முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 72

 அசோக்கோடு அவன் அறைக்குள் நுழைந்தவளின் கண்கள் விஸ்தாரமாய் விரிந்தன.. அவன் உண்மை நிலை மறைத்து தங்களுடன் வந்த காலகட்டங்களில் தங்கி இருந்த பத்தி வீட்டை விட இரண்டு மடங்கு பெரியது முன்னிறுந்த அவன் படுக்கையறை மட்டும்.. அதன் இரு பக்கமாய் திரைசலை மறைத்திருந்த அறைகள் இன்னும் ஒரே வேறு இரண்டு அறைகள் இருப்பதை காட்டிக் கொடுக்க..  இவ்வளவு சொகுசயும் சொத்து பத்தையும் விட்டுவிட்டு அவன் தங்களோடு வாழ்ந்து வாழ வேண்டிய அவசியம் என்ன.. அதுவும் ஒரு வருஷமா

. இரண்டு வருஷமா.. கிட்டத்தட்ட கிருத்தி பிறந்ததிலிருந்து ஐந்து வருடம்.. அதற்கு முன்பாக ஒரு வருடம்..



ஆக மொத்தம் ஆறு வருடங்கள்.. யாருக்காக..  எதற்காக..  மனதில் அத்தனை குழப்பங்கள் மண்டையில் கிடக்க சுற்றி இருந்தவைகளை விழிகள் மருள.. பார்த்துக் கொண்டிருந்ததில் முன்னே வந்தவன் ஜானு.. அழைத்து அவள் பக்கமாய் திரும்பி கைகட்டி நின்று கீழ் கண்களால் பார்த்தான்.



ஜானு.. உன் மனநிலை எனக்கு தெளிவா புரியுது.. பாட்டி உன்ன பயமுறுத்துற மாதிரி ஏதோ சொல்லி இருக்காங்க.. அதனால பதறிப் போய் நீ ஓடி வந்து இருக்க.. ஆனா ப்ளீஸ்.. இந்த சிம்பதி எல்லாம் வேண்டாம்..



நான் உன்னை இப்ப மட்டும் இல்ல எப்பவும் எந்த சூழ்நிலைக்காகவும் வற்புறுத்தக் கூடாதுன்னு நினைக்கிறேன்.. பாட்டிகிட்டையும் அது தான் சொன்னேன்..  ஆனா பாட்டி என் பேச்சை மீறி வந்து உன்ன சந்திச்சு பேசி இருக்காங்க..  அவங்க சொன்னதெல்லாம் தயவு செஞ்சு மறந்துடு.. 





நான் உனக்கு பண்ணது பெரிய துரோகமா நினைக்கிற.. ஹ்ம்ம்.. நான் எதுக்கும் விளக்கம் கொடுக்க விரும்பல.. சொன்னாலும் அது இனிமேலு விழலுக்கு இறைச்ச தண்ணி போல தான்.. எந்த பயனும் இல்லை..  ஆனா எனக்கு எப்பவும் உன்னுடைய சந்தோஷமும் நிம்மதியும் தான் முக்கியம்.. நான் உன்னை விட்டு தள்ளி இருக்கிறது தான் உனக்கு சந்தோஷம்னா இவ்வளவு நாள் கூட இருந்தும் உனக்கு கொடுக்க முடியாத மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தள்ளி இருந்தே நா தருவேன்.. என்ன பொறுத்த வரைக்கும் என்னைக்கும் நீ உனக்கு புடிச்ச மாதிரி உன் வாழ்க்கையை வாழனும்.. அதுக்கு என்னால முடிஞ்ச எல்லா உதவியும் நான் செய்வேன்.. அது நான் செத்துப் போறதா இருந்தாலும் கூட..  வார்த்தைகளில் எந்த உணர்வும் காட்டாது நேர்கொடை பேசிக்கொண்டே வந்தவன் கூறி முடிப்பதற்குள்ளாக.. அவன் முதுகோடு திருப்பி இதழோடு இதழ் அணைத்து அவன் பேச்சை நிறுத்தி இருந்தாள் ஜானு..



