ஏற்கனவே அந்த மண்டபத்தை பார்த்ததிலிருந்து ஒருவித தவிப்பு மனநிலையோடு இருந்தவள் திடீரென ஆரியன் அந்த அறைக்குள் இருப்பதை கண்டு மூச்சு அடைத்துப் போனாள்.. அதிலும் கதவில் கால் சாய்த்து அவன் நின்ற விதத்தில்.. ஏற்கனவே அலுவலகத்தில் அவனோடு தனியறையில் இருந்த ஞாபகங்கள் வந்து செல்ல.. ஐயோ.. இப்போது என்ன நடக்கப் போகிறதோ.. அவள் நெஞ்சுக்கூடு பதற்றத்தில் ஏறி இறங்கியது..
தவறான நோக்கில் அவன் நடந்து கொள்ள மாட்டான் என அறிந்தாலும் கடந்த சில நாட்களாய் அவள் கொண்டிருந்த பயமும் தனிமையும் வேதனையும் அவளை ஒருவித இறுக்கத்திற்கு உள்ளாக்கியது என கூறலாம்.. பயத்தில் ஒரு அடி பின்னெடுத்து வைத்தவளை இடுங்கிய கண்களோடு பார்த்தவனின் முகத்தில் நிச்சயம் அது வேதனையின் சாயல்தான்..
ஹ்ம்ம்.. இதழ்கள் வரள புன்னகைத்தான்.. உனக்கு அவ்வளவு தான் என் மேல இருக்கிற நம்பிக்கை இல்லை.. வருத்தத்தோடு கேட்டுக் கொண்டவன் அதுக்கேத்த மாதிரி தானே நானும் நடந்திருக்கேன்.. உன் உணர்வுகளுக்கும் விருப்பத்துக்கும் கொஞ்சம் கூட மதிப்பு கொடுக்காமல்.. என்ன சொல்ல வரேங்குறத கூட.. கேட்காமல் எனக்கு நானே கொடுத்துகிட்ட தண்டனை இது.. சோர்வான குரலில் புரியாமல் பார்த்தாள் ஜானு.. அவள் கண்கள் இடுங்கி நின்றன.
அவன் ஏதோ கூற முற்படுகிறான் என புரிகிறது.. ஆனால் இப்படி தனி அறையில் தனித்திருப்பதை யாரேனும் பார்த்து விட்டால் தனக்கு தானே சங்கடம் என அவள் வெளி செல்ல போக.. ஜானு ப்ளீஸ் ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளு.. அதுக்காக தான் மிதா கிட்ட சொல்லி உன்ன இங்க வர வச்சேன்.. ஆரியன் கூறியதில் அவள் முகம் கடுத்தது
அப்படின்னா அவளும் கூட்டாளி தானா.. அது சரி அண்ணன் தங்கை தானே.. வெளியே போய் இருக்கு அவளுக்கு மனதோடு நினைத்துக் கொண்டாள்..
இங்க பாருங்க சார்.. உங்க அம்மா எனக்கு பத்திரிக்கை வச்சிருக்காங்க.. நான் இல்லாம உங்க தங்கச்சி இங்க வரமாட்டேன்னு சொன்னதால தான் வேற வழி இல்லாம வந்துருக்கேன்.. அதை தாண்டி உங்க கிட்ட பேசவோ.. நீங்க சொல்றத கேட்கவோ எனக்கு துளியும் விருப்பம் இல்ல.. அவசியமும் இல்ல.. என மீண்டும் நகர போனவளை ஜானு.. ஒரு நிமிஷம் கைபிடிக்க வந்தவனின் கரம் அந்தரத்தோடு நின்றது.. வலியான பார்வையோடு அவளை துளைத்தான். இது உனக்கு மட்டும் இல்ல.. எனக்குமே ரொம்ப முக்கியமான விஷயம்.. தயவுசெஞ்சு ஒரு நிமிஷம் கேளேன்.. அவன் கீழிறங்கிய குரலில்.. எப்படியும் கேட்காமல் அவன் விடப் போவதில்லை என்பதில் கைகட்டி தீர்மானமாய் அவனை பார்த்தவளின் அடுத்த நிமிடம் திரும்பிக் கொண்டன..
