முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 73

 உங்களுக்காக பெரிய யூடியாவே போட்டு இருக்கேன்.. அதுக்கேத்த மாதிரி கமெண்டும் பெருசா வந்தா எனக்கும் என்கரேஜ் ஆக இருக்கும்..





ஆனா அன்னைக்கு அந்த ரவுடிகள் கிட்ட உன்ன அந்த நிலைமையில் பார்த்ததுக்கு அடுத்து என்னால வேற எதையுமே யோசிக்க முடியல.. லைட்டா உப்பி தெரிஞ்ச வயிறு நீ ப்ரெக்னன்ட்டா இருக்கிறத காட்டுச்சு.. ஆனா கழுத்துல தாலி இல்ல.. கால்ல மெட்டி இல்ல.. ஜானு.. உன் பெயர் எனக்குள்ள ஆழமா பதிஞ்சிடுச்சு.. கழுகு கூட்டமா உன்ன சுத்துனவனுங்கள விளாசி எறிஞ்சிட்டு கையோட உன்னை என் கூட கூட்டிட்டு வந்துட்டேன்.. என்றவனை விரிந்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..



ஆனா எந்திரிச்சதும் நீ கேட்ட எந்த கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்ல.. 


நீங்க யாரு.. 


அங்க யாருமே இருக்கிற மாதிரி தெரியல..நீங்க எப்படி திடீர்னு வந்தீங்க..


எப்படியோ.. நல்ல வேளை தெய்வ மாதிரி வந்து காப்பாத்துனீங்களே.. சரி நான் கிளம்புறேன்னு.. சோர்வா எந்திரிக்க கூட முடியாமல் நீ எந்திரிச்சப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.. அதுலயும் ஒரு கையால வயித்த புடிச்சுகிட்டு நீ எந்திரிச்ச விதத்தில என் உயிரையே உருவி எடுத்த மாதிரி இருந்துச்சு.. 




அப்போதான் நீ டயர்டா இருக்க..  கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போனேன்னு சொன்னேன்.. 



உனக்கும் அந்த நேரத்தில் அதை தவிர்த்து வேறு வழி இல்ல.. நின்னா கூட சத்து இல்லாம மயங்கி விழுந்த.. குழந்தைக்கு எதுவும் ஆகிற கூடாது என்கிற உறுதியில என் கூட இருந்த.. ஆனா அந்த நேரம் இவ்வளவு நாள் நான் தேடிட்டு இருக்க ஏதோ ஒன்னு என் கைக்குள்ள வந்து அடைந்த மாதிரி ஒரு சந்தோஷம்.. நிம்மதி..  எனக்குள்ள உண்டானது..




ஆனால் அடுத்த நாள் நீ போறேன்னு சொன்னப்போ.. உன்ன விடுறதுக்கு கொஞ்சமும் எனக்கு மனசு இல்லயே.. என்ன செய்வேன்.. ஆனா இப்போ புரியுது.. எனக்கு தெரியாம அப்பவே நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் அம்மு..  என்றவனை கலங்கின விழிகளோடு அவன் நெற்றியினில் மென்மையாக முத்தமிட்டாள்..




அன்னிக்கு உன்ன விட்டு விடவே கூடாதுன்னு அப்படி ஒரு உறுதி.. அதனாலதான் என்னென்னவோ காரணங்களை சொல்லி உன்ன ஒரு மாசம் கிட்ட என் கூடவே தங்க வச்சேன்.. உன்னுடைய மசக்கையும் எனக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணுச்சு.. அதனால நீயும் என் கூடவே இருந்த.. ஆனா அதுக்குள்ள எதிர்பாராத விதமா உன் அம்மா இறந்துட்டாங்க.. விஷயம் தெரிஞ்சு நீ ஊருக்கு போறேன்னு அழுதப்போ இதோட என் வாழ்க்கை விட்டு போயிடுவியான்னு உள்ளுக்குள்ள அப்படி ஒரு பதட்டம்.. அப்போதான் முதன் முதலா நான் உன் மேல வச்சிருக்கறது காதல்னு உணர்ந்தேன்.. அதனாலதான் உன்னை தனியா விட முடியாமல்  ஊர்ல விட்டுட்டு வரேன்னு நானும் உன் கூடவே வந்தேன்.. அவன் வார்த்தைகளில் இவள் நெஞ்சு உருக்கமாய்  நெகிழ்ந்தது..







ஆனா அங்க உன் அம்மா இறந்ததோட மத்தவங்க உன்ன நடத்தின விதம்.. நீ அவங்க பேச்சுக்கு கூனி குறுகி நின்னது.. எதிர்பாராத விதமா திடீர்னு அந்த கந்து வட்டிக்காரன் அங்கு வந்தது.. உன்கிட்ட தவறா நடந்துக்க முற்பட்டது.. அந்த நேரத்தில் எனக்கு இருந்த ஆத்திரத்துக்கு அவன் அங்கேயே புதைச்சிட தோணுச்சு.. என்றவனின் கண்கள் இப்போதும் அன்றைய நாளின் நிகழ்வில் செவ்வானமாய் சிவந்தன..



