முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 70

 யமுனா சென்று இரண்டு மணி நேரங்கள் முழுதாய் கடந்து இருந்தது.. ஆனால் இதை விட்டு கூட அசையாமல் ஆணி அடித்தார் போல் அதே இடத்தை அமர்ந்திருந்தவளை கண்டு கோபம் தான் வந்தது மிதாவிற்கு..




என்னடி இன்னும் எப்படி உட்கார்ந்துருக்க.. அந்த அம்மா எவ்வளவு தெளிவா இன்னும் அசோக் உன்ன விரும்புறாருன்னு சொல்லிட்டு போறாங்க.. அவங்க கூடவே கிளம்பி போறது விட்டு போட்டு இப்படி ஏதோ பேய் அறைஞ்ச மாதிரி உட்கார்ந்து இருக்க.. அடியே.. அப்போதும் தெரியாதவளை தோள் பற்றி உலுக்கியதும் தான்.. ஹா. ஹான்.. அவள் இமைகள் படபடவென கொட்டி திரும்பின.




என்னடி.. கோபத்தோடு அவள் கேட்டு முடிப்பதற்குள்ளாகவே மீதாஆஆஆஆ.. அழுகையோடு அவளை கட்டி கதற ஆரம்பித்து இருந்தாள் ஜானு.



ஜானு.. அவள் அழுகையை எதிர்பாராமல் மிதாவின் முகம் அதிர்ச்சியானது.




அஷோக்.. அஷோக்.. அவனுக்கு என் மேல கோபம் இல்லையாடி.. நான் அவன அப்படி பேசினதெல்லாம் அவன் மறந்துட்டான்னா.. இல்ல மன்னிச்சுட்டானா.. வருத்தம் இல்லையா..  இன்னும் என்ன காதலிக்கிறானா..  நான் இல்லன்னு ஊரு விட்டு போக முடிவு செஞ்சுட்டானா..  தெரிந்தாலும் ஒன்றும் தெரியாதது போல் கேட்கும் சிறு குழந்தையின் மனநிலையில் அவள்..



கைகள் இரண்டும் நடுக்கம் எடுக்க ஆரம்பித்து இருந்தது.. ஜானு.. ஜானு.. அவள் கரம் ரெண்டயும் ஆதுரமாய் பற்றி கொண்டாள் மிதா.. 




ஜானு.. ரிலாக்ஸா இரு.. முதலில் ஏன் இப்படி அழுகிற..  அழுகையை நிப்பாட்டு..



என்னால என்னால முடியலடி..  என்னாலதானே அவன் ஊரைவிட்டு இல்ல நாடு விட்டே போகப்போறான்..  எனக்கு அசோக்.. அசோக் வேணும் மிதா..  என்னால இப்போ அவனை விட்டு வேற எதையும் யோசிக்கக்கூட முடியல..  அந்த அம்மா அவன் என்ன இன்னும் காதலிக்கிறதா சொன்னபோவே உள்ளுக்குள்ள செத்துப் போயிட்டேன்..  எனக்கு எனக்கு என் அசோக் வேணும்.. குரல் நடுங்கியவளை இருக அணைத்து கொண்ட படி போயிடலாம்.. நம்ம போய்டலாம்.. ஜானு.. முதல் அவருக்கு போன் பண்ணு.. என்ன அவசரமாய் ஓடி சென்று அவள் போனை எடுத்து வந்து நீட்டினாள். .




இப்போது பார்த்த நடுங்கிய கரம் நேரத்திற்கேன வம்பு செய்தது. அவன் பெயரை போடுவதற்கு பதிலாக பல கிளைகளை அழுத்திக் கொண்டிருந்தது.



ச்சை.. கரத்தை எரிச்சலோடு உதறி.. சற்று ஆசுவாசமாய் பெருமூச்சு இழுத்து விட்டபடி.. இப்போது அவன் பெயரை டைப் செய்ய.. நல்லவழியாய் கீ சரியாய் அழுத்தி அவன் பெயரை காட்டியது..




