ம்மாஹ்.. நீங்க எவ்வளவுதான் கூப்பிட்டாலும் என்னால வேலைய விட்டுட்டு இப்படி பத்திரிகை வைக்க எல்லாம் அலைய முடியாது.. சட்டை பட்டனை போட்டபடி சிடுசிடுத்தான் ஆரியன். இருக்கும் மனநிலையில் அப்படி பேசாமல் போனால் தான் ஆச்சரியம் என உணர்ந்து கொண்டவளாய் மணிமேகலையின் குரல் கீழ் இறங்கியது.. காரணம் செய்த வேலை அப்படி ஆயிற்றே..
அன்று ரூபா தற்கொலை முயற்சி செய்ததெல்லாம் உண்மைதான்.. குரல்வளை அறுபடியும் நிலையில் அவளை மருத்துவமனையில் சேர்த்ததும் நிஜம் தான்.. ஆனால் சேர்த்த சில மணி நேரங்களிலேயே அவளை நல்லபடியாக பிழைக்க வைத்து விட்டனர் அங்கிருந்த மருத்துவர்கள்.. தண்ணீர் குடிச்சிட்டு வரேன் என நேக்காக மறுபக்கமாய் நடந்த மணிமேகலை கடந்து சென்ற டாக்டரை வழிமறைத்தாள்.
பயப்படாதீங்க.. அவங்க நல்லபடியா கண்ணு முழிச்சிட்டாங்க.. என்ற டாக்டரிடம் அவள் மூச்சு நிம்மதியாக வெளிப்பட்டது. நல்ல வேலையா கைக்கு வரப்போகும் சொத்து விட்டுப் போகவில்லை.
நான் ஒரு நிமிஷம் அவள பாக்கலாமா.. தவிப்போடு கேட்டதில் உள்ளே வர அனுமதி தந்தனர்...
உள்ளே படுத்த படுக்கையாக வாடி கிடந்தவளை கண்டு மௌனமாய் வாய் பொத்தி கதறினார் மணிமேகலை.. துளி அளவு அண்ணன் மகள் என்ற பாசம் இருந்திருக்கும் போலும்.
ஏண்டி உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா.. அவன் தான் ஏதோ சொல்ரான்னு இப்படியா ஒரு முடிவு எடுப்ப..
மாமா அப்படி சொன்னதை என்னால தாங்கவே முடியல அத்தை.. அவர்னா எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு உங்களுக்கே தெரியும் தானே.. அவள் குரல் சோர்ந்து வறண்டு இருந்தது..
அதுக்குன்னு.. இப்படி சாகுற அளவுக்கு போவியாடி முட்டாள்.. நீ செத்தா மட்டும் அவன் என்ன சொர்க்கத்துல வந்தா உனக்கு தாலி கட்ட போறான்..
சரி தான் அத்தை.. கழுத்து நெரிச்சல் தாங்க முடியாம நாக்கு தொங்கும் போது தான் எனக்கே புரிஞ்சது.. இதோட என் கதை முடிஞ்சதுன்னு நினைச்சேன்.. ஆனா நல்ல வேலையா மாமா வந்து காப்பாத்திட்டாரு. . என்ன மன்னிச்சிடுங்க அத்தை.. கண்ணீரோடு கூறியவளின் கண்ணீர் துளிகளை அழுந்த துடைத்து விட்டாள் மணிமேகலை.
சரி என்ன நடந்தாலும் நன்மைக்குமம்னு எடுத்துக்குவோம்.. நான் சொல்றது மட்டும் கேளு.. திரும்ப கண் மூடி படுத்துக்கோ..
எதுக்கு அத்தை... மாமா தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடுச்சே..
சொன்னதை செய் டி.. என இன்னொரு பேஷண்டின் நிலையை கேட்டபடி நின்றிருந்த டாக்டரிடம் வந்தாள் மணி.
டாக்டர்.. அவள் குரலில் திரும்பினார்.
எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணுமே.. ரூபா இன்னும் கண்ணு திறக்கலன்னு வெளிய நிக்கிறவன் என் மகன்கிட்ட நீங்க சொல்லணும்.. என்றதும் புரியாமல் பார்த்த டாக்டரிடம் விஷயத்தை சுருக்கமாய் கூறினாள்..
