உடலும் உள்ளமும் மறித்து போக யமுனா கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதே இடத்தில் நிலை கொள்ள முடியாமல் கீழே சரிந்தாள் ஜானு.
ஜானு.. ஜானு.. ஒரு கையால் குழந்தையை பிடித்துக் கொண்டு மறு கையால் அவளை தாங்கி பிடித்தாள் மிதா.. கைகள் இரண்டும் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தன.. இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவில்லை என்பதை அவளின் வேதனை முகமும் பளிச்சிட்டது.
எம்மா.. நான் உன்கிட்ட அவன் காலையில கிளம்பிடுவான்னு சொல்லிட்டு தானே வந்தேன்.. இப்படி அவன் போன பின்னாடி வந்து நிக்கிறியே.. அவன் இருந்தப்போவே நீ வந்திருந்தா அவன் இங்க இருந்து போயிருக்க மாட்டான்.. என்ன விட்டும் போயிருக்க மாட்டான்.. குரல் கமறினார் யமுனேஸ்வரி. அழுகையை அடக்குகிறார் என புரிந்தது..
நீங்க அவர் காலைல போவாருன்னு தானே சொன்னீங்க.. மணி இப்போ நாலு தான் ஆகுது.. இப்பவே கிளம்பிட்டாரா.. தோழியின் நிலையை காண முடியாமல் வெடித்தாள் மீதா. சிந்தை கலங்கி போனது போல் உதட்டோடு புலம்பியபடி ஏதோ பேசிக்கொண்டு இப்படியல்லவா அமர்ந்திருக்கிறாள்.. கூறு கெட்டவள்.. இதனை நாட்களாய் வைரத்தை பக்கத்திலேயே வைத்து இருந்தாலும் அவன் மதிப்பு புரியாமல் தவற விட்டு விட்டாளே!!
காலையில மூணு மணி ஃப்ளைட்ங்கிறதும் கூட காலையில தான்.. வறண்ட குரலோடு கூறியபடி பின்னே வெற்றி தேவன் நிற்க.. அப்போ அசோக் என்ன விட்டு போயிட்டானா மிதா.. விழிகள் உயர்த்தி கேட்டவளின் குரல் கமறியது..
ஜானு.. நீ எதுக்கும் கவலைப்படாத டி.. நம்ம உடனே ஏர் போட்டுக்கு போகலாம்.. அசோக் அங்க தான் இருப்பான்.. அவர திருப்பி நம்மளுடைய கூட்டிட்டு வந்துடலாம்.. கண்டிப்பா அவர் போயிருக்க மாட்டாரு..
ம்ம்க்கும்.. ப்ளைட் மூணு மணிக்கே பறந்து இருக்குமாம்.. இப்போ போயி யாரை கூட்டிட்டு வர போறாங்களாம்.. யமுனாவுக்கு பின்னே நின்றபடி கூறியது ஒரு இலசு.. நிச்சயம் அதிலிருந்தது ஏளனம் தான்..
அடிபட்ட விழிகளோடு மிதாவை பார்த்தாள்.. அப்படின்னா நா இனி அவனை பார்க்கவே முடியாதா மிதா.. அவன்கிட்ட நிறைய பேசணும்.. நிறைய கேட்கணும்.. ஆனா இனி முடியவே முடியாதா.. அவன் எனக்கு வேணும் மிதா.. அவனை தவிர்த்து வேறு எதையுமே என்னால யோசிச்சு கூட பாக்க முடியல.. அஹ்ஹ்ஹ.. அதற்கு மேல் கத்தி அழ ஆரம்பித்ததில்.. ஜானுஉஹ்ஹ்... தோழியின் அழுகையை காண முடியாமல் ஒரு கையால் குழந்தையையும் மறு கையால் அவளையும் அணைத்துக் கொண்டபடி பரிதவித்து நின்றாள் மிதா.
இதுக்கு மேல என்னவென ஆறுதலை கூற முடியும்.. அவன் நிச்சயமாய் சென்று விட்டான் எனும்போது?? பேச வார்த்தைகள் இன்றி அழுபவளையும் தேற்ற முடியாமல் மிதா பரிதவித்துக் கொண்டிருக்கும் வேளையில்..
