வெகு நாளைக்கு பின் தான் பிறந்து வளர்ந்த இந்த ஓலை குடிசையில் உறக்கம்.. நியாயமாய் படுத்த உடனேயே உறக்கம் போர்வையாய் இமைகளை இமயமாய் அள்ளிப் போர்த்தி இருக்க வேண்டும்.. ஆனால் மாறாய் இவளோ படுக்கையில் உறங்க மறந்து புரண்டு கொண்டு அல்லவா இருக்கிறாள்??
மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் நீங்கிய நிலையில் மனம் தாயை தேடும் குழந்தையாய் அவனை சுற்றி வருகிறது.. அஷோக்.. அஷோக்.. அவனிடம் நேரில் பேச தான் முடியாது.. ஆனால் எண்ணங்களுக்கு இலக்கொன்றும் இல்லையே.. என் மனதோடு அவனோடு வாழ்வேன்.. அவனுடைய இருப்பேன்.. அவனும் என் எண்ணங்களிலேயே நிறைந்து எனக்குள் எப்போதும் இருப்பான்.. அவள் எண்ணம்..
ஆனால் இந்த கனவுலக வாழ்க்கை போதும் தானா.. பிறகு ஏன் இப்படி தூங்கக்கூட முடியாமல் ஒரு பக்கம் குழந்தையும் மறுபக்கம் மிகவும் படுத்தி இருக்கும்போதே நடுவில் படுத்துக்கொண்டு புரண்டு கிடக்க வேண்டுமாம்..
அஷோக்.. தான் சோகம் கொள்ளும் போதெல்லாம் ஆசானாய் இருந்து அறிவுரை கூறுவதும் தன் வாடிய பொழுதெல்லாம் தூண்டுகோலாய் இருந்து எழுப்பி நிற்க வைப்பதும்.. குழந்தை தந்தை என கேட்க வாய் எடுப்பதற்கும் முன் பெற்றவனாய் முன்வந்து காப்பதும்.. தனக்கு ஒன்று என்றால் தவிப்போடு அவன் செய்யும் விஷயங்களும்.. தேவை என்றால் நண்பனாய் தோள் கொடுப்பதும்.. அவனோடு தான் இருந்த பொழுதுகளை நினைத்துக் கொண்டே வந்தவளின் சிந்தனை அந்த ஒரு வார்த்தையில் நின்றது.
நண்பனா..?? ம்ம்ஹும் இல்ல.. அவன் என் வாழ்க்கை.. என் உயிர்.. உணர்ந்த நொடி அவள் கண்கள் இருகி மூடி அந்த வார்த்தையின் எகாந்தத்தை உணர்ந்து தேகம் சிலிர்த்தது.
ம்ம்ம்.. திடீரென க்ரீத்தி சினுங்க.. ஐயோ.. நான் படுத்தின பாட்டுல பாப்பாவ எழுப்பி விட்டுடேனா .. என ஒற்றை கண் போட்டு தட்டிக் கொடுக்க.. அப்ப்பா.. உறக்கத்திலும் அவனை கைநீட்டி தேடினாள் குழந்தை.. இவள் முகம் வாடி போனது.
உறக்கத்திலும் கூட அவனை இவ்வளவு தூரம் தேடுகிறாளே.. இவளும் எவ்வளவு தூரம் நேசிக்கிறாள்?? என் சுயநலத்திற்காக இவர்கள் இருவரையும் பிரித்து விட்டேனா.. நெஞ்சில் தடுமாற்றம்.
அப்பா.. அப்பா.. உதட்டோடு முனகி கொண்டிருந்த குழந்தையை தோளில் தட்டிக் கொடுக்க தாயின் அரவணைப்பு கிடைத்ததும் மீண்டும் உறங்கிப் போனாள் கிருத்தி. ஆனால் உறக்கத்தை முற்று முழுதாய் தொலைத்திருந்தாள் ஜானு.
எழுந்து அமர்ந்து விட்டாள்.
அன்றைய நாளில் அப்படி சொன்னதில்எதுவும் தவறாய் தெரியவில்லை.. ஆனால் இன்றைய பொழுது அவளை அனுஅனுவாய் உருக்குழைத்து கொண்டிருக்கிறது.