கரகரத்த குரலோடு அவன் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தை தாங்கவே முடியவில்லை என்பதாய் இதழில் சிக்கிய அவன் முரட்டு உதட்டிற்கு பற்களால் கடுமையான பாடத்தை எடுக்க.. முதலில் அவள் செயலில் அதிர்ந்து விழித்தவன்.. அவள் ஆக்ரோஷ முத்தத்தில்.. அடுத்த கணம் தன்னையும் மறந்து அவள் பிடரியோடு அழுத்தி முத்தமிட ஆரம்பித்திருந்தான்..





இத்தனை நாள் கொண்டிருந்த தவிப்பு வேதனை தனிமை அனைத்திற்கும் முற்றுப்புள்ளியாய் இந்த ஆக்ரோஷ முத்தம்.. ஆனால் வலியை கொடுத்தவளுக்கும் சரி கொடுத்தவனுக்கும் சரி.. இருவருக்குமே அது தண்டனையாகாமல் வரம் ஆகியதுதான் காதலின் மகிமையோ.??!!




எவ்வளவு முத்தமிட்டாலும் போதவே இல்லை என்பது போல் வியர்வை குளித்த அவன் முகமும்.. அழுகையில் நனைந்திருந்த அவள் கண்ணீரும் கலந்தன..




முத்தத்தின் வேகம் சற்று மட்டுபட்டாலும்.. சுவை மாறினாலும் காதல் பறவைகளுக்கு விலக மனமில்லை போலும்..




மூச்சு வேறு வாங்குகிறது.. ஆனால் இருவரும் ஒருவர் ஒருவர் மாறி மூச்சு கொடுத்து கையெழுத்திடப்படாத ஒப்பந்தத்தை நிறைவேற்றி கொண்டனர்... அந்த ஒரு முத்தத்தில் இது நாள் வரை கொண்ட தவிப்பும் வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாய் மறைவதாய்..




அஷோக்.. அஷோ.. க்.. வேகத்திலும் கிடைக்கும் சிறு பொழுதிலும் அவன் பெயர் ஜெபமாய்..


அம்மு.. ஜானு.. கரம் இரண்டும் அவள் பிடரி 

யிலிருந்து இடையில் ஊர்ந்து இறுக்கியது.




ஒரு கட்டத்தில் செவ்வாய் கிரகத்திலிருந்து தான் ஆக்ஸிஜனை இனி அள்ளி வர வேண்டும் என்ற நிலையில் மனமே இன்றி விலகினர் இருவரும்.. ஒருவர் முகத்தை ஒருவரால் பார்க்க முடியவில்லை என்பது போல் பிடரி தட்டி இவன் மறுபக்கமாய் திரும்ப அவள் விழிகளோ பூமித்தாயிடம் சரணடைந்தது..



இவ்வளவு நாள் கொண்டிருந்த கொண்டிருந்த சோம்பலும் விடைபெற்று ஓடி இருக்க.. சுறுசுறுப்பு ஓடி வந்து ஒட்டிக்கொண்டது உடலில்.. 



ஜானு.. நம்ப மாட்டாமல் அவன் விழிகள் அதிர்ச்சியில் விரிய.. அடுத்த நிமிடம் பட் பட்ட என அவன் நெஞ்சிலேயே கண்ணீரோடு அடிக்க ஆரம்பித்திருந்தாள் அவள்.




என்னடா.. உன்ன தேடி எப்படி பரிதவிச்சுகிட்டு ஓடி வந்தேன் தெரியுமா.. ஆனா நீ அசால்டா ஒரே நிமிஷத்துல கிளம்பி போன்னு சொல்ற.. எவ்வளவு கொழுப்பு இருக்கனும் உனக்கு.. கண்ணீரோடு படபடவென அவன் நெஞ்சில் அடித்தவளை.. லாவகமாக அவள் கைகளை சிறை பிடித்து தனக்குள் இறு 

க்கி கொண்டான் அவன்.. நம்ப மாட்டாமல் பார்வை அவள் முகத்தில் நிலை குத்தி நின்றது.




இது என் ஜானு தானா..  என்னால நம்பவே முடியல.. 