அவள் தன்னை பார்க்காமல் தவிர்ப்பதில் நெஞ்சிற்குள் அமிலத்தை ஊற்றியது போல் வலி கண்டாலும்.. எப்படியோ தன் கூறப்போவதை அவள் கேட்டாலே போதும்.. அவள் வாழ்க்கை நன்றாக இருந்தாலே போதும்.. என பெருமூச்சு விட்டுக் கொண்டவனாய் ஆரம்பித்தான் ஆரியன். நான் இந்த கல்யாணத்துக்கு எதுக்கு ஒத்துக்கிட்டேன் தெரியுமா?.. அவன் கேள்விதனில் அவள் இதழ்கள் வளைந்தன..
நீங்க எதுக்காக ஒத்துக்கிட்டு இருந்தா எனக்கு என்ன சார்.. அதோட ஏற்கனவே உங்க அம்மா சொல்லிட்டாங்க. பணமும் பணமும் தான் சேரனும்னு. கூறும் போது அவள் இதழ்கள் விரக்தியில் வளைந்தன..
அது அம்மாவோட பார்வைக்கு.. ஆனா நான்.. என்ன.. என்னக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமே இல்ல ஜானு.. இறங்கிய குரலோடு அவன் கூற இடுங்கிய விழிகளோடு அவனைப் பார்த்தாள்.
அன்று பத்திரிக்கை கொடுக்கும்போது ரூபாவின் அருகில் ஜம்பமாய் அமர்ந்து கொடுத்ததென்ன.. இப்போது பேசுவது என்ன.. அவன் கூறியதை நம்ப மாட்டாமல் வெறுப்போடு மறுபக்கம் திரும்பிக் கொள்ள.. நான் சொன்னது இனிமே சொல்ல போறது எல்லாம் சத்தியமான உண்மை.. என்றவன் அன்று நடந்த விஷயங்களை கூற ஆரம்பித்தான்.
எப்போது அசோக்கை பற்றி உண்மை தெரிந்ததோ அப்போதே மனதில் ஒரு மாதிரியான துணுக்கம் ஏற்பட்டுவிட்டது எனக் கூறலாம்.. எப்பேர்பட்ட உயரத்தில் இருப்பவன்.. அவன் ஏன் ஜான்விற்காகவும் தன் மகளுக்காகவும் இவ்வளவு தூரம் இறங்கி வர வேண்டும்.. அதிலும் நேருக்கு நேராய் தான் அவனை நிறைய முறை காயப்படுத்தி பேசியபோதும் ஒரு வார்த்தை கூட சண்டைக்கு வராமல் அவன் நின்று தொனி.. அன்று ஒன்றும் இல்லாத பிச்சைக்கார பயன் என எகத்தாளமாய் தோன்றியது.. இந்த நிமிடம் ஆரியனை உலுக்கி பார்த்தது.. பூதாகரமாய் எழுந்தது.. சொல்ல போனால் அசோக்கின் உயரம் அந்த அளவு ஆரியனை மிரள வைத்திருந்தது.
ஆனாலும் அவளுக்கு பயங்கரமா ஜாக்பாட் தான்.. இல்லன்னா உங்கள விட்ட அடுத்ததாவே அப்படி ஒருத்தன வளர்ச்சி போட முடியுமா.. அதுலயும் பைக்ல அவன் பின்னாடி உட்கார்ந்து தோளை புடிச்சுக்கிட்டு ஏதோ பெரிய மகராணி மாதிரி அவ போறது.. ஹ்ம்ம்.. ரூபா.. இதழ் பிதுக்கியதும்அதற்கு மேல் தாங்காமல் ரூபா.. கர்ஜித்த அவன் குரலில்.. டிவி பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலை திரும்பினார்.
என்னடா.. இவ்வளவு நேரம் நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தீங்க.. திடீர்னு என்ன ஆச்சு.. எனக்கு கேட்க அதற்குள் அவள் கண்களில் இருந்து பொல பொலவென நீர் ஊக ஆரம்பித்து இருந்தது.