அசோக்.. பாப்பா உன்ன தேடுறா.. அவ நினைச்சாலே நீ உடனடியா போன் பண்ணவல்ல.. இப்ப பண்ண மாட்டியா..இரவின் எகாந்தத்ததோடு மனதோடு எழுந்த கேள்வி விழிகள் சற்று தள்ளி கிடந்த போனில் ஏமாற்றத்தோடு படிந்து மீண்டன..
எல்லாம் என்னால தான்.. ஏதோ ஒரு காரணத்துக்காக எங்க கூட இருந்திருந்தாலும் எங்க கூட இருந்த வரைக்கும் எனக்கும் பாப்பாவுக்கும் எல்லாமுமா இருந்த.. எங்கள உன் கண்ணுக்குள்ள வச்சு பாத்துகிட்ட.. ஆனா உன்னை கொஞ்சமும் புரிஞ்சுக்காம இப்படி அனுப்பிட்டேனே.. அந்த நேரத்துல நானும் தான் வேற எப்படி யோசிச்சிருக்க முடியும்.. ஆனா எல்லாம் என்னுடைய தவறுதான்.. வெளியே வந்து அமர்ந்து விட்டாள்.. விழிகள் குளிர் சேவை வீசிக்கொண்டிருந்த நிலவினை வெறித்தது.
நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் அசோக்.. இப்பவே உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு உன்னை கட்டி பிடிச்சு... நான் சொன்னா விட்டுட்டு போயிடுவியான்னு உரிமையா உன் சட்டையை புடிச்சு சண்டை போடனும் போல இருக்குடா .. ஆனா... ஆனா.. அவள் குரல் தழுதழுத்தது.
அதுக்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவ நா.. உன் அளவுக்கு என்கிட்ட பணமும் இல்ல.. தகுதி தரதரமும் இல்ல.. குணமும் இல்ல.. இருந்திருந்தா கொஞ்சம் புரிஞ்சுக்காம உன்னை அப்படி சொல்லியிருப்பேனா.. கண்ணீர் கண்களைத் தாண்டி வழிந்தது.
தெரியாம அப்படி பேசிட்டேன்னு ஆரியன்னு சொன்னாரு.. ஆனா அவர் பேசுனப்போ அந்த இடத்துல காயப்பட்டது நான் தானே.. பணத்துக்காக நான் இப்படி எல்லாம் பண்ணேன்னு தா சொன்னாரு... ஹ்ம்ம்.. நாளைக்கு நீயும் அப்படி நினைச்சு என்னை ஒரு வார்த்தை சொல்லிட்டா என்னால தாங்க முடியாது அஷோக்.. நீ அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்னு தான் என் மனச சொன்னாலும்.. ஏற்கனவே சூடு பட்ட பூனையா அனுபவச்ச மூள நம்ப மாட்டேங்குதே.. நான் என்ன செய்யட்டும்... அவள் தேகம் குலுங்கியது.
இப்படியே உன்னை நினைச்சுக்கிட்டே என் கடைசி மூச்சு வரைக்கும் இருந்துடுறேன்.. பாப்பாவும் சீக்கிரமா உன்னை மறந்துடுவானு நம்புறேன்.. முட்டாள்தனமான முடிவு தான்.. ஆனா இதனால நான் என்னைக்கும் மனசுடைய மாட்டேன்.. என்கூட நீ இருக்கான்னு நம்பிக்கிட்டு கடைசி வரைக்கும் வாழ்ந்திடுவேன்.. அது போதும் எனக்கு.. என்றவள் எப்போது உள்ளே வந்து உறங்கினாளோ.??
இன்னும் ஒரு இட்லி வச்சுக்கோடா..
ம்ம்ஹும்.. போதும்... மிதாவின் குரல்.. தொடர்ந்து கேட்ட கிருத்தியின் குரலில் விழிப்பு தட்டியது..
கண்களை திறக்க.. முடியாத அளவுக்கு வெளீர் வெளிச்சம் மேல் கூரை இடுக்கில் பிளந்து கொண்டு கண்ணை கூச வைத்தது.
மிதா.. அழைத்தபடி எழுந்தவளை கண்டு.. என்னடி நல்லா தூக்கமா. .. கேட்டு கொண்டு.. இட்லியை பிட்டு பிட்டாய் பிரித்து குழந்தையின் தட்டில் வைத்தாள் மிதா .