ஆனா எந்த நிலையில் உனக்கு என்கிட்ட தூரம் வந்துரக்கூடாதுன்னு பல்ல கடிச்சுக்கிட்டு நின்னேன்..



பணம் தான் பிரச்சனையா வச்சு அவன் நின்னப்போ..  அவன் கேட்டதை விட அதிகமாகவே கொடுத்து அவனை துரத்தி விட்டேன்.. பேசிக்கொண்டே வந்தவனை அப்படின்னா உன் வீடு வித்து தான் பணத்தை கொடுத்தேன்னு சொன்னது?? கேட்டாள் அவள்..




பொய் தான்.. சொல்லப்போனால் அது என் வீடே கிடையாது..   ஒரு இம்போர்ட்டண்ட் மீட்டிங்காக மும்பை வந்திருந்தேன்..  அது என் ஃப்ரெண்டோட கெஸ்ட் ஹவுஸ்.. 




அப்படின்னா வித்தேன்னு சொன்னது??



எல்லாம் சும்மா தான் டி.. கண் சிமிட்டியவனை பொய்யாய் முறைத்தவளிடம்..  நீ வந்ததால ஒரு வாரம் ஒரு மாசமா எக்ஸ்டெண்ட் ஆகிடுச்சு.. ஆனா அதுக்காக அங்கேயே இருந்திட முடியாதே.. அதனால தான் வீட வித்து வந்த பணம்னு உன்கிட்ட பொய் சொன்னேன்..  ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!! பணம் எப்படி வந்துச்சுன்னு கேள்வியும் இருக்காது.. அந்த வீட்டுக்கு திரும்ப ஏன் போகலங்குற யோசனையும் இருக்காது உனக்கு.. கண் சிமிட்டியவனை..






ம்ம்ம்.. அறிவுதான்.. புருவத்தை ஒரு மாதிரியாய் இழுத்து சுழித்தாள்..




அறிவு தான் டி.. இல்லனா ஒரே நேரத்துல உன்ன அப்படி சமாளிச்சு இருக்க முடியுமா.. இடையோடு உராய்ந்து கொண்டிருந்த கரத்தை இறுக்கினான்.. எதிர்பாராத இழுப்பில் படாரென அவன் மார்பில் மோதி சாய்ந்தாள்.. 




அப்பப்பா அந்த நேரத்துல எல்லாம் எவ்வளவு கேள்வி கேப்ப.. என்னால எதுக்குமே பதில் சொல்ல முடியாது..  உண்மையவும் சொல்ல முடியாம அதே நேரத்துல அதை மறைக்கவும் முடியாமல்.. நான் பட்ட பாடு..  என என ஒரு மார்க்கமாய் விழிகளை உருட்டி தலையை உலுக்கி கொண்டவனை பார்த்து இதழுக்குள் சிரித்து கொண்டவளை தாடை பற்றி நிமிர்த்தி அவள் கண்களுக்குள் ஆழ்ந்தான்.



இப்ப கூட அத தாண்டி பண்ணிக்கிட்டு இருக்க..  அவன் டி அழைப்பு உயிர் வேர் வரை பாய்ந்தது..  அந்த ஒற்றை அழைப்பிற்கு கண்ணக் கருப்புகள் எல்லாம் சூடேறி போக.. அசோக்.. அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவன் கழுத்து வளைவிலேயே முகத்தை புதைத்துக் கொண்டாள் அவள்.





இதழுக்குள் எழுந்த புன்னகையோடு.. அடுத்ததா தான் அந்த இன்னொரு பத்தி வீடு பார்த்தேன்.. பெரிய வீடா பாக்கலாம் தான் ஆனால் அதுக்கும் நீ 1008 கேள்வி கேப்பியே.. அதனால இப்போதைக்கு இதுவே போதும்னு..  உன்னை அங்கு கூட்டிட்டு வந்தேன்.. அதுக்கு அடுத்து நடந்து தான் உனக்கே தெரியுமே.. என்பது போல் அவன் தோள்களை குலுக்க.. எனக்காக நீ இவ்வளவு பண்ணி இருக்க.. ஆனா கொஞ்சம் கூட உன்னை புரிஞ்சுக்காம உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்திட்டேன்ல அசோக்.. சட்டென முகம் வருந்தி கண் கரித்தவளை.. அழுத்தமாய் தாடை பற்றினான்.




நீ எதுவும் வேணும்னு பண்ணலையே டி.. சொல்லப்போனால் நான் மட்டும் என்ன உன்கிட்ட என் காதலை சொன்னேனா.. நானும் மறச்சிட்டு தானே இருந்தேன்.. அப்படி இருக்கும்போது உனக்கு மட்டும் எப்படி தெரிஞ்சிடும்..




