முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 67

 அண்ணன் என்னடி சொன்னான்.. நீ ஓகேவா.. அறைக்கு வெளியவே நின்றபடி அவளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மிதா வெளிய வந்த ஜான்வியை நிறுத்தி வைத்து கேட்டாள்.. ஆர்ப்பாட்டம் இல்லாது நிமிர்ந்தவளின் விழிகள் ரெண்டும் அவளை இரண்டாய் கூறிட்டன..




வழிவிடு மிதா..  நான் போறேன்.. உன்ன நம்பி உள்ள போனேன்ல்ல.. கடைசில நீயும் கூட்டு தான்.. கேட்டதும் மாட்டிக்கொண்டதாய் விழித்தாள் மிதா.



ஜானு.. ஏண்டி இவ்வளவு கோவப்படுற.. இவன் என்னமோ சொன்னான் தானே அசோக்கை ஏத்துக்க முடியாமல் தவிக்கிறே.. அதான் அப்படி பண்ணேன்.. அவள் கூற கூறவே  அவள் கையில் படுத்து உறங்கியிருந்த பிள்ளையை தன் தோலுக்கு இடமாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்ஜானு.. வேக நடையில் அவள் கோபம் தெரிந்தது. 




ஐயோ முக்கியமான விஷயம்னு சொல்லி தானே வர சொன்னான்.. இவன் என்ன சொல்லி தொலைச்சான்ன்னும் தெரியல.. இவ முழுசா கேட்டாளான்னும் தெரியல.. அப்படி என்ன விஷயத்தை சொல்லிருப்பான் அவன்.. என ஆயிரம் விஷயங்கள் மண்டைக்குள் ஓட.. அதற்குள் அவள் வாசலை தொட்டிருந்ததில்.. நில்லு டி.. எங்க போற.. நானும் வரேன்..  என அவள் பின்னே தொடர்ந்து கொண்டு ஓடினாள் மிதா..






  அறையில் இருந்து வெளிவந்ததோடு அவள் மண்டபத்தை விட்டு வெளியேறுவதும் தொடர்ந்து தன் தங்கை பின்னே ஓடுவதும் மணமேடையில் இருந்து ஆரியனின் கண்களுக்கு தெளிவாய் தெரிந்தது.. அவள் கையில் உறங்கிக் கொண்டிருக்கும் தன் மகளிடம் கடைசி முறை ஏக்கமும் மன்னிப்புமாய் நிலைத்தது ஆரியனின் விழிகள்.





சாரி பாப்பா.. நீ உங்கம்மா வயித்துல உண்டானதுல இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் அப்பா உனக்காகவும் சரி.. உன் அம்மாவுக்காகவும் சரி நா எதுமே செஞ்சதில்ல..திடீர்னு வந்துட்டு உங்க மேல உரிமை கொண்டாடி.. அதனால தேவையில்லாத பிரச்சினை வந்து..  கடைசில இப்படி தனியா நிற்கிறது ஜானு தான்.. 




ஆனா அஷோக்.. அவர உன் அம்மா ஏத்துக்கிட்டா போதும்..  உனக்கும் உன் அம்மாவுக்கும் என்னைக்கும் சரியான துணையா இருப்பார.. நா உங்கள பாத்துகிறதா விட ஆயிரம் மடங்கு உங்கள பாத்துப்பார்..என் வாழ்க்கை இனி நீஙக இல்லனு நினைக்கும் போதே மனசெல்லாம் பயங்கரமா வலிக்குது.. இப்போவே உங்க கூட ஓடி வந்துட மனசு துடிக்குது.. ஆனா நிறைய தூரம் கடந்துட்டோம்.. இது இத்தனை நாள் உங்கம்மாவ புரிஞ்சுக்காம நா இருந்ததுக்கு தண்டனை.. ன்னு வச்சுக்கறேன்.. இது தான் நா உங்கள பாக்குற கடைசி நாள்.. கண்கள் நீரில் மூழ்க.. இமைக்க மறந்து மனதோடு பேசி நின்றவனின் பார்வையிலிருந்து குழந்தையோடு மறைந்திருந்தாள் ஜானு.




