முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 65

 நீ போற வழி தானே என்ன விட்டுடு.. என இரு கைகளிலும் பையில் தூக்கிக்கொண்டு நின்ற தாயிடம் மறுக்க முடியாமல் போய் வண்டியில் ஏறுங்க..  என சிடுசிடுத்த அடுத்த நிமிடம்.. லிப்டில் இறங்கி வண்டியில் ஏறி அமர்ந்திருந்தார் மணி.





செல்லும் வழி என்பதால் ஆரியனும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.. முதல்ல தீபா வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம் மணிமேகலை குரலை தொடர்ந்து அடுத்த 20 நிமிடத்தில் அவர்கள் வீட்டு வாசலில் காரை நிறுத்தி இருந்தான.



சரிப்பா நீ பார்த்துப் போ.. என மணி கூறி முடிப்பதற்குள்ளாகவே வண்டியை கிளப்பியிருந்தான் ஆரியன்.. வீட்டில் இருக்கும் யாரையும் பார்ப்பது என்ன பேசக்கூட பிடிப்பதில்லை.. அவனைப் பொறுத்தவரை இது கட்டாய கல்யாணம்.. 




கணன்ற நெஞ்சோடு வந்து கொண்டிருந்தான் அந்த நெடுஞ்சாலையில்.. இன்னும் பத்து நிமிடத்தில் அலுவலகத்தை அடைந்து விடலாம் என்ற தூரத்தில்.. திடீரென புதுவிதமான சத்தம்..




எங்கிருந்து வருகிறது.. விழிகளை சுற்றி அலைய விட்டவன் அப்போதுதான் டேஷ்போர்ட்டின் ஒரு ஓரமாய் கிடந்த போனை பார்க்கிறான்..



ப்ச்..  இந்த அம்மா போனை எடுக்காம போய்டுச்சா.. இப்ப எப்படி மத்தவங்க வீட்ல இருக்காங்களா இல்லையான்னு கேட்டுட்டு போகுமாம்.. தாயின் மீது இன்னும் துளியளவு நன் மதிப்பு இருக்கிறது போலும்.. யோசித்தாலும் அலுவலக மீட்டிங் வேறு அவனை வரச் சொல்லி அவசரப்படுத்தியது..




முதலில் அலுவலகம் தான் என யோசித்தாலும்.. பெற்றவளின் நிலை கருதி.. எப்படியும் ஆபீஸ் போனா திரும்பி வர மதியத்துக்கு மேல ஆகிடும்.. அம்மா வேற இன்னைக்கு நிறைய இடம் போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு..  கொடுத்துட்டே வந்துடுவோம்..  என எண்ணியவனின் வண்டி திரும்பி யுடர்ன் அடித்தது.




செல்ல அரை மணி நேரம் என்றால் திரும்பி வரவே 45 நிமிடத்திற்கும் மேலானது இந்த டிராபிக்கில்.. இன்று நிதானமாய் வருவதற்குள் இருந்த பொறுமை எல்லாம் காற்றில் பறந்தோடியது.. இருந்தும் கொடுத்து விட்டே செல்லலாம் என முடிவோடு கடைசியாக ஒரு மணி நேரம் கழித்து வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான்.




வாசல் வரை பேச்சு சத்தம் கேட்டது.. தாயையோ அவள் உறவினர்களையும் அறியாதவன் ஒன்றும் இல்லையே அவன்.. தாய் தன் கூட்டத்தோடு சேர்ந்துவிட்டால் அவர்களின் கலகலப்பும் சிரிப்பும் அவன் அறியாததா..



அத்தை.. வாசலில் இருந்து அழைத்த படி உள்ளே நுழைந்தான்.. இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ஆவது இருக்கும்.. 





ஆனால் இன்னும் பழமை மாறாமல் அப்படியே இருந்தது அந்த வீடு.. முதலில் சின்ன முற்றம்.. அடுத்ததாய் ஹால்.. கிச்சன் இரண்டு படுக்கையறை என வந்து இத்தனை வருடங்கள் ஆகி இருந்தாலும் அத்தனையும் அவன் விரல் நுனி.





ஹால்வரை வந்தவனின் நடை நின்றது..  அங்கு யாரையும் காணவில்லை.. பின் பேச்சு சத்தம் எங்கிருந்து வருகிறது..  யோசித்தபடி அவன் விழிகள் திரும்ப டிவி ஓடிக்கொண்டிருந்தது..