அதுக்குன்னு உன்னையும் உன் உணர்வுகளை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இருந்திருக்கேனே அசோக்..  நெஞ்சம் வெதும்ப கூறியவளை ஆதுமாய் அணைத்து கொண்டான்..



இதில் ஆரியனையும் பத்தி உன்கிட்டயே வந்து சொல்லி.. ச்சே.. நீ அந்த நேரங்களில் எவ்வளவு கஷ்டப்பட்டு போயிருப்ப.. அவள் கேட்க மறுப்பாய் தலையசைத்தான்..




நான் உன்னை காதலிக்கிறேன்னு நீயும் என்னை காதலிக்கணும்னு அவசியம் இல்லையே ஜானு.. சின்ன வயசுல இருந்து அம்மா அப்பா இல்லாமல் தாத்தா பாட்டியுடன் நிழல்ல வாழ்ந்தவன் நான்.. சித்தப்பா சித்தி அத்தை மாமா என்று பெரிய குடும்பம்.. ஆனாலும் அவங்க அவங்க பசங்கள தான் பாத்துப்பாங்க.. ஒரு காலகட்டம் வரைக்கும் அதேபோல பாசமும் அன்பும் எனக்கு கிடைக்காதான்னு நிறைய முறை ஏங்கி இருக்கேன்.. ஆனா அதுக்கு அடுத்த அவங்களோட உண்மை குணம் புரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சிட்டேன்.. தாத்தா பாட்டி கிட்ட மட்டும் எத்தனை விஷயங்கள நான் சொல்லிட முடியும்.. அந்த விவரம் தெரியாத வயசுல  எனக்கு யாரும் இல்லன்னு தோணறப்போலாம்.. எனக்குன்னு ஒருத்தி வருவா அவ என்ன நல்ல புரிஞ்சுப்பான்னு.. எனக்கு நானே சொல்லிப்பேன்..




ஆனா உன்ன பாத்த நாள்ல இருந்து அவ்வளவு நாள் நான் எதிர்பார்த்திருந்த விஷயமே தலைகீழா மாறி போச்சு.. உன்கிட்ட என்ன கொட்டணும்னு இல்ல.. உன்னுடைய சோதனைகளுக்கும் வருத்தங்களுக்கும் கஷ்டங்களுக்கும் நான் வடிகாலாய் இருக்கனும்னு நினைச்சேன்.. நீ ஆரியன பத்தி பேசுறப்போ கூட இவ்வளவு விரும்புறவள கொஞ்சம் கூட கண்டுக்காம  இப்படி வருத்துராறேன்னு எனக்கு அவர் மேல தான் கோபம் வரும்.. 




ஆனா உண்மைய சொல்லனும்னா ஒரு தடவை எனக்கும் உன் மேல பயங்கர கோபம் வந்துச்சு..  எப்போன்னு தெரியுமா.. அவன் தொக்கி கேட்டதில் மொட்டவிழ்ந்த விழிகள் புரியாமல் மொய்க்க.. விரிந்த விழிகளை கண்கொண்டு மட்டும் காண முடியாமல் பச்சேன தன் ஈர முத்தத்தை பதித்திருந்த அவனின் செயலில் வெட்கி சிவந்தாள்.. .




அவள் வெட்கத்தை ரசித்தபடி தொடர்ந்தான்.. அன்னைக்கு.. உன் ஆபீஸ்ல இருந்து யார் இருக்காங்க.. என்ன இருக்காங்கன்னு.. ஏதும் கவனிக்காம நடுத்தெருவுல வெறும் கால்ல நடந்து ஓடி அந்த கடலுக்குள்ள விழுந்த பாரு.. அப்போ.. ஓங்கி உன்ன ஒரு அறை விட்டு ஏன்டி கொஞ்சம் கூட எதையுமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறன்னு  கத்தனும் போல இருந்துச்சு..



ஹ்ம்ம்.. ஆனா அந்த கோபம் எல்லாம் நீ எந்திரிக்கிற வரைக்கும் தான்..  நீ எழுந்ததும்.. சோர்வே உருவான மாதிரி உன் முகத்தை பார்த்ததும் இருந்த கோபம் எல்லாம் எங்க ஓடிப் போச்சுன்னு தெரியல.. 




ஆனா அடுத்து நீ சொன்ன விஷயத்துல கோபம் வந்தது என்னவோ உண்மைதான்..  பேசாம நானே போய் அவர்கிட்ட பேசிட்டா என்னன்னு தோணுச்சு..  ஆனா இது உன் பிரச்சனை நீ தான் சால்வ் பண்ணனும்னு நெனச்சேன்..





என் ஜானுடன் நான் துணையாய் இல்லைன்னாலும் என்னைக்கும் அவ அவளுடைய சொந்த காலில் மட்டுமே நிக்கணும்.. அதனாலதான் நான் அன்னைக்கு உன்கிட்ட அப்படி சொன்னேன்..என்றவனை விழிகளில் நீர் மின்ன பார்த்தாள்.





தனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு பார்த்து பார்த்து செய்திருக்கிறான் ஆனால் அவனை கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல்.. எண்ணங்களோடு அவள் கண்ணீர் கண்ணத்தைத் தாண்ட..  அவள் கன்னங்களை கிண்ணங்களாய் ஏந்தியவன் அழுது வடிந்து கொண்டிருந்த கண்ணீரை மென்மையாய் துடைத்து விட்டான்.



என்னடா.. 



அப்போ அன்னைக்கு ஆரியன் முன்னாடி நான் உன்னை என் முகத்தில் விழிக்கதன்னு விட்டுட்டு வந்துட்டியா.. அப்போ ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்..  அசோக் ஆனா நீ என்னை விட்டு போன ஒவ்வொரு நிமிஷமும் எவ்வளவு துடிச்சு போயிருப்பேன் தெரியுமா.. வார்த்தைக்கு வார்த்தை தேம்ப ஆரம்பித்த அவள் இதழ் மீது கரம் வைத்து நிறுத்தினான்..



விழிகள் ஆழ்ந்து அவள் இரு குண்டுமணிகளுக்குள் உருண்டன..





நீ தனியாவே என்கிட்ட சொல்லி இருந்தாலும் உன் பேச்சை நான் எப்படி மீறுவேன்.. இதைவிட ஒருவனின் காதலை எந்த விதத்தில் உயர்வாய் கூறி விட முடியும்??




அசோக்க்க்க்... அவன் நெஞ்சோடு இறுக சாய்ந்து கொண்டாள்.. நான் தான் முட்டாள்.. கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் எப்படி பேசி இருக்கேன்.. இப்ப நினைச்சாலும் என்ன நெனச்சா எனக்கே கோபம் கோபமா வருது.. அழுகையில் அவள் உடல் நடுங்க..




அம்மு.. அம்மு.. அவள் தாடை பற்றி நிமிர்த்தி தன் முகத்தை வம்படியாய் பார்க்க செய்தான்..





என் பாட்டி எப்பவுமே சொல்லுவாங்க போதாத காலம்னு ஒன்னு வந்ததுன்னா எதுனாலும் இப்படி தான் நடக்கும்னு.. இதுவரைக்கும் நானும் உன்கிட்ட என் காதலை சொல்லல.. உனக்கும் தெரிய முற்படுத்தல.. அந்த விஷயத்தில் ஆர்யன் எனக்கு ரொம்பவே நல்லது பண்ணி இருக்காருன்னு தான் சொல்லுவேன்.. இத்தனை வருஷமா நான் உன்கிட்ட மறைச்சு வச்சிருந்தா காதல் வெளிப்படையா சொல்ல முடிஞ்சதனா அது அன்னைக்கு அவரால தான்.. என்றவனை கண்கள் சுருக்கி முறைத்தாள்.




பெருந்தன்மை இருக்கலாம்..  அதுக்காக இந்தளவு இருக்கக் கூடாது..  அது சரி நான் சொன்னதும் இதுதான் சாக்குன்னு நீ பாட்டுக்கு வந்துட்டேல்ல.. நீ இல்லாம நான் ஒவ்வொரு விஷயத்துக்கும் எவ்வளவு தவிச்சு போயிட்டேன் தெரியுமா.. செல்ல கோபத்தில் மூக்கு நுனி சிவக்க கேட்டவளை.. ஆசையாய் பார்த்தபடி இன்னும் நெருக்கமாய் அள்ளி கொண்டான்.. தலை அவள் பஞ்சு பொதிகளின் மீது கவிழ்ந்து கொண்டது..





நானும் மனுஷன் தானடி.. உயிருகுயிரா காதலிக்கிற பொண்ணே என்னை முகத்துல முழிக்காதேன்னு சொல்றப்போ அவளுடைய வார்த்தையை எப்படி என்னால மீற முடியும்..  ஆனா அதுக்கு முன்னாடியே இங்க வர்றதுக்கான அவசியம் இருந்துச்சு தான்.. அந்த வேலை சம்பந்தமாக தான் அந்த ஒரு வாரம் வீட்டுக்கு கூட வராமல் ராப்பகலா வேல பாத்தேன்.. ஓரளவ அதை கிளியர் பண்ணினேன்..என்றவனை பேச்சோடு பாதியில் நிறுத்தினாள்.. 



அப்படின்னா என் மேல எந்த கோபமும் இல்லையா..  நீ என்கிட்ட பேசாம இருக்கவும் அந்த ஒரு வாரமும் என் மேல தான் ஏதோ கோபமோன்னு எப்படி துடிச்சு போனேன் தெரியுமா..