அதுக்கு என்னண்ணு ப்ரூவ் பண்ண சொல்ற.. நீ இல்லாம இத்தனை நாள் எப்படி தவிச்சு போனேன் தெரியுமா.. 




நீ எங்கள விட்டு வந்ததுல இருந்து எனக்கு எதுவுமே ஒடல..  பாப்பாவ நல்லபடியா வளர்த்துட்டா மட்டுமே என்னுடைய வாழ்க்கை நல்லபடியா ஆகிடும்னு நினைச்சேன்..ஆனா நீ நீ.. இல்லாம ஒரு சின்ன துரும்ப கூட என்னால எடுத்து போட முடியல?  எங்க போனாலும் மனசு என் பேச்சைக் கூட கேட்காம உன்னை தான் சுத்தி சுத்தி வந்துச்சு.. எங்கேயாவது உன்னை பார்த்துட மாட்டோமா.. நீ என்ன பாத்து சிரிச்சிட மாட்டியா.. உன் குரல் கேட்டு விட மாட்டோமான்னு எவ்வளவு ஏக்கம்.. தூரத்தில் எங்கேயாவது இருந்து நீ என்ன பாக்க மாட்டியான்னு போற இடம் எல்லாம் என் கண்ணு உன்னை தேடி தான் அலையும்.. ஆனா.. ஆனா நீ நானே உன்ன இப்போ தேடி வந்தும் கிளம்பி போக சொல்ற.. என மீண்டும் அவனை அடிக்க முற்பட.. எப்படி முடியும்... கரம் ரெண்டும் தான் அவன் வசம் இருக்கிறதே...



அவள் பேசுவதையெல்லாம் விழிகள் மின்ன கேட்டுக் கொண்டிருந்தான் அஷோக்.. விரிந்த அவன் இதழ்கள் சுருஙக மறந்து போனதாய் அவள் பேச்சில் சிக்கி நின்றது..



அவன் பார்வையில் அவளுக்கு தான் முகம் செவ்வானமாய் சிவந்து போனது.. அப்பப்பா என் ஜானுக்கு இவ்வளவு கோபம் வருமா.. இன்னைக்கு தான் பாக்குறேன்.




இன்னும் கூட வரும்.. இன்னொரு தடவை இப்படி பேசினா.. என்றவளை ரசித்துப் பார்த்தன அவன் இரு கூர் விழிகளும்..



பார்வையை தாங்க முடியாமல் தலை தாழ்ந்தாள் அவள்..



வந்த என்ன போக சொல்ற..  அப்போ கோபம் வராதா.. இன்னிக்கு ஒரு நாள் மட்டுமே உன் பெயரை எத்தனை தடவை சொல்லிருப்பேன்.. நீ என்ன விட்டு போயிடக்கூடாதுன்னு எவ்வளவு பதறி போயிருப்பேன்.. எதையுமே புரிஞ்சுக்காம அசால்டா என்ன போக சொல்றியே.. மீண்டும் முகம் சுருக்கி அடிக்க வர.. இப்போது தடுக்கவில்லை அவன்.. அடியை ஏற்றுக்கொள்ள நினைத்து விட்டான் போலும்..



அவள் கரத்தை விட.. அடிக்கும் வரை அவன் நெஞ்சுக்கு உயர்த்தியவள் அப்படியே அவன் கழுத்தோடு மாலையாய் கோர்த்துக் கொண்டாள்.. விழிகள் சட்டென சோர்ந்து அவனைப் பார்த்தது..




எல்லாம் என்னுடைய தப்புதான் அசோக்.. இத்தனை நாள் கூடவே இருந்தும் உன்னையும் உன் காதலையும் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம முட்டாள் மாதிரி நடந்திருக்கேனே.. இந்த கொஞ்ச நாள்ல நான் தவிச்ச மாதிரி தானே நீயும் தவிச்சு போயிருப்ப.. இதுல உன்கிட்டே வந்து ஆரியனையும் பத்தி சொல்லி.. என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்.. முகம் வாடியவளை அப்படி காண முடியாமல் தன் முரட்டு கரத்தால் இதமாய் அவள் வாய் பொத்தினான் அவன்.



