பட்டமாய் பறந்து கொண்டிருந்த மனதை இழுத்து பிடித்து வேலைக்குள் அமுக்கி விட்டாள் ஜான்வி.. முதலில் அவன் மாற்ற கூறிய மருத்துவமனை வரைபடத்தில் அவன் சுட்டி காட்டிய தவறுகளை சரி செய்ய முற்பட்டவளாய்.. மீண்டும் முதலிலிருந்து வரைய ஆரம்பித்திருந்தாள்.. கிட்டத்தட்ட வரைய மட்டுமே அரை நாளாவது எடுத்து விடும் அளவிற்கு உன்னிப்பான வரைபடம்.. நேற்று மாலை ஆரம்பித்து இப்போது தான் முடித்திருந்த அந்த முதல் படத்தை பரிதாபமாய் பார்த்த படி அடுத்த காகிதத்தை எடுத்து மீண்டும் புள்ளியிலிருந்து வரைய ஆரம்பித்திருந்தாள். டீ டைம் வந்திருந்தது.. அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் எழுந்து சென்றிருக்க.. இவள் மட்டும் குனிந்த தலை நிமிராமல் அமந்திருந்ததில்.. ஜான்வி.. எழுந்து வந்த படி அவள் தோளை பிடித்து நாடியை குற்றினாள். ஹாப்பப்பா.. உன் கடமை உணர்ச்சிய பாத்து உடம்பெல்லாம் புல்லரிச்சு போகுது.. சரி வா.. இப்போ போய் டீ குடிச்சுட்டு வரலாம்.. " அவள் கை பிடித்து இழுக்க.. " ப்ச்..விடு திவி.. இதை மட்டும் முடிச்சிட்டு வந்துடறேன்.. " என்றவளை "அதெல்லாம் அப்புறம் " என விடாக்கண்டியாய் இழுத்து கொண்டு நடந்தாள். நமக்கு வேண்டி...
உயிர் உணர்வான காதலை ஒன்றாக சுவாசிக்கலாம்..!