அப்போ அம்மாவும் அத்தையும் எங்க போயிருப்பாங்க யோசித்தபடி.. நடக்க.. மறுபக்க அறையில் இருந்து கிசுகிசுவென வந்த சத்தத்தில் அவன் கால்கள் தான் அந்த பக்கமாய் திரும்பின.




அங்கிருந்து வந்ததும் தான் எனக்கே பாஸ்கர் சொன்னான்னா பார்த்துக்கொயேன்.. தன் மகனின் அருமை பெருமைகளை அளந்து விட்டுக் கொண்டிருந்தார் தீபா. அவன் வந்ததை அறிந்திருக்கவில்லை.. வெளியில் இருந்து அவன் அழைத்ததும் டிவியின் சத்தத்தில் காற்றோடு கரைந்து இருந்தது..




தீபா கூறியதில் ஆமா அண்ணி.. அவன் மட்டும் அன்னைக்கு அப்படி ஒரு யோசனை தரலைன்னா இந்நேரம் அந்த பிச்சைக்காரி தான் என் வீட்டுக்கு மருமகளா வந்துருப்பா.. கூறிய மணியின் குரலில் அத்தனை வெறுப்பு. ஆனால் பிச்சைக்காரி என்ற வார்த்தையில் சரியாய் உள்ளே நுழைய போன ஆரியனின் கால்கள் அப்படியே நின்று விட்டன.. 



அட விடு மணி.. அதுதான் இப்போ நடக்கலையே.. நீயும் பாஸ்கரும் பயங்கரமா திட்டம் போட்டு  ரெண்டு பேருக்கும் குடிச்ச பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து.. அவங்களுக்குள்ள ஏதோ நடந்திருக்க மாதிரி அப்படி செட் பண்ணிட்டீங்க இல்ல..  கேட்டதும் இங்கு ஒருவனின் நெஞ்சம் நின்று துடித்தது.




அட அதுக்கு நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்..  அந்த பிச்சைக்காரி கூட மிதா பழகுறதே எனக்கு பிடிக்காது..  அப்படி இருக்கும்போது என் மகன் அவ கைய புடிச்சிட்டு கூட்டிட்டு வந்ததும் எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லு.. அதான்.. அவன் வழியிலேயே போறதா பாஸ்கர் சொல்லி சொன்ன திட்டத்துக்கு நானும் ஒத்துக்கிட்டேன்..




ஜூஸ்ல மயக்க மருந்து கலந்து கொடுக்கிற வரைக்கும் தான் அவன் செஞ்சான்.. ஆனா ரூமுக்குள்ள நா போனப்போ ரெண்டு பேருமே மயங்கி கிடந்தாங்க.. கருமம்.. கருமம்.. பாஸ்கர் போட்ட திட்டப்படி நான்தான் அவ மேலாடைய எடுத்து விட்டேன்.. எழுந்ததும் அவ பாக்கணும்னு நம்புற மாதிரி செஞ்சேன்.. ஒரு நிமிஷம் தான்னாலும்.யாராவது வந்துருவாங்கன்னு திக் திக் பக் பக் அஞ்சு நிமிஷம் என் நெஞ்ச துடிச்ச துடிப்பு எனக்கு தான் தெரியும்..




நான் நினைச்ச மாதிரியே கொஞ்ச நேரம் கழிச்சு அவள் எழுந்ததும் பயந்துட்டா.. ஆனா அன்னைக்கே அந்த விஷயத்தை சொல்லுவானு எதிர்பார்த்தேன்.. ஆனா திடீர்னு அவ காணாம போயிட்டா.. 




அவ வீட்டில் இருக்கிறதா பாஸ்கர் அந்த பக்கம் போனப்போ சொன்னான்.. அப்புறம் நீங்க எல்லாரும் கிளம்பி வந்துட்டீங்க..  ஆனா அடுத்த சில நாள்ல ஆரியன் ஊருக்கு கிளம்புறான்னு உங்க எல்லாரையும் கூப்பிட்டு இருந்தப்போ நானே எதிர்பார்க்காத விஷயம்.. அந்த நேரத்தில் அவ வந்தா.. சாரி என்கிட்ட எதுவும்.. நான் நினைச்ச மாதிரி அவனும் கோபம் ஆனான்..  அவ சொன்னா எதையுமே அவன் நம்பல.. அவள விட்டு முழுசா பிரிஞ்சிட்டான்.. இதுல என்ன ஒரு ஹைலைட்னா அவ வீணா போனதா தான் இந்த நாள் வரைக்கும் நம்பிகிட்டு இருக்கா.. ஆனா அந்த மாதிரி எதுவுமே நடக்கல.. தாய் கூற கூற நின்றவனின் கால்கள் நிற்க முடியாமல் தடுமாறின.. உடல் நடுங்கியது...




