ஆனால் எதிர்பாராத நேரத்தில் மிதா போன் செய்ததோடு.. அம்மா பேசுனாங்க.. விஷயத்தை சொன்னாஙக.. நீ உடனே பார்க்குக்கு வா.. என்றதோடு போனை துண்டித்து இருந்தாள்..
முதலில் ஜான்வி சென்று பார்ப்பதை விட மிதாவிடம் பேசிவிட்டு சென்றால் நல்லது என நினைத்தவனாய் அடுத்த நிமிடம் வண்டியை யூ டர்ன் அடித்திருந்தான் ஆர்யன்..
பச்சை புற்கள் முட்டி மோத நகரின் மையத்தில் இருக்கும் அந்த பார்க்கிற்கு அவனுக்கு முன்பாகவே வந்திருந்தாள் மிதா.. அவனை கண்டதும் கைய உயர்த்தி அழைக்க.. பாப்பா.. என வந்து நின்றவனின் முகம் அளவிற்கு அதிகமாக சோர்ந்து கிடந்தது..
அவளை நேருக்கு நேராய் பார்க்கவும் திராணியற்று தவிப்போடு தலையை தொங்கி கொண்டான் ஆர்யன்.. எத்தனை முறை அவள் அப்படிபட்டவள் அல்ல என கூறி இருப்பாள்??
அம்மா எல்லா விஷயத்தையும் சொல்லுச்சு.. நேரடியா விஷயத்திற்கு வந்திருந்தாள் மிதா..
உடனடியாக தகிப்பு பரவியது அவனிடம்.. பாரு.. பாரு பாப்பா.. எவ்வளவு கேவலமா என்னை ஏமாற்றி இருக்காங்க.. அவங்களை நான் எவ்வளவு நம்பினேன்.. எனக்கு இப்படி ஒரு துரோகம் பண்ண அவங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு.. என்றவன் நெஞ்சை வலியோடு நீவி விட்டுக் கொள்ள.. இப்போ நான் ஒன்னு சொல்லவா?? அவள் கேட்டதும் கேள்வியோடு அவள் முகத்தில் பதிந்தன அவன் விழிகள்.
என்ன சொல்ல போற.. இப்பவே அவ கிட்ட போய் மன்னிப்பு கேளு.. அவ காலுல விழுந்தாவது அவளை மன்னிக்க வச்சிடு.. ரெண்டு பேரும் சேர்ந்து வாழுங்கன்னு சொல்ல போற.. அதானே.. அந்த முடிவுக்கு நான் எப்பவோ வந்துட்டேன்.. இனி அம்மாவையும் சரி யாரையும் சரி.. பத்தி யோசிக்கிற நிலைமைல நா இல்ல..
இப்போ அவள பாக்க தான் போய்கிட்டு இருந்தேன்.. நீ கூப்பிட்டதால தான் நடுவுல இந்த பக்கம் வந்தேன்.. சரி நான் முதலில் ஆபீஸ்க்கு போறேன்.. அவகிட்ட பேசுறேன்.. என்றபடி வேகமாய் அடியெடுத்து செல்லப் போனவனை கரம் பற்றி தடுத்திருந்தாள் மிதா.
என்ன மிதா..
ஏமாத்துனது அவங்கனாலும் அத புரிஞ்சுக்காம எல்லாத்தையும் நம்பி ஏமாந்தது நீதான.. இப்போ நீ சொன்ன எதையும் தயவு செஞ்சு செஞ்சுடாதன்னு சொல்ல தான் கூப்பிட்டேன்.. அவள் கூறியதில் ஒன்றும் புரியாமல் பார்த்தான் அவன்..
எத்தனையோ தடவை என் தோழி அப்படிப்பட்டவ இல்லன்னு நானே உனக்கு நிறைய தடவை சொல்லிருக்கேன்.. ஆனா நீ அத மட்டும் நம்பவே இல்ல.. இப்ப திடீர்னு உண்மை தெரிஞ்சிடுச்சு.. நான் அவகிட்ட போய் மன்னிப்பு கேட்டு சேர போறேன்னு போற.. அவள் புதுவிதமான பேச்சில் அதிர்ந்தான்.