தாமதியாமல் அடுத்த நிமிடம் அவனுக்கு அழைத்திருந்தாள் ஜானு.. நீண்ட நாளைக்கு பெண் அவனிடம் பேச போகிறேன்.. என்ன பேசுவான்..  எப்படி பேசுவான்.. தவிப்போடு இமைக்குள் ஒளிந்திருந்த கருமணிகள் இரண்டும் பதட்டத்தில் பெண்டுளமாய் இடம் வளம் உருணடன..  நீங்கள் அழைக்கும் அவர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்.. கேட்ட கம்பெனி பெண்ணின் குரல் ஒன்றும் அவ்வளவு இதமாய் இல்லை.





தொடர்பு எல்லைக்கு வெளியேவா.. அப்படின்னா என்ன விட்டு போயிட்டானா.. அவள் அழுகை அதிகமாக என்னடி ஆச்சு.. அவசரமாய் போனை காதல் வாங்கி வமீரா..




புரியல அவன் இப்பவே கிளம்பி போயிட்டானாடி.. அதனாலதான் இது இப்படி சொல்லுதா.. குரல் நடுங்கின.



லூசு மாதிரி பேசாத ஜானு.. நானே போன் சுவிட்ச் ஆஃப் பண்ணி போட்டாலும் சில நேரம் இப்படி தான் வரும்.. இந்த போன் எல்லாம் வேலைக்காகாது.. முதல்ல கிளம்பு நம்ம ஊருக்கு போகலாம்..




அடுத்த நிமிடம் ஒன்றும் இரண்டுமாய் வெளியே கிடந்த பொருட்களை அள்ளி பையில் அமுக்க ஆரம்பித்திருந்தனர்.





  வாங்கி கொடுத்த பொம்மைகள் அனைத்தையும் தனக்கு சுற்றிலும் பரப்பி விட்டு நடுவில்  உயரமாய் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி கொண்டு அடுத்த நிமிடம் வீட்டை போட்டு வெளியேறி இருந்தனர்.




அம்மா.. அம்மா.. ஏன் அழுகிற.. அப்போதுதான் தாயின் கண்ணீரை கவனிக்கிறாள் கிருத்தி.




பாப்பாவே கேக்குது..  முதலில் கண்ண தொட டி..  மிதா நீட்டிய கட்சிப்பை வாங்கி கண்களை அழுத்த துடைத்துக் கொண்டாள்.




ஒண்ணுமில்லடா.. என்றவளின்  கால்கள் ஓட்டம் எடுத்து இருந்தன.. எப்படியாவது செல்லும் அவனை தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று துடிப்பு அவளிடம் அதிகமாக.




தான் அன்று ஆரியன் முன்பே அவனை அவ்வளவு அவதூறாய் பேசி இருந்தும் தன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து விலகி இருப்பதோடு தன்னையே மனதில் நினைத்து மருகுபவனை எந்த வகையில் சேர்க்க முடியும்.. இப்போது அவனை நினைத்து இவள் மறுகுகிறாள்.. காலம் மாறிவிட்டது..




வேகமாக வந்தவர்கள் பஸ்சுக்கு நிற்க கிராமப்புறமான இடம் என்பதால் அங்கு போக்குவரத்து சற்று குறைவு தான்.. இரண்டு மணி நேரத்திற்கு பின்பு வந்த சென்னை பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர்..




அஷோக் கிளம்பறதுக்குள்ள நம்ம போயிடுவோம்ல்லடி.. அவனை கிளம்பி விடாமல் தடுத்துடலாம்ல.. 



நாளைக்கு காலையில தான் அவர் போறதா அவங்க பாட்டி சொன்னாங்க.. மணி இப்போ அஞ்சு தானே ஆகுது.. இன்னும் ரெண்டு மணி நேரத்துல நம்ம சென்னை போயிடலாம்.. சொல்லி வாயை மூடவில்லை.




என்ன இந்த பக்கம் பஸ் ரூட் மாறுது.. இந்த பக்கம் ஏன் போறீங்க.. உள்ளிருந்த  பயணியர் சில சத்தமிட ஆரம்பித்தனர்.. 





ஆமா.. வழி மாறுது..  மிதாவும் கூட போதுதான் கவனித்தவளாய் தங்களை கடந்து சென்ற நடத்துனரை நிறுத்தி  கேட்க அந்த பக்கம் திருவிழா கூட்டம் போய்கிட்டு இருக்கு.. அதனால தான் போக இடமில்லாமல் வழி மாறிடுச்சு.. இன்னும் 2 1/2 மணி நேரத்துல சென்னைக்கு போயிடலாம்.. என்றதோடு டிக்கெட் வாங்கிக் கொண்டு கடந்துவிட்டார் அவர்..