பாருடா.. உன் ஒரு வார்த்தைக்கே தாங்க முடியாம பிள்ளை எப்படி கலங்கி போறான்னு.. இவளை போய் திட்ட உனக்கு எப்படி தான் மனசு வருதோ.. என தோளோடு அவளை சாய்த்து கொண்டபடி மணிமேகலை கூற.. எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவன்..
சிறிது நேரத்திற்கு தனிமை வேண்டும் என தோன்ற அணிந்திருந்த டி-ஷர்ட் ட்ராக் பான்டோடு வெளியே கிளம்பி விட்டான்..
மனமெங்கும் கனத்துக் கொண்டிருந்தது.. அசோக்குடன் அவளை பார்த்த முதல் கணத்தில் இருந்து.. கடைசியாய் அவன் அவளை காதலிக்கிறான் எனக் கூறி இருவரையும் பிரித்து விட்டது வரை அனைத்தும் தோன்ற.. ஓரமாய் இருந்த அந்தக் கல்லில் சாலை என்றும் பாராமல் அமர்ந்து விட்டான்.
எவ்வளவு பெரிய கோடீஸ்வரன்.. அத்தனை பெரிய சாம்ராஜ்யங்களையும் தன் விரல் நுனியில் ஆட்டுவிப்பவன்.. உரிமை இல்லை எனினும் இத்தனை காலங்களாய் அவளையும் மகளையும் கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பாய் பார்த்துக் கொண்டவன்.. அப்படி இருந்தும் தான் ஒவ்வொரு முறையும் சீண்டும்போது நாகரிகமாய் விலகிச் சென்ற அவன் குணமும் வலிமையும்.. அப்போது பிச்சைக்கார பையன் என ஒரே வார்த்தையில் மறைந்து விட்டிருந்தது.. இப்போது கருமேகத்திலிருந்து வெளிவரும் சூரியனாய் அவனைப் பற்றிய உண்மையை அறிந்த நிலையில் விஸ்வரூபமாய் வெளிச்சம் இட்டது..
அதிலும் கடைசியாய் ஜானு என் முகத்தில் விழிக்காதே என கூறிய போது அவன் முகத்தில் எத்தனை சோகம்.. அப்போது இதோட அவன் தொல்லை முடிந்தது என ஆத்மார்த்தமாக ரசித்தேனே.. எவ்வளவு தைரியம் இருந்தால் அவ வந்தா கூட்டிட்டு போங்கன்னு என்கிட்டயே திமிரா சொல்லி இருப்ப.. இப்ப அவ உன்னையும் முகத்துல முழிக்க கூடாதுன்னு சொல்லிட்ட இல்ல.. என குருரம்மாய் பார்த்தது நினைவு வர.. எவ்வளவு கேவலமானவனா இருந்திருக்கேன் நான்.. அவன் நினைச்சிருந்தா ஒரே அடில என்னையும் என் பிசினஸையும் மொத்தமா முடிச்சு கட்டிட்டு ஜான்வையும் பாப்பாவையும் கூட்டிட்டு போய் இருக்கலாம்.. ஆனா ஏதோ ஒரு காரணத்துக்காக தான் அவன் அமைதியா இருந்திருக்கான்... நான் அவனை விடாப்படியா சீண்டின போதும் அவன் என்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்லலையே.. ஏன் எதிர்க்கிற மாதிரி நடந்துக்க கூட இல்லையே..?? எவ்வளவு நேரம் அங்கு அப்படியே அமர்ந்து இருந்தானோ.. திடீரென தோயாமல் அடித்துக் கொண்டிருந்த காரனின் சத்தத்தில் எழுந்து சோர்ந்த நடையோடு வீட்டிற்கும் வந்து சேர்ந்திருந்தான்..
செருப்பை கலட்டி விட்டு உள்ளே நுழைய போக.. மணிமேகலையின் குரல் வாசல் வரை எட்டியது. ஆமாங்கண்ணே.. இன்னும் 15 நாளுல ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை வச்சிடலாம்.. ஆமா.. அவனுக்கும் இந்த வருஷத்தோட வயசு ரெட்டப்படையை தொட போகுது.. அதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிட்டா நல்லது.. சரி.. அப்ப இன்னும் 15 நாளைக்குள்ள ஏதாவது நல்ல முகூர்த்தமா பாருங்க.. அதுலயே ஆரியனுக்கும் ரூபாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.. அவள் பேச்சில் வாசலிலேயே ஸ்தம்பித்து நின்றவன்.. கடைசி வார்த்தைகளில் வேகமாய் ஓடி வந்து அவர் கைகளில் இருந்து போனை பிடுங்கி கட் செய்தான்.