அண்ணா.. ப்ளீஸ்.. ஏற்கனவே அவ உன்னால நிறைய ஒடஞ்சிருக்கா.. அந்த அளவு உன்ன விரும்பி தொலைச்சுட்டா.. ஆனா இப்போதான் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்துக்கிட்டுருக்கா.. அதுக்கு காரணம் அஷோக்.. அவள் நிறுத்தியதில் அவன் விழிகள் விரிந்தன.
எ.. என்ன சொல்ற.. அவன் வார்த்தைகள் தடுமாறின..
அவ இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நீ கொடுத்த காயத்துல இருந்து வெளிவந்து அசோக்க விரும்ப ஆரம்பிச்சுருக்கிறா.. ஆனா இடையில் நீ பண்ண குளறுபடியால அந்த கிறுக்கியால அவரையும் முழு மனசா ஏத்துக்க முடியல.. அவளுக்கு ஏதாவது பண்ணனும்னு நினைச்சா ப்ளீஸ் தயவு செஞ்சு அவ வாழ்க்கையை விட்டு போயிடு.. இருகரம் என்ற தங்கையை வெறித்த விழிகளோடு..
உனக்கும் என்னோட பீலிங்ஸ் புரியலையா மிதா.. வலியோடு வந்தன வார்த்தைகள்.
நல்லாவே புரியுது.. இன்னைக்கு தவற உணர்ந்துடேன்னு சொல்லுவ.. ஆனா நாளைக்கு இன்னொரு பிரச்சனை வந்தா திரும்பவும் மத்தவங்க சொல்றதை கேட்டு தான் நடந்துப்ப.. அதனால அவதான் காயப்படுவா..
எனக்கு என் பிரண்டோட வாழ்க்கை முக்கியம்.. போதும் அண்ணா இதுவரைக்கும் அவ நிறைய கஷ்டப்பட்டுட்டா.. உன்னாலையும் சரி நம்ம குடும்பத்தாளையும் சரி.. ஒருவேள நீ அவகிட்ட மன்னிப்பு கேட்டு அவ உன் கூட வந்தாலும் திரும்பி ஏதாவது ஒரு சூழ்நிலையில நீ அவளை சந்தேகப்பட மாட்டேன்னு என்ன நிச்சயம்.. இல்ல அம்மா தான் அவள நல்லபடியா வாம்மா மருமகளளே என ஆராத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூட்டிட்டு போகுமா.. வீட்டுக்கு வந்தாலும் அவளுக்கு கஷ்டம் தான்.. அதுக்கு அவ இப்படி தனியா இருக்கிறது எவ்வளவோ மேல்..
ஆனா உண்மையா சொல்லவா.. நானும் அங்கிருந்து ஊருக்கு வந்தபோய் எப்படியாவது அவளை உன் கூட சேர்த்து வச்சுடனும்னு தான் நினைச்சேன்.. ஆனா கூட இருந்த அந்த இரண்டு நாள் அஷோக்க பார்த்ததிலிருந்து அவன் என் ஃப்ரெண்டுக்கு எவ்வளவு முன்னுரிமை தர்ரான்.. அவளை எப்படி எல்லாம் நடத்துறான்னு பாத்ததுக்கு அடுத்து என்னால அப்படி யோசிக்க கூட முடியல..
ஆனா பாரேன்.. அந்த முட்டாள் அப்படிப்பட்ட அவன் கூடவே இருந்தும் கூட உன்னை நினைச்சுட்டு இத்தனை வருசத்தை வீணாக்கிருக்கா.. என்றவளை அடிபட்ட பார்வை பார்த்தான்..
அப்படின்னா நான் அவளை சரியா பாத்துக்க மாட்டேன் என்று நினைக்கிறாயா..
நீ பார்த்துக்குவியா இல்லையான்னு எனக்கு தெரியாது.. ஆனா நிச்சயமா அவர் அளவுக்கு உன்னால் அவள என்னைக்குமே பார்க்க முடியாது.. அன்னைக்கு பாப்பா விழுந்தப்போ.. குழந்தையை கூட பாக்க முடியாம என்ன வெட்டி முடிச்சானு நீ கேட்டல்ல.. இத்தனைக்கும் நீ அந்த குழந்தைக்கு பிள்ளை பேர் பார்க்கல.. அவளை கைக்குள்ள வச்சு தாங்கல.. அவளுக்கு வேண்டியத எதையும் நீ செய்யல.. அப்படி இருந்துமே உனக்கு அவ்வளவு கோபம்..