விழிகள் கருமணிகளாய் உருண்டு நிமிர்த்து அவன் முகம் பார்க்க.. இதுவரைக்கும் நடந்தத விடு.. ஆனா இப்போ இந்த நிமிஷம் என் ஜானு என்கிட்ட இருக்காங்கற விஷயமே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு.. கூறியவனை கண்டு அவள் கண்கள் பணித்தன.




ஆரம்பத்திலிருந்து தனக்கே தனக்காய் அத்தனை விஷயங்களை அவன் செய்தும்.. கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் தான் அவனை தூக்கி எறிந்து இருந்தாலும்.. இப்போது தன்முகம் நொடி கனமும் வாடுவதை பொறுக்க முடியாமல் தன்னை சமாதானப்படுத்த அவன் கூறும் வார்த்தைகள்.. அஷு.. ஒட்டி நின்ற விழி நீர் அவன் உதட்டில் பட..  தன் ஈர மாதுளை இதழால் அளந்து வரையப்பட்ட தாடி குத்தினின்ற தாடையில் அழுத்தமாய் முத்தமிட்டாள்...




நா உனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதவ அசோக்.. உன்னுடைய தகுதிக்கும் பணத்துக்கும்.. ஏன் நீ என் மேல வச்சிருக்கற காதலுக்கும் கூட.. அவள் கூற இதழில் அழுத்தமாய் முத்தமிட்டு அவள் பேச்சை நிறுத்துவது இப்போது அவன் முறையாகி போனது.. 



முதன் முதலாய் ஆடவன் அவன் காதல் முத்தம் பெறுகிறாள்.. பேச்சு மறந்து திக்கித்து நிற்க.. என்னடி பெரிய காசு பணம்.. என்ன இருந்தாலும் உன் அளவுக்கு என்னால கூட வர முடியாது ஜானு..





நான் உன்னை காதலிக்கிறேன் என்று உனக்கு தெரியும் ஆனால்.. எப்போதிலிருந்து என்ன தெரியுமா.. அவன் புதுவித கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பது போல் அவள் விழிகள் சுருங்கின.




என்னை நீ கூட்டிட்டு வந்ததுக்கு அடுத்து என்ன பாட்டி காலையில சொன்னாங்க

. அவள் கூட தலையை மறுப்பாய் ஆட்டி புன்னகைத்தான்..



பாட்டிக்கு எப்படிடி தெரியும்.. நான் உன்னை எப்போ பார்த்தேன்ன்னு.. 



நீ சொல்லி இருப்பன்னு..  தயக்கத்தோடு அவள் இழுக்க..



இதெல்லாம் போய் மைக் போட்டு சொல்ல இது என்ன காமன் ஸ்பீச்சா.. அவன் பேச்சில் இவள் முகம் சுருங்கியது.. ஆனால் எப்போது இருந்து என தெரிந்து கொள்ள பெருத்த ஆர்வம்.




அப்போ நீ காலேஜ் செகண்ட் இயர்.. 2017.. பேட்ச்.. ஏப்ரல் 12 சோரி பங்ஷன்.. விவிஎன் இன்ஜினியரிங் காலேஜ்.. அவன் கூற இவள் விழிகள் விரிந்தன.. 



அப்பவே உனக்கு என்ன தெரியுமா.. இதுவரை அவளை அறியாத சங்கதி அல்லவா இவை.



ம்ம்ம்.. அவன் கண்கள் சுருங்கின..  அன்னைக்கு உங்க காலேஜ் சீப் கெஸ்டா என்ன இன்வைட் பண்ணிருந்தாங்க.. என்றபடி மெத்தையில் அமர்ந்தவன் அவன் அருகில் அமர போனவளை இழுத்து மடியோடு  இறுத்திக் கொண்டான்.. 



அன்னைக்கு சொன்ன நேரத்தை விட சீக்கிரமாகவே வந்துட்டேன். உங்க காலேஜ் பிரின்ஸிபில் காலேஜ சுத்தி பாருங்கன்னு ஒரு ஸ்டாப்போட என அனுப்பிவிட்டாரு..  என்றவனின்  நினைவுகள் அன்றைய நாளை நோக்கி தாவின.