ஜானு.. அவன் இதயம் வெம்பி துடித்தது.. மாமா.. யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி அவன் கரம் பற்றினாள் ரூபா.. 



ஹ்ம்ம்... கண் சிமிட்டி கண்ணீரை உள்ளேயே தள்ளி திரும்பினான் அவன்.



என்னாச்சு.. அவன் கலங்கிய கண்களைப் பார்த்து பதறியவள்..  அய்யோ லைட் சேரல போல.. இருங்க மாமா.. பக்கத்தில் வைத்திருந்த தன் கர்சிப்பை எடுத்து தானே அவன் கண்களை துடைத்து விட்டாள்.


நைட் ஐஸ் பேக் வைக்கலாம்.. சரியாகிடும்.. என்னைக்கும் என் மாமா கண்ணுல தண்ணியே வர கூடாது.. அவன் தோளோடு சாய்ந்து கொண்டாள்.. அவள் பேச்சோடு அவள் செய்கையில் இரும்பாய் விரைத்தான்.





இன்னும் அவளை மனமார ஏற்று கொள்ள முடியவில்லை.. அவளை விரும்ப முடியுமா எனவும் தெரியவில்லை.. ஆனா இனி உனக்கு உண்மையாய் இருப்பேன்.. உள்ளூர எண்ணிக்கொண்டவனின் மணக்கண்ணில் அன்று டாக்டர் கூறியது திரை பிம்பமாய் ஓடியது.



அவள் கத்தியால் அறுபட்டு கிடந்த போது.. டாக்டர் கூப்பிட்டாங்க.. என்ற நர்ஸ் குரலை தொடர்ந்து அவர் அறைக்குள் உள்ளே நுழைந்தான்.




உக்காருங்க.. மிஸ்டர் ஆர்யன்.. ரைட்..



எஸ் டாக்டர்.. இவன் தலை ஆடியது.




ஓகே.. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. அதுக்கு தான் கூப்பிட்டேன்..




சொல்லுங்க.. இவன் விழிகள் கூர்ந்தன..



பேஷன்ட் ரூபா  ஒரே விஷயத்துக்காக அடுத்தடுத்து உடல்நிலை சரியாகுறதுக்குள்ள சூசைட் அட்டென்ட் பண்ணத வச்சு பார்க்கும்போது அவங்களுக்கு மனநோய் இருக்கிற மாதிரி தெரியுது..  


டாக்டர்.. அதிர்ந்தான் இவன்..


நான் அப்சர்வ் பண்ணத வச்சு சொல்லி முடிச்சிடுறேன்.. காரணம் யாராவது ஒருமுறை சூசைட் அட்டென்ட் பண்ணிட்டாங்கன்னா.. இன்னொரு தடவை பண்ண நிச்சயம் யோசிப்பாங்க.. ஏன்னா ஏற்கனவே அந்த வலிய அவங்க உணர்ந்துட்டாங்க.. அதனால ஏன் அதுக்கு மேல செய்ய அவங்களுக்கு மனசுல இடம் இருக்காது.. 

.



ஆனா இவங்க உடல் நிலை சரியாகறதுக்குள்ள அடுத்தடுத்த தா இப்படி பண்ணியிருக்காங்க.. அதுக்கு அசாத்திய தைரியம் வேணும்.. இல்ல வேணும் என்கிறது கிடைச்சே ஆகணும் என்கிற ஆதிக்கம் ஆகவும் இருக்கலாம்.. இதுல இவங்களுடைய நிலை இரண்டாவது தான்.. 




.  இவங்க எல்லாத்தையும் விட தனக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க.. தான் விருப்பப்பட்டது கிடைச்சே ஆகணும்..  அதுக்காக எந்த எல்லைக்கு வரைக்கும்னாலும் போவாங்க.. அந்த ஸ்டேஜ்ல தான் இப்போ ரூபா இருக்காங்க.. இவங்க எல்லாம் உயிரைவிடவும் கூட தயங்க மாட்டாங்க.. 



