்டன..
இங்க பாருங்க யாரு வந்திருக்காங்கன்னு மணிமேகலையின்.. குரலை தொடர்ந்து மறுபக்கம் ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த ஆர்யனின் தலை திரும்பியது.. மிதா அவளை தொடர்ந்து நின்றவளிடம் அவன் பார்வை வலியோடு நிலைத்தது.
ம்ம்ம்கும்.. கை மடித்து வாயருகில் வைத்தபடி யாருக்கும் தெரியாமல் மணிமேகலை கொடுத்த சத்தத்தில் தலை தட்டி பார்வையை மிராவிடம் திருப்பிக் கொண்டான் ஆர்யன்..
வாழ்த்துக்கள்.. கொண்டு வந்திருந்த பொக்கேவை இருவர் கைகளிலும் திணித்துவிட்டு உனக்கும் தான் ரூபா.. என வழிய புன்னகைத்தாள் மிதா..
தேங்க்ஸ்.. சொந்த அண்ணன் கல்யாணத்துக்கு இவ்வளவு நேரம் கழிச்சா வருவ.. இன்னும் லேட் கம்மரா போற உன் குணம் மாறவே இல்ல.. ரூபாவின் பேச்சில் முகம் கருத்தது..
அந்த நேரத்தை பயன்படுத்தி ஆரியனின் விழிகள் ஜானவின் கைகளில் பனி மொட்டாய் விழிகளை உருள உருள விரித்துப் பார்த்துக் கொண்டிருந்த மகள் மீது ஏக்கமாய் படிந்தது.. இனி என்றுமே அவள் இல்லை.. அவன் மகள் இல்லை.. வலி யில் கண்கள் எப்போது கலங்குவது எனக்கேட்டு தன்னிச்சையாய் மூடிக்கொண்டன.. ஆழ்ந்த மூச்சிழுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்..
விடு ரூபா.. இப்போதாவது வந்தாளே என்றபடி மணிமேகலையும் அவர் பங்குக்கு சேர்ந்து கொள்ள இருவரையும் ஒரு முறை முறைத்துவிட்டு வாடி என தோழியை கையோடு பிடித்து இழுத்துக்கொண்டு சென்று விட்டாள்.. ஆரியனின் ஏக்கப் பார்வை செல்லும் தன் உயிர் இரண்டையும் ஏக்கமாய் தொடர்ந்தது..
உறவினர்களுக்குள் ஒருவராய் சற்று தள்ளி இருந்த சேரில் ஆளுக்கொன்றாய் அமர்ந்து கொண்டனர்.. புதிது புதிதாய் ஆட்கள் வருவதும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதும் மேடை விட்டு இறங்கி நேராய் சாப்பிட செல்வதுமாய் இருக்க.. அது ஒன்றும் ஜானு மனதில் அவ்வளவு பெரிய தாக்கம் ஒன்றையும் ஏற்படுத்திவிடவில்லை..
என்ன ஓடி ஆடி விளையாடும் குட்டியை சமாளித்து அமர வைப்பது பெரும் பாடாகிப் போனது..
எழுந்துவிட்டாள்.. கொஞ்ச நேரம் நான் எங்க பழைய வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கிறேன் என்றபடி திரும்பப் போக.. கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாமே டி. கூட்டம் குறையும் பொருட்டு மிதாவின் கண்கள் சுருங்கின.
பாப்பாவ சமாளிக்க முடியல.. அவள் கூறியதை தொடர்ந்து குழந்தையை இழுத்து தன் கையோடு அணைத்துக் கொண்டாள்..நான் பார்த்துக்கிறேன் இப்போ ஓகேவா.. கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்.. மிதா நிறுத்தி வைப்பது ஏன் என புரியவில்லை!! நினைத்தது போலவே நேரம் ஆக ஆக கூட்டத்தின் வருகை மெல்ல மெல்ல குறைந்தது..
சாப்பிட்டு வந்துரலாமா.. மிதா கேட்டதும்.. ப்ச்.. அப்புறமா போய்க்கலாம்.. அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே முன்னே வந்து நின்றார் மணிமேகலை.
என்ன மிதா உன் தோழி என்ன சொல்றா.. இங்க இருக்குற அலங்காரங்களையும் செழிப்பையும் பார்த்து வாய் அடச்சு போயிட்டாளா.. இருக்கணும்ல நாமளும் பெரிய பணக்காரங்க.. ரூபாவும் நமக்கு கொஞ்சமும் குறைவில்லாத இடத்துல இருந்து வந்துருக்கா.. பணமும் பணமும் சேர்ந்துச்சுன்னா ஆடம்படம் இருக்க வேண்டியதுதானே என்றவள்.. இதற்காகத்தான் உன்னை என் மகனிடம் இருந்து பிரித்தேன்.. என சொல்லாமல் சொல்ல கேட்டு ஜானுவின் முகம் அப்படி ஒன்னும் தொங்கிப்போய்விடவில்லை.. நிமிர்ந்து நேராக தான் நின்றாள்.. மிதா தான் தாய் இப்படியெல்லாம் பேசுவதில் கடுத்து கொண்டு வந்தாள்.