என்ன ஆச்சு.. இந்த நேரத்தில் எல்லாரும் வெளியே என்ன பண்றீங்க.. மேலிருந்து கேட்ட கம்பீரக் குரல்!! அழுது கொண்டிருந்தவளின் விழிகள் சட்டென நிமிர்ந்து முன்னே பரந்து விரிந்திருந்த ஹாலில் அடுக்கடுக்காய் வடிவமைக்கப்பட்டிருந்த படிக்கட்டில் பாய்ந்தது.
அழுத்தமான எட்டுகளோடு படிக்கட்டில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தவன் சாட்சாத் அஷோக்கே!! அவன் கண்கள் பழுத்து வீங்கி தெரிந்தன.. காரணம் இவ்வளவு நேரம் உறங்கிய உறக்கமோ அல்லது உறக்கமே இல்லாமல் இந்த சில நாட்களாய் கொள்ளும் தவிப்போ?? அவன் மட்டுமே அறிவான்.
அ.. அஷோக்.. இனிமேல் அவனை பார்க்கவே முடியாது என அடைத்திருந்த நெஞ்சு விடைபெற்ற வேகத்தோடு அவள் கண்ணீரில் அழுத கண்கள் ஒளி பெற.. அடுத்த கணம் அஷோக்... கண்கள் நீரில் ததும்ப தன் குடும்பத்தை விலக்கி ஓடி வந்தவளை.. இந்த நேரத்தில் எப்படி இங்கு.. எதிர்பாராமல் அவன் கால்கள் வேரோடி நின்றிருக்க.. அதிர்வானவனை நெருங்கி பாய்ந்து அவனைக் கட்டி அவன் மார்பில் முகம் புதைத்திருந்தாள் ஜானு.. அவன் மொத்த குடும்பமும் கூட இங்கேன்ன நடக்கிறது என்ற ரீதியில் ங்கேவென மண்டையை சொரிந்து கொண்டு நின்றது.
அப்போது.. வழக்கத்தை விட முன்பாகவே வீட்டிற்கு வந்திருந்தான் அஷோக்.. எது எப்படியோ 8 மணிக்கெல்லாம் சாப்பிட பழக்கம் கொண்டவர்கள் வீட்டில் இருப்பவர்கள்..
அனைவரும் அந்த பெரிய டைனிங்கில் சுற்றி வளைத்து உண்டு கொண்டிருக்க.. உள்ளே வந்தவனே கரகரத்து குரலோடு.. சத்திரியா.. நிறுத்தினார் வெற்றி.
சொல்லுங்க தாத்தா.. அவன் நடை நின்றது.. குரலில் அத்தனை சோர்வு மண்டி கிடந்தது. சமீப காலங்களாக அவன் குரல் இப்படித்தான் இருக்கிறது எனினும் இன்று சோர்வு வருத்தமும் அதிகமாக இருப்பதாய் தோன்றியது வீட்டில் இருப்பவர்களுக்கு..
வாப்பா.. எல்லாரும் கூடயும் உட்கார்ந்தா சேர்ந்து சாப்பிட்டுடலாம் இல்ல.. இப்போது விட்டால் பிறகு அவன் பட்டினி தான் என அறிந்து பெரியவர் அழைக்க..
இருக்கட்டும் தாத்தா.. இப்பதான் வந்திருக்கேன்.. டயர்டா இருக்கு.. அதோட டைம் வேற கம்மியா இருக்கு.. என வேக எட்டுகளோடு அவன் முன்னேறி சென்று விட.. அவன் வந்ததில் ஒரு மார்க்கமாய் முகத்தை சுழித்துக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்த ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒருவராய் முகத்தை முகத்தை பார்த்துக்கொண்டனர்.
என்னாச்சு.. தோசையை பிய்த்தாலும் யமுனாவின் கேள்வி நேர்முடையையாய் வந்தது..
ஹா.. ஹான்.. ஏதோ டைம் கம்மியா இருக்குனு சொல்லிட்டு போறானே அத்தை.. அதான் அப்படி என்ன முக்கியமான வேலைன்னு யோசிச்சோம்.. பவ்வியமாய் வந்தன மருமகளிடம் இருந்து வார்த்தைகள்.. எப்போதும் அவளின் ஓங்கிய குரல் தழைந்ததாய் சரித்திரம் இல்லை ஆனால்.. இந்த சில காலமாய் இப்படித்தானே சென்று கொண்டிருக்கிறது..
