முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...

கானலோ! என் காதலோ! 73

 உங்களுக்காக பெரிய யூடியாவே போட்டு இருக்கேன்.. அதுக்கேத்த மாதிரி கமெண்டும் பெருசா வந்தா எனக்கும் என்கரேஜ் ஆக இருக்கும்.. ஆனா அன்னைக்கு அந்த ரவுடிகள் கிட்ட உன்ன அந்த நிலைமையில் பார்த்ததுக்கு அடுத்து என்னால வேற எதையுமே யோசிக்க முடியல.. லைட்டா உப்பி தெரிஞ்ச வயிறு நீ ப்ரெக்னன்ட்டா இருக்கிறத காட்டுச்சு.. ஆனா கழுத்துல தாலி இல்ல.. கால்ல மெட்டி இல்ல.. ஜானு.. உன் பெயர் எனக்குள்ள ஆழமா பதிஞ்சிடுச்சு.. கழுகு கூட்டமா உன்ன சுத்துனவனுங்கள விளாசி எறிஞ்சிட்டு கையோட உன்னை என் கூட கூட்டிட்டு வந்துட்டேன்.. என்றவனை விரிந்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.. ஆனா எந்திரிச்சதும் நீ கேட்ட எந்த கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்ல..  நீங்க யாரு..  அங்க யாருமே இருக்கிற மாதிரி தெரியல..நீங்க எப்படி திடீர்னு வந்தீங்க.. எப்படியோ.. நல்ல வேளை தெய்வ மாதிரி வந்து காப்பாத்துனீங்களே.. சரி நான் கிளம்புறேன்னு.. சோர்வா எந்திரிக்க கூட முடியாமல் நீ எந்திரிச்சப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.. அதுலயும் ஒரு கையால வயித்த புடிச்சுகிட்டு நீ எந்திரிச்ச விதத்தில என் உயிரையே உருவி எடுத்த மாதிரி இருந்துச்சு..  ...

கானலோ! என் காதலோ! 72

 அசோக்கோடு அவன் அறைக்குள் நுழைந்தவளின் கண்கள் விஸ்தாரமாய் விரிந்தன.. அவன் உண்மை நிலை மறைத்து தங்களுடன் வந்த காலகட்டங்களில் தங்கி இருந்த பத்தி வீட்டை விட இரண்டு மடங்கு பெரியது முன்னிறுந்த அவன் படுக்கையறை மட்டும்.. அதன் இரு பக்கமாய் திரைசலை மறைத்திருந்த அறைகள் இன்னும் ஒரே வேறு இரண்டு அறைகள் இருப்பதை காட்டிக் கொடுக்க..  இவ்வளவு சொகுசயும் சொத்து பத்தையும் விட்டுவிட்டு அவன் தங்களோடு வாழ்ந்து வாழ வேண்டிய அவசியம் என்ன.. அதுவும் ஒரு வருஷமா . இரண்டு வருஷமா.. கிட்டத்தட்ட கிருத்தி பிறந்ததிலிருந்து ஐந்து வருடம்.. அதற்கு முன்பாக ஒரு வருடம்.. ஆக மொத்தம் ஆறு வருடங்கள்.. யாருக்காக..  எதற்காக..  மனதில் அத்தனை குழப்பங்கள் மண்டையில் கிடக்க சுற்றி இருந்தவைகளை விழிகள் மருள.. பார்த்துக் கொண்டிருந்ததில் முன்னே வந்தவன் ஜானு.. அழைத்து அவள் பக்கமாய் திரும்பி கைகட்டி நின்று கீழ் கண்களால் பார்த்தான். ஜானு.. உன் மனநிலை எனக்கு தெளிவா புரியுது.. பாட்டி உன்ன பயமுறுத்துற மாதிரி ஏதோ சொல்லி இருக்காங்க.. அதனால பதறிப் போய் நீ ஓடி வந்து இருக்க.. ஆனா ப்ளீஸ்.. இந்த சிம்பதி எல்லாம் வேண்டாம்.. நான் உன்னை இப்...

கானலோ! என் காதலோ! 71

 உடலும் உள்ளமும் மறித்து போக யமுனா கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதே இடத்தில் நிலை கொள்ள முடியாமல் கீழே சரிந்தாள் ஜானு. ஜானு.. ஜானு.. ஒரு கையால் குழந்தையை பிடித்துக் கொண்டு மறு கையால் அவளை தாங்கி பிடித்தாள் மிதா..  கைகள் இரண்டும்  நடுக்கம் எடுக்க ஆரம்பித்தன.. இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவில்லை என்பதை அவளின் வேதனை முகமும் பளிச்சிட்டது. எம்மா.. நான் உன்கிட்ட அவன் காலையில கிளம்பிடுவான்னு சொல்லிட்டு தானே வந்தேன்.. இப்படி அவன் போன பின்னாடி வந்து நிக்கிறியே..  அவன் இருந்தப்போவே நீ வந்திருந்தா அவன் இங்க இருந்து போயிருக்க மாட்டான்..  என்ன விட்டும் போயிருக்க மாட்டான்..  குரல் கமறினார் யமுனேஸ்வரி. அழுகையை அடக்குகிறார் என புரிந்தது..  நீங்க அவர் காலைல போவாருன்னு தானே சொன்னீங்க.. மணி இப்போ நாலு தான் ஆகுது.. இப்பவே கிளம்பிட்டாரா.. தோழியின் நிலையை காண முடியாமல் வெடித்தாள் மீதா. சிந்தை கலங்கி போனது போல் உதட்டோடு புலம்பியபடி ஏதோ பேசிக்கொண்டு இப்படியல்லவா அமர்ந்திருக்கிறாள்.. கூறு கெட்டவள்.. இதனை நாட்களாய் வைரத்தை பக்கத்திலேயே வைத்து இருந்தாலும் அவன் மதிப்பு புரிய...

