உறக்க கலக்கதில் கண்ணை தேய்த்துக் கொண்டிருந்த மணிமேகலைக்கு ரூபா கூறியதை கேட்டதும் கண்கள் நிறைத்திருந்த உறக்கம் போன இடம் தெரியவில்லை.
ரூபா.. நீ என்ன சொல்ற அவளையும் மீறி அதிர்ச்சியில் வந்து விழுந்தன வார்த்தைகள்.. அவள் தாய் தகப்பனும் கூட இந்த விஷயத்தை எதிர்பார்க்கவில்லை என்பது போல் அதிர்ச்சியாய் பார்க்க.. பற்றி இருந்த ஆரியனின் கரத்தை இறுக்கிக் கொண்டாள் ரூபா.
ஆமாங்க அத்தை.. இந்த கல்யாணம் நடக்கணும்னா வரதட்சணை எதுவுமே இருக்க கூடாதுன்னு மாமா சொல்லிட்டாரு.. அவரே அப்படி சொன்னதுக்கடுத்து என்னால எப்படி வேணும்னு சொல்ல முடியும்.. எனக்கு என் மாமா தான் முக்கியம்.. அவர் சொல்றது தான் முக்கியம்.. அதனால மம்மி டாடி நீங்க ரெண்டு பேரும் எங்களை தப்பா எடுத்துக்க கூடாது.. எனக்கு இந்த நக பங்களா எதுவுமே சீரா வேண்டாம்..
அதோட எங்களுக்கு கல்யாணம் முடிஞ்ச கையோட நானும் மாமா கூட மாமா ஆபீஸ் போக போறேன்.. அவருக்கு ஒத்தாசையா கூட வேலை பார்க்க போறேன்.. அவள் தொடர்ந்து கூறிய செய்திகளில் அதிர்ச்சியில் நெஞ்சை பிடிக்காத குறை தான் அவள் பெற்றவர்களும்.
என்னடி திடீர்னு இவ்வளவு பொறுப்பா பேசிகிட்டு இருக்க.. அதிர்ச்சியாய் கேட்டார் அவள் அன்னை நீலவேணி.
கன்னம் குழிய சிரித்தாள் ரூபா.. மாமா தான்ம்மா சொன்னாரு.. என்னைக்கோ அவர் கூட சேர்ந்து என்ன வேலை பார்க்க சொன்னாரு தான்.. ஆனா அப்போ வேண்டாம்னு சொல்லிட்டேன்... ஆனா இப்போ யோசிச்சு பார்த்தா அதுவும் நான் அவர் கூட ஸ்பென்ட் பண்றதுக்கான டைம் தானே.. கூடவே என் திறமையும் வளருதுங்குறபோ ஏன் வேண்டாம்னு சொல்லணும்.. அதனால தான் நானும் மாமா கிட்ட சம்மதம் சொல்லிட்டேன்.. கல்யாணம் முடிஞ்ச கையோட நாங்க தனியா ஒரு ஆபீஸ் வச்சு ரன் பண்ண போறோம்.. அத்தை.. நீங்களும் எங்களை புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்.. இதுல நீங்களும் சந்தோசப்படுவீங்கன்னு எனக்கு தெரியும்..அவள் கூற அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்த மணிமேகலைக்கு கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட பெருச்சாலியின் நிலை.
ம்ம்ம்.. ம்ம்ம்.. வாய் வரை மறுத்து வந்த வார்த்தைகளை கூற முடியாது விக்கி கொண்டு உள்ளேயே தள்ளினாள்.
மம்மி.. டாடி.. இப்ப மட்டும் இல்ல எப்பவும் நான் உங்ககிட்ட சீருன்னு வந்து கேட்க மாட்டேன்.. என் மாமாவும் அதற்கு அனுமதிக்க மாட்டாரு.. இதோ அத்தையும் கூட எங்க முடிவுக்கு சம்மதிச்சுட்டாங்க..
நான் எப்படி சம்மதிச்சேன்.. வாய்க்குள் முனகியபடி பச்சை இஞ்சியை கடித்து தின்றார் போல் நின்றாள் மணி..
மகளை நெருங்கிய பாடி ஆதுரமாய் அவள் தலை வருடினாள் நீலவேணி..
ஆரியன் கூட இவ்வளவு அட்டாச்டா இருக்கிறத பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி.. ஆனா வரதட்சனை வேண்டாம்னு சொன்னதுல கொஞ்சம் கஷ்டம் தான்... என்னைக்கு இருந்தாலும் உன்னுடைய சொத்து உனக்கு தான்.. எப்போ நீ கேட்டாலும் உடனே கொடுத்துடுவோம்..