ஆனா அந்த மனுஷன் யாரோ எவரோ.. அவளை தன்னோட கூட்டிட்டு வந்த நாளிலிருந்து அவளை கைக்குள்ள வச்சு தாங்குறதும் அவளுக்கு வேணும்கிற ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து செய்யறதும்.. குழந்தை விழுந்தப்போ அவளும் அழுதுகிட்டே குழந்தையோட நிலைக்கு நான்தான் காரணம்னு சொன்ன போ அவர் என்ன சொன்னார் தெரியுமா..
வேணும்னா தள்ளிவிட்ட.. இல்ல அவ போனா விழுவான்னு தான் உனக்கு தெரியுமா.. அப்படின்னா நானும் அங்க தான் இருந்தேன்.. அதுக்காக நானும் அவள் விழுந்ததற்கு நான் தான் காரணம் என்று அழுகவா.. அவர் கேட்ட கேள்விலேயே அவள் அழுக நின்னு போயிடுச்சு..
ப்ளீஸ் அண்ணா.. என்ன பொறுத்த வரைக்கும் என் ஃப்ரண்ட புரிஞ்சுகிறவர்.. அவள் அழுகைய தொடைக்குறவர் தான் அவள் கூட இருக்கணும்னு நினைக்கிறேன்.. அது உன் கூட இருந்தா இந்த ஜென்மத்துல எப்பவும் அவளுக்கு கிடைக்கவே கிடைக்காதுன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..
அதோட அங்க ரூபா உனக்காக கைய கிழிச்சுட்டு பண்ண வேலையையும் அம்மா சொல்லுச்சு.. உன்னுடைய விருப்பத்துக்காக அவ வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கிராத...
அவ பாக்க ரூட்டா இருப்பா.. அப்படி நடந்து பா.. ஏன் பேசுறதும் கூட சிடுசிடுன்னு தான் இருக்கும்.. ஆனா உன் விஷயத்தைப் பொறுத்த வரைக்கும் அவ உன்ன உண்மையாவே விரும்புறா.. தயவு செஞ்சு அவள உடைச்சுடாத.. இன்னொரு தடவை உடைச்சா அவன் நிச்சயமா உயிரோடவே இருக்க மாட்டா போல.. இதுக்கு மேல முடிவு உன் கையில என்றவள்.. கைப்பையை தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.
மிதா.. பின்னிருந்து வந்த விரக்தி குரலில் நிற்க..
அப்.. அப்படினா.. நான் அவ வாழ்க்கை விட்டு போறதால அவ சந்தோஷமா இருப்பான்னு சொல்ல வரியா.. கேட்கும் போதே நெஞ்சம் விம்மி செத்தது...
நீ போறதால வலிகள மறந்து சந்தோஷமா இருப்பா.. ஆனா அசோக்க அவ எப்ப ஏத்துகிறாளோ அப்பதான் அவ வாழ்க்கையில சந்தோஷம் வரும்.. அது அந்த முட்டாளுக்கு புரிய மாட்டேங்குது.. என்றதோடு கிளம்பி இருந்தாள்..
அவன் கூறியதைக் கேட்டு கண்களில் நீர் கோர்க்க ஸ்தம்பித்து நின்று இருந்தாள் ஜான்வி.. அன்றைய நாளில் என்னவோ நடந்திருக்கிறது என தெரியும்.. ஆனால் விளாவரியாய் அவன் கூறிய விஷயத்தில் நெஞ்சுக்குழி நடுங்க அவள் நிற்க.. மன்னிச்சிடுன்னு சொல்ல கூட அருகதை இல்லாதவன் நான்.. அன்னைக்கு நீ சொன்னத நம்பாம அம்மா சொன்னா சரியாதான் இருக்கும்னு கண்மூடித்தனமா நம்பி உன்ன ஒதுக்கி வெறுத்து நடந்துக்கிட்டேன்.. ஒவ்வொரு சுடு சொல்லாலையும் உன்ன உயிரோட கொன்னேன்.. என்ன நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்கு.. ஹ்ம்ம்.. ஆனா எப்போ நடந்ததெல்லாம் புரிஞ்சுகிட்டு உன் கூட சேரனும்னு நெனச்சேனோ அப்போ நிறைய விஷயம் மாறிடுச்சு..