கானலோ! என் காதலோ! 70

 யமுனா சென்று இரண்டு மணி நேரங்கள் முழுதாய் கடந்து இருந்தது.. ஆனால் இதை விட்டு கூட அசையாமல் ஆணி அடித்தார் போல் அதே இடத்தை அமர்ந்திருந்தவளை கண்டு கோபம் தான் வந்தது மிதாவிற்கு.. என்னடி இன்னும் எப்படி உட்கார்ந்துருக்க.. அந்த அம்மா எவ்வளவு தெளிவா இன்னும் அசோக் உன்ன விரும்புறாருன்னு சொல்லிட்டு போறாங்க.. அவங்க கூடவே கிளம்பி போறது விட்டு போட்டு இப்படி ஏதோ பேய் அறைஞ்ச மாதிரி உட்கார்ந்து இருக்க.. அடியே.. அப்போதும் தெரியாதவளை தோள் பற்றி உலுக்கியதும் தான்.. ஹா. ஹான்.. அவள் இமைகள் படபடவென கொட்டி திரும்பின. என்னடி.. கோபத்தோடு அவள் கேட்டு முடிப்பதற்குள்ளாகவே மீதாஆஆஆஆ.. அழுகையோடு அவளை கட்டி கதற ஆரம்பித்து இருந்தாள் ஜானு. ஜானு.. அவள் அழுகையை எதிர்பாராமல் மிதாவின் முகம் அதிர்ச்சியானது. அஷோக்.. அஷோக்.. அவனுக்கு என் மேல கோபம் இல்லையாடி.. நான் அவன அப்படி பேசினதெல்லாம் அவன் மறந்துட்டான்னா.. இல்ல மன்னிச்சுட்டானா.. வருத்தம் இல்லையா..  இன்னும் என்ன காதலிக்கிறானா..  நான் இல்லன்னு ஊரு விட்டு போக முடிவு செஞ்சுட்டானா..  தெரிந்தாலும் ஒன்றும் தெரியாதது போல் கேட்கும் சிறு குழந்தையின் மனநிலையில் அவள...

கானலோ! என் காதலோ! 69

 வெகு நாளைக்கு பின் தான் பிறந்து வளர்ந்த இந்த ஓலை குடிசையில் உறக்கம்.. நியாயமாய் படுத்த உடனேயே உறக்கம் போர்வையாய் இமைகளை இமயமாய் அள்ளிப் போர்த்தி இருக்க வேண்டும்.. ஆனால் மாறாய் இவளோ படுக்கையில் உறங்க மறந்து புரண்டு கொண்டு அல்லவா இருக்கிறாள்?? மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் நீங்கிய நிலையில் மனம் தாயை தேடும் குழந்தையாய் அவனை சுற்றி வருகிறது.. அஷோக்.. அஷோக்.. அவனிடம் நேரில் பேச தான் முடியாது.. ஆனால் எண்ணங்களுக்கு இலக்கொன்றும் இல்லையே.. என் மனதோடு அவனோடு வாழ்வேன்.. அவனுடைய இருப்பேன்.. அவனும் என் எண்ணங்களிலேயே நிறைந்து எனக்குள் எப்போதும் இருப்பான்..  அவள் எண்ணம்.. ஆனால் இந்த கனவுலக வாழ்க்கை போதும் தானா.. பிறகு ஏன் இப்படி தூங்கக்கூட முடியாமல் ஒரு பக்கம் குழந்தையும் மறுபக்கம் மிகவும் படுத்தி இருக்கும்போதே நடுவில் படுத்துக்கொண்டு புரண்டு கிடக்க வேண்டுமாம்.. அஷோக்.. தான் சோகம் கொள்ளும் போதெல்லாம் ஆசானாய் இருந்து அறிவுரை கூறுவதும் தன் வாடிய பொழுதெல்லாம் தூண்டுகோலாய் இருந்து எழுப்பி நிற்க வைப்பதும்.. குழந்தை தந்தை என கேட்க வாய் எடுப்பதற்கும் முன் பெற்றவனாய் முன்வந்து காப்பதும்.. தனக்...