மணி என்னடி ஆகுது.. இவ்வளவு வெளிச்சமா இருக்கு.. என்றளால் இன்னும் கண்களை திறக்க முடியவில்லை.. இரவு முழுதும் அழுததில் முகம் வேறு வீங்கி இருந்தது.
மணி 11 ஆகப்போகுது.. அவள் கூறியதில் அடித்து பிடித்து எழுந்தாள். என்ன 11அஹ்.. ஏண்டி என்னை எழுப்பல..
நல்லா தூங்கிட்டு இருந்த.. எழுப்ப மனசு வரல அதான் விட்டுட்டேன்... வேகமா எழுந்து மட்டும் என்ன பண்ண போற.. ஒரு நாள் தான நிம்மதியா தூங்கு..
கல்யாணத்துக்கு போகல நீ??
எந்த கல்யாணத்துக்கு.. பெரிதாய் அலட்டி கொள்ளாமல் குழந்தைக்கு சாம்பார் ஊற்றினாள்.
விளையாடாதடி.. உன் அண்ணனுக்கு இன்னைக்கு கல்யாணம்ல.. போகலையா நீ..
ப்ச்.. எனக்கு போக இஷ்டம் இல்ல.. அண்ணன்கிட்டயும் சொல்லிட்டேன் அவனும் பெருசா எடுத்துக்கல..
அதுக்காக இப்படி போகாமலா இருக்கிறது?? உன் அம்மா உன்னை தேடுவாங்களேடி.. தாயின் பேச்சை எடுத்ததும் இவள் முகம் கடுத்தது..
ப்ச்.. விடு ஜானு.. இப்போ எதுக்கு எந்திரிச்சதும் எந்திரிக்காததுமா அவங்கள பத்தி பேசிக்கிட்டு.. நான் அப்புறமா அதெல்லாம் பாத்துக்கறேன்.. இப்போ முதல்ல நீ பிரஷாக்கிட்டு வா.. நானும் பாப்பாவும் சாப்பிட்டோம்.. நீ வந்து சாப்பிடு.. பக்கத்துல அந்த மூக்கு கடையில இருந்து இட்லி வாங்கிட்டு வந்தேன்.. உனக்கு அந்த கடை இட்லி ரொம்ப பிடிக்கும் இல்ல..
மனதில் ஆயிரம் குழப்பங்கள் மண்டி கிடந்த போதிலும் பழைய ஞாபகங்கள் அந்த மூக்கு கடையோடு மொட்டாய் இதழ் விரித்ததில்.. இதழ்களில் மெல்லிய புன்னகை படர.. ம்ம்ம்.. இரு வர்றேன்.. பையில் இருந்து வேண்டிய பொருள்களை எடுத்ததோடு குளித்து வெளி வந்தாள்.
வா டி.. இட்லி ஆறுது.. சாப்பிட்டு அடுத்து மத்த வேல பாப்ப..
ம்ம்ம்.. வரேன்.. என்ற படி மகள் அருகில் அமர்ந்தாள்.
தட்டை வழித்து சொட்டான் போட்டு கொண்டிருந்தாள் கிருத்திகா..
பாரேன்.. உன் பொண்ணுக்கு கூட அந்த கடை இட்லி பிடிச்சுருக்கு.. எவ்வளவு அழகா சாப்பிட்டிருக்கா.
ம்ம்.. ஜானுவின் இதழ்கள் புன்னகைத்தன.. சாப்பாடு பிடித்ததால் அவள் இப்படி சாப்பிட்டு இருக்கலாம்.. ஆனால் சாப்பிட சொல்லிக் கொடுத்தது.. வேணாம் காலையிலேயே யோசிக்காத ஜானு.. கட்டுப்பாடு இன்றி கழுதையை ஓட ஆரம்பித்த மனதை கயிறு போட்டு இறுக்கிப் பிடித்தாள்.
உனக்கு மட்டும் தான்.. என நான்கு இட்டிலியை அவள் தட்டில் வைக்க.. வாயில் பட்ட சுவையில் தானாக அவள் கண்கள் சொருகின.. எத்தனை நாட்கள்.. தாய் இருந்த போது கடைசி முறையாக இங்கு வாங்கி உண்டது..