தயவுசெஞ்சு என் மருமகள் இன்னும் கண்ணு முழிக்கலன்னு அவன்கிட்ட நீங்க சொல்லுஙக.. அப்போதான் அவன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவான்... நல்ல வேலையா இப்ப நாங்க பக்கத்துல இருந்ததால இவளை காப்பாத்த முடிஞ்சது.. இல்லைனா.. என்ற அவள் வார்த்தையை முடிக்காமல் தேம்ப.. முதலில் அப்படி கூற யோசித்தாலும் கடைசியில் ஒரு பெண்ணின் வாழ்வு இதனால் சரியாக போகிறது என்றால் இருந்து விட்டு போகட்டும் என்ற நல்லெண்ணத்தோடு மணி கொடுத்த சில ஆயிரங்களை எந்த பந்தஸ்த்தும் காட்டாமல் வாங்கிக் கொண்டார் அவர்..
அதற்குப் பின்னால் தான் ஆரியனிடம் கூறிய விஷயங்களும்.. அவன் கண் முன் கண்ட காட்சி.. கடைசியாக ரூபா கண் விழித்தது.. என அனைத்தும்.. தன்னால்தான் அவளுக்கு இப்படி ஒரு நிலை என்பதில் சூழ்நிலை கைதியாய் உணர்ந்தான் ஆரியன்.. அதிலும் திருமணம் செய்து கொள்கிறேன் என அவன் கூறியதோடு அவன் கையெடுத்து தன் தலையில் வைத்த படி ஏன் மேல சத்தியம் பண்ணுடா.. மணிமேகலை கூறியதும் அவன் விழிகள் சுருங்கி தன் இயலாமையை காட்டின.
வேறு வழியில்லை.. செய்து தான் ஆக வேண்டும்.. செய்தும் இருந்தான்.
மருத்துவமனையில் இருந்தவரை அவளுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் தேடி வந்து வாங்கி கொடுத்தான்.. காரணம் அவளின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவனை கொலையாய் கொன்று கொண்டிருந்தது.. ஏற்கனவே ஜானுவுக்கு தான் செய்து விட்டதாய் உள்ளுக்குள் கணன்று கொண்டிருந்த துரோகத்தோடு.. இப்போது இதுவும் சேர்ந்து கொள்ள.. ரூபாவோ அவன் தனக்கே தனக்காய் மெனக்கெட்டு செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் உள்ளுக்குள் குதிக்களித்து வெளியில் அப்பாவியான முகத்தோடு அமர்ந்து இருந்தாள்.. அனைத்தும் நல்லபடியாக தான் சென்று கொண்டிருந்தது அந்த நிமிடம் வரை.
ஆனால் அடுத்த நாள் மாலை டிஸ்டார்ஜ் என மீதி பணத்தை கட்டிவிட்டு திரும்பும் போது அந்த செய்தி எதிர்பாராமல் இவன் காதில் தானா விழுந்து தொலைக்க வேண்டும்..
அது அந்த சூசைட் கேஸ் தான.. பாக்க பெரிய இடம் போல தெரிஞ்சாங்களே.. நர்ஸ் ஒருவள் இன்னொருவரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதே தான்.. ஆனா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. என்றபடி நேற்று காலை அவள் கண்விழித்ததில் இருந்து மணிமேகலை உள்ளே வந்து பேசி சென்றதும் மீண்டும் அவள் கண்மூடி கொண்டது.. ஆரியன் வந்து பேசியது.. வரை ஓரமாய் நின்று காதில் வாங்கிய அனைத்து விஷயங்களையும் நர்ஸ் புட்டு புட்டு வைக்க இங்கு ஒருவனின் முகம் ரௌத்திரத்தில் சிவந்து கொண்டிருந்தது..
பார்ரா.. நம்ம டாக்டருக்கு இவ்வளவு நல்ல மனசு இருக்குன்னு தெரியாம போயிடுச்சே.. அதுலயும் இந்த காலத்துல யார் இப்படி எல்லாம் இருக்காங்க.. இப்பவே மருமகளுக்காக மகனையே ஏமாத்துறாங்க.. இப்படிஎல்லாம் கூட மாமியார் இருக்க தான் செய்யுறாங்க.. அந்த நர்ஸ் புலம்பியபடி கையில் எந்த டிப்ஸ் பாட்டிலில் அடுக்க ஆரம்பித்தாள்.
அறிந்த விஷயத்தில் அவன் முகம் செவ்வானமாய் சிவந்து போனது.. எவ்வளவு கேவலமாய் தன்னை ஏமாற்றி இருக்கிறார்கள்.. இதற்கு அவளும் கூட்டு.. எந்த உணர்வும் காட்டாது இறுகி உள்ளே நுழைந்தவனை வந்துட்டியா ஆர்யா.. உன்ன காணோமே இந்த அஞ்சு நிமிஷத்துக்கு ரூபா பதறிப் போயிட்டா.. அவளை அவனிடம் நல்லபிள்ளையாய் காட்டி.. உன் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள் என காட்டி விட முயற்சி..