எல்லாம் அவனால்.. ஒவ்வொரு முறையும் தன்னிலை எண்ணி கழிவிரக்கம் கொள்ளும் போதெல்லாம் மனதில் அவனை வசைப்படாமல் இருக்க முடியவில்லை.. ஆனால் வஞ்சிபதை தவிர்த்து வேறு ஒன்றும் செய்தும் விட முடியாதே.. அப்படி செய்தால் அடுத்து நடு தெரு தான்... தாங்கள் பெற்று வளர்ந்திருக்கும் தவப்புதல்வர்கள் செய்திருந்த வேலை அப்படி..
அ.. அதானே.. நானும் அதே தான்மா யோசிச்சேன்.. மகளிடம் இருந்து வந்தன இப்போது குரல்.
அதுவா.. இன்னைக்கு அவனுக்கு நைட் பிளைட் இருக்குல்ல.. கேட்டதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வெற்றி தேவனின் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்று விட்டன..
மற்றவர்களும் கூட யமுனா கூறியது ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.. என்ன என்ன அத்தை சொல்றீங்க.. சத்ரியன் ஊருக்கு போறானா.. அதிர்ச்சியாய் கேட்டாள்..
ஊருக்கு இல்ல.. வெளிநாட்டுக்கு..
எ.. எதுக்காக.. என்கிட்ட கூட அவன் ஒரு வார்த்தை சொல்லல.. வெற்றி கேட்க..
என்னங்க பண்றது.. என்கிட்டயே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சொன்னான்.. நானும் வேண்டாம்ன்னு எவ்வளவோ சொல்லிட்டேன்.. ஆனா கேட்க மாட்டேங்கிறானே.. கண்டிப்பா போயே ஆகணும்னு ஒத்த கால்ல நிக்கிறான்.. இதுல இன்னும் ஒரு விஷயம் இனிமேல் அவன் இங்க வரவே மாட்டேன்னு சொல்றான்..
அத்தை..
ம்மா..
கூறிய விஷயங்களை நம்ப மாட்டாமல் இருவரின் குரலும் ஒரே ஸ்ருதியில் உயர்ந்து ஆச்சரியத்தை தொக்கி காட்டியது..
என்னம்மா உங்களுக்கும் அதிர்ச்சியா.. யமுனா கேட்டதும் உடனடியாக முகத்தை பாவமாய் மாற்றிக் கொண்டு மண்டையை ஆட்டினர்.
ஆனால் உள்ளுக்குள் போட்ட குத்தாட்டம் கொஞ்சம் நஞ்சமல்லவே..
சோர்வாய் பார்த்தார் யமுனா..எனக்கும் என்ன பண்றதுனே தெரியல.. என சோர்வான குரலோடு கூறி எழுந்து சென்றுவிட இப்போது திடீரென ஜான்வி வந்ததும்.. அசோக்கை கேட்டு கண்ணீர் விட்ட போது.. யமுனா வெற்றிக்கு பின்னே நின்று இருந்த ஒவ்வொருவரும் ஆங்காங்கு விட்ட முடிச்சை இழுத்து போட்டுக் கொண்டனர்.
அவன் வந்து சில நாட்களாக அவன் முகமே சரியில்லாமல் ஒரு மார்க்கமாய் சுற்றிக்கொண்டு திரிவதும்.. என்னதான் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் வழக்கம் போல் கண்ணும் கருத்துமாய் இருந்தாலும்.. எப்போதும் அவன் முகத்தில் தெரியும் அந்த களை.. மிடுக்கு.. குறைந்து தெரிந்தது.. எதிலும் அவன் பற்றற்று நாட்டமில்லாமல் தெரிவதும்.. இப்போது இவள் அசோக் வேண்டும் என மாரில் அடித்துக் கொண்டு இவள் அழுததில்.. அனைத்தையும் கூட்டி கழித்து பொதுவான இடத்தில் முடிச்சிட்டு அப்படியானால் இந்த பெண்ணுக்காக தான் அவன் அப்படி இருந்திருக்க வேண்டும்.. ஆனால் குழந்தையோடு அல்லவா இருக்கிறாள்.. என்றாலும் அவளை இப்போது திரும்பி வந்தாலும் அவளை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு அவன் வெகு தூரம் சென்று விட்டான்.. எல்லாம் செய்த பாவம்.. தங்கள் வயிற்றில் அடித்தது அவனை சும்மா விடுமா.. என மகிழ்ச்சியோடு நடுநிசியில் அனைவரையும் எழுப்பி கூப்பாடு போட்ட சத்தத்தோடு யமுனா கூறியதையும் நம்பி இருந்தவர்களால் இப்போது அசோக் முழுமையாக வந்து நின்றதை நம்பவே முடியவில்லை..