வெகு நாளுக்கு பின் நாவில் பட்ட சுவையில் மெய் மறந்து சாப்பிட்டாள்.. சொல்ல போனால் அதிகமாகவே சாப்பிட்டாள் என கூறலாம்.. தோழியை பற்றி அறிந்தவளாய் அவளுக்கு பிடிக்கும் என்பதற்காகவே மிதாவும் நிறையவே வாங்கி வைத்திருந்தாள்.
ஆவ்வ்.. ஏப்பத்தில் குழந்தைக்கு கை கழுவி விட்ட மிதா அவளையே குறுகுறுவேன பார்த்தாள்.. என்ன டி அப்படி பாக்குற.. ரொம்ப நாளைக்கு பின்ன சாப்பிடுறேனா அதான் பயங்கரமா சாப்பிட்டேன் போல.. என்ன இருந்தாலும் இந்த டேஸ்ட் இங்க மட்டும் தான் கிடைக்கும்...
அதெல்லாம் சரி.. ஆனா நைட் அழுதியா ஜானு.. அவள் கேள்வியில் அதிர்ந்து பார்த்தாள்.
அவள் எதுவும் கண்டு விட கூடாது என தானே கையோடு குளித்து வெளி வந்தது.. அப்படியும் அறிந்து விட்டாளே.. என சமாளிப்பாய் அது என வாயிடுத்த போது. டக்.. டக்.. வெளியிலிருந்து கதவு தட்டும் சத்தம்..
திரும்பி பார்க்க.. தலை தாழ்ந்த படி நின்றிருந்தார் ஒரு வயதான பெண்மணி.. ஆனால் அதை முகத்தில் காட்டி கொள்ளாமல் அளவான ஒப்பனையோடு உண்ட பொட்டு அவரை தெய்வ கடாட்சமாய் காட்டியது.
காட்டன் புடவை எனினும் நேர்த்தியாய் அவர் கட்டி இருந்த விதமும் கண்ணை பறித்தது.. கழுத்தில் சின்ன செயின்.. காதிலும் சின்ன தொங்கட்டான்..
உள்ள வரலாமா.. கேட்ட குரல் கணீரென வந்தது..
இந்த ஊரில் இவரை பார்த்ததாய் ஞாபகம் இல்லை.. யார் நீங்க.. கேட்க வந்த மிதாவை அமைதியாய் இரு என்பது போல் கண் சாடை காட்டியவளாய் உள்ள வாங்க.. என அழைத்ததும் உள்ளே வந்தார் அவர்.
வணக்கம் மா என்றவர் இருவரையும் பார்த்தபடி என் கணிப்பு சரின்னா நீதான் ஜான்வியா இருக்கணும்.. குரல் அவர் பேச்சை இன்னும் அதிகமாய் தூக்கி காட்டியது..
ஆமா.. அவள் தலை யோசனையோடு ஆட...
நா அசோக்கோட பாட்டி.. நெஞ்சில் கை வைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் இருவரின் விழிகளும் அதிர்ச்சியில் விரிந்தன.
அசோக்கின் பாட்டி என்றால் எவ்வளவு பெரிய கோடீஸ்வரி.. இங்கு தங்களை தேடி இந்த ஓலை குடிசைக்கு வந்திருக்கிறாரா.. நம்ப மாட்டாமல் மிதா விழிகள் விரிய.. எனக்கு முட்டி வலி.. ரொம்ப நேரம் நிக்க முடியாது.. உட்காரலாமா.. என கேட்டதும்.. திக் ப்ரமை பிடித்தவளாய் நின்ற மிதா ஒரு நிமிஷம்மா.. பாய்ந்து ஓரமாய் சுருட்டி வைத்திருந்த பாயை எடுத்து தரையில் விரித்தாள்.. இங்கு அமர அவ்வளவுதானே இருக்கிறது..
முகத்தைச் சுழித்தவாறு என ஒருவித சங்கடத்தோடு கையை பிசைந்து கொண்டே நிற்க மாறாத புன்னகை முகத்தோடு அமர்ந்து கொண்டார் யமுனா..
நீங்களும் உட்காருங்க.. தனக்கு எதிராய் காட்டி கூற.. பாட்டி.. இருவரையும் தாண்டி முன்னே ஓடி வந்து அமர்ந்து கொண்டாள் கிருத்தி.