எதிர்பாராத வேலையில் உள்ளே வந்ததோடு சிவந்த வழிகளோடு பேசிக் கொண்டிருந்த போனை வாங்கி அழைப்பை துண்டித்ததில் என்னடா ஆச்சு உனக்கு.. ஏன் இப்படி பண்ற.. ஏற்கனவே ரூபாவை அழ வைத்த கோபத்தில் இருந்து வெளியே வராதவளாய் மணி ஆவேசமாய் கத்த.. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்மா.. வெட்டு ஒன்று துண்டு இரண்டுமாய் கூறி இருந்தான் ஆர்யன்.
எ.. என்ன.. மணிமேகலையிடம் அதிர்ச்சி என்றால்.. ரூபாவின் விழிகள்.. அவன் வார்த்தையில்.. நிலை குத்தி நின்றன.
ஆமாம்மா.. எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சமும் விருப்பம் இல்ல.. அன்னைக்கு நீங்க கேட்டப்ப மறுக்க முடியாம தான் அப்போதைக்கு சரின்னு சொல்லி வச்சேன்.. ஆனா எனக்கு.. இந்த கல்யாணம் வேண்டாமா.. என்னால ரூபாவ அந்த மாதிரி ஏத்துக்க முடியல.. அவன் கூற பார்த்துக் கொண்டிருந்த ரூபாவின் விழிகள் சுருங்கின.. முகம் கருத்திருந்தது.
எப்போது அவன் திருமணத்திற்கு சம்மதம் கூறிவிட்டான் என அறிந்து வெளிநாட்டிலிருந்து நேராக ஊருக்கு கூட செல்லாமல் இவனோடு வந்து தங்கி இருந்தாளோ.. அப்போது இருந்தே மனதோடு அவனை கணவனாய் பாவித்து.. அவள் மனைவியாய் தான் வாழ ஆரம்பித்திருந்தாள்..
அதில் வந்திருந்தது தான் அந்த நெருக்கமும் தொடுதலும்.. இடையில் ஜான்வுயை வெறுப்பேற்றுவதற்காக சில நேரம் நடந்து கொண்டாலும் முழுக்க முழுக்க அவள் வெளிக்காட்டியது அவன் மீதான அன்பையும்.. காதலையும் தான்.. பருவமடைந்த காலத்தில் இருந்தே அவன் மீது கொண்ட ஆசையும்.. முறைப்பெண் என்ற உரிமையும் இப்போது மனைவியென வளர்ந்து வேரூன்றி வெகுநாட்கள் ஆகிவிட்டன..
ஆனால் திடீரென திருமணம் எனக் கூறும் போது அவன் இப்படி கூறியதில் நம்ப மாட்டாமல் அதிர்ச்சியில் பேய் அறைந்தார் போல் அவள் நிற்க.. டேய் நீ என்னடா சொல்ற.. என்ன பேசுறன்னு புரிஞ்சுதான் பேசுறியா.. மணிமேகலை அவள் முகம் கண்டு வார்த்தைகளில் படபடத்தார்.
உண்மைதான் மா.. என்னால அத பத்தி யோசிச்சு கூட பாக்க முடியல.. அன்னைக்கு இருந்த ஏதோ ஒரு மைண்ட்ல சரின்னு சொல்லிட்டேன்.. என்ன மன்னிச்சிடு.. தயவுசெய்து இந்த கல்யாணம் பேச்சு இதோட விட்டுடு.. என்றபடி ஸ்தம்பித்து நின்ற ரூபாவிடம் திரும்பியவன் ரூபா.. நான் உண்மையாவே மன்னிப்பு கேட்க வேண்டியது உன்கிட்ட தான்.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிரு.. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல.. அவன் வார்த்தைகளை முடிப்பதற்குள்ளாகவே விறுவிறு நடையோடு அங்கிருந்து சென்றவள் வேகமாய் அறையை பூட்டி உள்ளே தாளிட்டிருந்தாள்.