அவர்களையும் அறியாமல் விழிகள் விரிந்து நின்றன.
ஆனால் அவன் பார்வை மொத்தமும் குவிந்து இருந்தது அவள் மீது தான்..
அ.. அஷோக்.. அவன் பெயரை அத்தனை பலம் தரப்போவதாய் அழுகையோடு முனைங்கிக் கொண்டே இருந்தவளை தோள் பற்றி ஆதூரமாய் நிறுத்தினான்.
அவன் கண்களும் அவளிடம் பணித்துக் கொண்டு இருந்தன..
ஜானு.. அம்மு.. முதல்ல அழுகாத.. அவன் குரல் ஏகாந்தமாய் அவள் காதில் பாய்ந்தது.
கொஞ்...ச நே...ரத்.. துல எவ்...வள..வு எ..வ்..வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா? நீ.. நீ.. வெ.. ளிநாடு போ...யிட்டேன்னு ரொ... ரொ..ம்..ப பயந்..துட்டேன்.. உன்..ன தவற விட்டுட்...டோமோ.. ன்னு ரொம்..ப தவி..ச்சு போ...யிட்டேன்.. வார்த்தைக்கு வார்த்தை அவள் குரல் தேம்பியது..
என்ன வெளிநாடா.. புரியாமல் புருவங்கள் சுருங்கின..
யார் சொன்னா நான் வெளிநாடு போறேன்னு.. அவன் கேட்டு முடிப்பதற்குள்ளாக.. நீதானேப்பா அப்போ ஏதோ நேரம் ஆயிடுச்சுன்னு சாப்பிடாம கூட போன.. அதான் நீ வெளிநாடு கிளம்புறேன்னு நெனச்சு... என லதாவின் விழிகள் தாயையும் அவனையும் மாறி மாறி பார்க்க. . இவ்வளவு நேரம் ஜானுவிடம் குளிர் கட்டியிருந்த அவன் பாரவை இப்போது அவள் மீது உஷ்ணத்தை கக்கியது.
அவகிட்ட மட்டும் எவ்வளவு அமைதியா பொறுப்பா பேசுறான்.. நம்மள பார்த்தா அப்படியே எரிஞ்சுகிட்டு வந்துடும் போல.. வாய்க்குள் முனகிக் கொண்டு நின்றாள் சித்திக்காரி..
இல்ல.. இல்ல.. அம்மா தான்.. முடிக்க முடியாமல் இழுக்க.. உதட்டுக்குள் கமுக்கமாய் சிரித்துக்கொண்டார் யமுனா..
உண்மையில் அவன் அடுத்து நடக்க போகும் ஆஸ்ட்ரேலிய மீட்டிங்காக அப்படி சொன்னது.. இரு நாடுகளுக்கும் இடையேயான நேர மாறுபாட்டில்.. காலையில இருந்து அலுவலகத்தில் வேலையை பார்த்து முடித்தாலும்.. இப்போது இந்த நேரத்திலும் சில வேலைகளை பொறுக்க முடியாமல் செய்ய வேண்டியது தான் இருக்கிறது..
ஆனால் யமுனா அவருக்கு வேண்டியது போல மாற்றிக் கொண்டார்..
இப்போது.. நான் தான் நீ வெளிநாடு போறேன்னு சொன்னேன்.. வீட்டிலேயும் சொன்னேன்.. இதோ நிக்கிறாளே.. உன் அருமை காதலி.. இவகிட்டயும் சொன்னேன்.. முன்னே வந்து நின்றார் யமுனா.. பின்னே நின்றிருந்த வெற்றியின் முகத்தில் சிறு புன்னகை..அறைக்குள் சென்ற பின் வெற்றிடவனிடம் விஷயத்தை கூறி இருவரும் ஜோடி போட்டு சிரித்ததெல்லாம் வேறு கதையல்லவா..
கிராணி.. நீங்க போய் ஜானுவ பாத்தீங்களா.. போக கூடாதுன்னு உங்ககிட்ட எத்தனை தடவை சொன்னேன்.. சத்தியம் கூட பண்ணீங்கல்ல.. கேட்கும் போது அவன் குரலில் அதட்டல். மாறாய் ஜானுவின் விழிகள் தவிப்போடு அவன் முகத்தில் பதிந்து நின்றது.