ஆனால் உருகுவதற்கு மாறாக பார்வையால் தீ கங்குகளை அல்லவா வாரி இறைக்கிறான் இவன்...
என்னப்பா அப்படி பாக்குற.. மணி கேட்டு முடிப்பாதற்குள்ளாக.. இன்னும் எத்தனை பொய்மா சொல்லுவீங்க.. வெடித்து வந்தன அவன் வார்த்தைகள்.
எ.. என்னப்பா சொல்ற.. ஒன்றும் புரியமல் கேட்க..அவனின் ஆவேசத்தில் ரூபாவின் விழிகள் விரிந்தன.
ஹ்ம்.. அவன் இதழ்கள் வறண்டு புன்னகைத்தன.. அதானே ஒன்னு ரெண்டு பொய் சொல்லி இருந்தா எதை சொல்றன்னு தெரிஞ்சிருக்கும்.. சொல்ற எல்லாமே பொய்னா எதன்னு கேட்க தான் வரும்.. அவன் கூறியதில் மணிமேகலையின் புருவங்கள் இடுங்கின.
அப்படி என்ன பொய்ய நான் சொல்லிட்டே.. நீ இவ்வளவு கோபப்படுற அளவுக்கு.. அவர் கேட்டதில் அதற்கு மேல் பொறுக்க முடியாதவனாய்..
நேத்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண கொஞ்ச நேரத்திலேயே இவதான் கண்ணு முழிச்சிட்டாளே.. ஆனாலும் அவ இன்னும் கண்ணு முழிக்க உயிருக்கு போராடிட்டு இருக்க அப்படி இப்படின்னு சொல்லி கடைசில இவள கல்யாணம் பண்ணிக்கணும்னு என்கிட்ட சத்தியம் வாங்கி.. ஏன் மா.. எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிங்க.. வெடித்தவனை அமர்த்தலான பார்வையோடு பார்த்தாள் மணி.
ஆமா.. நான் சொன்னது பொய் தான்..அதுக்கு என்ன பண்ண சொல்ற.. உண்மைய சொன்னா நான் அப்படி பொய் சொன்னதுக்கு காரணமே நீதான்.. இவ்வளவு பேசுற நீ அதை நான் ஏன் சொன்னேன்னு யோசிச்சு பாத்தியா .. நீயும் இவளும் என்னைக்கும் ஒன்னா சேர்ந்து சந்தோஷமா இருக்கணும்ன்னு தான.. நீதானே அன்னைக்கு நான் கேட்டபோது கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன.. திடீர்னு இன்னைக்கு வேண்டாம்னு சொல்லுவ.. பாவம் அந்த பிள்ளை உன்னை நம்பி வெளிநாட்டுல இருந்தது மெனக்கிட்டு வந்துருக்கு.. உன் மேல அவ்வளவு ஆசை வச்சருக்கு..
நான் சொன்னது வேணும்னா பொய்யா இருக்கலாம்.. ஆனா அவ தற்கொலைக்கு முயற்சி செஞ்சது உண்மை தானே.. நல்லவேளையா அந்த இடத்துல நம்ம இருந்ததால அவளை கூட்டிட்டு வந்து இதோ பிழைக்க வச்சுருக்கோம்.. நீ இன்னும் கல்யாணத்துக்கு ஒத்துக்காம போய் திரும்ப இவ இப்படி ஒரு முடிவு எடுத்து அதனால் அவளுக்கு ஏதாவது ஆயிருச்சுன்னா அந்த பழி பாவம் யாரு மேல வந்து விழும்.. நம்ம குடும்பத்துக்கு தான.. அதனால நா தான் அவளை அப்படி கண்மூடி படுத்திருக்க சொன்னேன்.. உன்கிட்ட சத்தியமும் வாங்கினேன்.. கூறிய தாயை இயலாமையோடு பார்த்தான்.
என்ன ஏமாத்திட்டின்ஹல்ல..