அதுக்கு அவசியம் வராது ஆன்ட்டி.. உடனடியாய் கூறியிருந்தான் ஆரியன்.. எப்போ எனக்காக எந்த சொத்து பத்தும் தேவையில்லைன்னு உங்க பொண்ணு சொன்னாளோ அப்போது இருந்து அவ என் பொறுப்பு.. என் பொண்டாட்டிய நான் கடைசி வரைக்கும் என் சுய சம்பாத்தியத்தில வாழ வச்சப்பேன்.. என்றவனின் கண்கள் இடுங்கி மணிமேகலையிடம் நிலை குத்தி நின்றது.
மற்றவர்களுக்கு அவர்களின் ரகசிய பரிபாஷனை புரியவில்லை.. ஆனால் அவன் பார்வை தன்னை துளைத்ததில் இது தனக்கே தனக்கான தண்டனை.. மணியின் தலை மௌனமாய் தாழ்ந்தது.. சிலருக்கு இப்படியும் பட்டால் தான் புத்தி வருகிறது.. என்ன செய்வது..??
அவன் தன்னை உரிமையோடு பொண்டாட்டி என அழைத்தது கன்னம் சிவக்க அவனையே காதலோடு பார்த்து நின்றாள் ரூபா.. இடுங்க பார்வையை மாற்றிக்கொண்டு அவளிடம் திரும்பினான் ஆரியன்.. அவள் விழிகளில் என்றும் இல்லாத மலர்ச்சி..
நிலைமையை புரிந்து கொண்டவர்களாய்.. சரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு.. காலையில கல்யாணம் இருக்குல்ல.. ரெண்டு பேரும் பேசிட்டு நேரத்தோட தூங்குங்க.. நாங்களும் போய் ரெஸ்ட் எடுக்கிறோம்.. என.. பேயறைந்தார் போல் ஸ்தம்பித்து நின்ற மணிமேகலையும் இழுத்து கொண்டு சென்று விட்டனர்.
ரூபா.. அவன் குரலில் வேதனையின் தாக்கம்.. பணத்திலேயே குளித்து வளர்ந்தவள் எனினும் தான் கூறிய ஒற்றை வார்த்தைக்கு தனக்கு வரவேண்டிய நகை நட்டுகளையும் சீர் பொருட்களையும் வேண்டாம் என மறுத்ததோடு அலுவலகத்திற்கும் தன்னோடு வருவதாய் கூறி விட்டாளே... இந்த சில விஷயங்களிலேயே அவன் மனதில் இமயம் அளவிற்கு உயர்ந்திருந்தாள் ரூபா.. ஆனால் இவளுக்கு நான் தகுதி தானா.. தாழ்வு மனப்பான்மையோடு எழுந்த வேதனையில் தன் ஜான்விக்கு செய்த துரோகத்தையும் தனக்கு பிள்ளை இருப்பதையும் கூறி விட எண்ணி.. ரூபா.. என்னோட பாஸ்ட்ல.. என அவன் கூற வருவதற்குள்ளாக.. அவன் முகம் போன போக்கில் அவசரமாய் தன் கரம் கொண்டு அவசரமாய் அவன் வாயை பொத்தியிருந்தாள் ரூபா.
வேண்டாம் மாமா.. நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு தெரியாது.. ஆனா பாஸ்ட்ல இருந்தது பாஸ்ட்டோட போகட்டும்.. இனி என் மாமோட பிரசன்ஸ்ளையும் பியூச்சர்லையும் நான் மட்டும்தான் இருக்கனும்னு நினைக்கிறேன்.. கண்கள் சுருக்கி கன்னம் குழிய சிரித்து அவள் கூறியதில்.. ஆனாலும் என்னைக்காவது அந்த விஷயம் உனக்கு தெரிய வந்துச்சுன்னா.. நீ தாங்க மாட்ட.. அதனால நான் இப்பவே சொல்லிடுறேன் .. என அவன் ஆரம்பித்த வேளையில் விழிகளை உருட்டி அவனை நிறுத்தினாள்.