நான் உங்களை என் அப்பாவோட போன்ல பார்த்துருக்கேன்.. நீங்க என் பாட்டி தானே.. மலர்ச்சியோடு கேட்ட குழந்தையை கண்டு இருவரும் விழித்தனர்.. ஜான்விமே இதுவரை ஒரு முறை கூட அவன் போனை எடுத்து இப்படி எல்லாம் பார்த்ததில்லை.. தள்ளி நிற்கும் போதிலும் ஏதேனும் போன் வந்தால் அசோக் உன் போன்.. என சத்தமிடுவாளே தவிர்த்து எடுத்து அட்டென்ட் செய்து பேச வேண்டும் என தோன்றியதுமில்லை.. அப்படி இருக்க இதில் எங்கிருந்து இவன் போனை எடுத்து தான் பார்த்து இருப்பது.??
குழந்தை கேட்டதில் முழுதாய் இதழ் விரித்து சிரித்தார் யமுனேஸ்வரி.. ஆமா டா.. உன் பாட்டியே தான் கொஞ்சலோடு குழந்தையை மடியில் அமர்த்தி நெற்றி முட்டியதில்.. இருவரின் விழிகளும் அவர்களையே அறியாமல் சிறு புன்னகைத்து மலர்ந்தது..
அவனைப் போலவே எந்த பாகுபாடும் காட்டாத குணம் குறித்துக்கொண்டாள் மிதா... உனக்கு பிடிக்குமே.. இதெல்லாம் அசோக் வாங்கி கொடுத்து விட்டான் என கை நிறைய இந்த ஸ்வீட்டையும் பொம்மைகளையும் குழந்தையிடம் நீட்ட.. ஐய் அப்பா வாங்கி தந்தாரா.. என்றவளிடம் இருந்த மகிழ்ச்சியை எதை வைத்தும் அளந்திட முடியாது..
அம்மா.. அம்மா.. பாத்தியா அப்பா எனக்காக பொம்மை எல்லாம் வாங்கி பாட்டிகிட்ட கொடுத்துவிட்டு இருக்காரு... அழகா இருக்கில்லம்மா... கேட்டபடி ஒரு ஓரமாய் சென்று தன் பொம்மைகளோடு அவள் அமர்ந்து விட.. வா டி.. அவளை இழுத்துக் கொண்டு அவர் முன்னால் அமர்ந்திருந்தாள் மிதா..
அவன் வாங்கி தரலம்மா.. ஆனா இவ்வளவு நாள் மகளை பத்தியும் உன்ன பத்தியும் மாறி மாறி சொன்னதுல என் மண்டையில அவன் சொன்ன எல்லாமே ஆணி அடிச்சாப்ல பதிஞ்சு போச்சு.. அதான் நானே பிள்ளைக்கு புடிச்சதெல்லாம் வாங்கிட்டு வந்தேன்.. அவனுக்கு மட்டும் தெரிஞ்சா என்னை இங்க அனுப்பி இருக்கவே மாட்டானே.. விரட்டியில் இதழ் விரித்து அவர் கூற கேட்ட ஜான்வியின் முகம் தொங்கி போனது..
அம்மா ஜானு .. நான் அசோக்கோட பாடிட்ன்னு சொன்னதுல உனக்கு நிறைய குழப்பம் இருக்கலாம்.. அவன் உன்கிட்ட அவனுக்கு யாருமே இல்லைன்னு சொல்லி இருக்கான்.. அப்படி இருக்கும்போது நான் இப்ப திடீர்னு இப்படி வந்தது எதுக்கு.. ஏன்.. இப்படி உன் மூளைக்குள்ள நிறைய யோசனை ஓடிக்கிட்டு இருக்கலாம்.. நானும் அந்த விஷயத்தை ஜவ்வா எழுக்காமல் நேரடியா சொல்லிடறேன்.. என கண்களை அழுத்த மூடி திறந்தவர்.
முதல்ல நீ என் பேரென மன்னிக்கணும்.