அவள் வேக நடையை ஏதோ தவறென காட்ட.. இதில் கதவை வேறு பூட்டியதும் ரூபா ரூபா.. மணிமேகலை ஒரு பக்கமும்.. அவளைத் தொடர்ந்து ஆரியன் மறுபக்கமுமாய் நின்று கதவை தட்ட.. எதுக்குடா இப்படி நடிக்கிற.. உன்னையே மனசுல நினைச்சுகிட்டு இருந்த பிள்ளையை இப்படி உடைச்சிட்டியே.. அங்கிட்டு போயிடு.. கோபத்தில் சிவந்த விழிகளோடு வார்த்தையை கொட்டினாள் மணிமேகலை.
ஆஆஆஆ.. உள்ளிருந்த
அவள் அழுகை சத்தம் வெளியில் இருந்தவர்களின் காதை அடைத்தது..
அம்மா.. ரூபா..எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்.. முதல்ல வெளியே வா.. வெளியில் இருந்து முந்தனையை முன்னே இழுத்து பிடித்துக் கொண்டு பதட்டத்தோடு சத்தமிட்டார் மணிமேகலை..
என்னால.. என்னால முடியல அத்தை.. மாமா எப்படி அப்படி சொன்னாரு.. அய்யோ என்னால தாங்க முடியலையே.. அவள் ஒலம் வெளியில் நின்று இருந்தவனின் நெஞ்சத்தை உலுக்கியது.
ரூபா.. அவன் எதோ விளையாடுறான்டா.. நான் அவன்கிட்ட பேசுறேன்.. கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும்.. அப்போதும் விடாப்பிடியாய் மணிமேகலை கூறியதில் அருகில் நின்றவன் அவரை முறைத்து திரும்பினான்.. நான் கூறுவது தான் உண்மை.. என கூற வாய் எத்தனித்தாலும் இப்போதைக்கு அவள் வெளிவருவதே முக்கியம்.. என தோன்ற வேகமாய் கதவை தட்டினான்.
இல்ல அத்தை எனக்கு தெரியும்.. மாமா உண்மையா தான் சொல்லி இருக்கு. அதுக்கு என்ன கொஞ்சம் கூட பிடிக்கல.. ஆனால் என்னால மாமாவை தவிர வேற யாரையும் யோசித்து கூட பார்க்க முடியல.. அவள் குரல் நடுங்கியது..
மாமா.. மாமா.. இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பாக்க முடியல.. அத்தை என்ன மன்னிச்சிடுங்க.. என்பதை தொடர்ந்து.. உள்ளே டரக்.. டரக்.. என்னை நேற்றிலிருந்து சத்தமிட்டு கொண்டிருந்த ஃபேனின் சத்தம் நின்று போக.. அவள் செயல் உணர்ந்து இருவரின் விழிகளும் அதிர்ச்சியில் விரிந்தன.
யம்மா.. ரூபா.. ரூபா. இதெல்லாம் தப்பு தயவு செஞ்சு வெளிய வந்துடு மணிமேகலை கதற இதற்கு மேலும் தாமதித்தால் வேலைக்காகாது என உணர்ந்து.. தாயை தள்ளி நிறுத்தியபடி அந்த மரக்கதவை தன் தோளால் இடிக்க ஆரம்பித்தான்..
நிலையாய் கருப்பாறை போல் நின்று இருந்த கதவை இடித்து தள்ளுவது ஒன்றும் அவ்வளவு எளிதாய் இல்லை.. வேகமாக கிச்சனுக்குள் ஓடியவன் தாய் வந்திருக்கிறார் என சமைப்பதற்கு வாகாய் வாங்கி வைத்திருந்த அருகாமணையை எடுத்து வந்தபடி கதவில் ஓங்கி ஓங்கி தட்ட.. அடுத்த ஐந்து நிமிடத்தில் கதவின் தாழ்ப்பாள் கழன்று கீழே விழுந்து இருந்தது..
உள்ளே சென்று பார்க்க.. அதற்குள் அனைத்தும் முடிந்தது.. தன்னிடம் இருந்த டிசைனர் சாரி ஒன்றை எடுத்து பேனில் மாட்டியிருந்தவள். கழுத்தை உள்விட்டு தன் கடைசி நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தாள்..