போயும் போயும் என் வீட்டில் வேலை பார்த்தவளோட மகள் என் வீட்டுக்கு மருமகளா.. வாய்ப்பே இல்ல..  மணி மகிழ்ச்சியாய் கூறி கொண்டிருக்க.. அப்படியானால் எல்லாம் தன் தாயின் திட்டமா.. அய்யோ ஜானு.. இவங்க எல்லாரும் சொன்னதைக் கேட்டு நீ சொல்ல வர்றத கூட முழுசா காது கொடுத்து கேட்காமல் என் பொக்கிஷத்தை நானே தூக்கி எறிஞ்சிட்டேனே.. என்றவனுக்கு இன்னும் புரியாத விஷயம்.. தாய் அவளுக்கும் தனக்கும் எதுவும் நடக்கவில்லை எனக் கூறுகிறாள்.. அப்படியானால் கிருத்தி எங்கிருந்து வந்தாள்??  அவளை பார்த்த மாத்திரத்தில் இருந்து தன் முக ஜாடை கொண்டு இருக்கும் குட்டி தன் மகள் தான் என அறிந்திருந்தானே..




இதற்கு பதில் கிடைக்கவில்லை.. வந்த சுவடு தெரியாமல் வந்த வழியாக வெளியேறி வந்தவனின் கண்களில் நீர் மட்டும் நிற்க மாட்டாமல் சுட.. ஐயோ எவ்வளவு பெரிய துரோகம் செஞ்சிருக்கேன்..  அவ சொல்ல வர்றதை கூட கேட்காம அவளை எத்தனை தடவை உதாசீனப்படுத்தினேன்.  என்றவனுக்கு இப்போதே இதயம் ரெண்டாய் வெடித்து விடாதா என்ற துடிப்பு.. செத்து பிழைத்தான்.



கடந்த சில நாட்களாய் கொண்டிருந்த தவிப்பும் தனிமையும்.. கடைசி ரூபாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறிய விஷயமும்.. அடுத்தடுத்தத்தாய் நினைவு வர.. தலையை பிடித்து அப்படியே ஸ்டேரியங்கில் சாய்ந்து விட்டான்.




தாய் கூறியதையே மீண்டும் மீண்டும் மனதில் உறுபோட்டவனுக்கு நிழல் அடுக்குகளாய் கண் முன் சில காட்சிகள்..




அன்று மயக்கத்தில் விழுந்ததும் அவள் பட்டாம்பூச்சி வெடிகள் படபடவென சிறகடித்து தன் பதட்டத்தை காட்டியதும்.. தொடர்ந்து தள்ளாடிய தன்னை இழுத்து கொண்டு அறைக்குள் நுழைந்ததும்.. இதுவரை ஞாபகம் இல்லாதது இப்போது ஏன் வரவேண்டும்.. இருந்தும் அவனுக்கு அன்று என்ன நடந்தது என தெரிந்துவிட துடிப்பு. மூடிய கண்களை இறுக்கினான்.




உள்ளே வந்து அவள் தன்னை படுக்க வைத்தது.. இப்போது தீர யோசிக்கையில் நிழல் பிம்பமாய் கண்முன் வந்தாடுகிறது.




அவள் கை பிடிச்சேன்.. அவ என் மேல விழுந்தா.. அப்புறம்.. அப்புறம் என்னாச்சு.. வழிந்த கண்ணீர் உதட்டில் பட்டு தன் துவர்ப்பை காட்டியது.




அடுத்து அடுத்து.. விரல்கள் சோதிக்கிற தீவிரமாய் யோசித்தவனின் கரம் ரெண்டும் நடுங்கியது.. 