உண்மை தான்.. உன்ன வெறுப்பேத்த தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.. ஆனா அது ஒரு டிராப்பா மாறி அதுல நானே சிக்குவேன்னு கனவுலயும் நெனச்சு பாக்கல.. இதோ இப்ப கூட நான் தாலி கட்டுவேன்ங்கிற நம்பிக்கையோட ஸ்டேஜ்ல காத்திருக்கா ரூபா.. ஆனா என் மனசு.. வார்த்தைகளை முடிக்காதவனின் நிலை குத்திய பார்வை அவள் முகத்தில் நிலைத்தது.. கண்களில் இருந்து நீர் நிற்காமல் வழிந்தன..
அவளும் தடுக்கவில்லை.. அழுவது ஆணுக்கு கூடாது.. என்பதும் நினைவில் இல்லாமல் அழுது கொண்டே நின்றான் அவன்.. செய்த பெருந்தவறி ன் வலி அது.
ஆனாலும் கொஞ்சம் என் பக்கம் யோசிச்சு பாரு.. என்ன பொறுத்த வரைக்கும் அந்த நேரங்களில நான் எந்த தப்பும் செய்யாதவன்.. அப்படி இருக்கும்போது திடீர்னு ஒரு பொண்ணு நல்லா பழகுன பொண்ணு இப்படி ஒரு பழியை தூக்கி போட்டா.. அத நமக்கு நெருங்கினவங்க பணத்துக்காக தான் அப்படி செய்கிறான்னு சொன்னா.. யார் சொல்றது மனசு நம்பும்.. கேட்டவன் சட்டென நிமிர்ந்து அவள் பார்த்த தீ பார்வையில்.. முட்டாள்.. நான் அவங்க சொன்னது தான் உண்மைன்னு நம்பிட்டேன்..
ஆனா நான் ஒன்னும் அதனால ரொம்ப சந்தோஷமா இருந்துடல.. உன்ன பிரிஞ்ச ஒவ்வொரு நிமிஷமும் தனிமையில செத்து பிழைச்சேன்.. ஆனா எப்போ உன்னை திரும்ப ஆபீஸ்ல பார்த்தேனோ அப்போ எனக்கே சொல்ல முடியாத அளவுக்கு நெஞ்சில் பூரிப்பு.. சந்தோஷம்.. பேச்சோடு இதழ் மலர சிரித்தவன் அடுத்த நிமிடமே முகம் கருகினான்..
லீவ் இட்.. இப்ப நான் சொல்ல வர்றது ஒன்னே ஒன்னு தான்.. அப்போ இருந்த கோவத்துல உன்ன குத்தி கிழிக்கணும்ங்குறதுக்காக நான் என்னென்னவோ பேசி இருக்கேன்.. ஆனா அதெல்லாம் மனசுல இருந்து வந்தது இல்லை.. உன்ன காயப்படுத்தனும்னு மட்டுமே பேசுனது.. இப்போ சொல்றேன்.. நீ பொக்கிஷம் ஜானு.. அந்த பொக்கிஷத்தை தவறவிட்ட முட்டாள் நானு..
ஆனா இந்த முட்டாள் பேச்சை கேட்டுகிட்டு நீ உன் வாழ்க்கையை இழக்கக்கூடாது.. நீ அசோக்க விரும்பறதா மிதா சொன்னா..ஆனா அதுக்கு முன்னாடியே அவர் உன்ன பாத்துக்கிறது.. எத்தனை பேர் இருந்தாலும் உன் கண்ணு அவரையே தேடுறத நான் ஹாஸ்பிடல்லயே பாத்தேன்.. ஆனா அப்போ அவர் என் கண்ணுக்கு ஏதோ என் பொருளை பறிக்க வந்த எதிரியா தான் தெரிஞ்சாரு..