கண்கள் மேல் சொருகி நா தொங்க.. அவள் நிலையைக் கண்ட அடுத்த நிமிடம் அவள் காலை பாய்ந்து பிடித்திருந்தான் ஆரியன்.
ஆனால் அந்த தொய்வான நிலையிலும் கூட அவன் கைகளுக்குள் சிக்காது காலை உதவி அவனிடமிருந்து விடுபட முயன்று கொண்டிருந்த ரூபாவை இறுக்கிப்பிடித்து ஒரு வழியாய் அவளை கீழே இறக்கி மெத்தையில் படுக்க வைத்தான்..
ஐயோ எப்படி பட்டாம்பூச்சியா சுத்திக்கிட்டு இருந்த பிள்ளையை ஒரே வார்த்தையில் உடைத்து இப்படி போட்டு தான் இந்த பாவி மகன்.. இப்போ என் அண்ணனுக்கு நாங்க என்ன பதில் கூறுவேன் நெஞ்சி பிடித்துக் கொண்டு மணிமேகலை அழ ஆரம்பிக்க இப்போது பேசுவதற்கு நேரமில்லை என உணர்ந்த அடுத்த நிமிடம் வெளியே சென்றவன் தனக்கு தெரிந்தவர்களின் உதவியோடு அவளை அள்ளிக்கொண்டு காரில் ஏற்றினான். கூடவே அவனோடு மணிமேகலையும் மறுபக்கம் அமர்ந்து கொண்டார்.
அருகில் இருந்த மருத்துவமனையிலேயே ரூபாவை சேர்த்தனர்.. இன்னும் ஒரு பத்து நிமிடம் தாமதமாக வந்திருந்தால் நிச்சயம் அவளை காப்பாற்றி இருக்க முடியாது.. இப்போது கூட அவள் குரல்வளை வெகுவாகவே தொய்ந்துவிட்டது என முன்னறிவிப்போடு சிகிச்சை நடத்தப்பட்டது.. வெளிய நின்ற அந்த அரை மணி நேரத்தில் அவனை கரித்து கொட்டி விட்டார் மணிமேகலை.
இப்போ என் அண்ணனுக்கு நான் என்னடா பதில் சொல்லுவேன்..
பட்டாம்பூச்சி மாதிரி எப்படி சுத்தி வந்துகிட்டு இருந்த பிள்ளையை இப்படி நடைபிணமாக ஆக்கி ஹாஸ்பிடல்ல சேர்ர மாதிரி பண்ணிட்டியே.. மணிமேகலையின் பேச்சில் அதிர்ந்தான்.
அம்மாஹ்!!
என்னடா நொம்மா.. நீ கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்னதுனால தானே நான் என் அண்ணனிடம் மெனக்கிட்டு பேசி அந்த பிள்ளையை வெளிநாட்டில் படிச்சிட்டு இருந்தத இங்க வர வச்சேன்.. இப்ப கல்யாணம்ன்னு பேசுற நேரத்துல வந்துகிட்டு கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொன்னா.. அந்த புள்ள மனச கொஞ்சமாவது யோசிச்சு பாரு..
மணிமேகலையின் பேச்சிற்கு பதில் கூற முடியவில்லை.
வெளிநாட்டில் படித்தவள் இந்த உணர்வுகளை எல்லாம் அவ்வளவு பெரிதாய் எடுத்துக் கொள்ள மாட்டாள் என நினைத்தானே.. எப்படியோ தன் விளையாட்டிற்கு அவளை பலியாக்கியது உண்மை தான்..
என்னடா நான் பாட்டு பேசிகிட்டு இருக்கேன்.. நீ இப்படி ஆணி அடிச்ச மாதிரி அமைதியா நின்னா என்ன அர்த்தம்.. தாய் நெஞ்சில் கை வைத்து தள்ளி பதில் கேட்டும் பேச முடியவில்லை..
அமைதியாய் தொய்ந்து நின்றான்.. திடீரென உள்ளிருந்து டாக்டர் வர டாக்டர்.. இப்போ அவ எப்படி இருக்கா.. பதறி ஓடிப் போனாள் மணி.
உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல.. என்ற பின்னே நிம்மதி பெருமூச்சு விட்டனர்..
ஆனாலும் அவங்க ரொம்ப அப்செட் ஆகி இருக்காங்க.. அவங்க உயிரை காப்பாத்திட்டோம் தான்.. ஆனால் இன்னும் கான்ஷியஸ் வரல.. உடல்ல பாயுற முக்கால்வாசி நரம்புகள் மூளையில் இருந்து கழுத்து வழியாதான் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் பயணிக்குது.. அப்படிப்பட்ட கழுத்துல இறுக்கமான முடிச்சு விழுந்துருக்கு.. இதுல சில நரம்புகள் அறுபட்டு இருக்க கூட வாய்ப்பு இருக்கு.. அவர் கூறியதில் ஐயோ வாய் பொத்தி உடல் குலுங்கினாள் மணி.. என்ன இருந்தாலும் சிறுவயதிலிருந்து தன்முன் வளர்ந்த பிள்ளை.. அண்ணன் மகள்.. அதையும் தாண்டி வீட்டிற்கு செல்வத்தை அள்ளி வரப்போகும் மகாலட்சுமி அல்லவா..
அதனால தான் நீங்க வந்தப்பவே சொன்னேன் இன்னும் ஒரு பத்து நிமிஷம் தாமதிச்சிருந்தா கூட உயிருக்கு ஆபத்தாகி இருக்கும்னு.. இப்ப விஷயம் என்னன்னா அவங்க உயிரை காப்பாத்திட்டோம்.. ஆனா கான்ஷியஸ் வரல.. ஆனா சீக்கிரமா உங்களுக்கு சுய நினைவு வந்தாகணும்.. இல்லனா ஹோமாக்கு போற வாய்ப்பு கூட இருக்கு.. கூறியதில் ஆரியனுமே கூட அதிர்ந்து தான் போனான்.
டாக்டர்??
மருத்துவத்தால் முடிஞ்சத நாங்க செஞ்சிட்டோம்.. ஆனா எதுனாலும் அவங்க உடம்பு சப்போர்ட் பண்ணா தான் நடக்கும்.. அவங்க எதனால இந்த முடிவை எடுத்தாங்கன்னு உங்களுக்கு தெரியும்னா அதை சரி செய்ற மாதிரி போய் பேசுங்க.. அது மட்டும் தான் அவங்கள அந்த விரக்தியிலிருந்து மீட்கும்.. மருந்துகளையும் ஏத்துக்க வைக்கும்.. டாக்டர் கூறிய அடுத்த நிமிடம் மகனை தரதரவென இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்திருந்தார் மணி.
கண்மூடி சோர்ந்த நிலையில் மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு பார்க்கவே பரிதாபமான நிலையில் கிடந்தாள் ரூபா..
பாரு டா.. பாரு.. நல்லா பாரு.. இத பாக்கணும்னு தானே இப்படி எல்லாம் பண்ற.. தாயின் வார்த்தைகளில் அவன் முகம் சுருங்கியது.
அம்மா.. ஏன் இப்படி எல்லாம் பேசுற.. அவ நல்லா இருக்கணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா.. என்ன இருந்தாலும் அவ என்னோட கசின்..
அறைஞ்சேன்னா வச்சுக்கோ.. கசினாம்ல.. பல்லை கடித்து கையை ஓங்கிக் கொண்டு வந்தார்..
இன்னொரு தடவை கசின்.. கிசின்னு ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்த.. கண்களை உருத்து விழித்தவர்.. இப்ப என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியாது.. மரியாதையா அவளை நல்லபடியா கொண்டு வந்துடு.. இல்ல அவளுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னு வச்சுக்கோ.. அவளுடைய இந்த நிலைமைக்கு நீ தான் காரணம்.. கோப குரலோடு அவர் கூறியதில் அதிர்ந்து பார்த்தான்..
அம்மா?? அவன் அழைத்தது ம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவள் திரும்பி கொள்ள.. மணி கூறியதிலும் சிறு உண்மை இருப்பதில் அவன் சோர்ந்த நடை தானாக ரூபாவின் பக்கம் திரும்பியது.