அதை ஏன் நான் உன்னை ஏமாத்துனதா பாக்குற.. உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தர நான் எடுத்த சின்ன முயற்சின்னு வச்சுக்கோ.. எந்த அலட்டலும் இல்லாத கூறிய தாயை சிவந்த விழிகளோடு முறைத்தவன்.. என்ன ஆனாலும் நீங்க செஞ்சது தப்பு தான்.. அத அடிப்படையா வச்சு வாங்குன அந்த சத்தியம் ஒரு சத்தியமே கிடையாது.. இப்ப சொல்றேன் எனக்கு இந்த கல்யாணத்துல துளியும் விருப்பமில்லை.. அவன் வார்த்தைகளை முடிப்பதற்குள்ளாக பக்கத்தில் பழம் வைத்திருந்த கத்தியை எடுத்து கையை அறுத்து விட்டிருந்தாள் ரூபா..
ரூபா.. அவள் எதிர்பாராத செயலில்பதறி இருவரும் கைபிடிக்க.. நா உங்களுக்கு வேண்டாமா மாமா.. ஆனா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. உங்களை மட்டும் தான் பிடிக்கும்.. என்றதோடு ஆழ்ந்த கத்தி காய்ச்சலில் வலிந்த ரத்தத்தோடு மயங்கி இருந்தாள்..
மீண்டுமென்ன ஹாஸ்பிடல் வாசம்.. வெளியில் நின்றுவனை கரித்துக் கொட்டி விட்டார் மணி.
விஷயம் தெரிவிக்கப்பட்டு ரூபாவின் அம்மாவும் அப்பாவும் ஓடி வந்தனர்.. உன்னை காதலிச்சதே தவிர்த்து என் பொண்ணு வேற எதுவும் தப்பு பண்ணலையேப்பா.. என தலைப்பனாக அடித்துக் கொண்ட மாமாவை கண்டு அவன் கண்கள் கலங்கி போனது.
அவன்கிட்ட ஏன் அண்ணா பேசிக்கிட்டு இருக்க.. அவனுக்கு நம்ம யாரும் முக்கியம் கிடையாது.. இல்லை என்றால் நான் சொல்ல சொல்ல அவன் தான் அப்படி பேசி இருப்பானா.. நம்ம ரூபா தான் இப்படி கெடப்பாளா.. வாயை பொத்தி கொண்டு அழுதனர்..
ஆர்யா.. நீ எதுக்காக இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்றன்னு எனக்கு தெரியாதுப்பா.. ஆனா சத்தியமா சொல்றேன்.. என் மகளுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆயிடுச்சு இந்த இடத்திலேயே நாங்களும் விஷத்தை குடிச்சு செத்து விடுவோம்.. கூறிய அத்தையையும் மாமாவையும் மிரண்டு பார்த்தான் ஆரியன்..
அவ பாட்டுக்கு வெளிநாட்டுல நல்லா இருந்தாளே.. கல்யாணம் ஆசை காட்டி ஊருக்கு கூட்டிட்டு வந்தது இப்படி அவளை பாக்குறதுக்கு தானா.. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுவதை கண்டு நெஞ்சம் விம்மி போனது அவனுக்கு. அவளைப் பற்றி அறிந்திருந்தும் அவள் முன் இப்படி பேசி இருக்கக் கூடாது.. கண்மூடி அதே இடத்தில் சேரில் தொப்ப என விழுந்தான்..
வெளி வந்த டாக்டர்.. என்னமோ கூறினார்.. நின்றவர்களின் அழுகை சத்தம் அதிகமானது.. தல்லாட்டமான நடையோடு எழுந்தான்.. நான் அவளை பார்க்கலாமா.. சோர்ந்த குரலோடு கேட்டான்..
ம்ம்ம்.. நீள் வெட்டா வெட்டுனதுல நரம்பு துண்டாகி இருக்கு.. எங்களால முடிஞ்ச அளவுக்கு டிரீட்மென்ட் கொடுத்துருக்கோம்.. இது நடந்திட கூடாதுன்னு தான் நாளைக்கு உங்ககிட்ட அப்படி சொன்னேன்.. ஆனா இன்னைக்கு அதுவே நடந்துருக்கு.. குரலைத் தொடர்ந்து தொய்ந்த நடையோடு உள்ளே நுழைந்தான்.. யாரையும் குற்றம் சாட்டும் நிலையில் இல்லை அவன். காரணம் குற்றவாளி அங்கு அவன் மட்டுமே..
ரூபா.. மூக்கில் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு மேலும் கீழுமாய் மூச்சு வாங்கி கொண்டிருந்தவளின் அருகில் மண்டியிட்டான்...