அப்படியெல்லாம் மொத்தமா கோபம் இல்லைன்னு எல்லாம் சொல்லிட முடியாது.. ஓர கண்ணால் அவள் முகத்தைப் பார்த்தவன்..  அன்னைக்கு ஒண்ணா நீ ஆரியன் கூட காரல வராத பாத்ததும் இதுவரைக்கும் உன்னை எப்பவும் துணையாய் இருக்கணும்.. எப்பவும் நீ எந்த முடிவை எடுத்தாலும் உனக்கு துணையாய் இருக்கணும்னு எனக்கு நானே சொல்லிக்கிட்ட உறுதிமொழி எல்லாம் எங்கேயோ பறந்து போயிடுச்சு..




அது எப்படி நீ அவர் கூட வரலாம்னு உள்ளுக்குள்ள என்னையும் கட்டுப்படுத்த முடியாத கோபம்.. அதை வெளிப்படையா கேட்கவும் என்னால முடியல..  அதுக்காக அது மறந்துட்டு உன்கிட்ட நடிச்சுகிட்டும்  இருக்க முடியல..  சரியா அந்த நேரம் பார்த்து வேலை வந்ததும் மைண்ட் டைவர்ட் பண்ண அந்த பக்கம் போயிட்டேன்.. அவன் கூறி முடிக்க.. இவள் முகம் வாடி தெரிந்தது.




சாரி அசோக்.. உன்ன அப்செட் பண்ணனும்னு எல்லாம் நான் அப்படி வரல.. அன்னைக்கு வேற வழியில்லாமல் தான் அவர் கூட வந்தேன்..  கூற வாய் எடுத்தவளை நிறுத்தினான்..





அதுதான் முடிஞ்ச கதைன்னு ஆயிடுச்சே..  இன்னும் எதுக்கு அத பத்தியே பேசிகிட்டு.. என்றவனின் விழிகள் ரசனையோடு அவள் உச்சந்தலையில் இருந்து கன்ன கதுப்பு வரை படர.. வெம்மையில் சிவந்து போனவளாய்.. அசோக்க்.. சினுங்கி அவன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள்..




இதழ்கள் விரிய பளிச்சென்ன புன்னகை சிந்தியவனிடம்.. ஆமா ஆரம்பத்துல இருந்து வீட்டுல ஏதோ ஒரு பிரச்சனை.. அதனால தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன்னு சொல்லிட்டே இருக்கியே..  அப்படி என்ன பிரச்சனை.. என்கிட்ட சொல்லலாமா..  குரல் தயங்கியவளை நெற்றி மூட்டினான்..



இனிமேல் உன்கிட்ட மறைக்கிறதுக்கு எனக்கு என்னடி இருக்கு.. இனிமேல் நான் தான் நீ..  நீ தான் நான்.. அவன் பேச்சில் இவள் தேகம் தன்னிச்சையாக சிலிர்த்தது.




அம்மா அப்பா இல்லாததால தாத்தா பாட்டிக்கு என்ன கொஞ்சம் அதிகமா பிடிக்கும்.. படிப்பு தொழில் எல்லாத்தையும் எனக்கும் கொஞ்சம் துடுக்கத்தனமும் ஜாஸ்தி.. மத்தவங்க செய்ய யோசிக்கிற விஷயத்தையும்  எப்படியாவது செஞ்சு முடிச்சே ஆகணும்கிற வைராக்கியம் எனக்குள்ள எப்பவும் இருக்கும்..  அதே போல செஞ்சும் முடிப்பேன்.. அவன் கூறுவதை விழிகள் படபடக்க கேட்டுக் கொண்டிருந்தாள்..




அப்படி பாத்த.. என்றவன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மீண்டும் அவள் திறந்த இமைகளின் மீது இச்.




அஷு.. சினங்கினாள்..




சரி.. சரி.. இதழுக்குள் புன்னகையை மறைத்தவன்.. அதனால தாத்தா பாட்டிக்கு நான்னா எப்பவுமே செல்லம் தான்.. ஆனா சித்திக்கும் அத்தைக்கும் அவங்க பசங்கள விட தாத்தா பாட்டி என்னையே அதிகமா கவனிக்கிறாங்கன்னு நினைப்பு.. 




அவங்களுக்கு படிப்புல இன்ட்ரஸ்ட் இல்ல.. ஆனாலும் நான் படிச்சேன்ங்கிறதுக்காக அவர்களையும் இன்ஜினியரிங்கே படிக்க சொன்னாங்க.. அவனுங்களும் பேருக்கு படிச்சானுங்க..  நான் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆனா அதே காலேஜ்ல அவங்க இருந்த அத்தனை பேப்பர்ஸ்லயும் அரியர்ஸ் வைப்பாங்க..  ஏதாவது ஒன்னுனா  கார்டியன்னா பிரின்ஸ்பல் என்ன தான் கூப்பிடுவாரு.. நான்தான் அவனுங்களுக்காக அவர்கிட்ட சமரசம் பேசுவேன்..  இப்படிதான் நாள் ஓடிக்கிட்டு இருந்துச்சு.. அடுத்து நான் தொழில் பாக்க வந்தது அடுத்து.. ஒரு நாள் சித்தியும் அத்தையும்.. நேரா தாத்தா பாட்டி கிட்ட வந்து நின்னாங்க..