ஆனா ஜானு.. அவர் உண்மையாவே யாருன்னு தெரிஞ்சப்போ என் கை கால் எல்லாம் நடுங்கி போயிடுச்சு.. எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்.. எவ்வளவு சாம்ராஜ்யங்களை கட்டி ஆள்றவர்.. இங்க வந்து உனக்கும் பாப்பாவுக்காகவும் தன்னை மறச்சு எல்லாத்தையும் விட்டுட்டு இருந்திருக்கிறார்.. அவரோட செல்வாக்கை எந்த இடத்திலும் பயன்படுத்தாம உங்களை நல்லபடியா பார்த்து இருந்துருக்காருன்னு தெரிஞ்சபோ அவர் உங்க மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கார்ன்னு புரிஞ்சது..
அன்னைக்கு நான் செஞ்ச வேலையால தான் நீ அவர போக சொன்ன.. அதான் நான் செஞ்ச தப்ப நானே சரி பண்ணலாம்னு அவரை தேடி போனேன்.. இவ்வளவு நேரம் கோபம் தடுமாற்றம் வலி .. என்ன பல்வேறு உணர்வுகளை பிரதிபலித்துக் கொண்டிருந்த விழிகள் திடீரென அவனை தேடி போனதாய் கேட்டதும் அதிர்வானது.
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனாய் எனக்கு புரியுது யாரு கேட்dடு அங்க போனீங்கன்னு கேட்க போற அதானே.. ஆனா உன் வாழ்க்கை நல்லபடியா இருந்தா தான் என்னுடைய வாழ்க்கை கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கும்ன்னு நினைத்தேன்..
அதான் தேடி போனேன்.. ஆனா பலன் என்னவோ பூஜ்யம் தான்..
அவர் ஹெட் ஆபிஸ் வரைக்கும் போய் பாத்துட்டேன்.. அவர கடைசி வரைக்கும் பாக்கவே முடியல.. செக்யூரிட்டி தான் அவர் ஏதோ பாரின் போயிட்டதா சொன்னாரு.. அதான் பார்க்க முடியாமலேயே திரும்பி வந்துட்டேன்.. அவளை ஆழ்ந்து பார்த்தான்..
இதுவரைக்கும் உன் மனசையே புரிந்துகொள்ளாமல் எத்தனையோ முறை உன்னை காயப்படுத்தி இருக்கேன்.. அழ வச்சுருக்கேன்.. அதுக்கு எந்த தண்டனையா இருந்தாலும் எனக்கு கொடுத்திடு.. ஆனா இந்த குற்ற உணர்ச்சியை மட்டும் கொடுத்து விடாதே.. தயவு செஞ்சு உன் வாழ்க்கையை கெடுத்துக்காத.. உனக்குன்னு ஒரு பிரேசியஸ்சான லைப் காத்து இருக்கு.. பணத்துக்காக என்னை தேடி வந்தவன்னு நிறைய தடவை சொல்லி அசிங்கப்படுத்தி இருக்கேன்.. ஆனா அவ்வளவு பெரிய கோடீஸ்வரருக்கு புரிந்த உன் மதிப்பு.. எனக்கு புரியல பாரு.. விரக்தியாய் சிரித்தவன்.. நான் சொன்னதெல்லாம் புரிஞ்சுப்பண்ணு நம்புறேன்..பெஸ்ட் ஆப் லக்.. இதுதான் உன்ன பாக்குற கடைசி முறையா இருக்கனும்.. சோர்ந்த குரலோடு கூறி சரி.. ரொம்ப நேரம் ஆச்சு.. ரூபா தேடுவா.. போறேன்.. என சென்றிருந்தான்..
ஆங்காங்கே விட்டுப்போன புதிர்கள் முழுதாய் நிரப்பப்பட்ட நிலையில் கடைசியாய் அவன் கூறிய.. அஷோக் ஊரில் இல்லை என்ற வார்த்தைகளில்.. ஆனா அன்னைக்கு எனக்கு ஒண்ணுன்னதும் வீடு வரைக்கும் தேடி வந்தானே.. அவன் அன்பில் காதல் கொண்ட நெஞ்சம் நிரம்பி வழிந்தது.. அஷோக்.. அஷோக்.. மனம் கூப்பாடு போட்டது..
கருத்துகள்
கருத்துரையிடுக