டாக்டர்.. அவர் பேச்சில் அதிர்ந்தான் இவன்.. எஸ்..  இதுக்கு நிறைய காரணங்களும் இருக்கு..



பொதுவாக காதல் தோல்வியில இப்படி எல்லாம் நிறைய பேர் நடந்துக்கிட்டாலும் இவங்க பண்றது கொஞ்சம் ஹைபர் ஆக்சனா தெரியுது.. அதே சமயம் அவங்க உங்கள ரொம்பவே விரும்புறாங்க.. அவங்க என்கிட்ட பேசற ரெண்டு வார்த்தைகளையும் உங்கள பத்தி தான் இருக்கும்..  இல்லனா ஒரு தடவை உயிர் போற வலி எப்படி இருக்குன்னு அனுபவிச்சும் திரும்ப அதே மாதிரி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்து இருக்க மாட்டாங்க.. அவங்களுக்கு அவங்க செய்றது சரியா இருக்கும்.. அதனால தான் செய்ஞ்ச தப்பையே திரும்ப திரும்ப பண்றங்க.. 




அப்படினா இதுக்கு என்ன பண்றது டாக்டர்.. குற்ற உணர்ச்சியோடு தவிப்பாய் கேட்டான் ஆரியன்.. 



அவங்கள புரிஞ்சுக்கங்க.. அவங்க கோபத்து பின்னாடி இருக்கற காரணத்தை தெரிஞ்சுக்கோங்க.. இது நா ஒரு டாக்டரா மட்டும் இல்லாம ஒரு வெல் விஷ்ஷராவும் சொல்றேன்..




உங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ அத சரி பண்ணுஙக.. இல்ல அப்படியே நெகிளேட் பண்ணிடுங்க..  அப்பதான் உங்க ரெண்டு பேர் லைப்பும் ஸ்மூத்தாகும்.. என்று கூறியதோடு மணிமேகலை கூறியதிலும் சேர்த்துதான் மீண்டும் அவளை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான்..  ஆனால்.. உண்மை தெரிந்த நிலையில் மீண்டும் முடிவு மாறி போக.. 



அன்று தன்னை நிறுத்தி வைத்ததோடு மிதா கூறியது.. 



எனக்கு புரிஞ்சிருச்சு.. அவளுக்கு நான் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன்.. அதுக்கு தண்டனையா கடைசி வரைக்கும் நான் இப்படியே இருந்து விடுறேன்.. எனக்கு ஒரு செல்லப் போனவனை அண்ணா நிறுத்தினாள் மீதா..




திரும்ப திரும்ப ஒரே தப்ப தான் பண்ற.. அப்போ ஜானு.. இப்போ ரூபாவா.. அவள் கேள்வியில் அடிபட்ட நிலையில் இருந்தான்..




அண்ணா.. எப்போ நீ கல்யாணத்துக்கு ஒத்துகிட்டியோ அபோ இருந்து உன்ன மனமார நேசிக்க ஆரம்பிச்சுட்டா. நீ எப்போ கல்யாணம் வேணணும்னு சொன்னியோ அப்போ ஒரே நேரத்துல ரெண்டு தடவ உயிரையே விடவும் முடிவு பண்ணிருக்கா.. ஏன் உன்னையும் தண்டிச்சு உன்ன நம்புறவங்களையும் தண்டிக்கிற.. ஜானுக்கு நீ வேணும்கிறப்போவும் நீ அவ கூட இல்ல.. இப்போ ரூபா கிட்டயும் அதே மாதிரி தான் நடந்துகிற... நடந்த வரையிலும் விடு.. இனி புதுசா வாழ்க்கைய ஆரம்பி.. ரூபாவ கல்யாணம் பண்ணிக்கோ.




ஆனா.. நா. ஜானு.. பாப்பா.. வார்த்தைகள் தடுமாறின.