இடையில் மெல்லிதாய் விழிப்பு தட்டியது அவனுக்கு.. மயக்க நிலையில் இருண்ட கண்களோடு திரும்பி பார்க்க அருகில் ஒருவள் பூந்தளிராய் கிடக்க கண்டு.. அடுத்த நிமிடமே அவன் இதழ்கள் முழுதாய் விரிந்து புன்னகைத்தன.. மயக்க மருந்தின் வீரியத்தில் உயிர் பெற்று நின்ற ஆண்மையின் வீரியத்தை தாங்க முடியாமல் அவளை ஆட்கொண்டிருந்தான் அந்த மயக்கத்தில்.. நிச்சயம் அப்போது அதை உணரும் நிலையில் இல்லை அவன்.. ஏதோ உறக்கத்தில் தன்னை மறந்து தலையணையை கட்டிப்பிடிப்பது போல் ஒரு மாயை.. தன் தேவை தீர்த்து விலகியவனை மயக்கமெனும் அந்த மாயை விடாப்பிடியாய் பிடித்து கொள்ள.. சில மணி நேரங்களுக்கு பின் முழுதாய் மயக்கம் தெளிந்து அவன் கண் திறந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லை.. 




செல்லும் வேளையிலும் அவனுக்கு வாகாய் போர்த்தி விட்டு அவள் சென்றிருந்ததில்.. வழக்கம்போல் உறக்கத்தில் வெம்மை தாங்காமல் தளர்த்தி விட்டேன் போலும்.. என கலந்து கிடந்த உடைகளை பார்த்து தனக்கு தானே நினைத்துக் கொண்டவன்.. உடலில் இருந்த புத்துணர்ச்சியை கவனிக்க மறந்தான்.. எழுந்து அடுத்த வேலையை பார்க்க சென்றான்.. உண்மையாகவே அந்த கணம் என்ன நடந்தது என அவன் அறிந்திருக்கவில்லை..



ஆனால் இப்போது தாய்க் கூறிய விஷயத்தோடு ஒன்றை ஒன்று தொடர்பு படுத்தி பார்த்தவனுக்கு நிழல் பிம்பங்களாய் ஒவ்வொன்றாய் கண்முன் வந்தாட..  அய்யோஓஒ.. தலையை பிடித்தவனின் கண்கள் சிவந்து போயின..



அவளுக்கு எவ்வளவு பெரிய அநியாயம் பண்ணிருக்கேன்.. ஜானு.. ஜானு.. என்ன மன்னிச்சிடு டி.. எனக்கு நீயும் பாப்பாவும் வேணும்..தடுமாறி தவிப்போடு வண்டியை எடுக்கப் போக..  ஆர்யா.. வந்த தாயை சுட்டு பொசுக்கினஅவன் விழிகள்.



ஆ.. ஆர்யா நீ எப்போப்பா வந்த.. நிலைத்த விழிகளோடு கேட்டவள் அவன் பார்வை போன போக்கில் என்னப்பா அப்படி பாக்குற.. என்ற தாயை அடுத்த நிமிடம் பாய்ந்து கழுத்தை பற்றி இருந்தான்.. அடுத்த நிமிடமே அத்தனை வெறுப்போடு  கையை உதறினான்.




அவன் செயலில் பதறி மணி விழிக்க..ச்சி.. நீ எல்லாம் அம்மான்னு வெளிய சொல்லிடாத.. உன்னுடைய பணத்தாசைக்காக ஒரு பொண்ணோடவாழ்க்கையவே அழிச்சிட்டியே..



நீ.. நீ.. என்ன சொல்ற நீ எனக்கு ஒண்ணுமே புரியல ஆர்யா..



நடிக்காத.. அவன் குரல் நடுங்கியது.. பணத்துக்காக எவ்வளவு கேவலமான காரியத்தை பண்ணியிருக்க..  ஜானு அப்படி உனக்கு என்ன துரோகம் பண்ணிட்டா.. அவன் கேட்ட கேள்விலயே உள்ளே தான் பேசிக் கொண்டிருந்த விஷயங்களை அவன் தெரிந்து கொண்டான் எனப் புரிந்து கொண்டாள் மணிமேகலை.. இவ்வளவு நாட்களை கட்டி காப்பாற்றிய ரகசியம் இந்த கல்யாண நேரம் பார்த்தா அவனுக்கு தெரிய வர வேண்டும். 