அன்று அந்த பேக்கல்டியுடன்  நடந்து வந்து கொண்டிருந்தான் அசோக்.. கூர்மையான விழிகள் கல்லூரியின் ஒவ்வொரு அங்கத்தையும் நுட்பமாய் உள்வாங்கிக் கொண்டிருந்தது.. அனைத்து துறையிலும் கால் பதித்திருந்தவனுக்கு கல்வித்துறைகளும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை மொட்டு மொட்டாய் துளிர் விட்டிருந்த சமயம் அது..




அதற்கு சில விஷயங்களை தெரிந்து கொள்ள எண்ணி தான் இந்த அழைப்பற்கு வந்திருந்தான்.. பிசினஸ்மேன் என்பதால் நேரத்தை சரியாய் கடைபிடிப்பது அவன் வழக்கம்..



ஆசிரியை ஒவ்வொரு இடத்தையும் காட்டியபடி அங்கு நடக்கும் விஷயங்களை தெளிவாக விளக்கிக் கொண்டு வர அப்போதுதான் அந்த நிகழ்வைக் கண்டான்.. 



காலில் ரத்தம் வடிய நின்றாள் ஒருத்தி.. போட்டிருந்த உடையும் காலில் கட்டி இருந்த ஜிமிக்கி கொலுசும்.. இன்று போட்டிக்காக நடனம் ஆடுபவள் என எடுத்துக்காட்ட அவள் கண்கள் ரெண்டும் படபடப்பாய்  யாரையோ தேடி அலைபாய்ந்து கொண்டிருந்தன.. 



காலில் இரத்தம் வழிவதை கண்டு ஒரு கணம் இவன் விழிகள் சுருங்கினாலும் அடுத்த கனமே வலியில் சுருங்கியிருந்த அவள் விழிகள் விரிவதைக் கண்டு அவன் பார்வையும் அவள் பார்வை சென்ற பக்கமாய் திரும்பியது..




அனைத்து பெண்களும் டாப்ஸும் ஜீன்ஸ் பேண்டுமாய் வலம் வந்து கொண்டிருக்க அதற்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் ஜோலி உடையோடு  கழுத்தில் துப்பட்டா வழுக்க.. ஓடி வந்தாள் அவள்.. அவள் முகத்தில் இருந்த பதட்டமும்..  அவளை கண்டதும் இந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த நிம்மதியும் அவனுக்கு புதிதாய் பட்டது.




இவ்வளவு வேகமாய் வருகிறவள் அப்படி என்ன செய்துவிடப் போகிறாளாம்.. என ஒருவித சுவாரசியத்தோடு அவன் அங்கேயே நின்று விட.. அவர்கள் இருவரும் இவனை பார்த்ததாய் கூட தெரியவில்லை.




கவனமா இருன்னு சொன்னேனே .. இப்படி லாஸ்ட் டைம்ல இப்படி அடிபட்டுட்டு நிக்கிறியே.. ஏன் டி.. பரிதவித்தாள் புதிதாய் வந்தவள்..




நான் என்ன வேணும்னா பண்றேன்.. ஏதாவது லைட்டா பட்டுட்டாலும் இப்படி இரத்தம் வந்துடுது... பயமா இருக்குடி ஜானு..  இப்ப நான் எப்படி டான்ஸ் ஆடுவேன்.. உடல் நடுங்கினாள் அந்தப் பெண்.




முதல்ல உடம்ப பாரு.. எவ்வளவு பிளட் லீக் ஆகி இருக்கு.. இதுக்கு தான் அன்னைக்கே வேண்டாம்ன்னு சொன்னேன்.. ஆனா நீதான் பிரைஸ் அமௌன்ட் இம்பார்டன்ட் சொல்லி இதுல சேர்ந்த..




என்ன டி பண்ண சொல்ற.. இதுல ஒரு பத்தாயிரம் வந்தாலும் அடுத்த மாசம்  செலவுக்கு உபயோகமா இருக்குமே.. இல்லன்னா அதுக்கும் நைட் வேலை பார்க்கணும்..  என்னதான் வீட்டை விட்டு விட்டு தனியாக வந்து இருந்தாலும் நமக்கும் கை செலவுக்கு காசு பணம் தேவைப்பட தானே செய்யுது.. 