அவன் சொன்ன மாதிரி அவன் ஒன்னும் அனாதை கிடையாது.. அவனுக்கு அம்மா அப்பா தான் கிடையாதே தவிர்த்து.. அவனுக்கு நான்.. அவன் தாத்தா.. அத்தை சித்தி சித்தப்பா ன்னு பெரிய குடும்பமே இருக்கு.. ஆனா அவன் உன்னை சந்தித்த காலக்கட்டத்தில் எங்களை விட்டு தனியா இருந்தான்.. அதனாலதான் உன் கிட்ட அப்படி சொல்ல வேண்டிய நிலை.. அதுக்கு தான் என் பேரன நீ மன்னிக்கணும்னு முதல்ல உன் கிட்ட கேட்டுக்கிட்டேன்..
ஆனா அவன் பொய் சொல்லி உன் கூட இருந்திருந்தாலும் அவன் உன்னை நல்லா தான் பார்த்துருக்கான்.. உன் பிள்ளையவும், அவன் பிள்ளையாக நெனச்சு வாழ்ந்து இருக்கான்.. இதுவரைக்கும் வாழ்ந்துகிட்டு இருக்கான்.. அவர் பேச்சில் சட்டென பார்வை உயர்த்தி அவரைப் பார்த்தவரின் விழிகளில் வலி.
நீ அவனை நண்பனா நினைக்க அவன் உன்னை காதலிச்சுட்டாங்கிறது தானே உன் கோபம்.. அவர் கேட்டதில் அவள் அதிர்ச்சியாக பார்க்க.. அசோக் எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லிட்டான்.. ஆனா அவன் இடத்தில் இருந்தும் நீ கொஞ்சம் யோசிச்சு பாக்கணும்.. சின்ன வயசுல இருந்து அம்மா அப்பா கிடையாது.. எங்க நிழல்ல தான் அவன் வளர்ந்தான்.. உலகத்தில் ஆயிரம் பேர் எப்படி எப்படியோ அன்பு தந்தாலும் யாராலயும் பெத்தவங்களுக்கினையா அன்பு கொடுக்க முடியாது.. அப்படி கொடுக்க முடியுதுன்னா ஒன்னு அவங்க வாழ்க்கை துணையாய் இருக்கணும்.. இல்ல அவங்க பெத்த குழந்தையா இருக்கணும்.. நிறுத்தி அவள் முகத்தை தீர்க்கமாய் பார்த்தார்.
அசோக் முதல உன்ன காப்பாத்தி தான் அழைச்சிட்டு வந்தான்.. ஆனா கொஞ்சம் கொஞ்சமா அவன் உன்னோட பழக ஆரம்பிச்சதுக்கு அடுத்து அவன் அம்மாவ உனக்குள்ள தேடி இருக்கான்.. அதோட சாட்சி தான் அவன் உன் மேல வச்ச காதல்.. அப்படிப்பட்ட உயர்வான அன்ப போய் ஏமாற்று வேலை.. கேவலம்னு கொச்சைப்படுத்துறது சரியா?? நீயே யோசிச்சு பாரு..
என் பேரன பத்தி எனக்கு தெரியும்.. இருந்தாலும் நேரடியாவே கேட்கிறேன்.. இத்தனை வருஷமா உங்க கூட இருக்கான் ஒரு நாளாவது வரம்பு மீறி பேசி இருப்பானா.. இல்ல நடந்து இருப்பானா.. அவன் உன்னை காதலிச்சே இருந்தாலும் அவனுடைய காதலை மனசுக்குள்ள புதைச்சுட்டு இத்தனை காலம் உனக்காகவும் உன் மகளுக்காகவும் வாழ்ந்தவன் என் பேரன்.. அப்படி இருக்கும்போது அவனை இப்படி ஒரே நொடியில் நீ தூக்கி எறிஞ்சுட்ட.. அவர் பேச பேச கட்டுக்கடங்காமல் ஜானின் கண்களில் இருந்து கண்ணீர் சுரந்து நின்றது.