அது முடிஞ்சு போன அத்தியாயம்.. உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றது உனக்காக மட்டுமில்ல.. ஜானுவுக்காகவும் தான்.. நீ கல்யாணம் பண்ணிட்டு சமதோஷமா இருந்தா அவளும் எந்த சங்கடமும் இல்லாம அவ லைப்ப பாப்பா.. அவள் கூறியதில் இயலாமையுடன் பார்த்தான்.




இது வரை தன் எண்ணம் .. தன் முடிவு.. என எத்தனையோ பேரின் வாழ்க்கையை நடு கிணற்றில் இறக்கியாயிற்று.. இனியும் அப்படி இருக்க முடியாது.. தான் அவளை விரும்பவில்லை என்றால் என்ன.. அவள் என் மீது உயிரையே வைத்திருக்கிறாளே.. மிதா கூறுவதை போல தான் திருமணம் செய்து கொள்வதால் ஜானுவால் எந்த துணுக்கமும் இல்லாமல் வாழ முடியாமானால்..



எஸ்.. எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்..




கை பிசைந்து கொண்டு மகன் சொன்ன உண்மையை கிரகிக்க முடியாமல் அமந்திருந்தாள் மணி.. கல்யாணத்துக்கும் ஒப்பு கொண்டு 80 சதவீதம் அனைவருக்கும் பத்திரிக்கையும் வைத்தாயிற்று.. இந்த நேரத்தில் இந்த பாவி பயன் இப்படி அல்லவா கூறுகிறான்

. இது எப்படி சாத்தியம்.. அன்று நடந்தது வெறும் நாடகம் தானே.. இதில் பிள்ளை என்றால்?? நெஞ்சம் நின்று துடித்தது.



ஆனால் இப்போது கூட ஜானுவை அந்த வீட்டின் மருமகளாய் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. மகளிடம் விஷயத்தை கூறி.. அவனை எப்படியாவது சம்மதிக்க வைத்து விட்டால் போதும்.. இப்போதும் கூட அப்படி தான் நினைத்துக் கொண்டிருந்தாள் மணி.



திடீரென போன் ஒலிக்க.. எல்லாம் இதனால வந்த வினை என கூறி கொண்டாலும்.. அதில் ஒளிர்ந்த எண்ணை கண்டு.. அடுத்த நிமிடம் போனை காதில் வைத்திருந்தாள்.



அடுத்து ஏங்க போகணும்.. ஆரியனின் இறுகிய குரல்.



என்னடா.. புரியாமல் விரிந்தன மணியின் கண்கள்.



பத்திரிக்கை வைக்க அடுத்து எங்க போகணும்.. வீட்டுக்கு வெளிய தான் நிக்கிறேன்.. அவன் இருகிய குரலை தொடர்ந்து வெளி வந்தாள் மணி.




அவன் இறுகிய முகத்தை காண முடியவில்லை.. எப்படியோ அவன் திருமணத்திற்கு சம்மதித்ததே போதும்.. அண்ணன் சொத்து முழுக்க தனக்கு தான் என குதுகலிப்பாய் எண்ணி கொண்டு மீண்டும் பத்திரிக்கை வைக்க தொடங்கினார்.




ஆனால் இப்போது நிச்சயம் முடிந்து நாளை திருமணம் என்ற நிலையில் ஏன் இந்த நடுராத்திரியில் எல்லாரையும் ஒரே இடத்தில் நிறுத்தி இருக்கிறாள் இந்த பெண்.. புரியாமல் மணியோடு ரூபாவின் தாய் தந்தை பார்த்து கொண்டிருக்க.. தன் பக்கம் நின்ற ஆரியனின் கரத்தை இறுக்கமாய் பற்றி கொண்ட படி எனக்கு உங்ககிட்ட இருந்து எந்த சொத்தோ நகையோ வேண்டாம்ப்பா.. என மணியின் தலையில் ஒரு கூடை இடியை பாரா பட்சம் இல்லாமல் இறக்கியிருந்தாள் ரூபா.. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...