அதுக்குன்னு இப்படி கஷ்டப்படணுமா.. உனக்கு ரத்த சோகைன்னு உனக்கே தெரியும்.. ரத்தம் வந்தால் மயக்கம் போடுற அளவுக்கு இழுத்துட்டு போயிடும்..  இப்ப பாரு.. எவ்வளவு ரத்தம் வருதுன்னு.. 



நான் பார்த்து பார்த்து கவனமாய் இருந்தாலும் இப்படி ஏதாவது ஆகிடுது.. நான் என்ன பண்றது அவள் கரம் பயத்தில் உதற ஆரம்பித்தது..



சரி சரி முதல்ல பயப்படாத .. அப்புறம் மயக்கம் வந்துரும்.. ரத்தத்தை நிறுத்த பாப்போம்.. என்றவள்  பக்கத்திலிருந்த ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து மண்டியிட்டபடி அவள் காலை எடுத்து மடியில் வைத்து கட்டு போட்டு விட.. ஏனோ அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அசோக்கினால்  அவர்களை விட்டு பார்வையை அகற்ற முடியவில்லை.. 



சார் சார்.. பக்கத்தில் நின்றபடி அந்த ஆசிரியர் அழைத்துக் கொண்டிருக்க.. ஹான்.. என்றவன் மனமே இன்றி தான் அங்கிருந்து நகன்றான்..




ஆனால் தன் உரையை முடித்துவிட்டு மாணவர்களின் கைதட்டுதல்களோடு மேடையின் ஒரு பக்கமாய் அவன் அமர்ந்திருக்க மறு பக்கத்தில்.. நடனமென ஆட வந்தவர்களின் உடையை கண்டதும் அவன் மூளை மணியடித்தது.




இதேபோல் உடை தானே அந்த பெண்ணும் போட்டிருந்தாள்.. ஏனோ அவன் விழிகள் கூட்டத்துக்குள் உலாவ.. திடீரென விரிந்தன..




அங்கு அவள் போட்டிருந்த அதை உடையை போட்டு நின்றவள் அவள் காலை பிடித்து மருந்து போட்டுவிட்ட அந்த பெண்.. அவன் விழிகள் சுருங்கி அவளிடமே நிலை குத்தி நின்று விட்டன.. கடைசி நேரம் என்பதால் அதிகமாக பயிற்சி எடுத்திருக்க முடியாது எப்படி ஆடுவாளோ என சுவாரசியமாய் அவளை விட்டு அகலாது நிலைத்திருந்த அவன் பார்வை நொடிக்கு நொடி அவள் கொடுத்த உணர்ச்சிகளிலும் பாவனைகளிலும் விரிந்தன.. மற்றவர்களை விட சிறப்பாகவே ஆடி முடித்திருந்தாள் அவள்..




ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு பரிசு தொகையின் நிர்ணயித்திருக்க நடன போட்டிக்கான பரிசு தொகையை  அவர்கள் நடனம் தான் வென்று இருந்தது..




மொத்தமாய் வந்த ஐந்து பேருக்கும்  தன் கரத்தினால்தான் பரிசுத்தொகையை கொடுத்தான் அசோக்.. ஆனால் அப்போதும் கூட அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் மற்றவர்களோடு சேர்ந்து புன்னகைத்தபடி வாங்கிக் கொண்டு இறங்கி சென்று விட்டாளே அவள்.




பின் போட்டி அணைத்து முடிந்திருந்த நிலையில் பிரின்சிபாலிடம் சொல்லிவிட்டு அவன் கிளம்பி இருக்க.. முன்பக்கமாய் நின்று இருந்து அவன் காரில் ஏறப்போன சமயம்.. கிசுகிசுவென பின் இருந்து சத்தம்..




கார் கண்ணாடியை சரி செய்து பின்னே பார்க்கும்படி வைத்தான்... அப்போது அந்த காலில் அடிபட்ட பெண்ணும் நடனம் ஆடியவளும்  அங்கு.