இதெல்லாம் உன்ன கஷ்டபடுத்தனும்னு நான் சொல்லல.. ஆனா அவனை நீ புரிஞ்சுக்கணும் அவன் செஞ்சது சரி தப்புங்கறத தாண்டி.. உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் நல்லா இருக்கணும்.. அதுக்கு நீங்க ரெண்டு பேரும் மனசு ஒத்து சேர்ந்து இருக்கணும்...அதுக்காக தான் இத்தனையும் சொல்றேன்.. கூறியவர் அவள் தேங்கிய கண்ணீர் குளத்தை கண்டு.. அழுகாத.. உன் கண்ணில் இருந்து பொட்டு கண்ணீர் வந்தாலும் அவனால தாங்க முடியாது.. அவ்வளவு பெரிய பிசினஸ் டீல பாக்குறவன்.. அவனால உன் கண்ணீரை பார்க்க முடியல.. ஹ்ம்.. ஒரு பக்க இதழ் மட்டும் வளைத்து சிரித்து கூறிய அவர் வார்த்தைகளில் இவள் கண்ணீர் அதிகமானது..
அங்கு அவனும் உன்னை நினைச்சுக்கிட்டே தான் இருக்கான்.. வீட்டுக்கு வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு.. ஆனாலும் எப்பவும் உன் ஞாபகமும் உன் குழந்தை ஞாபகம் தான்.. பழையபடி தொழில்ல கவனமானா இதுல இருந்து வெளியே வர வாய்ப்பு இருக்குன்னு நானும் அவன் தாத்தாவும் தான் அவன கம்பெனிக்கு போய் பார்க்க சொன்னோம்.. அவனும் போய்கிட்டு இருந்தான்.. ஆனா இப்போ திடீர்னு ஏதோ அண்டார்டிக்கா போறதா சொல்றான்.. அவர் கூறியதில் இவள் நெஞ்சம் நின்று துடித்தது..
ஏன்.. வே.. வேல விஷயமா..
ம்ம்ம்.. அப்படின்னு தான் சொல்றான்.. ஆனா வேலை முடிஞ்சாலும் அங்கேயே செட்டில் ஆக போறானாம் இனி இந்தியா திரும்பி வரமாட்டானாம்.. பெரியவள் கூறியதில் இவள் இதயத்துடிப்பு இன்னும் அதிகமாக ஏகிறியது..
என்ன.. மீதாவும் கூட அதிர்ச்சியோடு கேட்க.. நான் தான் சொன்னேனே.. அவன் திரும்பி வந்ததுல இருந்தே ஒரு மாதிரியா தான் இருக்கான்னு நானும் அவன் தாத்தாவும் அவ்வளவு வற்புறுத்தி கேட்டதுக்கடுத்து தான் இந்த விஷயத்தை எல்லாம் என்கிட்ட சொன்னான்.. இவ இல்லாம இங்க இருக்கவே பிடிக்கலையாம்.. அதனால அங்கயே போறானாம்.. பாரு.. அவனுக்காக நாங்க ரெண்டு பேரும் உயிரை கைல புடிச்சுகிட்டு இத்தனை வருஷமா வாழ்ந்துருக்கோம்.. ஆனா இப்போ நாங்க கண்ணுக்கு தெரியல.. இவளும் இவப் பிள்ளையும் தான் அவ்வளவு முக்கியமா போயிட்டாங்க.. கோபமாய் கூறுவது போல் தெரிந்தாலும் அதில் முற்றிலும் நிறைந்து இருந்தது பாசம் என்ன தெளிவாகவே புரிந்தது ஜானுவிற்கு.
அந்த அளவு உங்க ரெண்டு பேரையும் நேசிக்கிறான் அவன்.. உங்க ரெண்டு பேரையும் தாண்டி அவனால எதுவுமே யோசிக்க முடியல.. இப்பவும் கூட அரை மனசா தான் அங்க கிளம்பி போறான்.. நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்.. இதுக்கு மேல முடிவு உன் கையில.. பெருமூச்சுடி எழுந்திருந்தார் யமுனேஸ்வரி..
நீ நெனச்சா மட்டும் தான் அவன் போகாமல் தடுக்க முடியும்.. தயவு செஞ்சு என் பேரன் எங்க கிட்ட இருந்து பிரிச்சுடாத.. கடைசி வார்த்தைகளில் இவ்வளவு நேரம் அவர் குரலில் இருந்து கம்பீரம் மறைந்து போனது.. பாசம் மிகுந்த பாட்டியாய் குரல் நடுங்கியது..
தன் வயதிற்கும் அதிகமான வேகத்தோடு வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.. அவர் கூறிய செய்தியில் திக் பிரம்மை பிடித்தார் போல் சரிந்தாள் ஜானு.
கருத்துகள்
கருத்துரையிடுக