தவிப்போடு அவளைப் பார்த்தாள் ஜானு.. அதெல்லாம் நேரத்துக்கு போயிடலாம்..  கவலைப்படாம இருடி.. நைட் முழுக்க நமக்கு டைம் இருக்கு.. கூறிக் கொண்டிருந்தபோது பஸ் அந்த காடும் மேடுமாய் இருந்த இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தது.. 




ச்சை.. ரோடு இல்லாத மாதிரி எந்த வழியில் கூட்டிட்டு வராங்க பாரு.. குழந்தையை மடியில் வைத்து முன்னும் பின்னும் ஆடியபடி மிதா புலம்ப.. திடீரென ஸ்டரக் அடித்து நின்று விட்டிருந்தது வண்டி.. 




அஹ்ஹ்.. ஒரே சத்தத்தோடு அனைவரும் முன்னே வந்து பின் செல்ல.. .. என்ன ஆச்சு என்ன ஆச்சு..  என்று கூப்பிடல்களின் சத்தம்..



நாங்களும் பார்த்தா தானே தெரியும்..  இறங்கி கீழே சென்றார் நடத்துனர்.




பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு.. கூறியதில் ஜானு நெஞ்சை பிடிக்காத குறை.. ஐயோ என்ன நேரம் பார்த்து தானா இப்படி எல்லாம் நடக்க வேண்டும்..


பதறாதடி நீ..  என கோபத்தோடு நடத்துனர் பக்கம் திரும்பியவராய்.. என்ன சார் இப்படி சொல்லிக்கிட்டு இருக்கீங்க..  எல்லாரும் எவ்வளவு அவசரமான வேலைக்கு போயிட்டு இருக்கோம்.. வார்த்தைகளில் படபடத்தாள் மிதா.




எங்களுக்கு மட்டும் இப்படி ஆகணும்னு ஆசையாம்மா.. யாரும் கவலைப்படாதீங்க..  இந்த பக்கமா வர பஸ்ல எrறி போய்க்கலாம்.. என்றபடி டிரைவரிடம் நடந்தவர்.. விஷயத்தை கூற..  உள்ளிருந்த அனைவரின் விழிகளும் வழி மேல் விழி வைத்து இன்னொரு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தன.




நேரம் கடக்க கடக்க சூரிய தேவன் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தான்.. இருள் காட்டானாய் அந்த காட்டை விழுங்க ஆரம்பித்து இருந்தது.. இதுவரை பஸ் என்ன. . ஒரு இருசக்கர வாகனம் கூட அந்த வழியாய் வரவில்லை.




ஆறு மணிக்கு நின்ன பஸ்.. மணி எட்டாக போகுது..  இன்னும் எந்த பஸ்சும் வரல..  பொறுமை பொறி சாப்பிட சென்று விட ஒரு கட்டத்தில் கத்தவே ஆரம்பித்து இருந்தாள் மிதா .. தோழியின் பதட்டத்தை கண்கொண்டு காணவே முடியவில்லை.. இப்படி கை கால்கள் அல்லவா நடுங்கி கொண்டு அமர்ந்திருக்கிறாள்.. 



  எங்களுக்கு மட்டும் இப்படி நடுக்காட்டில் பஸ் நிக்கணும்னு ஆசையாம்மா.. வேற ஏதாவது பஸ் வந்தா முதல்ல உன்ன தான் ஏத்தி விடுவேன் போதுமா.. தன் பங்குக்கு தானும் கத்தினார் கண்டக்டர்.



எவ்வளவு திமிரா பேசுறானு பாரு.. இன்னைக்கு இருக்கு அவனுக்கு. .. எகிரி குdhiத்து ஓட போனவளை இழுத்து நிறுத்தினாள் ஜானு. 



நீ வேற ஏண்டி இருக்கிற டென்ஷன் புரியாம.. கேட்டவளை பார்த்து வாயில் கை வைத்த படி..  அடி பாவி..  உனக்காக தானே நான் அந்த மனுஷன் கிட்ட சண்டைக்கு போறேன்..



அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. அமைதியா உட்காரு மிதா.. என்றவளின் விழிகள் அவ்வப்போது ஜன்னல் வழியாய் பின்னே எட்டிப் பார்த்து ஏதாவது பஸ் வருகிறதா என்று தவிப்போடு முன்னே அமர்வதுமாய் இருக்க.. மணி பத்தை தொட்டுவிட்டும் பலன் வீணே..




இன்னும் அந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட பஸ் நகர்ந்து இருக்கவில்லை.. யாருக்காவது போன் பண்ணியாவது வேற பஸ் வர சொல்லுங்க.. கூட்டத்திலிருந்தவர்கள் சத்தமிட ஆரம்பித்ததும்.. ஏற்கனவே சொல்லிட்டோம்.. ஆனா திருவிழா கூட்டத்தில் உள்ள வர முடியலன்னு சொல்றாங்க.. 




பச்ச பிள்ளைகளை எல்லாம் வச்சிருக்கோம்..  சாப்பாடு ஏதும் இல்லாம எப்படி நைட் முழுக்க இருக்க முடியும் .. கூச்சல் அதிகமானது.




நாங்களும் அதற்கு தானே முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கோம்..  என்றபடி கண்டக்டர் மீண்டும் தன் போனை எடுத்து யாருக்கும் போன் போட ஆரம்பித்தார்.




இது வேலைக்கு ஆகுற மாதிரியே தெரியல.. ஏண்டி இன்னிக்கு அந்த அம்மா பேசிட்டு போனப்போவே அவங்க கூட சேர்ந்து நீயும் கிளம்பி இருக்கலாம் இல்ல..



நான் என்ன இப்படி நடக்கும்னு கனவாடி கண்டேன்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..நம்ம போறதுக்குள்ள அசோக் கிளம்பி போயிருவானா..



தெரியலையே.. இவ்வளவு நேரம் இருக்கவே இருக்காது என உறுதியாய் கூறியவளால் இப்போது கையை மட்டுமே பிசைய முடிந்தது..




கதவை பார்ப்பதும் பின்னே பார்ப்பதுமாய் தவிப்போடு அமர்ந்து இருந்தாள் ஜானு.. கண்ணில் துளி பொட்டு தூக்கம் இல்லை.. கத்தி கத்தி  சோர்வுற்றவர்களை ஒரு கட்டத்தில் அனைவரும் உறங்க ஆரம்பித்திருந்தனர்..  சிலர் பசிக்கு அழுகும் குழந்தையை ஒரு வழியாய் சமாளித்து உறங்க வைத்துவிட்டு தாங்களும் தன் அயர ஆரம்பித்து இருந்தனர்..




மிதாவும் கூட ஒரு கட்டத்தில் ஓய்ந்து போனவளாய் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டாளே.. ஆனால் தான்.. அவள் நெஞ்சு முழுக்க நாளை காலை அசோக் சென்று விடக்கூடாது என்பதில் மட்டும் தான் நிலைத்து நிற்கிறது..





அஷோக்.. நான் பண்ணது பெரிய தப்புதான்.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சு டு..  என்னை விட்டு போயிடாத..  நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால யோசிச்சு கூட பாக்க முடியல... அதுலயும் எப்போ நீ என்னை விரும்புறேன்னு உன் பாட்டியே சொன்னாங்களோ..  அதுக்கு மேல வேற என்ன எனக்கு வேணும்.. பெரியவங்க சம்மதத்தோட நீ என்கூட வாழனும்னு நினைக்கிறே.  நானும் உன்ன அவ்வளவு விரும்புறேன் அசோக்.. தயவு செஞ்சு என்னை விட்டுட்டு போயிடாத.   அவள் கண்ணீர் கண்ணத்தைத் தாண்டி கழுத்தை நனைத்து மார்பை தொட்டது.




திடீரென பீங்.. பீங்.. பின் இருந்து கேட்ட ஹாரன் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்ப.. இவர்கள் அருகில் வந்ததும் பஸ் நின்றது.



வாங்க.. வாங்க.. எல்லாரும் இறங்குங்க.. பஸ் வந்துருச்சு..  எல்லாரும் அந்த பஸ்ஸுக்கு மாறி போங்க.. நடத்துனரின் குரலை தொடர்ந்து அனைவரும் எழுந்து நல்ல வேலை என பின்னங்கால் பிடரியில் அடிக்க தங்கள் பொருட்களை எல்லாம் அள்ளி எடுத்துக்கொண்டு மற்றொரு பஸ்ஸில் ஏற தாங்களும் அவர்களுடனே ஏறினர் ஜான்வி அண்ட் கோ.