கண்மூடி எந்த அசைவும் இல்லாமல் கிடந்தவளை.. ரூபா.. ரூபா.. அவன் வறண்ட குரல் அழைத்த அடுத்த நிமிடம்.. முடிந்த இமைகளுக்குள் இருந்த கருவிழிகள் ரெண்டும் அசைந்தன..
ஹக்.. துள்ளி போட பார்த்தான் ஆர்யன்.. இவ்வளவு நேரம் டாக்டர் பேசிய போது.. தாய் பேசிய போது எந்த அசிமும் இன்றி கிடந்தவள் தன் ஒரு வார்த்தைக்கே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாளா..அவன் நெஞ்சம் துணுக்குற்றது..
பாத்தியாடா.. இப்பவாது புரிஞ்சுக்கோ.. இவ உன் மேல எவ்வளவு அன்பா இருக்கான்னு.. தயவு செஞ்சு அவள கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொல்லு ஆர்யா.. இல்லனா நம்ம ரூபா நமக்கு இல்ல.. வாய் பொத்தி மணிமேகலை கூறிய செய்தியில் அதிர்ச்சியில் அவன் விழிகள் விரிந்தன.
அம்மாஹ்..
அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.. உன் சந்தோஷத்துக்காக ரெண்டு உயிர் பலியாகறது உனக்கு சந்தோஷம்னா நீ இப்படியே இருந்துட்டு போப்பா.. மறுபக்கம் திரும்பிக் கொண்டவரின் உடல் குலுங்க.. அதற்கு மேலும் முடியாமல் வேறு வழியின்றி ரூபாவை நெருங்கினான்..
ரூபா.. நம்மளுடைய இந்த கல்யாணம் நடக்கும்.. கூறிய அடுத்த கணம் கண் இமைக்குள் ஓடிய அவள் கருமணிகள் சுருங்கி விரிந்தன..
உள்ளே இருந்து நர்ஸ டாக்டர் டாக்டர் கத்திக்கொண்டே வெளியே செல்ல.. அவரோடு சேர்ந்து வந்த டாக்டர்.. அவளை பரிசோதித்து விட்டு புன்னகைத்தார்.
மனித மனசை விட பெரிய சக்தி எதுவும் இல்ல.. இவ்வளவு நேரம் எங்க மருத்துவம் 25 சதவீதம் முடிச்ச வேலையை இவர் சொன்ன ஒரு வார்த்தை 100% ஆ மாத்திருச்சு.. இனி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.. அவர் கூறிய பின் தான் நிம்மதி மூச்சு விட்டாள் மணிமேகலை..
ஆனால் மூச்சு விடவும் மறந்து திக்கித்து நின்றான் ஆரியன்.. அந்த நொடி அவன் வாழ்வு முழுதும் சிறைப்பட்டு போனதாய் தோன்றியது.. அனைத்தும் தன் முட்டாள் தனத்தினால்.. என உணர்ந்து கொண்டவனுக்கு காலம் கடந்த ஞானதயத்தால் ஒரு பலனும் இல்லை என்பதும் தெளிவாகவே புரிந்தது.
அதற்கு பின் ஒரு நாள் அவளை கண்காணிப்பில் வைத்து விட்டு அடுத்த நாள் வீட்டிற்கு அழைத்து வந்ததும் தொடர்ந்து திருமண வேலைகள் ஓடியதும் ரூபாவின் வீட்டில் இருந்து முறையாக தட்டுப்பழம் மாற்றிக் கொண்டதும் வரிசை கட்டி நடந்தன..
அந்த நாட்களில் தான் அலுவலகத்தில் ஜான்வியை விட்டு விலக ஆரம்பித்து இருந்தான் ஆரியன்..
அவளை காண முடியாது கொள்ளும் தவிப்பும் இனி அவளும் குழந்தையும் தன் வாழ்வில் இல்லை என அவன் கொள்ளும் உயிர் பிரியும் வலியும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போக.. மறுப்பக்கம் பத்திரிக்கை வைக்க வேண்டும் என அவனையும் இழுத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டிற்குமாய் அலைந்து கொண்டிருந்தார் மணிமேகலை.. அப்போது தான் அன்று..
கருத்துகள்
கருத்துரையிடுக