அவள் ஏதோ இன்னொருவளின் கையில் திணித்துக் கொண்டிருக்க அவளும் மறுத்துக்கொண்டிருந்தாள்.. ஏனோ அவர்களை பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் சுவாரசியமாய் தோன்றியது அவனுக்கு..




அதற்குள் டிரைவர் கிளப்பி இருந்த வண்டியை கரம் உயர்த்தி நிறுத்தினான்..



வேண்டாம் ஜானு.. சொன்னா கேளு.. நீயே உன் பீஸ கட்ட முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்க.. இதுல நீ ஜெயிச்சுட்டு எதுக்குடி எனக்கு கொடுக்கிற.. நீயே வச்சுக்கோ.. நேத்து கூட ஸ்காலர்ஷிப்ல படிக்கிறவ முழு பணத்த கட்டளைனாலும் பஸ்சுக்கு போயிட்டு வர இந்த பத்தாயிரத்து கூட கட்ட முடியவில்லையான அந்த மேம் என்ன கிழி கிழிச்சாங்க.. இது நீ ஜெயிச்ச பணம் நீ கொண்டு போய் உன்னுடைய ஃபீஸ கட்டு.. என்னுடைய செலவு வழக்கம் போல வேலைக்கு போய் நான் பார்த்துப்பேன்.. அந்தப் பெண் கூறிக் கொண்டிருக்க.. அடியே.. முறைப்போடு அவளை நிறுத்தினாள் ஜானு..





உனக்காக உனக்கு முடியலைங்கறதுக்காக தானே இந்த போட்டியில நான் ஆடுனேன்.. இப்போ இதுல நான் ஜெயிச்சுட்டேன்னு இந்த பணத்தை எங்க வீட்டுக்கு கொண்டு போறதுக்கு எனக்கு மனசு ஒப்பல.. இது உனக்காக வந்தது..  உன்ன தான் சேரனும் என்றால் வம்படியாக தன் கையில் இருந்த கத்தை பணத்தை அவள் கையில் திணித்து விட்டு நகர.. மறைந்து பார்த்துக் கொண்டிருந்த அசோக்கின் விழிகள் ஆச்சரியமாய் உயர்ந்தன.




ஸ்காலர்ஷிப்பில் படிக்கிற..  பத்தாயிரத்திற்கும் கஷ்டப்படுர.. .. ஆனாலும் கூட இருப்பவளுக்கு ஒன்னுனதும் நீ செஞ்சதுக்கு முன்னாடி இந்த பணம் தகுதி எல்லாம் செல்லாக்காசு தான்.. பணம் தகுதியை விட நல்ல மனசும் அன்பும் ரொம்ப முக்கியம் ஜானு.. அது என் ஜானு கிட்ட எப்பவும் நிறைய நிறைய தான் இருந்திருக்கு.. அவன் கூற கேட்டவளின் கண்கள் மகிழ்ச்சியில் குளித்து நின்றன.. 




அதுதான் நான் உன்னை முதலும் கடைசியுமா பார்த்தது.  அதுக்கு அடுத்து அன்னைக்கு ரவுடிகள் கிட்ட மாட்டிகிட்டு நீ மயங்கி கிடந்த போ தான் பார்த்தேன்..  ஆனா.. பார்த்ததுமே அது நீதான்னு  சட்டுனு தெரிஞ்சுடுச்சு.. என்னவோ உன்ன பாத்துட்டு வந்தது ஒரு நாள் தான்னாலும் அப்பப்போ என்னையும் அறியாம உன்ன நெனச்சுப்பேன்.. அது ஏன்னு எனக்கே தெரியல.. தன்னிச்சையாக இதழ்களில் மறந்த புன்னகையோடு கூறியவன்.. அவள் இதழ்களை மெல்லமாய் வருடி தாடை நிமிர்த்தினான்.. ஆனா அடுத்து தான் புரிஞ்சுது.. நான் உன்ன அவ்வளவு காதலிக்கிறேன்னு.. அவன் கூற இவ்வளவு நாட்களாய் அறிந்திடாத அவன் காதலில் இவள் விழிகள் பணித்தன..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 38

 ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்..  ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.   தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்..  அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்.. என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..  அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் ம...

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...