பஸ் கிளம்பிவிட்டது..  நல்ல வேளை டி..  பஸ் வந்துடுச்சு.. இனிமேல் எதைப்பத்தியும் கவலைப்படாத..  அசோக் கிளம்பறதுக்குள்ள நாம போயிடலாம்ஆஆஆஆ.. கொட்டாவி விட்டபடி அப்படியே கண்களை சொருகியிருந்தாள் மிதா.




தனக்காக தான் அவள் கூறுகிறாள் என புரிந்தாலும் அந்த வார்த்தையில் சிறு நம்பிக்கை தோன்றியது என்பதுதான் உண்மை.. 




உயிரை இறுக்க கையில் பிடித்துக் கொண்டாள்.. அவ்வப்போது அசோக்கிற்கு போன் செய்வதை விடவில்லை.. ஆனால் அப்போதிருந்து ஒரே பதில் தான்.. தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்"





ச்சை.. ஸ்விட்ச் ஆஃப் ன்னு சொல்றது தான் சொல்லுது.. அத ஸ்விட்ச் ஆப் னே சொல்ல வேண்டியது தானே.. தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கான்னு கேட்கிற ஒவ்வொரு நேரமும் என் நெஞ்ச பக்கு பக்குன்னு வேகமா துடிச்சு தொலையுது.. எதற்காக எதை திட்டுகிறாளோ.. அவளுக்கே வெளிச்சம்..



கிட்டத்தட்ட இரண்டரை மணி நேர பயணம் எட்டு மணி நேர பயணமாய் முடிந்திருக்க.. அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை..




சென்னை மாநகரம் உங்களை வரவேற்கிறது.. அந்த பெரிய போர்டு கண்ணில் பட்டது.. எப்போதும் கூட்டத்துடனும் சலசலப்புடனும் இருக்கும் அந்த இடம் இப்போதைக்கு சற்று சாந்தமாகவே தன் இருப்பிடத்திற்கு வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது..



சென்னை வரை வந்து விட்டனர்..


ஆனால் வீடு எங்கே என தெரியாதே...



எனக்கும் தெரியாதுடி.. என ஜானு பதற.. முதல்ல இப்படி பதட்டம் ஆகுறத நிறுத்து.. நான் நம்ம ஆண்டவர் கிட்ட கேட்கிறேன்..



என்ன?? கண் சுருக்கி திரும்பினாள் ஜானு.. அழுதழுது வீங்கி இருந்தன கண்கள்.



லூசு கூகிள் ஆண்டவர் டி.. இப்ப பாரு..  என்ற படி போனை ஆன் செய்து வாய்ஸ் மெசேஜ் என மிதா ஏதோ போட்டுவிட.. ஹான்.. லொகேஷன் கிடைச்சிருச்சு.. கேப பிடிக்கலாம்.. என முன்னே சென்று ஒரு காரை பிடித்து ஏறி இருந்தனர்..




சென்னையில் முக்கியமாகவும் மையமாகவும் அதே நேரத்தில் செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய அந்த ஏரியாவிற்குள் வர முடியாது என மறுத்துவிட்டு சற்று முன்னேயே நின்று கொண்டது கார்.




இங்கயா இருக்கான் அஷோக்.. இடையில் குழந்தையோடு இறங்கியவளின் விழிகள் முன்னே பல மாடி அடுக்குகளாய் வளர்ந்து கண்ணாடியும் கட்டடமமாய் மின்னி கொண்டிருந்த அந்த வீடுகளின் மீது தவிப்பாய் படிந்தது.




வந்த காருக்கு பணம் கொடுத்து விட்டு திரும்பினாள் மிதா.. என்னடி இங்கேயே என்ன பாத்துகிட்டு இருக்க உன் உள்ள போகலாம்.. இருட்டு வேற ஒரு மாதிரி பயமா இருக்கு.. 




சரி டி.. ஆனா நிச்சயமா தெரியுமா.. அசோக் நிச்சயமா இங்கதான் இருக்கானா..



இங்க தாண்டி இருப்பாரு..  அப்படித்தானே கூகிள் காட்டுச்சு.. 