ரூபா.. ஏற்கனவே ஜானு வாழ்கைய வீணாக்கிட்டோங்கிறதுல இருந்தே இன்னும் வெளியே வரல.. இதுல நீயும் இப்படி ஏதாவது பண்ணிட்டேன்னா அந்த குற்ற உணர்ச்சியே என்ன கொன்னுடும்.. என்றவன் நின்று நீதானமாக மூச்சை இழுத்து விட்டான்..
இப்போ என்ன உனக்கு.. இந்த கல்யாணம் நடக்கணும்.. அவ்வளவு தானே..
நடக்கும்.. தொய்ந்த குரலோடு கூறி எழ.. அவள் மூடிய கண்ணீலிருந்து ஒரு சொட்டு நீர் தலையணையை நனைத்தது..
அதன் பின் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டாள் ரூபா.. மாறாய் ஆரியன் வீட்டிலேயே இருப்பதில்லை.. காலையில் வெகு சீக்கிரமாய் கிளம்பி விடுவதும்.. இரவு நள்ளிரவை தாண்டியதும் தான் வீட்டிற்குள்ளேயே காலெடுத்து வைப்பதுமாய் அவன் நாட்கள் சென்று கொண்டிருக்க.. நேற்று மொடாவாய் மன அழுத்தம் தாளாமல் குடித்ததின் பலன்.. இதோ என்னை பத்திரிகை வைக்க அழைத்துச் செல் என கேட்டுக்கொண்டு வந்து நிற்கிறார் மணிமேகலை..
என்னால முடியாது.. அவன் கூறி செல்ல போக.. நீ போற வழி தானே.. என்ன விட்டுட்டு மட்டும் போயிடு.. வரும் போது ஆட்டோ ஏதாவது பாத்துக்குறேன்.. என்ற பின் மறுக்க முடியாமல் அழைத்து சென்றான்.. அங்கு தான் அந்த விஷயம் தெரிய வந்தது.
கூறி கொண்டிருந்தவனை விரக்தியான புன்னகையோடு நிறுத்தினாள் ஜானு.. இங்கே யாரும் உங்களுடைய கல்யாண கதையை கேட்கலையே.. என்னை எதுக்கு இப்போ இப்படி நிறுத்தி வைத்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. நான் உங்ககிட்ட ஏன் இந்த கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு கேட்டேனா.. இல்ல பண்ணிக்காதீங்கன்னு தான் சொன்னேனா..
நீ சொல்லல.. ஆனா என் மனசு உன் கிட்ட சொல்லனும்னு அடிச்சுக்கிட்டு கிடக்கு.. இனி சொல்ல போற விஷயம் தான் முக்கியம்.. அதை சொல்லலைன்னா இந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்னுடும்.. அவன் கூறும் போதே.. ஹப்பா.. இதழ் குவித்து மூச்சுக்காற்றை வானம் நோக்கி ஊதினாள்.
நீங்க எதுக்காகனாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டு போங்க.. நான் உங்ககிட்ட எதுவுமே கேட்கல.. இன்னும் சொல்லப்போனால் என் மனசுல இப்போ துளியும் உங்க மேல எந்த விருப்பமும் இல்லை.. அதனால உங்களுக்கு இந்த குற்ற உணர்ச்சி தேவை இல்லாதது.. கூறி அவள் செல்ல போக..
அது எனக்கும் தெரியும்.. நீ அஷோக்க விரும்புறேன்னும் எனக்கு தெரியும்.. கூறியதும் அவள் கால்கள் ஸ்ட்ரக் அடித்து நின்றது..
ஆனா அவர மனசால ஏத்துக்க முடியாம தடுமாறுறியே.. அதுக்கு காரணம் நா உன்கிட்ட நடந்து கிட்டது தான.. அப்போ நான் ஏன் உன்கிட்ட அப்படி நடந்துகிட்டேன்னு நீ என் மனநிலையை புரிஞ்சுக்கிட்டாதா உன் வாழ்க்கைய எந்த சங்கடமும் இல்லாம உன்னால ஆரம்பிக்க முடியும்.. நீ நல்லா இருந்தா தான் நிம்மதி சந்தோஷம் இல்லனாலும்.. குறைந்தபட்சமா குற்ற உணர்ச்சி இல்லாமல் என் வாழ்க்கையையும் என்னால வாழ முடியும்.. அதுக்கு இந்த விஷயத்தை எல்லாம் நீ தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப அவசியம்.. அவன் வார்த்தைகளில் அவள் விழிகள் கண்ணீர் குளமிட்டிருந்தன..
கருத்துகள்
கருத்துரையிடுக