அது நா சக்ரினா ஸ்டார்ட் பண்ணி சக்சஸ்ஃபுல்லா ரன் பண்ணிக்கிட்டு இருந்த காலகட்டம்.. எல்லா சொத்தையும் பெரிய பதவிகளையும்  அவங்க எனக்கே தான் கொடுக்கிறார்களாம்.. அம்மா அப்பா இல்லங்கிறத காரணமா காட்டி நான் இந்த சொத்தை எல்லாம் சுருட்டி சுகபோகமா அனுபவிச்சுக்கிட்டு இருக்கேனாம்.. அவங்க சொத்த நான் அள்ளி வாயில போட்டுக்கிறேனாம்.. கூறும்போது அவனையும் அறியாமல் அவன் விழிகள் சற்று சுருங்கி வேதனையை காட்டியது..



தானம் வருத்தத்தோடு அவன் முகத்தை விட்டு அகலாத பார்வையோடு பார்த்திருந்தாள் ஜானு.




தாத்தா பாட்டி இத பத்தி என்கிட்ட எதுவும் சொல்லல..  ஆனா சின்ன வயசுல இருந்து என்னை பார்த்துட்டு இருக்குறவங்க..  இந்த வீட்டில வேலை பாக்குறவங்க.. எல்லாரும் எனக்கு ரொம்ப நம்பிக்கையானவங்க.. அவங்க தான் மனசு கேட்காம நான் வீட்டுக்கு வந்தப்போ நடந்ததை எல்லாம் சொன்னாங்க.. சித்தியும் அத்தையும் அப்படி பேசினதுக்கடுத்து தாத்தாவும் பாட்டியும் அப்படி எல்லாம் இல்லைன்னு எவ்வளவோ மறுத்தத காதுல கூட வாங்கிக்காம அவங்க பேசின பேச்சுல தாத்தா பாட்டி ரொம்ப சோர்ந்து போயிட்டாங்க.. சரியா சாப்பிடறது கூட இல்லன்னு அவங்க என்கிட்ட கொண்டு வந்து நின்ன புகார்.. என்ன ஒரு மாதிரியா ஆக்கிடுச்சு..  




என் முகத்துக்கு முன்னாடி நல்லா குழைஞ்சு கொளஞ்சி பேசினாலும் எனக்கு பின்னாடி அவங்க எப்படி பேசுறாங்கங்கறத தெரிஞ்சுக்கிட்டதுல இருந்து எனக்கு இந்த வீட்டுக்கு வர கூட பிடிக்கல..




இந்த சொத்துக்காக தானே இவ்வளவு பேச்சும் வருத்தமும்.. அப்படி ஒரு சொத்தே எனக்கு வேண்டாம்ன்னு.. என்னுடைய சக்கரினாவை மட்டும் எடுத்துக்கிட்டு தாத்தா எனக்கு கொடுத்த எல்லா சொத்தையும் தாத்தா மனசே இல்லாமல் கொடுத்த அனுமதியோட அவங்க பசங்க கையிலே கொடுத்துட்டு நான் வந்துட்டேன்.. எங்க வீட்டில இருந்தா அதுக்கும் ஒரு கதை கட்டி தாத்தா பாட்டியை நான் இல்லாத நேரம் வேதனைப்படுத்துவாங்களோன்னு நீங்க  எப்ப கூப்பிட்டாலும் நான் வருவேன்.. ஆனால் இனி இந்த வரமாட்டேன் என்று சொல்லிட்டு தான் என் சொந்த சம்பாத்தியத்தில இந்த வில்லாவை வாங்கினேன்.. நீ வர வரைக்கும் இங்கதான் தங்கி இருந்தேன்.. 





அப்படின்னா உன் பிசினஸ்.. என்கூட இருந்த நாளிலையும் உன்னுடைய பிசினஸை பார்த்துகிட்டு தான் இருந்தியா.. ஆனால் எனக்கு எதுவுமே தெரியலையே..  தன் அறியாமையை நினைத்து அவள் வருந்த.. தெரியிற மாதிரி நான் உன்கிட்ட காட்டிக்கல.. அதுலயும் பாப்பா பிறந்திருந்த காலகட்டங்கள்ல உன்னால எழுந்து கூட வர முடியாது.. வேலைக்கு போறேன்.. மூட்டை தூக்குறேன்னு சொல்லிட்டு இன்னொரு பக்கம் போய் இந்த வேலையை தான் பார்த்துக்கிட்டு இருப்பேன்.. எல்லாம் சிஸ்டமேட்டிக்கா இருக்கவும் எக்ஸ்போஸ் பண்ண வேண்டிய அவசியமும் வரல.. 

.




