உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன. அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு.. காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்.. ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்.. அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்.. நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்.. ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...
உங்களுக்காக பெரிய யூடியாவே போட்டு இருக்கேன்.. அதுக்கேத்த மாதிரி கமெண்டும் பெருசா வந்தா எனக்கும் என்கரேஜ் ஆக இருக்கும்.. ஆனா அன்னைக்கு அந்த ரவுடிகள் கிட்ட உன்ன அந்த நிலைமையில் பார்த்ததுக்கு அடுத்து என்னால வேற எதையுமே யோசிக்க முடியல.. லைட்டா உப்பி தெரிஞ்ச வயிறு நீ ப்ரெக்னன்ட்டா இருக்கிறத காட்டுச்சு.. ஆனா கழுத்துல தாலி இல்ல.. கால்ல மெட்டி இல்ல.. ஜானு.. உன் பெயர் எனக்குள்ள ஆழமா பதிஞ்சிடுச்சு.. கழுகு கூட்டமா உன்ன சுத்துனவனுங்கள விளாசி எறிஞ்சிட்டு கையோட உன்னை என் கூட கூட்டிட்டு வந்துட்டேன்.. என்றவனை விரிந்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.. ஆனா எந்திரிச்சதும் நீ கேட்ட எந்த கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்ல.. நீங்க யாரு.. அங்க யாருமே இருக்கிற மாதிரி தெரியல..நீங்க எப்படி திடீர்னு வந்தீங்க.. எப்படியோ.. நல்ல வேளை தெய்வ மாதிரி வந்து காப்பாத்துனீங்களே.. சரி நான் கிளம்புறேன்னு.. சோர்வா எந்திரிக்க கூட முடியாமல் நீ எந்திரிச்சப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.. அதுலயும் ஒரு கையால வயித்த புடிச்சுகிட்டு நீ எந்திரிச்ச விதத்தில என் உயிரையே உருவி எடுத்த மாதிரி இருந்துச்சு.. ...