சொல்லு.. உன்ன நம்புனேனே.. பெத்தவன்னு நீ எதை சொன்னாலும் கேட்டேனே.. உன் மனசு நொந்து போய்ட கூடாதுன்னு தானே இவ்வளவு நாள் நீ சொன்னதெல்லாம் கேட்டு அமைதியா இருந்தேன்.. ஆனா எனக்கே இப்படி ஒரு துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு.. சொல்லும்மா.. அவன் கர்ஜிப்பில் ஹக் என உடல் தூக்கிப்போட..




ஆமாடா நான்தான் பாஸ்கர் கிட்ட சொல்லி உனக்கும் அவளுக்கும் மயக்கம் மருந்து கலந்து தர சொன்னேன்.. ஆனா.. ஆர்யா.. யோசிச்சு பாருடா அவளுக்கும் நமக்கும் கொஞ்சமாவது தகுதி தராதாரம் இருக்கா.. நீ அவ பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கிறத பாத்தா நம்ம ரிலேடிவ்ஸ் என்ன நினைப்பாங்க.. எனக்கு உன்னுடைய ஆசையையும் விருப்பத்தையும் விட நம்மளுடைய சொசைட்டி தான் முக்கியம்.. உனக்காக நான் மத்தவங்க வாய்க்கு அவலாக முடியாது.. என்ற தாயை விரத்தியோடு பார்த்தான்.. 





அது என்ன உண்மையா.. சின்ன பிளே தான..  இப்போ நான் தீபா கிட்ட பேசுறது நீ கேக்கலைன்னா இன்னும் அவ சொன்னது பொய்யின்னுதானே நம்பிக்கிட்டு இருந்திருப்ப.. அப்புறம் என்ன?? விடு.. கல்யாண நேரத்துல எதுக்கு தேவையில்லாத பிரச்சனை.. நல்லவேளை நீயே வந்துட்ட.. அடுத்த வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க போகணும்..  வண்டி எடு..  என அது ஒரு விஷயமே இல்லை என்பது போல் கூறிய தாயை விரித்த கண்களோடு பார்த்தான்.




எப்படி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம உன்னால பேச முடியுது.. ச்சீ.. நீயும் பெண்ணா.. பெத்த தாயைப் பார்த்து இப்படி எல்லாம் கேட்க கூடாதுன்னு மூளைக்கு புரியுது.. ஆனா மனசு கேக்க மாட்டேங்குதே.. அன்னைக்கு நீ பண்ண வேலையோட தாக்கம்.. கண்ணை மூடியவன்.. இவ்வளவு நாட்களை எந்த விஷயத்தை  மறைத்து வைத்திருந்தானோ அந்த விஷயத்தை கூறியிருந்தான்.. 




எனக்கும் அவளுக்கும் அஞ்சு வயசுல ஒரு பொண்ணு இருக்கு.. அவன் கூறியதில் மணிமேகலையின் வேலைகள் நம்ப மாட்டாமல் அதிர்ச்சியில் விரிந்தன..


எ.. என்னடா சொல்ற.. வார்த்தைகள் தடுமாறின.



ஹ்ம்ம்.. நீ எது செஞ்சாலும் என்னுடைய நல்லதுக்கு தான் செய்வன்னு நம்பி நம்பி கடைசி வரைக்கும் மோசம் போயிட்டேன்.. எனக்கு ஒரு பிள்ளை பிறந்தது கூட தெரியாம அவளை நடுரோட்டில தவிக்க விட்டுட்டேன்.. பாவம் தணியாளாய் இருந்து குழந்தையை வளக்குறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா.. கண்களை மூடி சீட்டில் சாய்ந்தவன் அடுத்த நிமிடம் சிவந்த விழிகளோடு மணிமேகலையின் பக்கம் திரும்பினான்.




இதோட நான் செத்துட்டேன்னு நெனச்சுக்கோ.. இனி எனக்கு என் பொண்டாட்டியும் பிள்ளையும் தான் முக்கியம்.. இப்பவே நான் போறேன்..  அவ காலையில விழுந்தாலும் மன்னிப்பு கேட்கிறேன்.. அவ என்ன ஏத்துக்குற வரைக்கும் அவ கால்ல கீழே செருப்ப இருந்து தேய்கிறேன்.. தயவுசெஞ்சு என்ன விட்டுடு.. கையெடுத்து கும்பிட்டவன்.. அடுத்த நிமிடம் அவளை காரில் இருந்து இறக்கி விட்டு வண்டியை கிளப்பி இருந்தான்..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 38

 ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்..  ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.   தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்..  அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்.. என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..  அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் ம...

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...