கஷ்டப்படுவேன்னு தெரிஞ்சே ஏன் சொல்றீங்க மாமா .. அப்படியே நீங்க சொல்ற மாதிரி வேற எந்த வழியா எனக்கு தெரிஞ்சாலும் அது உங்களுடைய பாஸ்ட்ன்னு கடந்து போய்க்கிட்டே இருப்பேன்.. ஏன்னா அப்போ உங்களுடைய பிரசண்ட்ஸ்ல நான் மட்டும் தான் இருப்பேன்.. நீங்களும் என்ன அந்த அளவு காதலிப்பீங்க.. என் காதலால உங்களையும் என்ன காதலிக்க வைப்பேன்.. அவள் கூறியதும் ஆத்மார்த்தமாக அவளை தோளோடு அணைத்துக் கொண்டான் ஆரியன்.. இந்த ரூபா புதிதாக தெரிகிறாள்.. இதுவரை இவளிடம் காதல் இல்லை.. ஆனால் மரியாதை.. நம்பிக்கை தோன்றியது.. அது தங்கள் வாழ்வை அடுத்த படி நிலைக்கு எடுத்து வைக்க செய்யும்..
இரவின் நிலவொளி வெளிச்சத்தில் தனியே அமர்ந்திருந்தாள் ஜானு.. வெகு நாளைக்கு பின் தன் பிறந்து வீட்டிற்கு வந்திருக்கிறாள்.. இந்த வீட்டில் தாயோடு சிரித்து பேசிய பொழுதுகள்.. மிதாவோடு உருண்டு புரண்ட நாட்கள்.. தாய்க்கு தெரியாமல் தன் பிரக்னன்சி கிட்ட மறைத்து வைத்தது .. தாய் கண்ட பின் நடந்த நிகழ்வுகள்.. கடைசியாய் தாய் இறந்த போது பெற்ற பிள்ளையாய் இருந்து அவருக்கான இறுதி சடங்கை முடித்து இங்கு இருந்தவர்கள் தன்னை அவதூறாய் பேசுவதை காண முடியாமல் கையுடனையே தன்னை புறப்பட்டு கிளப்பிய அஷோக்.. என நினைவடுக்குகளில் விஷயங்கள் பிம்பங்களை தோன்ற.. கடைசியில் அஷோக்.. அதில் அவள் மனம் நிலை குத்தியது.
அஷோக்.. அந்த நிலைமையில் என் அம்மா கூட என்னை புரிஞ்சுக்கல.. ஆனா எங்கிருந்தோ வந்த நீ என் உணர்வுகள் எல்லாத்தையும் தண்ணில எழுதி வச்ச புடமா புரிஞ்சுகிட்டு எனக்கு கூடவே துணையா நின்ன.. எனக்கு தேவையான எல்லாத்தையும் பண்ண.. அப்படி இருக்கும்போது உன்னை போய் அப்படி சொல்லிட்டேனே.. உன்ன பாக்கணும்னு என் மனசெல்லாம் கிடந்து அடிச்சுக்குது.. இவ்வளவு நாள் தெரிஞ்சோ தெரியாமலோ ஆரியனோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு நான் தான் ஒரு வகையில் காரணமாகிட்டேன் என்கிற குற்ற உணர்ச்சி என்னால இதை வெளிப்படையா கூட சொல்ல முடியல.. ஆனா இப்போ இந்த நிமிஷம் என் மனசு முழுக்க நீ தான் இருக்க அசோக்.. நீ காதலி.. கல்யாணம் பண்ணிக்கோ.. எதுனாலும் எனக்கு ஓகே தான்.. ஆனா எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்டா .. அவ்வளவுதான் எனக்கு வேணும்.. அவள் இதயம் மருகி உருகியது..
ஜானு.. அவள் தோளில் கை வைத்தாள் மீதா.. யாரென உணர்ந்து ஒரு உச்சு கொட்டாலோடு திரும்பிக் கொண்டவளின் முன் மண்டியிட்டு இருகாதையும் பிடித்து பாவமாய் அவளை பார்த்தாள்.
நான் செஞ்சது தப்புதான்.. சாரிடி.. வேணும்னா ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ.. அவன் உன்கிட்ட எதுவும் முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னான்.. தனியா பேச போன்னா நீ போக மாட்ட.. அதனால தான் நான் அப்படி பண்ணேன்.. இன்னும் அவள் முகம் இளகாமல் இருப்பதில் அவள் இரண்டு கைகளையும் தன் முகத்தின் முன்னால் எழுத்து மாறி மாறி அடித்துக் கொண்டாள்.