உனக்கே தெரியாது.. அத நம்பி கூட்டிட்டு போற..  கூறிட சட்டென தலையை திருப்பி சுருங்கிய விழிகளால் அவளை முறைத்தாள் மிதா.




யாராலும் மிஸ் ஜட்ஜ் பண்ணலாம்.. ஆனா கூகிள்.. என கட்டை விரல் உயர்த்தி இடம் வல முமாய் ஆட்டினாள்.



என் கூட வா.. அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போக வேண்டியது என் பொறுப்பு.. வேக நடை போட்டு நடந்தாலும் அவள் விழிகள் முன்னிருந்த பெரிய பெரிய கட்டிடங்களில் ஆசையோடு படிந்து மீண்டது.




இப்படி எல்லாம் ஏதாவது காரணம் கூட இங்கு வந்தால் தான் இதெல்லாம் கண்கொண்டு பார்த்தார் போலும்.. நினைத்தபடியே அவ்வப்போது போனை பார்ப்பதும் முன்னே நடப்பதுமாய் ஒரு வழியாய் லொகேஷன் காட்டிய அந்த இடத்திற்கு முன்பாக நின்று இருந்தாள்.





வெளியில் அசோக் சத்ரியன்..  என பெயரிலேயே பெயர் பலகை போட்டிருந்த அந்த பூத் அவர்களை வரவேற்றது.




வந்துட்டோம் வந்துட்டோம்.. சிறு குழந்தை போல் வாசலிலேயே கத்தி ஆர்ப்பரித்த வளை அவசரமாய் பாய்ந்து பாயை போர்த்தினாள் மிதா..



கத்தாதடி.. எங்கேயாவது தூங்கிட்டு இருக்க நாய் கூட உன் சத்தத்தில் எழுந்து ஓடி வந்துடும் போல.. அவள் வழிகள் சுற்றி இருந்த தெருவில் உலா போட்டன.




நினைத்தது போல போட்ட சத்தத்தில் செக்யூரிட்டி பூத்தில் லைட் எரிய ஆரம்பித்தது.. இருந்த சின்ன கதவு மட்டும் திறக்கப்பட யாரு வேணும்.. இங்க என்ன பண்றீங்க.. செக்யூரிட்டியின் கரார் குரல்.




அஷோக்.. அஷோக்க பாக்கனும்.. மகிழ்ச்சியில் நேரம் பார்த்து வாய் திக்கியது..




ஒரு நிமிஷம்.. நகர்ந்தவர் பூத்தில் இருந்த போனில் எடுத்து யாருக்கோ அழைத்துப் பேச.. அடுத்த நிமிடம் முன்னே மாளிகையாய் உயர்ந்து நின்ற வீட்டில் அனைத்து விளக்குகளும் எரிந்தன.




திறந்த கதவின் வழியாய் வெளியே வந்தார் யமுனேஸ்வரி..  அவரைத் தொடர்ந்து தள்ளாட்ட நடையோடு வந்தவர் நிச்சயம் அவர் கணவராக தான் இருக்க வேண்டும்.




ஆமா.. இது இந்த வீடுதான் மிதா.. நீ சொன்ன மாதிரி உன் ஆண்டவர் சரியாகவே சொல்லிட்டாரு..  மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் ததும்ப ஆர்ப்பரித்தவளின் முன் இருந்த பெரிய இரும்பு கதவு திறக்கப்பட்டது.



பாட்டிஈஈ.. கத்தியபடி வேகமாய் யமுனாவிடம் ஓடியவளை எங்கிருந்தோ பாய்ந்து வந்த சூறைக்காற்று ஒன்று தூக்கி அடித்திருந்தது.. அவர்கள் சொன்ன செய்தியில் இதயம் திடுக்கிட்டு நின்று போனது.. 



அவர்கள் சொன்ன விஷயமாவது.. அசோக் அப்போவே கிளம்பிட்டான்.. என் பேரன் எங்களை விட்டு பிரிஞ்சு போய்ட்டான்.. கண்ணீரோடு யமுனா.. 



கொண்ட மகிழ்ச்சி மொத்தமும் துடைத்து எரிந்தால் போல் சடுதியில் வழிந்து போக.. ஒடுங்கி போய் நின்றிருந்தாள் ஜானு.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 38

 ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்..  ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.   தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்..  அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்.. என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..  அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் ம...

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...