சினம் கொண்ட வேங்கையாய் அவனிடம் சீறி வெளிவந்திருந்தவளுக்கு அவனை பற்றி யோசிக்கவும் விருப்பமில்லை.. அவன் அற்ப புத்தியும் குணமும் தெரிந்துவிட்டது.. இனியும் அதையே நினைத்து மருகி அழுது தன்னை தானே முடக்கிக் கொள்ள எண்ணமில்லை.. ஏற்கனவே எடுத்த தவறான முடிவு ஒன்று போதும்.. என நினைத்ததற்கு உயிர் வாரிசுருட்டிய நிமிடம் ஒரு காரணம் என்றால் காப்பாற்றியவன் கொடுத்த உரை அதற்கும் மேலானதே.. அசோக் சொன்னது சரிதான்.. எனக்கு என்ன வேணும்ன்னுகிற முடிவ நான் முதல்ல தெளிவாக எடுக்கணும்.. அப்போதான் அதுக்கு அடுத்த படிகளில் என்னால சரியா கால் வைக்க முடியும்.. என எண்ணி கொண்டவளாய் இப்போதைக்கு மனதை குழம்பிய குட்டையாக்கும் அவன் சம்பந்தப்பட்ட அனைத்து யோசனைகளையும் ஓரம் கட்டி விட்டாள்.. வேலையிலும் ஆழ்ந்து விட்டாள். அனைவரும் தம் தமது வேலையில் மூழ்கி கிடக்க திடீரென அவள் போன் அடித்து தன் இருப்பை காட்டியது.. எடுத்து பார்க்க புது நம்பர். நம்பர் புதுசா இருக்கே.. யாரு.. அதுவும் வேலை நேரத்துல.. புருவம் இடுங்க யோசித்தவள்.. அடிக்கடி வரும் ஸ்பேம் காலாய் இருக்கும் என சைலன்ட் போட்டு விட்டு வேலையில் ம...
உயிர் உணர்வான காதலை ஒன்றாக சுவாசிக்கலாம்..!