இதுக்கு தான் மெனக்கெட்டு பத்திரிக்கை வச்சு அவளையும் வர சொன்னியா.. ச்சை.. முகம் சுழித்து திரும்பி கொண்டவளை நான் என்ன அப்படி தப்பா கேட்டுட்டேன்.. முன்ன பின்ன இப்படி எல்லாம் பாக்காதவளுக்கு இதையெல்லாம் பார்த்தால் ஆன்னு வாய்பிழக்குறது ஒன்னும் ஆச்சரியம் இல்ல.. அவள் பேச்சுக்கு மறு வார்த்தை பேசப்போன மிதாவின் கையை இறுக்கி பிடித்தாள் ஜானு.
விடு என்பது போல் ஜானு கண் ஜாடை செய்ய.. அதற்கும் ஒரு வம்பு வழக்க வாய் எடுத்தவளை.. மணி.. என தூரத்தில் இருந்து குரல் கேட்டவள் வந்து வச்சுக்கிறேன்.. என வாயோடு முனகி அங்கிருந்து சென்று இருந்தாள்.
செல்லும் தாயே வெறுப்போடு பார்த்து நின்றால் மிதா.. எத்தனை ஜென்மம் ஆனாலும் இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க.. அவள் கூறிக் கொள்ள.. திடீரென அவள் போன் சிணுங்கியது.
ஆர்யன்!! விழிகள் தன்னிச்சையாக மேடை பக்கம் திரும்ப அங்கு ரூபா மட்டுமே நின்று இருந்தாள்.. அவளை சுற்றி அவள் வெளிநாட்டு நண்பர்கள் சுற்றும் சூழ நின்றிருந்தனர்.. அவர்களோடு வெகு தீவிரமாய் ரீல்ஸ் செய்து கொண்டிருந்தால் அவள்.
உடனடியாய் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தால் மிதா... நான் ஸ்டேஜுக்கு பின் பக்கம் இருக்கிற ரூம்ல இருக்கேன் ஜானுவ..ஒரு அஞ்சு நிமிஷம் வர சொல்றியா??
ஆனா என்னனு.. அவள் குரல் இறங்கியது.. மண்டபத்தின் பாட்டு சத்தத்தில் பக்கத்தில் நின்ற ஜானுவுக்கு அவள் பேசியது எதுவும் கேட்கவில்லை.. யாரோ அவளின் தோழி போலும்..பாட்டு சத்தத்திற்காக போனை இப்படி நெருக்கமாய் வைத்து பேசி கொள்கிறாள் என நினைத்துக் கொண்டாள்.
எதிர்முனையில் அவன் என்ன சொன்னானோ.. சரி.. சரி.. என்றபடி vili உயர்த்தி நிமிர்ந்தவள் அவள் கையில் இருந்த கிருத்தியை தான் வாங்கிக் கொண்டாள்.
ஜானு.. என் போன்ல சார்ஜ் இல்ல.. அந்த பின் பக்க ரூமில ரூம்ல சார்ஜர் இருக்காம்.. இப்போ தான் என் கசின் யமுனா கிட்ட கேட்டேன்.. நீ கொஞ்சம் போய் போட்டு வர்றியா.. அவள் கேட்க மலங்க விழித்தாள்..
அன்று சென்ற அதை அறை அல்லவா.. நா போகல.. நீ போயிட்டு வாடி.. அவள் கூறும்போதே பக்கத்தில் வைத்திருந்த ஐஸ்கிரீமை ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து குழந்தைக்கு ஊட்ட ஆரம்பித்து இருந்தாள் மீதா.
பாப்பாவுக்கு ஊட்டிட்டு இருக்கேன் டி.
திடீர்னு கால் வரும்.. ப்ளீஸ் ஜானு.. என கீழிறங்கிய குரலோடு கேட்டவளிடம் அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவள் போனை வாங்கிக் கொண்டு அந்த பின் பக்க அறைக்கு நடந்தாள்.. கடைசி முறையாய் அங்கு வந்தபோது அவனை இழுத்துக்கொண்டு உள்ளே வந்ததும் அதற்கு அடுத்ததாய் நடந்த நிகழ்வுகளும் மனதை உறுத்த.. சார்ஜ் போட்டு உடனடியா வெளியே போக போறேன்.. அதுக்கு ஏன் இந்த பதட்டம்.. என்றபடி வேகமாய் துடித்த மனதை தட்டி சமன்படுத்திக் கொண்டு அவள் உள்ளே நுழைந்து சார்ஜ் போட.. பின் இருந்து கதவு சாற்றப்பட்டது.. எதிர்பாராத கதவு மூடும் சத்தத்தில் ஹக்கென அதிர்ந்து நின்றாள்.. அவள் சென்று விடாமல் கதவின் மீது சாய்ந்து ஒரு கால் மடித்து நின்றவன் ஆரியன். அவன் இறங்கிய பார்வையில் இவள் மூச்சு நின்று போனது.
கருத்துகள்
கருத்துரையிடுக