அப்போ முட்டை தூக்குறேன்னு சொன்னதும் கூட பொய்யா..  அவள் விழிகள் விரிந்தன.



ஏன் உண்மையா இருக்கணும்னு நினைக்கிறியா.. அவன் குறும்பு பேச்சில் அவசரமாய் கண்களை படபடவென கொட்டி இல்லை என தலையை மறுப்பாய் ஆட்டினாள்.




நீ சொல்ற எதையுமே நம்ப முடியல அஷு..  ஏதோ கனவில் கேட்கிற மாதிரி இருக்கு.. அவள் கூற இதழ் விரித்து முழுதாய் புன்னகைத்தவனாய் அது எல்லாத்துக்கும் அய்யா போட்ட எஃபோட் அப்படி.. காலரை தூக்கி விட்டுக் கொண்டவனை பொய்யாய் தான் முறைக்க முடிந்ததே தவிர்த்து அந்த பொய் முறைப்பையும் நொடி கனத்திற்கும் மேலாய் அதிகப்படுத்த முடியவில்லை..  பக் என சிரித்து இருந்தாள் ஜானு..  



அவள் முத்து பற்கள் தெரிய விரிந்த சிரிப்பை ரசனையாய் பார்த்தவனாய்.. இப்ப எல்லாம் கிளியர் ஆயிடுச்சா.. ஆழ்ந்த குரலோடு பார்வை அவள் முகத்தில் அழமாய் மோதி நின்றது..



ம்ம்ம்ம்.. ஆனா கொஞ்சம் கூட தன்னலமே இல்லாம உன்னாலே எப்படி என்ன இந்த அளவு காதலிக்க முடிஞ்சது அஷு.. நெகிழ்ந்த குரலோடு கேட்டவளை மென்மையாய் நெற்றி முட்டியவனின் மூச்சுக்காற்று அவள் சுவாசத்தோடு கலந்தது..


அதற்கான பதிலதான் நானே தேடிக்கிட்டு இருக்கேன்.. இந்த ராட்சசி என்னை எப்படி இவ்வளவு கவுத்துட்டான்னு எனக்கே தெரியல..  எப்படி உன் மேலே இவ்வளவு காதல் வந்துச்சு..  தீவிரமா யோசிப்பது போல் பாவனை காட்டியவனை.. பாய்ந்து அணைத்துக் கொண்டவரின் ஈரம் முத்தம் அவன் காதை சில்லிட வைத்தது.




டயலாக் எல்லாம் பயங்கரமா தான் பேசுற.. ஆனா நான் சொன்னதும் இதுதான் சாக்குனு வந்துட்டல்ல..  காதுக்குள் கிறிச்சிட்ட அவள் மென்மைக் குரலில்.. 



நானா.. கேள்வியாய் கேட்டவன்.. உன் ஆபீஸ்ல இருந்து வெளியே வந்ததும் தாத்தா கிட்ட இருந்து போன்.. சித்தியும் அத்தையும் எந்த பிசினஸ் என்கிட்ட இருந்து வம்படியா வாங்கி அவங்க பிள்ளைகளுக்கு கொடுத்தாங்களோ அந்த பிள்ளைகளால அந்த தொழிலை சரியா கொண்டு போக முடியல.. ஏன் நான் உருவாக்கின சாம்பாராஜத்தையும் சேர்த்து தரை மட்டமாக்க ஆரம்பிச்சிட்டாங்க.. பிசினஸ் பொறுத்த வரைக்கும் அறிவு எவ்வளவு முக்கியமோ கம்யூனிகேஷனும் பழக்க வழக்கமும் அவ்வளவு முக்கியம்னு அவங்களுக்கு புரியல.. கடன் மேல கடன் வாங்கி இருக்காங்க.. அதை சமாளிக்க முடியாம வீட்டு பத்திரத்தையும் அடமானம் வச்சு.. அதையும் ஏலம் விடுற அளவுக்கு இழுத்துட்டு வந்துட்டாங்க.. அவங்களுடைய அறிவெல்லாம் இன்ஸ்டா ரீல்ஸ் போஸ்ட் போடறதோட முடிஞ்சிருச்சு.. ஆனா அத சித்தயோ அத்தையோ புரிஞ்சுக்கலையே.. அதனாலதான் ஃபேமிலிக்கு இவ்வளவு லாஸ்..