போடா டேய்.. அசட்டையாய் கூறினார் யமுனா.. எப்பப்பா நிக்க முடியல.. என்றபடி சோபாவோடு அமர்ந்து கொண்டவர்.. அவன் உஷ்ண பார்வை இன்னும் தன்னையே பொசுக்குவதை கண்டு..
ஆமா.. தாலாட்டி சீராட்டி மாறு மேல போட்டு வளர்த்த என் பேரன் என் கண்ணு முன்னாடி கஷ்டப்பட்டுட்டு திரிவான்? அவன் மனசுல இருக்குற கஷ்டம் தெரிஞ்சும்.. அதை தீர்க்காம செஞ்ச சத்தியம் தான் பேரன விட பெருசுன்னு கைய பிணைஞ்சுகிட்டு நிப்பேன்னு நெனச்சியா.. போடா போடா.. எனக்கு என் சத்தியத்தை விட என் பேரனோட சந்தோஷம்தான் முக்கியம்... உன் சந்தோஷம் எங்க இருக்குன்னு தெரிஞ்ச பிறகு சும்மாவா இருக்க முடியும்.. அதனால நான் தான் போய் பேசினேன்.. சொல்லப்போனால் இடையில் சின்ன சின்ன பிட்டு கூட போட்டேன்.. பாத்தியா... காலையில போய் பேசினதுக்கு நைட்டே எவ்வளவு எபெக்ட்டுன்னு.. இப்படி இல்லாம சும்மா உம்முன்னு திரிஞ்சுகிட்டு இருப்பானாம் ... இவன் நாங்க பார்த்துட்டே இருக்கணுமாம்...கேட்டதில் அவன் கூர் விழிகள் பாரபட்சம் இல்லாமல் அழுத்தமாய் அவரை முறைக்க..
அவர்கள் பேச்சில் என்ன நடக்கிறது என்று ரீதியில் சுற்றி விழித்து கொண்டிருந்த குடும்பத்தை கண்டவராய்..
இன்னும் என்ன எல்லாரும் இங்கேயே நின்னுகிட்டு இருக்கீங்க.. போங்க.. போய் தூங்குங்க.. அவன் வெளிநாடும் போகல.. எங்கேயும் போகல.. சும்மா நீங்க கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கட்டுமேன்னு பேருக்கு சொல்லி வச்சேன்.. பாட்டியின் பேச்சில் முகம் கருத்து போயினர் அனைவரும்.
பின்னே ஏன் நாங்க வந்ததும் அவர் போயிட்டாருன்னு சொன்னீங்க.. தன் தோழியை இவ்வளவு தூரம் பதற வைத்து விட்டார்களே என முகிழ்த்த கோபத்தோடு மிதா கேட்க..
பின்ன.. இவ்வளவு நாள் இவள நினைச்சு என் பேரன் எவ்வளவு துடிச்சுருருப்பான் தெரியுமா.. சரியா சாப்பிட மாட்டான்.. தூங்க மாட்டான்.. எந்த நேரமும் வேலை வேலைன்னு அவனை மறந்து ஓடிக்கிட்டு திரிஞ்சான்.. அவனை மறந்துங்கிகிறத விட இவள் ஞாபகத்துல இருந்து தப்பிக்க.. பாரு பிள்ளை எப்படி வாடி போயிட்டான்னு.. யமுனா கூறியதில் ஜான்வின் விழிகள் நிமிர்ந்து வேதனையோடு அவன் முகத்தில் முட்டி நின்றன..
கிராணி.. அடி குரலில் உருமினான் அஷோக்..
நீ சும்மா இரு டா.. இவ்வளவு நாள் நீ அமைதியா இருந்ததெல்லாம் போதும்.. இப்பவாவது என்ன சொல்ல விடு.. நைட்டு முழுக்க அவன் ரூம்ல லைட் எரிஞ்சுகிட்டே இருக்கும்.. தூங்காம உலாத்திக்கிட்டே அலைவான்.. ஒரு நாள் அவனை இழுத்து பிடித்து வைத்து என்ன விஷயம்ன்னு கேட்டபோ தான்.. சொன்னான்.. எவ்வளவு தூரம் இவள காதலிச்சு இருக்கான்.. கூட இருந்த நாள் வரைக்கும் கண்ணுக்கு கண்ணா வச்சு பார்த்துருக்கான்.. ஆனா இந்த அம்மணி அவன கொஞ்சமும் புரிஞ்சுக்காம ஒரே நிமிஷத்துல தூக்கி எறிஞ்சிட்டா.. கூறும்போது சட்டென வாடி போனது ஜான்வீயின் முகம்..
