ஆனால் எதிர்பாராத நேரத்தில் மிதா போன் செய்ததோடு.. அம்மா பேசுனாங்க.. விஷயத்தை சொன்னாஙக.. நீ உடனே பார்க்குக்கு வா.. என்றதோடு போனை துண்டித்து இருந்தாள்.. முதலில் ஜான்வி சென்று பார்ப்பதை விட மிதாவிடம் பேசிவிட்டு சென்றால் நல்லது என நினைத்தவனாய் அடுத்த நிமிடம் வண்டியை யூ டர்ன் அடித்திருந்தான் ஆர்யன்.. பச்சை புற்கள் முட்டி மோத நகரின் மையத்தில் இருக்கும் அந்த பார்க்கிற்கு அவனுக்கு முன்பாகவே வந்திருந்தாள் மிதா.. அவனை கண்டதும் கைய உயர்த்தி அழைக்க.. பாப்பா.. என வந்து நின்றவனின் முகம் அளவிற்கு அதிகமாக சோர்ந்து கிடந்தது.. அவளை நேருக்கு நேராய் பார்க்கவும் திராணியற்று தவிப்போடு தலையை தொங்கி கொண்டான் ஆர்யன்.. எத்தனை முறை அவள் அப்படிபட்டவள் அல்ல என கூறி இருப்பாள்?? அம்மா எல்லா விஷயத்தையும் சொல்லுச்சு.. நேரடியா விஷயத்திற்கு வந்திருந்தாள் மிதா.. உடனடியாக தகிப்பு பரவியது அவனிடம்.. பாரு.. பாரு பாப்பா.. எவ்வளவு கேவலமா என்னை ஏமாற்றி இருக்காங்க.. அவங்களை நான் எவ்வளவு நம்பினேன்.. எனக்கு இப்படி ஒரு துரோகம் பண்ண அவங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு.. என்றவன் நெஞ்சை வலியோடு நீவி விட...
உயிர் உணர்வான காதலை ஒன்றாக சுவாசிக்கலாம்..!