திரும்பி வந்ததிலிருந்து எவ்வளவு வேலை.. முதல்ல ஏலத்துக்கு போன வீட்ட திரும்ப எடுக்க முயற்சி செய்தேன்.. ஆனா அது சரி பட்டு வரல.. எல்லா இடத்திலும் கடன்.. அது வட்டி போட்டு குட்டி போட்டு.. அப்பப்பா.. இருக்கக்கூட இடம் இல்லாம பண்ணிட்டானுங்களே இந்த பாவிங்கன்னு.. சித்தியும் அத்தையும் புலம்பிக்கிட்டு இருக்க.. தாத்தாவும் பாட்டியும் ரொம்ப உடைஞ்சிருந்தாங்க.. உடனடியா இடத்தை மாத்தினேன்.. எல்லாரையும் நான் என் சுய சம்பாத்தியத்தில உருவாக்கின இந்த வில்லாவுக்கே கூட்டிட்டு வந்துட்டேன்.. அடுத்ததா பிசினஸ்.. கடன்.. கடன்.. கடன்..  நிற்க கூட முடியாமல் ஓட்டம்... ஆனா அடுத்த 15 நாளில ஓரளவு அவங்க கோட்டை விட்ட இடத்த எல்லாம் அந்த பக்கம் இந்த பக்கம்னு ஓரளவு சரி கட்டிடேன்.. கடன் வாங்கின பணத்துக்கு ஷேர்ஸ்ஸ லீக் பண்ணேன்.. திரும்ப கம்பெனி என் கைக்கு வந்துருச்சுன்னு தெரிஞ்சு நிறைய இன்வெஸ்டர்ஸ் இன்வெஸ்ட் பண்ணாங்க.. கடன் ஓரளவு முடிஞ்சது.. ஆனா அதுக்கடுத்தும் என்னாலை நிக்க முடியல.. கொஞ்ச நேரம் சும்மா இருந்தாலும் உன் ஞாபகம் கண்ணு வந்துரும்.. இப்பவே உன்ன பாக்கணும் போல இருக்கும்.. ஆனா தயவு செஞ்சு என் முகத்தில் முழிச்சிராதீங்கன்னு நீ சொன்னா வார்த்தை..!! என்னால உன்ன நெருங்கவும் முடியாம அதுக்காக என்னையும் சமாளிக்க முடியாம.. அதுக்கு ஒரே மருந்து வேலை ஆபீஸ்.. வேலை வேலைன்னு ஓடினேன்.. முடிஞ்சவரை என்னை யாருக்கும் காட்டிக்காம இருக்க தான் பார்த்தேன்... என்றவனை விழிகள் மின்ன பார்த்தாள்.



எவ்வளவு பெரிய அசாத்திய விஷயம்.. வாங்கிய 15 லட்சத்துக்கு கடனை கட்ட முடியாமல் தான் பட்ட பாடை மறக்க முடியுமா.. ஆனால் பல கோடி கடனை 15 நாட்களில் அடைத்து இருக்கிறான் என்றால்.. அவன் சாமர்த்தியத்தை சொல்லி மாளாது..





தொடர்ந்தான் அசோக்.. ஆனா பாட்டி என்ன பெத்தவங்களுக்கு பெத்தவங்களா வளத்தவங்களாச்சே.. ஈஸியா கண்டுபிடிச்சிட்டாங்க.. அவங்க கேட்டதும் என்னால மறுக்க முடியல.. விஷயத்தை சொன்னேன்..  ஆனா என்ன ஆனாலும் உன்கிட்ட வந்து பேச கூடாதுன்னு தான் சொன்னேன்.. சத்தியம் எல்லாம் கூட வாங்கினேன்.. அவங்களும் பண்ணாங்க... ஆனா நான் சொன்னதையும் மீறி உன்கிட்ட வந்து பேசிட்டாங்க.. என்ற ஒரே நெஞ்சில் இந்த முறை ஓங்கியே குத்தினாள்.. 




அஹ்ஹ்.. வலிக்குதுடி.. பொய்யாய் நெஞ்சை நீவினான்..



புழுவாத.. கல்லு மாதிரி இருக்க.. இதுல நான் குத்தினது உனக்கு வலிச்சிடுச்சா... ஒரு பிளோ வில் அவள் கேட்ட வார்த்தையில் அவன் பார்வை காட்டிய குறும்பில் அதிகப்படியான பேச்சை உணர்ந்து சட்டென இதழ் கடித்து திரும்பிக் கொண்ட படி... பின்ன என்ன.. பாட்டி மட்டும் இப்போ இப்படி ஒரு வேலையை செய்யாமல் இருந்திருந்தால் நானும் இங்கு வந்திருக்க போறதில்லை.. நம்மளும் இப்படி சேர்ந்திருக்க போறதில்ல.. தானாக அவன் பார்வையில் அவள் ஸ்ருதி இறங்கியது..




உண்மை தான்.. ஆனா அநியாயத்துக்கு வெக்க படுற ஜானு.. நீ இப்படி வெட்கப்படறத பாக்குறப்போ.. என்றவனின் கரம் அவள் சேலைக்குள் ஊடுருவி இடையோடு ஒட்டி கொள்ள.. அஷோக்.. பேச்சின் முற்றுப்புள்ளியாய் அவன் இதழை மீண்டும் ஆக்கிரமித்து இருந்தாள் ஜானு.. இந்த முறை நிரம்பி வழிந்த தெவிட்டா காதலுடன்.. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 38

 ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்..  ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.   தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்..  அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்.. என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..  அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் ம...

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...