அதனால தான்.. அவன் அருமை கொஞ்சமாவது புரியட்டுமேன்னு.. அப்படி பண்ணேன்.. இதோ நகமும் சதையுமா ரெண்டு பேரும் சேர்ந்து நிக்கல.. யமு கேட்டதும் தான்.. சுயநினைவே கொண்டவளாய் சட்டென அவன் அணைப்பிலிருந்து விலகி நின்றாள் ஜானு.
இத்தனை பேருக்கு முன் அவனை அணைத்து நின்றதில் முகம் செவ்வானமாய் சிவந்திருந்தது..
அதுக்கு எங்ககிட்ட ஏம்மா பொய் சொன்னீங்க.. லதா கேட்க.. பின்ன.. தனியா பர்பாமன்ஸ் பண்ண முடியுமா.. அதுக்கு தான் உங்களுக்கே தெரியாம உங்களையும் கூட்டு சேர்த்துக்கிட்டேன்.. கண் சிமிட்டியதும் இதற்கு மேல் அங்கு நின்றால் தங்கள் முக்கு தான் உடைபடும் என உணர்ந்து..
பல்பு வாங்கியதில் கருத்த முகத்தோடு அசோக்கையும் அவன் கை வளைவில் நின்ற ஜானுவையும் ஒரு முறை முறைத்து விட்டு வாய்க்குள் முனகியப்படியே தங்கள் அறைக்குள் நகர்ந்தனர் அனைவரும்.
குழந்தையை தோளோடு அனைத்து நின்ற மிதாவிடம் வந்தார் யமுனா.. பரவாயில்லைம்மா.. ஆனாலும் உன் பிரண்டுக்கு ஒண்ணுன்னா வேங்கை கோழியா சிலிர்த்துகிட்டு நிக்கிறியே.. இந்த காலத்துல எல்லாம் இப்படி ஒரு பிரண்ட் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. என்ற படி அவள் கையில் இருந்த குழந்தையை தான் வாங்கி கொண்டார்..
உன்னால தூக்கிக்கிட்டு நடக்க முடியாது.. என்கிட்ட கொடு யமு.. புன்னகையோடு வெற்றி தான் வாங்கிக் கொண்டார் கிருத்தியை.. இருவரின் பார்வையும் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் பால்வடியும் முகத்தில் ஆசையாய் படிந்தது..
ரொம்ப கலையா இருக்கா இல்லங்க..
நம்ம பேத்தியாச்சே.. இல்லாம போனா தான் ஆச்சரியம்.. பெரியவர்கள் இருவரின் பேச்சிலும் மிதாவின் கண்கள் கலங்கின.. இனி தன் தோழியின் நல்வாழ்வை பற்றி யோசித்து கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.. ஒன்றாய் என்ற அசோக்கையும் ஜானுவையும் விழிகள் நிறைத்து பார்த்தபடியே.. என்கூட வா.. என அழைத்த பாட்டியோடு நகன்றாள் மிதா.
ஆனாலும் நீங்க அசோக் ஊருக்கு போயிட்டாருன்னு அழுகாத குறையா சொன்னப்போ எவ்வளவு கஷ்டமாயிடுச்சு தெரியுமா பாட்டி..
பண்ற வேலைக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் பெர்ஃபார்மன்ஸ்ம் போடணுமில்ல.. அப்போ தானே நம்புற மாதிரி இருக்கும்.. 32 பற்கள் தெரிய சிரித்தபடியே நடந்தார் யமு..
அனைவரும் அவர் அவர்களின் அறைக்குள் அடைந்திருக்க.. தான் அவன் கைவளைவிற்குள் நின்ற கதகதப்பில்.. செவ்வானமாய் சிவந்து நின்ற ஜானுவை.. அவன் பார்த்த பார்வையில் பாதம் நுனி வரை கூசியது அவளுக்கு..
அதிலும் தானே ஓடி வந்து அவனை இப்படி கட்டிக்கொண்டு நிற்பது?? வெட்கத்தை தாங்க முடியாமல் அவள் பார்வை தரையில் சரிய..
அசோக் அவளை ஆழ்ந்து பார்த்தவன் விழிகளில் அத்தனை கேள்விகள் மண்டி கிடக்க..
வா என் கூட.. அவளை அழைத்துக் கொண்டு மேலேறினான்..
கருத்துகள்
கருத்துரையிடுக