ஏய்.. ஏய்ய்ய்.. என்னடி பண்ற.. அவசரமாய் அவள் கைகளில் இருந்து தன் கரத்தைப் பிரித்துக் கொண்டாள் ஜான்வி. இறைஞ்சியபடி முன்னே இருந்த தோழியை.. முதல்ல இப்படி உட்காரு.. சற்று தள்ளி அமர்ந்து தன் பக்கத்தில் அமர வைத்தாள்.
என்ன மன்னிச்சிட்டியா.. ஐ அம் சாரி.. இறைஞ்ச குரலோடு கூறும் தோழியை சோர்ந்த விழிகளோடு பார்த்தவளாய்.. என் நல்லதுக்குனு செய்யப் போய் தான.. ப்ச் விடு..
ஆனாலும் உள்ள என்னடி நடந்துச்சு.. அண்ணன் உன் கிட்ட அப்படி என்ன சொன்னான்.. அவ்வளவு கோபமா வந்தியே.. அவன் ஏதும்.. த..ப்.. பா...
ச்சே.. ச்சே.. என்னடி லூசு மாதிரி பேசுற.. உடனடியாய் மறுத்தாள் ஜானு.
அப்பாடா.. பெருமூச்சு விட்டாள் மீதா.. அவன் இன்னும் ஜானுவை விரும்புவது நன்றாகவே தெரியும்.. அப்படி இருக்கும்போது தனித்து அனுப்பி இருக்க அப்படி எதுவும் காதலில் செய்திருப்பானோ என்ற பயம் அவளுக்கு.. நிம்மதி மூச்சு வெளிப்பட்டது அவளிடமிருந்து.
அப்புறம் என்னடி ஆச்சு.. ஏன் அவ்வளவு கோபமாக வெளிவந்த.
பின்ன சார்ஜ் போட்டு வானு போன கொடுத்து அனுப்பி விட்டுட்டு பின்னையே அவரிடம் சொல்லி அனுப்பி வச்சிருக்க.. கோபம் வராதா..
அவ்வளவு தானா.. ஹப்பாடா.. சாரிடி.. அவன் ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னான்.. அதுக்காக தான்.
அதான் சொல்லிட்டியே விடு..
உனக்கு ஒன்னும் என் மேல கோபம் இல்லையே..
கோபப்பட்டு என்ன பண்ணப் போறேன்.. எனக்கு இப்போ இருக்கிற ஒரே ஆறுதலோ சண்டையோ.. நீ மட்டும் தான மிதா.. பெருமூச்சோடு நிலவை வெறித்தவளை சோர்வாய் பார்த்தாள் மிதா.
ஏண்டி இன்னும் இப்படியே இருக்க.. அண்ணன் சொன்னத கேட்டா உன் மனசு மாறும் என்று நினைச்சேனே.. அவள் குரலில் வழி தென்பட்டது..
ஹ்ம்ம்.. விரக்தியாய் இவள் இதழ்கள் வளைந்தன.. அவர் சொன்னதில் இவ்வளவு நாள் புதிரா இருந்த சில விஷயங்கள் தெரிய வந்துச்சு.. அவரிடத்தில் இருந்து பார்க்கும்போது அவர் செஞ்சது எல்லாமே சரின்னு சொல்ல முடியலனாலும்.. சில இடங்களில் நா புரிஞ்சுக்கிட்டேன்.. அவ்வளவு தான்..
ஆனா.. எல்லாம் எப்பவோ முடிஞ்சுடுச்சு.. செத்த பிணத்தை திரும்ப கத்தி எடுத்து வச்சி சர்ஜரி பண்றத தான் நீ பண்ணிருக்க..
ஜானு!!
பதறாத டி.. நான் அந்தளவு ஆகிட்டேன்னு சொல்றேன்.. அசோக் கூட இருந்த வரைக்கும் அவன் அருமை புரியலை.. இப்போ அவன் பணக்காரன்னு தெரிந்ததும் ஏத்துக்க என் மனசு தயாரா இல்லை.
அவசரப்பட்ட அவளிடம் உண்மையை கூறியிருக்க வேண்டாமோ என இப்போது யோசித்து அவள் பார்வை போன போக்கில் இவள் கண்களும் நிலவை வெறித்தன.
ஆனால் காலம் கடந்த ஞானோதயம் வீண் அல்லவா..
உங்களுடைய கருத்துக்களை கண்டிப்பாக கமெண்ட் பண்ணுங்க.. 🙏🏻
கருத்துகள்
கருத்துரையிடுக